015 copyசினிமா இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு மனித நாகரிகத்திற்கு விஞ்ஞானமும் கலையும் இணைந்தளித்த கொடை. உலக வரலாற்றில், மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்தாக இருந்து சிறப்பு பெற்றது. தமிழ்க் கலாசாரத்தை, வாழும் முறையை சினிமாவைப் போல் வேறு எந்த ஊடகமும் பாதித்ததில்லை. தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்தவர்களில் வரும் பகுதி திரைத்துறையைச் சார்ந்தவர்கள் என்பதிலிருந்தே தமிழ் மக்களின் வாழ்க்கையில் சினிமா எத்தகைய ஆட்சியை செலுத்துகிறதென்பதை உணரலாம்.

 பிலிம் சொசைடிகளின் தேவை

உலக சினிமா வரலாற்றில் நல்ல சினிமாவை உருவாக்குவதற்கும் நல்ல சினிமா பேரெழுச்சியாக வளர்ந்ததற்கும், திரைப்பட சங்கங்களின் பங்களிப்பை மறந்து விட முடியாது.

ஒவ்வொரு தேசத்திலும் நல்ல சினிமா வளர்வதற்கு பெரிதும் திரைப்பட சங்க இயக்கங்கள் கைகொடுத்திருக்கின்றது. ஆந்த வகையில் திரைப்படக் கழகம் என்பது என்ன? ஏன் நமக்கும் திரைப்பட கழகம் தேவை என்பதையும், ஒரு திரைப்பட சங்கத்தை எப்படி அமைப்பது? எப்படியான திரைப்படங்களை திரையிடுவது? மக்களிடம் திரைப்பட சங்கங்களின் நடவடிக்கைகளை எப்படி விரிவுப்படுத்துவது? இப்படியான பின்னணியுடன் நாம் அதுபற்றி பின்நோக்கி பார்ப்பது நல்லது என்று நம்புகின்றோம்.

பணச்செலவு மிகு அதிகமாகும் கலையாகச் சினிமா இருக்கிற காரணத்தால், பணம் வைத்திருப்போர், இக்கலையைத்தங்கள் கைக்குள் எடுத்துக்கொள்ள முடிகிறது. கலை உணர்வு இல்லாத பணக்காரர்கள், சினிமாவை ஒரு வெறும் வியாபாரமாகக் கருதி " பத்துப் போட்டால் இருபது வர வேண்டும்” என்கிற நோக்கத்தில் படம் எடுத்து சினிமாவை கெடுத்தார்கள். ஆபாசம் வக்கரமான உணர்வுகளைத் துாண்டும் காட்சிகள், வாழ்க்கையைப் பிரதிபலிக்காத கதைகள் சினிமாவில் இடம்ப்பெற்று " மசாலாப் படங்கள்" என்கிற பெயரில் அமோகமாக விற்பனை ஆகத்தொடங்கின.

சினிமா இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு. மனித நாகரிகத்திற்கு விஞ்ஞானமும் கலையும் இணைந்தளித்த கொடை உலக வரலாற்றில், மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்தாக இருந்து சிறப்பு பெற்றது. தமிழ்க் கலாசாரத்தை, வாழும் முறையை சினிமாவைப் போல வேறு எந்த ஊடகமும் பாதித்ததில்லை. தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்தவர்களில் பெரும் பகுதி திரைத்துறையைச் சார்ந்தவர்கள் என்பதிலிருந்தே தமிழ் மக்களின் வாழ்க்கையில் சினிமா எத்தகைய ஆட்சியை செலுத்துகிறதென்பதை உணரலாம்.

வர்த்தக தமிழ் சினிமா இந்தியாவின் வலுவான தொழிற்தளமாக அடையாளம் காணப்பட்டாலும், வர்த்தகம் மட்டுமே வளர்ச்சியின் குறியீடாக எடுத்துக்கொள்ள முடியுமா? தமிழுக்கு ஆதாயம் செய்வதை விட தமிழை வைத்து ஆதாயம் அடைபவர்கள் அதிகம் இருப்பதைப் போல், சினிமாவை வைத்து கோடிக்கணக்கில் பிழைப்பவர்கள் சினிமாவிற்கு திருப்பித் தந்ததும், தருவதும் என்ன என்ற நீண்ட கேள்விகளுடன் தான் நாம் இன்னும் இருக்கின்றோம்.

இந்த நிலையில் சினிமா என்கிற கலையில் உண்மையான அக்கறை கொண்ட கலைஞர்கள் சிரமப்பட்டு பல நல்ல படங்களை எடுத்தார்கள். எடுத்தாலும், இந்தப்படங்கள் நல்லப் படங்கள், வாழ்க்கையை உண்மையாக சொல்வதாலும் போலித்தனமான கழிசடை கனவுக் காட்சிகளை காட்டாததாலும், ஆபாசக்காட்சிகள் இல்லாததாலும் இந்தப்படங்களை வாங்கித்திரையிட விநியோகஸ்தர்கள் தயாராக இல்லை. நல்ல சினிமாவை மக்களிடம் கொண்டு சென்றால் வியாபார சினிமாக்களின் பொய்யும், வங்சகமும் அம்பலப்பட்டுப் போகுமென்று வியாபாரிகளின் தந்திரமான கணிப்பினால் மக்கள் நல்ல படங்களை விரும்ப மாட்டார்கள், அவைகள் ஓடாது என்கிற பொய்யான காரணங்களை மக்களிடம் திணித்தார்கள்.

அத்தோடு அவைகள் கலைப்படம், அது மெதுவாக நகரும், "போர்" அடிக்கும் என்பதாக கட்டுக்கதைகளை பெரிய ஊடகங்களின் மூலம் கட்டமைத்தார்கள். இதன் மூலமாக "நல்ல சினிமாவை'' மக்களிடமிருந்து விலகி வைத்ததோடு அந்தப் படங்கள் மக்களிடம் சென்று விடாதபடிக்கு எல்லா வகையான தந்திரங்களையும் மேற்கொண்டார்கள்.

இந்த நிலையில், எடுக்கப்பட்ட நல்ல படங்களை மக்களிடம் கொண்டு செல்வது எப்படி? அவர்களுக்கு உண்மையான சினிமாவை இனம் பிரித்துக் காட்டுவது எப்படி?

நல்ல ரசனையும், கலையுணர்வும் கொண்ட இளைஞர்கள் சிலர், இதே போன்ற நல்ல படங்களைப் பார்க்க வேண்டும். என்று விரும்பிய இன்னும் சிலரையும் சேர்த்துக் கொண்டு, தாங்களே ஒரு அமைப்பாக உருவானார்கள். இந்த அமைப்புக்கு பெயர் தான் பிலிம் சொசைட்டி அதாவது திரைப்படக்கழகம், திரைப்பட இயக்கம், திரைப்பட சங்கம் என்று பல்வேறு பெயர்களில் தமது செயல் முனைப்பில் இறங்கினார்கள்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் பிலிம் சொசைட்டிகள், நல்லப் படங்களைத் தேர்ந்தெடுத்து, எடுத்து வந்து தங்கள் உறுப்பினர்களுக்கு திரையிட்டு காட்டுகின்றன. சென்னையில் சில சிறந்த திரைப்பட சங்கங்கள் இன்றும் தமது திரையிடல்களை செம்மையான முறையில் வடிவமைத்து நடைமுறைப்படுத்துகிறார்கள். தமிழகத்தின் அணைத்து ஊர்களிலும் பிலிம் சொசைடிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு மொழியிலும் சிறந்தப் படங்களைத் தேர்ந்தெடுத்து திரையிடுவதோடு, உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் சிறந்த திரைப்பட மேதைகளின் படங்களையும் கொண்டு வந்து தங்கள் உறுப்பினர்களுக்கு இந்த சொசைட்டிகள் திரையிடுகின்றன.

 

 02. பிலிம் சொசைடிகளின் தோற்றம்

 உலகத்திலேயே முதன் முதலில் பிரான்ஸில்தான் பிலிம் சொசைட்டி தோற்றுவிக்கப்பட்டது. பிலிம் சொசைட்டிகளின் தாக்கத்தினால் பிரெஞ்சு சினிமாவில் "புதிய அலை" (New Wave) சினிமா இயக்கம் உலக சினிமாவின் முகத்தையே மாற்றி அமைத்தது.

1958 இல் பிரான்சில் தோன்றிய புதிய அலை இயக்கம் அந்த நாட்டில் மட்டுமன்றி உலகெங்கிலும் - சமூகத்திற்கு தேவையான முக்கியமான கலைகளில் திரைப்படமும் ஒன்று என்று கருதிய நாடுகளில் - ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில், கல்கத்தாவில் இயக்குனர் சத்தியஜித் ரேயும், சித்தானந்ததாய் குப்தாவும் சேர்ந்து முதலில் பிலிம் சொசைட்டிகளை உருவாக்கினார்கள். வங்கத்தில் பிலிம் சொசைட்டியோடு நல்ல சினிமாவும் வளர்ந்தது. இது வளர்ந்து நாளடைவில் இந்தியாவின் அணைத்து மாநிலங்களிலும் பிலிம் சொசைட்டிகள் அணைத்தும் ஒரு பெரிய அமைப்புக்குள் அடக்கப்பட்டன. இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் இருக்கின்றது. இந்தியாவின் அணைத்த மாநிலங்களின் ஒன்றிணைந்த பிலிம் சொசைட்டிகளின் தலைமை அமைப்பின் பெயர் " பெடரேசன் ஆஃப் பிலிம் சொசைட்டிஸ் ஆப் இந்தியா" FEDERATION OF FILM SOCIETIES THE INTERNATIONAL FEDERARION OF FILM SOCIETIES (சர்வதேச திரைப்பட கழகங்களின் சம்மேளனம்) IFFS

தமிழகத்தில் திரைப்பட சங்கங்களின் வளர்ச்சிக்கு திரைப்பட மேதை நிமாய் கோஷ் பங்களிப்பு பெரிதும் உதவியது. திரைப்பட ஆர்வலர்கள் தங்களின் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், நல்ல சினிமாவை பார்க்கவும் ஃபிலிம் சொசைட்டி அவசியமானது என எண்ணினார். இதன் அடிப்படையில் சென்னையில் மெட்ராஸ் பிலிம் சொசைட்டி தோன்ற அடிப்படைக் காரணம், நிமாய் கோஷ்.

தனது ஈடு இணையற்ற பங்களிப்பினால் நல்ல சினிமா மக்களிடம் சென்றடைய அரும்பாடு பட்டார். இதன் மூலமாக தமிழ் சினிமாவில் 70 களில் ஏற்பட்ட புதிய திரைப்பட போக்குகளுக்கும், புதிய வகை சினிமாக்கள் மக்களிடம் சேர்வதற்கும், ருத்ரய்யா, அருண்மொழி, மகேந்திரன், துரை, தேவராஜ், மோகன் போன்றவர்களின் சினிமாவில் மாற்றம் ஏற்ப்ட்டதோடு, திரைப்பட கழகத்தின் பங்களிப்பினால் சென்னையில் நல்ல சினிமாவை பார்ப்பதற்கான சாளரம் திறக்கப்பட்டது. அதே நேரம் இந்தியாவில் சத்யஜித்ரேய் தனது திரைப்பட சங்கத்தை தொடங்குவதற்கு முன்பே ஆசியாவில் முதல் திரைப்பட சங்கமாகக் கருதப்படும் கொழும்பு திரைப்பட சங்கம் 1945-ல் தொடங்கப்பட்டது. என்பது ஆச்சரியம் தரும் விடயமாகும்.

இன்றைய சிங்கள சினிமாவின் வளர்ச்சிக்கும், அதன் தனித்துவத்திற்கும் திரைப்பட சங்கங்கள் தான் மூலக்காரணம் என்பதை நம்மவர்கள் உணர வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் திரைப்பட சங்கங்களின் மூலம் வளர்ந்தவர்கள் தான் நல்ல சினிமாவை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்கள் தான் உலக சினிமாவின் புதிய மொழியையும், புதிய திரை படைப்புகளையும் உலகிற்கு தந்த வண்ணம் இருக்கிறார்கள்.

நல்ல சினிமாவைப் பற்றி இந்திய சினிமாவில் அடையாளம் படுத்தும் வகையில் கேரள சினிமாவையும், பெங்கால் சினிமாவையும் சொல்வதுண்டு. இரு மாநிலங்களும் கம்யுனிசம் ஒரு பின்னனியாக இருந்தாலும் நல்ல சினிமா வளர்வதற்கு திரைப்பட இயக்கங்களின் பங்களிப்பு மறுக்க முடியாத ஒன்று. அந்த வகையில் ஜோன் ஆபிரகாமும் அவர் குழுவும் இணைந்து கேரளத்தில் தொடங்கிய ஒடேஸ்ஸா திரைப்பட இயக்கம் தான் மலையாள சினிமாவின் மூல வேர்களுக்கான காரணம்.'' டீ குடிப்பதற்கு காசில்லாத இளைஞர்களுக்கு திரைப்படத்தைப் பார்ப்பதற்கும், புரொஜெக்டரை இயக்குவதற்கும், 16அஅ கேமராவை கையாள்வதற்கும் திரைப்படங்களை விவாதிப்பதற்கும் வழியை ஏற்படுத்தித் தந்திருந்தது.

 

" ஒடேஸா திரைப்பட இயக்கம், தொலைக்காட்சியைக் கூட பார்த்திராத கிராமத்து மக்கள் உலக சினிமாவை நேரடியாகப் பார்த்தனர். என்று தனது நினைவுகளில் எழுதுகிறார் புகைப்பட கலைஞர் R.R. சீனிவாசன்.

ரீஜினல் பிலிம் புரோமோடிங் சொசைட்டி என்ற அமைப்பு, பெடரேஷனோ அல்லது சொசைட்டியோ தமக்கு சொந்தமாக ஒரு படம் வாங்கிக்கொள்ள பணம் கடனுதவி செய்கிறது. சென்னை பெடரேஷன் அவள் அப்படித்தான், பிரதிமா, காடு போன்ற படங்களை வாங்கி வைத்திருக்கிறது. பிராந்திய மொழிப் படங்களில் ஆங்கில உப வாசகங்களை இணைத்து வட இந்தியாவில் உள்ள சொசைட்டிகளுக்கு

பெடரேஷன் அனுப்பி வைக்கிறது. கல்கத்தா பிலிம் சொசைட்டி உறுப்பினர்கள் தாமே சொந்தமாகப் படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள். பிடரேஷனில் இனனொரு வசதி மினி நூல் நிலையம், சொசைட்டி உறுப்பினர்கள் இங்கு உள்ள அருமையான சினிமா பற்றிய உலகப் பெரும் டைரக்டர்களின் புத்தகங்களைப் படித்துப் பலன் பெறலாம். சமீபத்தில் டெலிவிஷினில் 'சினிமா எடுக்கும் முறை' பற்றி ஒரு தொடர் வெளியிடப்பட்டது. இதற்குக் காரணம் பிலிம் சொசைட்டிகள்தான். டெல்லி ஃபிலிம் பெடரேஷன் தேர்ந்தெடுத்து இந்திய அரசு அங்கீகரிக்கும் படங்கள் எல்லாம் மாநிலங்களில் சொசைட்டிகளில் வெளியிட அந்த மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.

 

03. ஃபிலிம் சொசைட்டிகளின் பணிகள்

உலக திரைப்பட விழாக்களில் மட்டுமே காணக்கூடிய அல்லது அது போன்ற அபுர்வமான திரைப்படங்களை பல நாடுகளில் இருந்தும் வரவழைத்து சொசைட்டிகளுக்கு கொடுக்கின்றது. டில்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு பிற நாட்டு தூதரகங்கள் நாட்டின் சிறந்த திரைப்படங்களை வழங்குகின்றன. ஆங்கிருந்து அற்புதப் படங்களை திரையிட்டு பார்த்து, தேர்ந்தெடுத்து இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு சொசைட்டிகளுக்கு அனுப்பி, ஆர்வமுள்ள உறுப்பினர்களைப் பார்த்து மகிழுமாறு செய்கிறது.

தமிழில் ருத்ரையா, ஜெயபாரதி, மலையாளத்தில் அடூர் கோபாலகிருஸ்ணன், அரவிந்தன், கன்னடத்தில் கரந்த், கிரீஷ் கர்னாட், ஜீ.வி. ஆய்யர் மற்றும் ஷியாம் பெனகல், மிருணாள் சென், ரே போன்ற சிறந்த இயக்குனர்களின் படங்களை வாங்கி சொசைட்டிகளுக்கு கொடுத்து உதவுகிறது இந்த அமைப்பு. சிறந்த திரைப்படங்களை அவை எவ்வாறு சிறந்த திரைப்படங்கள் என்று அறிந்துக் கொள்வது? மோசமான படங்களில் இருந்து இவர்களின் படங்கள் எந்த விதத்தில் வேறுபட்டு இருக்கின்றன? ஒரு காட்சியை படமாக்கி இருக்கும் முறையில் ஒரு நல்ல டைரக்டருக்கும், மோசமான டைரக்டருக்கும், எங்கே, எப்படி, எந்த விதத்தில் வேறுபாடு காண முடிகிறது? என்பதை அறிந்து கொள்ள பயிற்சி' தேவை. அந்தப் பயிற்சிக்கு பிலிம் அப்ரிசியேசன்ஸ் கோர்ஸ்' என்று பெயர். ஒருவாரம், பதினைந்து நாட்கள், ஒரு மாதம் என்று இந்த மாதிரியான கோர்ஸ்களை இந்த சொசைட்டிகள் நடத்துகின்றன.

ஒவ்வொரு படத்தை திரையிட்டு முடித்த பின்னும் கலந்துரையாடல் நடக்க வேண்டும் என்பது சொசைட்டிகளின் பணியாக முக்கிய பணியாக எதிர்ப் பார்க்கப் படுகிறது. படத்தைப் பற்றிய அபிப்ராயங்கள் பரிமாற்றிக் கொள்ளப்படும் போது அது சினிமா பற்றிய அறிவை வளர்க்க பயன்ப்படும்.

சென்னையில் தற்சமயம் நிழல்' திரைப்பட இயக்கம் மூலமாக குறும்படங்களின் வளர்ச்சியும், குறும்படம் உருவாக்கத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது. திரைக்கதை,

பயிற்சி பட்டறையின் மூலமாக குறும்படம் எடுப்பதற்கான பயிற்சியோடு களத்திலேயே மூன்று தினத்தில் ஒரு குறும்படத்தை தயாரித்து தமிழகத்தில் சிறப்பான வகையில் நிழல் திரைப்பட இயக்கம் பணி புரிந்து வருகின்றது.

நல்ல சினிமாவைப் பார்ப்பதோடு, நல்ல சினிமாவை சிறிய முதலீட்டில் உருவாக்குவதற்கான தேவையும், உந்துதலும் நம் மத்தியில் எதிர் காலங்களில் வளர்த்தெடுக்கப்படல் வேண்டும். நிழல் போன்ற திரைப்பட இயக்கத்தினர் நம் மத்தியிலும் குறும் படங்களை திரையிட்டு பயிற்சி பட்டறையின் மூலமாக மூன்றே தினத்தில் படத்தை உருவாக்குவதற்கும், நம்மிடம் நல்ல சினிமா பரவுவதற்கும் உறுதுணை புரிய காத்திருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்வோம். பேரிய தொலைக்காட்சி நிலையங்கள் இசை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல ஆக்கபூர்வமான வாய்புகளை ஏற்படுத்தி புதிய உலகத்தை திறந்து வைப்பதை போல, நல்ல சினிமாவை உருவாக்கவும், குறும்பட, ஆவணப்பட பயிற்சிகளை தருவதற்கான வழி வகைகளை ஏற்படுத்தலாம்.

 

04. ஒரு சொசைட்டி எப்படி உருவாகிறது?

குறைந்த பட்சம் 100 உறுப்பினர்கள் இருந்து, சரியானபடி நிர்வாகம் நடக்கிறது என்பது ஒரு சொசைட்டியை பெடரேஷன் கருதுமானால் அந்த சொசைட்டி அங்கீகாரம் பெருகிறது. 100 பேர் சேரவில்லை என்றால் குறைவான உறுப்பினர்கள் வைத்து ஆரம்பிக்க முடியாதா? ஒரு சொசைட்டியை நடத்துவதற்கு உணர்வு மட்டும் போதாது பணமும் வேண்டும். தியெட்டர் வாடகை, புரொஜெக்டர் வாடகை, நிர்வாக செலவு, படம் பெறுவதற்காக பெடரேஷனுக்கு கொடுக்க வேண்டிய சிறு தொகை ஆகியவைகளுக்காக ஆண்டுக்கு சுமார் 50 ரூபாய்களை உறுப்பினர்களிடமிருந்து சொசைட்டி பெற்றுக் கொள்கிறது.

50 ரூபாய் செலுத்திய ஒரு உறுப்பினர் மாதத்திற்கு குறைந்தது 2 படங்களும், ஆண்டுக்கு குறைந்தது 40 படங்களும் பார்க்க வாய்ப்பு இருக்கிறது.

நம் சூழலில் நல்ல சினிமாவைக் காண்பதற்கும், அது குறித்து தெரிந்து கொள்வதற்கும் நம்மவர்களிடம் நல்ல ஆர்வம் இருக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் சிங்கள மக்களுக்கு இது போன்ற நிறைய அமைப்புகளும் நல்ல திரைப்படங்களை பெரு நகரங்களில் திரையிட்டபடி தான் இருக்கின்றது. ஆனால் பெரு நகரங்களை தவிர்த்து சிறிய நகரங்களில் திரைப்பட இயக்கத்தை இன்று சிறப்பான முறையில் கட்டி எழுப்ப முடியும்.

 

நம்மிடம் இன்று தொழில் நுட்பங்கள் பெருகி விட்ட போதும் அவற்றை நாம் இன்னும் படைப்புணர்வோடு பயன்படுத்தவில்லை என்பது உண்மை, இன்று ஏதோ ஒரு தன்னார்வ அமைப்பிடமோ, கலாச்சார அமைப்பிடமோ, மிகச் சிறந்த மல்டி மீடியா புரொஜெக்டர் கருவி இருக்கிறது. ஆனால் யாரும் அதை நல்ல சினிமா வளர்வதற்காக பயன்ப்படுத்துவதில்லை . என்பது நமது அறியாமையோடு, நமது துரதிஷ்டம் என்று தான் மனம் குமுற வேண்டி உள்ளது.

அதனால் முன்னர் போல் திரையரங்குகளில் தான் நல்ல சினிமா பார்க்க வேண்டும் என்பதில்லை, ஒரு 50 பேர் அமர்ந்து உட்கார்ந்து பார்க்கக் கூடிய அளவுக்கு வசதியான ஒரு இருட்டறை ஒன்றை ஏற்படுத்தி அதில் நல்ல சினிமாவை திரையிட்டு காட்டலாம். அத்தோடு படம் பற்றியும், படத்தின் சாராம்சம் பற்றியும் சிறிய விபரக் குறிப்பும், தகவல்களையும் பார்வையாளனுக்கு வழங்கலாம். இதற்கு இன்றைய சூழலில் பெரிய செலவுகள் தேவையில்லை, நல்ல சினிமாவை பார்ப்பதற்கு இன்று டிஜிட்டல் வசதிகள் பெருகி விட்டன. அதை நாம் ஆக்க புர்வமாக பயன்ப்படுத்தவும், சிறப்பான திரைப்பட இயக்கத்தை நடத்துவதன் மூலம் நல்ல சினிமா பற்றிய பார்வையைத் தூண்ட முடியும்.

 

பள்ளிக்கூடங்களில் திரைப்பட சங்கங்களை உருவாக்கலாம்

 பெருதகரங்களில் இயங்கும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் திரைப்படம் பற்றியும், திரைப்படங்களை பார்த்து ரசனையை வளர்ப்பதற்கும், பள்ளிகளிலேயே குறும்படங்களை உருவாக்குவதற்கும் முயற்சி செய்வதை நாம் அறிகிறோம். ஆனால் சிறய நகரங்களிலும் பள்ளிக் கூடங்களிலும் இதற்கான முயற்சிகளை சிந்திப்பதற்கும், செயல் படுவதற்கும் ஆசிரியர்களோ , மாணவர்களோ முன் வராத நிலைமையே இருக்கின்றது. பள்ளிகளில் திரைப்பட சங்கங்கள் உருவாகும் போது அது கல்வியல் செயல்பாடுகளையும் ஒரு படி மேன்மை படுத்தும் என்பதோடு மாணவர் ஆசிரியர் என்ற உறவில் நிலவும் அன்னியதன்மையையும் அது போக்கும்.

ஒரு சிறந்த சினிமாவை பார்பதனால் மாணவனின் அறிவ திறனும் சினிமாவின் மூலம் அவனிடம் ஏற்படுத்தப் பட்டிருக்கும் தவறான மனோபாவம் கூட மாறிவிடும். அதே நேரம் நல்ல சினிமாவை பள்ளிக்கூடங்களில் தேர்தெடுத்து திரையிவதற்கும் விவாதிப்பதற்கும் நாம் கவனத்துடன் செயல் பட வேண்டும். நம் மத்தியில் நமக்கு திணிக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமாவை மீண்டும் மீண்டும் மாணவர்கள் மத்தியில் அறிமுகம் செய்வதற்கு முயன்றோமானால் அது ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.

பள்ளிகூட பாட திட்டத்தில் சினிமாவை சேர்கும் திட்டத்தின் போது கூட தமிழ் சினிமாவை விமர்சன நோக்கில் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான முன்னெடுக்க வேண்டும். சினிமாவை பாட திட்டத்தில் சேர்ப்பதற்கு கல்வியலாளர்களும், கல்வி அமைச்சும் கவனமெடுக்க வேண்டும்.

''நம் இளைய தலைமுறையினர் ஏதாவது ஒரு கலையின் அழகியல் குறித்து நேரடியாக அனுபவப்பட்டிருக்கிறார்கள் என்றால், அது சினிமாதான். ஆனால் பள்ளி பாடத் திட்டத்தில் சினிமா அதன் அழகியல் பற்றி எதுவுமே கிடையாது. ஆனாலும் சினிமா மக்கள் கலையாக உள்ளது. காரணம் மக்கள் அதை பயன்படுத்துகிறார்கள் என்பதல்ல. மாறாக, துரதிருஷ்டவசமாக மக்களை அது பயன்படுத்திக் கொள்கிறது. மக்களின் மனோநிலையை , கருத்துகளை சினிமா உருவாக்குகிறது. சினிமா குறித்த தேர்ந்த ரசனை மக்களுக்கு இல்லை. அது அவர்களுக்கு தரப்படவில்லை. சினமா பற்றய அறவு, ரசனை அவர்களுக்கு நிராகரிக்கபாட்டது இதன் காரணமாக சினிமா சக்தியின் முன் அவர்கள் செயலிழந்து நிற்கிறார்கள்." என்று பேல பெலாஸ் கூறுவதின் அர்த்தங்களை நாம் எப்போது உணர போகின்றோம்.

 

சினிமாவை பாட திட்டத்தில் சேர்க்க நம் கல்வியாளர்கள் முன் வருவார்களா? அது குறித்து சிந்திப்பார்களா?

 அதனால் உங்கள் ஊரில் அல்லது கிராமத்தில் அதுவும் இல்லை என்றால் தோட்டங்களில் ஒரு 20 பேரை இணைத்து சிறிய அளவில் ஒரு திரைப்பட சங்கத்தை தொடங்குங்கள், நல்ல சினிமாவை உலக சினிமாவை உங்களிடம் திரையிட்டு அது பற்றி விவாதியுங்கள், சிறிது சிறிதாக படைப்பு மற்றும் தொழிநுட்பம் பற்றி பேசுங்கள். நீங்களும் உங்கள் அளவில் ஒரு சிறிய கேமராவில் உங்களுக்கு தெரிந்த மொழியில் உங்களுக்கு பிடித்தவற்றை படம்பிடித்து நேர்த்தியாகத் தொகுத்து அதை திரை இட்டு விவாதியுங்கள். உங்களின் பிரச்சினைகளை உங்களைச் சுற்றி உள்ள பிரச்சினைகளை ஒரு ஆவணப்படம் போல் எடுத்து திரையிடுங்கள். 20 பேரிலிருந்து எல்லோருக்குமான சினிமா உருவாகும். இப்படி தான் உலகத்திலே மிக சிறந்த சினிமாக்கள் பரிணமித்தன என்பதை நினைவில் என்றும் மறக்காதீர்கள்.

அத்தோடு சிறந்த திரைப்படங்களை திரையிட்டுப் பாருங்கள். உலக சினிமாவில் ஈரானிய சினிமா தான் நம் மத்தியில் ஆரம்ப வகை திரையிடலுக்கு மிகவும் ஏற்றது. அதனால் கதை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து திரையிடுங்கள். முடிந்தால் அந்தப்படங்களை மொழி மாற்றம் செய்து உப தலைப்புடன் திரையிடுங்கள்.

அப்படி மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள் நம்மிடம் நிறைய உண்டு. அத்தோடு சிறந்த உலகசினிமாவை உங்கள் ஊரில் திரையிடும் போது கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்யுங்கள். அப்போது தான் நல்ல சினிமா உங்கள் மத்தியில் வேர் கொள்ளும். கலந்துரையாடலின் போது படைப்புணர்வும், சினிமா பற்றிய தேடலும் நம்மிடம் பெருகும். சிலர் திரைப்பட இயக்க தேவைகளை நிராகரித்து அரசியல் நோக்குடன் திரையிடுகிறார்கள் அப்படியான திரையிடல்களில் ரசனையோ நல்ல சினிமா பற்றிய உரையாடலோ ஏற்ப்பட வாய்ப்பில்லாமல் போவதோடு, நல்ல சினிமா வளர்வதற்காக தொடங்கப்பட்ட திரைப்பட இயக்கங்கள் இன்று திசை மாறிபோவதோடு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு போய் விடுகிறது.

இந்த நிலமை ஏற்படாத வகையில் ஒரு திரைப்படத்தின் படைப்பு சார்ந்தும், ரசணை சார்ந்தும் அதன் உள்ளடக்கம் சார்ந்தும் மனதில் அது ஏற்படுத்திய அவஸ்தையை சார்ந்தும் கலந்துரையாடல் அமையும் போது நல்ல சினிமாவின் ரசணைப் பகிர்தல் வளர்வதோடு, பார்வையாளனும் படைப்பாளியாக மாற்றமடைய முடியும் என்பதை கலந்துரையாடலை நெறிப்படுத்தும் திரைப்பட ஆர்வலர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

  இப்படியான நோக்கில் நீங்கள் கலந்துரையாடலை படைப்பு சார்ந்து செய்யாத போது பார்வையாளன் தன்னிலிருந்தும் தன் அக உணர்வுகளிலிருந்தும் புதிய தேடலை தீர்மாணிக்கும் மனதின் தேடலைத் தீர்க்காத போது பார்வையாளன் தன்னிலிருந்தும் திரைப்படம் அவனுள் ஏற்படுத்தி இருக்கும் உணர்வு நிலையிலிருந்தும் அவன் திருப்தி அற்றவனாக வெறுமை நிரம்பியவனாக திரையிடப்பட்ட நிகழ்விலிருந்தும் விலகிப் போவதற்கான வாய்ப்புண்டு. என்பதை திரைப்படம் பற்றிய கலந்துரையாடலை நெறிப்படுத்தும் கவனத்துடன் செய்ய வேண்டும். ஏதோ நெறிப்படுத்துவதென்பது தலைமைத்துவமும் தன்னை நிலை நிறுத்துவதற்கான அரசியல் களம் என்று நினைத்தால் அது பார்வையாளனையும் சினிமா ரசணை உள்ளவனையும் தூரப்படுத்துவதோடு, நல்ல சினிமாவிற்கான தேடலையும் துண்டித்துவிடும்.

 உலகத்தில் மிகச் சிறந்த இயக்குனர்களாக கருதப்பட்ட அணைவரினதும் சிறப்புக்கு பின்பு நல்ல திரைப்படங்களும் திரைப்பட இயக்கங்களின் உறுதுணையும் இருந்துள்ளதை இங்கே நினைவுபடுத்தி செல்லலாம் என்று நினைக்கின்றேன். அந்த வகையில் நம் நாட்டிலிருந்து தென்னகம் சென்று தன் திரைப்படங்களின் மூலம் புகழ்ப் பெற்ற மட்டக்களப்பைச் சேர்ந்த பானுமகேந்திராவின் நினைவுகளை நாமும் பகிர்ந்து கொள்வோம்:

"நான் படிச்ச பள்ளி ஜெஸ்யுட் பாதிரிமார்கள் நடத்தின பள்ளி. எனக்கு ஆசிரியராக இருந்த பாதர் டோரி பெரிய ரசிகர். அப்பவே 6.00 மணிக்கு மேல் 16 எம் எம் -ல தினமும் படம் காமிப்பாரு பைசைகல் தீவஸ்' படம் அங்க தான் முதல்ல பார்த்தேன். புனே இன்ஸ்டிடியுட்' எல்லாம் அப்புறம்தான். அப்ப நான் தொடர்ந்து பார்த்த சினிமாவோட தாக்கம் எனக்கு பயங்கரமா இருந்தது. ஓவ்வொரு வெள்ளிக்கிழமையும் பாதிரியார் புரொஜக்டர் மூலம் காண்பிச்ச படங்கள் பாதிப்பை ஏற்படுத்திச்சி. ஏன்று கூறுகிறார். பாலுமகேந்திரா

முதலாவதாக திரையிடும் படங்கள் எல்லோருக்கும் ஓரளவு புரிகிற கதைப்படங்களாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். எடுத்த எடுப்பில் சிக்கலாகத் தோன்றும் படங்களைக் காட்டினால் அவற்றிற்குப் பழக்கமற்ற பார்வையாளர்கள் குழம்பிப் போகலாம். அதனால் மிகச்சிறந்த திரைப்படத்தை தேர்ந்தெடுத்து திரையிட வேண்டும். பார்வையாளர்கள் தொடர்ந்து வருவதும் இதனால் பாதிக்கப் படலாம். செக்ஸ் காட்சிகள் நிறைந்தப் படங்களையும் இது போலவே துவக்கத்தில் தவிர்ப்பது நல்லது. படம் பார்க்க வருபவர்கள் சினிமா சங்கத்தின் செயற்பாடு குறித்து தவறாக அபிப்ராயம் கொள்வதை இதன் மூலம் தவிர்க்க லாம்.

உலக சினிமாவில் ஈரானிய சினிமாதான் நமது பார்வையாளர்களுக்கு சிறந்த சினிமா பற்றிய புதிய கதைகளை திறந்து வைப்பதற்கான மிகச் சரியான திரைப்படமாக இருக்கும் என்பது எனது திரையிடல்களில் நான் கண்ட அனுபவம். ஈரானிய சினிமாவில் கதை சொல்லும் விதம், காட்சிகள், அழகியல், மற்றும் கதாப்பாத்திரங்களின் தேர்ந்த நடிப்புத் திறன். நடிகர்களின் வெளிப்பாடும், வாழ்வை மிக அருகில் கொண்டு வந்து பார்வையாளனின் அகத்தை ஊடுருவும் கலை நேர்த்தியும் நமது பார்வையாளர்களுக்கு பிடிக்கும்.

அத்தோடு நமது தமிழ் மனம் கதை தேடும் மரபுகள் கொண்டது, அதனால் ஈரானிய சினிமாவில் கதை சொல்லும் வகை நமக்கேற்ற வகையுடன் இருப்பதனால் நமது பார்வையாளர்களிடம் அத்திரைப்படங்கள் பெரும்பான்மையாக திரையிடவதனால் அது நல்ல சினிமாவுக்கான புதிய வாசல்களை பார்வையாளனின் மனதில் தேட செய்யும், நல்ல சினிமா பற்றிய மனப்பதிவு இறை அருள் மாதிரி அவனுள் இறங்கும். அதன் பின்பு நல்ல சினிமாவை கொண்டு செல்வது இலகுவான விடயம். அதனால் ஒவ்வொரு படம் திரையிடப்படும் பொழுதும் அப்படத்தின் கதை சுருக்கம், அப்படத்தினல் பார்த்து ரசிக்க வேண்டிய அம்சங்கள் போன்றவற்றை சிறு பிரசுரங்களாக விநியோகிக்கலாம். ஒரு சில நல்ல படங்களை திரையிடப்பட்ட பின்னர் படங்களைப் பற்றிய அங்கத்தினர்களின் கருத்து பரிமாற்றங்களுக்கு ஏற்பாடு செய்யலாம். பல முறை பார்த்து ரசித்து புரிந்துக் கொள்ள வேண்டிய படம் என்று ஒரு படத்தை பார்வையாளர்கள் எண்ணினால் அவற்றைப் பற்றிய விபரங்களுடன் மீண்டும் திரையிட்டு திரனாய்வு செய்து, நம் மனப்பதிவை எழுதி வெளியிடலாம்.

உங்கள் பகுதியில் ஒன்று கூடுவதற்கும், கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடு செய்வதோடு சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்கள், நல்ல சினிமா சஞ்சிகைகள் ஆகியவற்றை அங்கத்தினர்களுக்கு வரவழைத்து தரலாம். ஓத்த கருத்தும், புதிய சிந்தனையும் கொண்ட நால்வர் ஒன்று கூடினால் தகுந்த செயற்பாட்டிற்கான புதுப்புது எண்ணங்கள் இயல்பாகவே தோன்றும். நல்ல சினிமாவை மக்களிடம் கொண்டு செல்வதற்கு, நம் மத்தியில் ஒரு திரைப்பட கழகத்தை ஏற்படுத்துவதற்கும் நாம் செய்கின்ற அதேவேளையில், திரையிடப்படும் திரைப்படங்களின் கருத்து, காட்சி, மற்றும் அது நமது சமூக சூழலுக்கும், அரசியல், புறகாரண காரிய சூழலுக்கும் பொருத்தமானதாக இருக்கின்றதா என்பதைக் கண்டு உணர்ந்து ஆய்வு செய்து திரையிடவும், முதல் முறையாக செய்வதனால் மிகுந்த கவனத்துடன் இவைகளை முன்னெடுக்க வேண்டும்.

 

கட்டுரைகள்

{youTube}/HvhurorfkeA{/youtube} உலகளாவிய மாற்று சிந்தனை கல்வி முறைகள் எவ்வாறு உள்ளன? எனும் கேள்விக்கு பதிலளித்தார் சமூக ஆய்வாளரும், ஆசிரியம் இதழின் பிரதம ஆசிரியருமான தெ. மதுசூதனன்.

{youTube}/8qHc2Osvtpk{/youtube} - தெ. மதுசூதனன்.- இலங்கையில் ஆசிரிய சேவையிலும் பார்க்க கல்வி நிர்வாக சேவை உயர்வானதாக கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்களவு ஆசிரியர்களின் இலக்கு நிர்வாக...

கலாநிதி அதிரதன் கல்வியியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் கீழை நாடுகளில் வேரூன்றியுள்ள ஆணாதிக்கச் சிந்தனையும் அதன் புறவிசைகளும் பெண்கல்வி தொடர்பாக எதிர்மறைச் சிந்தனைகளை கட்டுமானம் செய்வதுடன்...

உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வது மூளைதான். தேவையான சத்துணவு, தேவையான அளவு கிடைக்காதபோது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.

ஞாபக சக்தி அதிகமாக இருக்க வேண்டும் என்றால் , அது அந்த தாயோட கையில தான் இருக்கு. சின்ன வயசுலேயே நம்ம குழந்தைகளுக்கு எந்த விஷயத்தையும் நல்லா மனசுல பதியுற மாதிரி சொல்லிக் கொடுத்தா, அதை அவங்க...

file:///C:/Users/Bruger/Downloads/pgde-reflection-final%20(1).pdf

Brain-wavesபொதுவாக உடலைக் கட்டுக்கோப்புடன், தகுதியாக வைத்துக் கொள்ள, உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் மனதைக் கட்டுக்கோப்புடன் தகுதியாக வைத்துக் கொள்ள என்ன செய்வது? தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும்...

வெற்றி என்னும் சாத்தியம் இருக்கையில், ஏன் சிலர் தோல்வியை எப்போதும் தேர்ந்தெடுக்கிறார்கள்? நீங்கள் மேற்கொள்ளும் தேர்வுகளிலிருந்தே துன்பத்திலிருந்து சவுகரியத்துக்கு நகர்கிறீர்கள்.

வாழ்க்கைமுறை

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம்...

சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

-ரூபன் சிவராஜா- படம் தனிமனித சாகசத்தை முன்வைக்கவில்லை. மாறாக அடித்தட்டு மக்கள் தமது வாழ்வாதார, இருத்தலியல் அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதாக முன்வைக்கப்படுகின்றது....

சினிமா

நடிகர் விவேக் மறைவு பலராலும் சோகத்துடன் எண்ணிப் பார்க்கப்படுகிறது. ''ஒரு நடிகன் நடிப்பைத் தாண்டி தன்னை ஆளாக்கிய சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் அதை செய்தவர் விவேக்'' என்ற கமலின் வார்த்தைகள்...

சினிமா

 சினிமா இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு மனித நாகரிகத்திற்கு விஞ்ஞானமும் கலையும் இணைந்தளித்த கொடை. உலக வரலாற்றில், மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்தாக இருந்து சிறப்பு பெற்றது. தமிழ்க்...

சினிமா

கர்ணன், 'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாவது படைப்பாக வெளியாகியுள்ள திரைப்படம். இப்படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க, ராஜீஷா விஜயன், யோகி பாபு,...

ஆன்மீகம்

ரதிகலா புவனேந்திரன்நுண்கலைத்துறைகிழக்குப் பல்கலைகழகம்.   வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள்...

குருந்தூர் மலையில் கிடைத்திருப்பதுஎண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாராலிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர்கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன்...

உளவியல்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும்...

- கி.புண்ணியமூர்த்தி- பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

 {youTube}/BZtEAoShpDQ{/youtube} 01. தோல்வியின் அடையாளம் தயக்கம்! வெற்றியின் அடையாளம் துணிச்சல்!துணிந்தவர் தோற்றதில்லை!!தயங்கியவர் வென்றதில்லை!!

 {youTube}/H7RVRGVWkqM{/youtube} 1. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால்வலிமை படைத்தவன் ஆவாய்!  02. மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி...

X

Right Click

No right click