Skærmbillede 1025கலாநிதி க.சுவர்ணராஜா

"ஆற்றல் மிக்க தலைவர் மற்ற தலைவர்களையும் வழிநடத்தக்கூடியவராய் இருக்கின்றார். அவர் தகுதியானவர்களைக் கண்டுபிடிக்கின்றார். ஒன்று சேர்க்கின்றார். தேர்ந்தெடுக்கின்றார். உயர்ந்த கொள்கையில் ஈடுபடுத்துகின்றார். தமக்கு கீழே இருப்பவர்களை மட்டுமல்ல தமக்குச் சமமானவர்களையும், தம்மைவிட உயர்நிலையில் இருப்பவர்களையும் வழிநடத்தும் திறமை அவரிடம் இருக்க வேண்டும்.”

ரொபின் சர்மா

அறிமுகம்

கடந்த பல வருடங்களாக பாடசாலைகளின் விருத்திக்கு மறைமுகமாக நின்று தலைமைத்துவம் தரும் ஆசிரியர்கள் பற்றிய தேடல்கள் அதிகரித்து வருகின்றது. கல்விக்கான சீர்திருத்தப் பிரேணைகளில் ஆசிரியர் தலைமைத்துவம், அதன் முக்கியத்துவம் அதனை விருத்தியாக்கும் நுட்பங்கள் பற்றி அதிகம் கலந்துரையாடப்படுகின்றது.

ஆசிரியர் தலைமைத்துவக் கலாசாரம், ஆசிரிய வாண்மை விருத்தி பற்றிய சகபாடி கலந்துரையாடலை வலுப்படுத்துவதுடன் வகுப்பறைகளிலிருந்து எழும் பிரச்சினைகளைத் தீர்த்தல், பாடசாலை முன்னேற்றம் கருதிய உபாயங்களை முன்வைத்தல் என்பவற்றை ஊக்குவிக்கின்றது.

ஆசிரியர் தலைமைத்துவம் பாடசாலையின் ஒட்டுமொத்த செயற்பாடுகளிலும் நேரடியாக அல்லது மறைமுகமாக தனது பங்களிப்பினை நல்குகின்றது. அத்துடன் தனக்கு பதவிவழி அதிகாரம் கிடைத்தால்தான் அல்லது அதிபரின் கட்டளைகள் கிடைத்தால் தான் செயற்படுவோம் என்றிருப்பதில்லை.

ஆசிரியர்களின் தலைமைத்துவ வகிபங்குகள் முறைசார்ந்த முறையிலோ, அல்லது முறைமையில் முறையிலோ அமையலாம். அதாவது பாடசாலை முகாமைத்துவக் கட்டமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட கடமைப்பட்டியலின் ஊடாகவும், ஆசிரியர் தானே உருவகித்துக்கொள்ளும் செயற்பாடுகளின் ஊடாகவும் ஆசிரியர்களின் தலைமைத்துவ வகிப்பங்குகள் தோற்றக்கூடும்

பாடசாலைகளின் தரம், இயலளவு, பாடசாலையில் இடம்பெறும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளின் ஊடாகவும் ஆசிரியர்களின் தலைமைத்துவ வகிபங்குகள் மாற்றமடையவும் கூடும். ஆசிரியர்கள் தமது பாடத்துறைச் சார்ந்தும் தனது விசேடமான சிறப்பாற்றல்களை வெளிக்காட்டுவதன் ஊடாகவும் தலைமைத்துவம் வகிப்பங்குகளை வெளிப்படுத்தக்கூடும். உதாரணமாக பல ஆசிரியர்கள் தமது விசேட நிபுணத்துவ ஆற்றலில் தமது சகபாடிகளின் தலைவராகச் செயற்படும் நிலைமைகளைக் குறிப்பிடலாம்.

மறுபக்கத்தில் நோக்கும் போது ஆசிரியர்களின் வினைத்திறன் குறைபாடுகள் பாடசாலை தலைமைத்துவத்திற்கு சவாலாகவும் அமைகின்றன. இக்கட்டுரையானது இவை தொடர்பான விடயங்களை சுட்டிக்காட்ட முற்படுகின்றது.

இலங்கையில் 2004ம் ஆண்டில் தேசிய கல்வி ஆய்வு மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தால் (NEREC) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படியும் ஏனைய ஆய்வுகளின் வழியும் இலங்கைப் பாடசாலைகளில் முகாமைத்துவம் மற்றும் கல்விச் செயற்பாடுகளில் பின்வரும் பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன. (பாடசாலை மேம்பாட்டுப் பங்குதாரருக்கான கைந்நூல் 2008) அவையாவன:

*அதிகாரம் பரவலாக்கப்படாமை

*பங்கேற்பு தீர்மானம் கொள்ளலில் அக்கறை செலுத்தப்படாமை

* ஒரு சில ஆசிரியர்கள் சொல்வதை மட்டும் கேட்டு செயற்படும் அதிபர்கள்

*மிக நெருக்கடியான வகுப்பறைகள்

*வளங்களின் பற்றாக்குறை

*ஆசிரியர் வரவின்மை

*ஆசிரியர்களின் நேரம் பிந்திய வருகை

*மாணவர்களின் வரவின்மை

*மாணவர்களின் நேரம் பிந்திய வருகை

*மாணவர்களின் இடைவிலகல்

*மாணவர்களின் குறைவான அடைவுமட்டம்

*முறையான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையின்மை

*ஆசிரியர்கள் வகை கூறலில் இருந்து விலகியுள்ளமை

*பாடசாலை மீதான பெற்றோரின் குறைவான அக்கறை

அதிபர்-ஆசிரியர்கள் - மாணவர்கள் - பெற்றோர் மத்தியில் சுமுகமான தொடர்பு குறைவாகக் காணப்படல்

*விசேட தேவையுள்ள மாணவர் மீது போதிய கவனமின்மை

*மெல்லக் கற்கும் மாணவருக்கான பரிகாரக் கற்பித்தல் இடம் பெறாமை *பாடசாலைகளில் நேர அட்டவணை முறையாக நடைமுறைப்படுத்தப் படாமை *ஆசிரியர்களின் செயலாற்றுகை பற்றிய விரிவான மதிப்பீடு இன்மை

*பாடசாலைகளில் பாடத்திட்டங்கள் உரிய காலத்தில் முடிக்க இயலாமை

 

பாடசாலை மட்டக் கணிப்பீட்டின் குறைபாடுகள் கற்பித்தலில் நவீன தொழில்நுட்பப் பயன்பாட்டின் பற்றாக்குறை

மேற்கண்ட பட்டியலில் பெரும்பாலான விடயங்கள் ஆசிரியர்களின் தலைமைத்துவத் திறன்களுடன் தொடர்புடைய விடயங்களாகவும் காணப்படுகின்றன.

வினைத்திறனுடைய பாடசாலையை இனங்காணத்தக்க பொருட் பரப்புக்கள் பின்வருமாறு அமைகின்றன. அவை யாவும் ஆசிரியர்களின் செயற்பாடுகளுடன் மிக நெருக்கமான தொடர்புடையனவாக அமைகின்றன.

அவையாவன :

1.பாடசாலை அதிபரின் பொதுவான தலைமைத்துவம் ஆசிரியர்களுக்கு முற்றுமுழுதாகக் கிடைத்தல்.

2.பாடசாலையின் பிரதி அதிபர் செயற்றிறன் மிக்கவராகக் காணப்படல். 3.அர்ப்பணிப்புடனும் செயல்ரீதியான ஈடுபாட்டுடனும் செயலாற்றும் ஆசிரியர் குழாம் காணப்படல்.

4.பாடசாலையின் முறைசார்ந்த ஒழுங்கமைப்புக்கு அமைவாக பாடசாலையின் அன்றாடச் செயற்பாடுகள் இடம்பெறல்.

5.மாணவரது அடைவுமட்டத்தினை அடிப்படையாகக் கொண்ட கற்றற் செயன்முறை ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல்.

6.உயிரோட்டமான கற்றல் சூழ்நிலை காணப்படல்.

7.பூரண கலைத்திட்ட அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருத்தல். 8.ஆசிரியர் - மாணவர் தொடர்பாடற் செயன்முறை ஆரோக்கியமாக அமைந்திருத்தல். 9.பாடசாலையின் பதிவேடுகள், அறிக்கைகள் உள்ளிட்ட தகவல் முறைமை உரிய வகையில் பேணி வரப்படல்.

10. பெற்றோரின் சிறப்பான உயிரோட்டமான ஈடுபாடு காணப்படல்.

11. மகிழ்ச்சிகரமான பாடசாலைச் சூழ்நிலை.

12. ஆசிரியர்களின் கூட்டான பிணைப்பும் இணக்கப்பாடும் காணப்படல்.

விளைத்திறன்மிக்க பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள்

பொதுவாக விளைத்திறன்மிக்க பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் பின்வரும் சிறப்பியல்புகளைக் கொண்டிருப்பர். இதனை பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. அவையாவன:

1. நேர முகாமைத்துவத்தைக் கடைப்பிடிப்பார்கள்.

2. மாணவர்களுக்கு எவ்வித பாரபட்சமும் காட்டாது கற்பிப்பார்கள்.

3. பாடசாலையின் சகல செயற்பாடுகளிலும் தம்மைப் பிணைத்துக் கொண்டிருப்பார்கள். 4.பாடசாலை நேரம் முழுவதும் பாடசாலையில் தங்கியிருந்து செயற்படுவார்கள். தேவையேற்படின் பரிகாரக் கற்பித்தலுக்கு மேலதிக நேரத்தை ஒதுக்குவார்கள். 5.கற்பித்தலில் புதிய நுட்பங்களையும், தர உள்ளீடுகளையும் தவறாது பயன்படுத்துவார்கள்.

6.எல்லா மாணவர்களாலும் கற்க முடியும் என்ற நம்பிக்கையுணர்வு மேலோங்கிக் காணப்படுவார்கள்.

7.தம்மைத் தொடர்ச்சியாக விருத்தி செய்வதில் கரிசனை காட்டுவார்கள்.

8. மாணவர்களின் மீது அன்பையும், நல்லொழுக்க விருத்திக்கான கண்டிப்பையும் அருகருகே வைத்துப் பேணுவார்கள்.

9. மாணவர்களின் பெறுபேற்று நிலைக்கான வகைக் கூறலை கொண்டிருப்பார்கள்.

10. தாம் கடமையாற்றும் பாடசாலையை தமது சொந்த வீடு போல் பேணி

வருவார்கள்.

அறநெறிகள் புலப்படும் நிலைமாற்றத் தலைமைத்துவம்

அறநெறிகள் புலப்படும் நிலைமாற்றத் தலைமைத்துவத்தை கட்டியெழுப்பப் பாடசாலை அதிபரும் ஏனைய முகாமைத்துவக் குழுவினரும் தத்தமது தலைமைத்துவ நிலைகளில் பின் வரும் ஒழுங்கமைப்புக் கோட்பாடுகள் தொடர்பாக பிரதிபலிப்பு உடையவர்களாக இருத்தல் வேண்டும் என ஆய்வுகள் கூறுகின்றன. அவையாவன:

1. ஆசிரியர்களுடன் ஒன்றிணைதல் (Cooperation)

2.ஆசிரியர்களை வலுப்படுத்தல் (Empowerment)

3.ஆசிரியர்களின் பொறுப்புணர்ச்சியை விருத்தியாக்கல் (Responsibility)

4.ஆசிரியர்களின் தீர்மானங்களிலும், அடைவுமட்ட விருத்தியிலும் வகை கூறலை விருத்தியாக்கல் (Accountability)

5.அர்த்தமுள்ள செயல்களில் ஈடுபட ஆசிரியர்களை ஊக்குவித்தல்

(Meaingfulness)

6. ஆசிரியர்களின் இயலளவிற்கேற்ற அதிகாரப் பகிர்வுக் (Ability

Authority) கையளிப்பில் கவனம் செலுத்துதல்

மேற்கண்ட விடயங்கள் ஆசிரியர் தலைமைத்துவ விருத்திக்கும் பாடசாலை விருத்திக்கும் முக்கியத்துவமுடைமை என்பதனை வலியுறுத்தி நிற்கின்றன.

பாடசாலை ஆசிரியர்கள் சிறப்பான மனிதவளம்

பாடசாலை ஆசிரியர்கள் மனிதவளம் என்ற வகையில் பின்வரும் தன்மைகளை உடையவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் தமது தொழில் தொடர்பாக கொண்டிருக்கும் புலக்காட்சிக்கு ஏற்ப இவர்களது தலைமைத்துவ ஈடுபாடு அமைகின்றது.

1. ஒவ்வொரு ஆசிரியரும் தனித்தன்மையானவர்கள். அத்துடன் அவர்கள்

வாழும் சூழலின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்கள்.

2. பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் வெவ்வேறு கல்விசார்

தகமைகளையும், தொழில்சார் தகமைகளையும் கொண்டவர்கள்.

3. பல்வேறு வாழ்க்கைத்தரங்களையும், வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்டவர்களாகவும் பாடசாலை ஆசிரியர்கள் விளங்குகின்றனர்.

4.ஆசிரியர்கள் தமது வகிபங்கு தொடர்பாகப் பல்வேறு முரண்பாடுகளை எதிர்நோக்கியிருப்பவர்கள். பொதுவாக பாடசாலை தொடர்பாக

பல்வேறு அறநெறிசார் முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றனர்.

5. பெரும்பாலான பாடசாலை ஆசிரியர்கள் ஆசிரியத் தொழிலை

ஆரம்பத்திலிருந்தே விரும்பி தேர்ந்தெடுத்தவர்களாகக் காணப்படாத நிலை உள்ளது. 6.பாடசாலை ஆசிரியர்களின் ஒரு தொகுதியினர் தமது தொழில்சார் விருத்தி தொடர்பான சந்தர்ப்பங்களை அறியாதவர்களாகவும் தமது தொழில்சார் விருத்திக்குத் தாமே பொறுப்பேற்காதவர்களாகவும் உள்ளனர்.

7.பாடசாலை ஆசிரியர்கள் அர்ப்பனிப்புடன் செயலாற்றும் போதே பாடசாலையின் நோக்கத்தை இலகுவாக அடையமுடியும். ஆனால் பல ஆசிரியர்கள் தமக்கு வசதியான பாடசாலைகளில் நியமனம் இடமாற்றம் கிடைக்காமை தொடர்பாக விரக்தி நிலையைக் கொண்டுள்ளனர்.

பாடசாலையும் பரவலாக்கப்பட்ட அதிகாரங்களும்

பாடசாலைகள் பரவலாக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டதொரு அமைப்பாகக் காணப்பட வேண்டுமென பாடசாலை முகாமைத்துவக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன. பாடசாலையின் அதிபர் அதிகாரங்களை எல்லாம் தம்மிடமே வைத்துக்கொள்ளாமல் குறிப்பிட்ட சில முக்கியமான

அதிகாரங்கள் தவிர ஏனையவற்றை பாடசாலையின் ஆசிரியர்களிடம் பரவலாக்குதல் வேண்டுமென்பதே இதன் கருத்தாகும்.

அதிகாரப் பரவலாக்குதலின் வழி ஆசிரியர்களும் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் அதிகாரங்களைக் கொண்டவர்களாகக் காணப்படுவர். இதனால் பாடசாலை முகாமைத்துவம் சிறப்பாக நடைபெற முடிகின்றது.

சிறப்பான முகாமைத்துவம் ஒன்று பாடசாலையில் காணப்படுமாயின் பாடசாலைகள் மனித வளத்தையும் பௌதிக வளத்தையும் சிறந்த முறையில் பயன் படுத்த முடியும். இதன் வழி பாடசாலையின் நோக்கத்தையும் குறிக்கோளையும் சிறப்பான முறையில் அடைய முடியும். அத்துடன் பாடசாலையின் அளவு சார்ந்த அபிவிருத்திக்கான உறுதியான தளம் ஒன்றினை அமைத்துக்கொள்ள முடியும்.

அதிகாரப் பரவலாக்களின் ஊடாக பாடசாலை முகாைைமத்துவமானது பின்வரும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

*பாடசாலை அதிபரின் வேலைச் சுமை குறைவடையும்.

*பாடசாலையை பல்வேறு துறைகளாகப் பிரிப்பது சுலபம்.

*புதிய நுட்பங்களை முகாமைத்துவத்தில் அறிமுகப்படுத்தல் சுலபம்.

*ஆசிரியர்களின் பயிற்சியும், திறமையும் அதிகரிக்கும்.

*பாடசாலையின் பல்வேறு பணிகளை ஒருங்கிணைப்பது சுலபம்.

*பாடசாலையின் வேலைத்திட்டம் நெகிழ்ச்சிதிறன் மிக்கதாக இயங்க ஏதுவாகும். ஒட்டுமொத்தமாக பாடசாலையின் கற்றல் - கற்பித்தல் செயற்பாடு வெகுவாக அபிவிருத்தி அடையும்.

பாடசாலை முகாமைத்துவத்தைப் பொறுத்தவரையில் அதிகாரங்களை பரவலாக்குவதில் பல்வேறு தடைகள் காணப்படுகின்றன. இதனை மூன்றாக வகுக்கலாம்.

1. பாடசாலை அதிபரால் ஏற்படும் தடைகள்

2. ஆசிரியர்களால் ஏற்படும் தடைகள்

3. ஏனைய காரணிகளால் ஏற்படும் தடைகள் '

பாடசாலை அதிபர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பாடசாலையின் முதன் நிரை முகாமையாளர்கள் என அழைக்கப்பட்டாலும், முகாமைத்துவக் கோட்பாடுகளின் படி அதிகாரங்களை ஒப்படைப்பதற்கு தயங்குகின்றனர். பெரும்பாலான பாடசாலை அதிபர்கள் தாராள மனப்பான்மை அற்றவர்களாகக் காணப்படுவதும் பாடசாலைகளில் அதிகாரக் குவிப்பிற்கு ஒரு காரணமாகின்றது. இதனால்,

1.ஏனையோருடன் வேலைகளைப் பகிர்ந்துகொள்வதில் காணப்படும் விருப்பமின்மை

2.ஆசிரியர்களின் திறமையை மதிக்கும் மனப்பாங்கு இல்லாமை

3.இளவயதினர் தொடர்பாக கொண்டுள்ள அதிருப்தி

4.ஏனையவர்களை விட தன்னால் மட்டுமே எல்லா வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிக்க இயலும் என்ற கருத்தினை கொண்டுள்ள போக்கு

என்பன அதிகாரத்தை பரவலாக்குவதற்கு பெரும் தடையாக உள்ளன. இன்றைய பெரும்பாலான பாடசாலைகளில் இந்தப் போக்குகளை அடையாளம் காண முடியும்.

அடுத்து பாடசாலை அதிபர்களிடம் காணப்படும் ஆதிக்க மனப்பான்மையும், பாடசாலையின் பணிகளை ஆசிரியர்களிடையே பரவலாக்குதலினை பின்னடையச் செய்கின்றன. அதாவது,

*பாடசாலையின் பணிகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து அவர்களை பயிற்சியடையச் செய்தால் நாளடைவில் அவர்கள் தம்மை விட திறமைசாலிகளாக மாறிவிடுவர்.

*இதனால் தம்முடைய செல்வாக்கும், அதிகாரமும் குறைந்துவிடும் என பயப்படுகின்றனர்.

இத்தகைய வக்கரித்த (perveted) மனப்போக்கு பாடசாலையின் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதோடு இளம் ஆசிரியர்கள் பாடசாலையின் பணிகள் பற்றியும் பாடசாலைத் தலைமைத்துவம் பற்றியும் அனுபவத்தைப் பெற தடையாகவுள்ளது.

சில பாடசாலை அதிபர்கள், அதிகாரப் பரவலாக்கலில் ஆர்வங் கொண்டிருந்தாலும், அவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டும் திறமையற்றிருப்பதால் அதிகாரப் பரவலாக்கம் அர்த்தமற்றதாகி விடுகின்றது. ஆசிரியர்களுக்கு விளங்கும்படி அதிகாரங்கள், பொறுப்புக்கள் தொடர்பாக பணிப்புரைகளை விடுவிக்க தெரியாத அதிபர்கள் தாம் சொல்வதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ளாத நிலையில் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். இதனால் அதிகாரப் பகிர்வு இருந்தும் ஆசிரியர்களுக்கும், அதிபருக்கும் முரண்பாடுகள் தோன்றுகின்றன.

தம் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களின் திறமையிலும், தகுதியிலும் நம்பிக்கை கொள்ளாத அதிபர்கள் அதிகாரப் பகிர்வினை எப்போதும் விரும்புவதில்லை. எப்போதும் சந்தேகத்துடன் நடந்துகொள்ளும் அதிபர்கள் எல்லாவிதமான செயற்பாடுகளிலும் தாமே முடிவுகளை எடுத்து அதனையே எல்லோரும் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். தனிப்பட்ட ஒருவரால் எடுக்கப்படும் முடிவுகளானது பாடசாலையின் கல்வி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

அதிகாரப்பகிர்வில் பாடசாலை அதிபர்கள் பெரும் நாட்டம் கொண்டிருந்தாலும், பாடசாலை ஆசிரியர்களிடையே காணப்படும் பல்வேறு குணப்பண்புகளும், நடத்தைகளும் அதிகாரப் பகிர்வுக்கு பெரும் தடைகளாக

இருக்கின்றன. அடுத்து எப்போதும் பொறுப்புக்களிலிருந்து தப்பிக்கொள்ள விரும்பும் ஆசிரியர்களும், பாடசாலைகளில் அதிகாரப் பகிர்விற்கு முட்டுக்கட்டையாக உள்ளனர்.

ஆசிரியர் தானே முடிவெடுப்பதனைவிட அதிபரின் ஆலோசனையின் பேரில் முடிவெடுப்பது சுலபம். இதனால் இம்முடிவுகளில் தவறுகள் ஏற்பட்டாலும் தாம் தப்பித்துக்கொள்ளலாம், தம்மீது பொறுப்பு ஏற்படாது என்ற எண்ணமுடைய ஆசிரியர்களின் போக்கு பாடசாலை முகாமைத்துவத்தினை சிறப்பாக்குவதற்கு பெரும் இடைஞ்சலாக உள்ளது.

அடுத்து தன்னம்பிக்கை அற்ற ஆசிரியர்களும் பாடசாலையில் பொறுப்புக்களை ஏற்பதில்லை. தம்முடைய தகுதி, திறமை, ஆற்றல், சிருஷ்டிப்பு என்பனவற்றில் நம்பிக்கையில்லாத நிலையில் காணப்படும் இவ்வகையான ஆசிரியர்கள் பொறுப்புக்களை ஏற்பதற்கு அஞ்சுகின்றனர். தமது திறமை, தகுதி, ஆற்றல் என்பனவற்றின் மீது நம்பிக்கை கொண்டிராத இவ்வகையான ஆசிரியர்கள் பாடசாலையின் அபிவிருத்திக்கு பெரும் தடைக்கற்களாகவே இருக்கின்றனர். இவர்களில் சிலர் “நமக்கேன் வீண்வம்பு” என்று ஒதுங்கியிருக்கும் சுபாவத்தைக் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

பாடசாலை ஒன்றில் நிலவும் கலாசாரம்

பாடசாலை ஒன்றில் நிலவும் கலாசாரமானது பின்வரும் பண்புகளை உடையதாக இருக்கும் போது அங்கே ஆசிரியர்களின் தலைமைத்துவம் சிறப்பாக வெளிப்படுவதற்கான வாய்ப்பினை உருவாக்கும்.

1. பாடசாலை தொடர்பான தெளிவான இலட்சியத்தை ஆசிரியர்கள்

அனைவரும் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பதை பாடசாலை முகாமைத்துவம் உறுதிப்படுத்திக்கொள்ளல் வேண்டும்.

2.பாடசாலையின் இலட்சியத்துடன் பிணைக்கப்பட்டதாக ஆசிரியர்களின் தொலைநோக்கு பணி இலக்கு அமைக்கப்படல் வேண்டும். ஆசிரியர்களினது ஒவ்வொரு செயற்பாட்டிலும் செயற்பாட்டுக் கூறுகளிலும் பாடசாலை இலட்சியம் பின்னணியாக அமையும் நிலையினை தொடர்ச்சியாக ஊக்குவித்தல் வேண்டும்.

3.பாடசாலையின் அனைத்துச் செயற்பாடுகளிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து செயற்படுவதற்கான நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டமொன்று நடைமுறைப் படுத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.

4.ஆசிரியர்களிடையே மாணவர்களிடையே, ஆசிரியர்கள் மாணவர்களிடையே ஏற்படும் இடைத்தாக்கங்கள் தரமும் விருத்திசார் நோக்கும் கொண்டதாகவும் நேர்த்தியாக கட்டியெழுப்பப்பட்ட விழுமிய தொகுதியொன்றினைச் சார்ந்திருப்பதாகவும் இவை தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு ஊக்குவிக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்படல் வேண்டும்.

 

5.அறிவுபூர்வமான நம்பிக்கைகள் வரலாற்று நோக்குகள் கலாசார மரபுரிமைகளைப் பாதுகாத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளை ஆற்றுவதற்கான சுதந்திரமும் சந்தர்ப்பமும் ஊக்குவிப்புகளும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அளிக்கப்படல் வேண்டும்.

வாண்மைப்பண்பு நலன்கள்

பாடசாலை மட்டத்தில் காணப்படும் வாண்மைப்பண்பு நலன்களைப் பாதுகாக்கும் நிலைகளும் ஆசிரிய தலைமைத்துவத்துவ விருத்திக்கு ஊன்று கோலாய் அமைகின்றது. தொடர்ந்து வாண்மைப்பண்பு நலன்கள் பேணப்படுதல் ஊடாக வாண்மைத்துவ உறவுகளை கட்டியெழுப்புதல் இலகுவானது. பொதுவாக உறவு நிலைவிருத்திக்காகப் பேணப்பட வேண்டிய வாண்மைப்பண்பு நலன்கள் வருமாறு:

1. எதைச் செய்தல், எதுவரை செய்தல் என்ற வரையறை தெளிவாக இருத்தல்.

2இவற்றுக்கு அடிப்படையான நிபுணத்துவத்தை வளர்ப்பதற்கு வாய்ப்புக்கள், வசதிகள் தாராளமாகக் கிடைத்தல்.

3.தொடர்ச்சியான சுய முன்னேற்றத்திற்கு வாய்ப்புக்கள் கிடைத்தல்.

4.ஆற்றும்பணி சிறப்பாகக் கணிப்பிடப்படுவதற்குரிய ஒரு திட்டம் காணப்படல்.

5.தொழில் புரிவோர், தொழில் கொள்வோரால் கண்ணியமாக நடத்தப்படல்.

6.வாடிக்கையாளர் முன்னால் கௌரவமாக நடத்தப்படல்.

பாடசாலை மட்டத்தில் சிறப்புத் தேர்ச்சிமிகு ஆசிரியர்களின் பணிகள் தலைமைத்துவத்தினால் போசிக்கப்படுவதற்கு பதிலாக புறக்கணிக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது. உதாரணமாக உரிய ஆசிரியர்களின் சம்மதமின்றி நேரசூசிகளை மாற்றுதல், அவர் இதுவரை அடைந்திருக்கும் விசேட தேர்ச்சிகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பங்களை திட்டமிட்டு ஒடுக்குதல் என்பன விளக்கமற்ற தலைமைத்துவத்தினால் பொறுப்பற்று மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளாகக் காணப்படுகின்றன. இதனால் பாடசாலை மட்டத்தில் வாண்மைத்துவ உறவுகள் பாதிப்படைகின்றன. மோசமடைகின்றன. இந்நிலைமை உரிய ஆசிரியர்களின் உள நிலைகளை பாதிப்பதோடு மட்டுமின்றி ஏனைய ஆசிரியர்களுடனான தொடர்பிலும் விரிசல்களை ஏற்படுத்துகின்றன. வெற்றிகரமான கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகிச் செல்லும் அபாய நிலையும் உருவாகின்றன.

முடிவுரை

ஆசிரிய தலைமைத்துவம் என்பது தூய்மையாகவும் , அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு சிக்கனமான வழிமுறைகளின் ஊடாக தரமான வெளியீடுகளை உருவாக்க தம்மைச்சார்ந்த மாணவர் குழுவினரின் மீது நேர்நிலையில் செல்வாக்குச் செலுத்துவதனைக் குறிக்கின்றது.

ஆசிரியர்கள் தம்மைத்தாமே நன்கு விளங்கிக்கொண்டவர்களாகவும், நுட்பங்கள் சார்ந்த வல்லுனராகவும், தமது செயற்பாடுகளுக்கு தாமே பொறுப்பேற்பவராகவும், சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பவராகவும், முன் மாதிரி நடத்தைகளால் மாணவர்களை பொருத்தப்பாடு அடையச் செய்பவராகவும் விளங்க வேண்டும். மேலும் மாணவர்களின் நலன்கள் மீது அக்கறையுடன் கொண்டவராகவும், மாணவர்களைத் தொடர்ச்சியாக அறிவுறுத்துபவராகவும் இருத்தல் வேண்டும். தொடர்ந்து மாணவர்களை பொறுப்பேற்கச் செய்தல், மாணவர்கள் இணைந்து செயற்பட வழிகாட்டுதல், மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கான தலைமைத்துவம் ஏற்றல், வழிகாட்டல் ஊடாக நம்பிக்கையை உருவாக்குதல், ஒழுங்குணர்வுக்கு வழிகாட்டுவதற்கான தலைமைத்துவம் வழங்கல், பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்குதல், இணைப்பாளராக செயற்படுதல் என்பன பாடசாலை விருத்திக்கான ஆசிரிய தலைமைத்துவத்தின் அடிப்படைகளாக அமையும்.

 

 

கட்டுரைகள்

{youTube}/HvhurorfkeA{/youtube} உலகளாவிய மாற்று சிந்தனை கல்வி முறைகள் எவ்வாறு உள்ளன? எனும் கேள்விக்கு பதிலளித்தார் சமூக ஆய்வாளரும், ஆசிரியம் இதழின் பிரதம ஆசிரியருமான தெ. மதுசூதனன்.

{youTube}/8qHc2Osvtpk{/youtube} - தெ. மதுசூதனன்.- இலங்கையில் ஆசிரிய சேவையிலும் பார்க்க கல்வி நிர்வாக சேவை உயர்வானதாக கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்களவு ஆசிரியர்களின் இலக்கு நிர்வாக...

கலாநிதி அதிரதன் கல்வியியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் கீழை நாடுகளில் வேரூன்றியுள்ள ஆணாதிக்கச் சிந்தனையும் அதன் புறவிசைகளும் பெண்கல்வி தொடர்பாக எதிர்மறைச் சிந்தனைகளை கட்டுமானம் செய்வதுடன்...

உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வது மூளைதான். தேவையான சத்துணவு, தேவையான அளவு கிடைக்காதபோது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.

ஞாபக சக்தி அதிகமாக இருக்க வேண்டும் என்றால் , அது அந்த தாயோட கையில தான் இருக்கு. சின்ன வயசுலேயே நம்ம குழந்தைகளுக்கு எந்த விஷயத்தையும் நல்லா மனசுல பதியுற மாதிரி சொல்லிக் கொடுத்தா, அதை அவங்க...

file:///C:/Users/Bruger/Downloads/pgde-reflection-final%20(1).pdf

Brain-wavesபொதுவாக உடலைக் கட்டுக்கோப்புடன், தகுதியாக வைத்துக் கொள்ள, உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் மனதைக் கட்டுக்கோப்புடன் தகுதியாக வைத்துக் கொள்ள என்ன செய்வது? தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும்...

வெற்றி என்னும் சாத்தியம் இருக்கையில், ஏன் சிலர் தோல்வியை எப்போதும் தேர்ந்தெடுக்கிறார்கள்? நீங்கள் மேற்கொள்ளும் தேர்வுகளிலிருந்தே துன்பத்திலிருந்து சவுகரியத்துக்கு நகர்கிறீர்கள்.

வாழ்க்கைமுறை

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம்...

சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

-ரூபன் சிவராஜா- படம் தனிமனித சாகசத்தை முன்வைக்கவில்லை. மாறாக அடித்தட்டு மக்கள் தமது வாழ்வாதார, இருத்தலியல் அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதாக முன்வைக்கப்படுகின்றது....

சினிமா

நடிகர் விவேக் மறைவு பலராலும் சோகத்துடன் எண்ணிப் பார்க்கப்படுகிறது. ''ஒரு நடிகன் நடிப்பைத் தாண்டி தன்னை ஆளாக்கிய சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் அதை செய்தவர் விவேக்'' என்ற கமலின் வார்த்தைகள்...

சினிமா

 சினிமா இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு மனித நாகரிகத்திற்கு விஞ்ஞானமும் கலையும் இணைந்தளித்த கொடை. உலக வரலாற்றில், மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்தாக இருந்து சிறப்பு பெற்றது. தமிழ்க்...

சினிமா

கர்ணன், 'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாவது படைப்பாக வெளியாகியுள்ள திரைப்படம். இப்படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க, ராஜீஷா விஜயன், யோகி பாபு,...

ஆன்மீகம்

ரதிகலா புவனேந்திரன்நுண்கலைத்துறைகிழக்குப் பல்கலைகழகம்.   வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள்...

குருந்தூர் மலையில் கிடைத்திருப்பதுஎண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாராலிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர்கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன்...

உளவியல்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும்...

- கி.புண்ணியமூர்த்தி- பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

 {youTube}/BZtEAoShpDQ{/youtube} 01. தோல்வியின் அடையாளம் தயக்கம்! வெற்றியின் அடையாளம் துணிச்சல்!துணிந்தவர் தோற்றதில்லை!!தயங்கியவர் வென்றதில்லை!!

 {youTube}/H7RVRGVWkqM{/youtube} 1. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால்வலிமை படைத்தவன் ஆவாய்!  02. மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி...

X

Right Click

No right click