cover 8 copy 1- மூர். தனிநாயகம் -

"ஒருபுறம், காலனித்துவமகற்றல் என்பது காலனித்துவ நிலையை நிலைநிறுத்தும் கட்டமைப்புகளை அகற்றுவதும் ஆரோக்கிமற்ற காலனிய உள இயக்கவியலைக் அகற்றுவதைக் குறிப்பதும் ஆகும். மறுபுறம், காலனித்துவமகற்றல் என்பது சுதேசிய அறிவு மற்றும் அணுகுமுறைகளை மதிப்பிடுவது மற்றும் புத்துயிர் பெறச் செய்வது மற்றும் குடியேற்ற சார்புகளை அல்லது ஊகங்களை களையெடுப்பது போன்றவற்றை உள்ளடக்கியதாக உள்ளது."

 கல்விக் காலனித்துவம் ஓர் அறிமுகம்

காலனியம் என்னும் கொள்கை ஒரு சமுதாயத்தை மற்றொரு சமுதாயம் சுரண்டி அதன் மீது ஆதிக்கம் செலுத்தி அதன் சுயத்தை இழக்கச்செய்து அதன் வளர்ச்சியைக் குன்றச் செய்யும் ஒரு முறையாகும். காலனியாதிக்கம் மற்றும் அதன் தாக்கம் பற்றிய ஆய்வு, காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய சமுதாயங்களின் வளர்ச்சிக்காகப் பின்பற்றப்பட்ட மூலாதார உத்திகள், கொள்கைகள் என்பனவற்றின் தேர்வுடன் நெருங்கிய தொடர்பும் உறவும் கொண்ட தாகும். காலனியம்' என்பதற்கு, காலனியச் சமுதாயங்களின் வளர்ச்சியின்மை என்பது, அவை காலனியாவதற்கு முந்தைய காலத்தில் பின்தங்கிய நிலையில் இருந்ததையே புலப்படுத்துகின்றது.

 காலனியாதிக்கம் என்பது நவீனமயமாக்கலுக்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சி. காலனிய சமுதாயங்கள் இடைநிலையிலுள்ள சமுதாயங்கள் என்னும் கருத்தாக்கங்கள் நிராகரிக்கப்படுகின்றன. காலனியம் தனக்கு முந்தைய சமூகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதில்லை. அதை மாற்றுகின்றது. ஒரு புதிய காலனியக் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்குகின்றது. அந்தப் புதிய காலனியக் கட்டமைப்பு உலக முதலாளித்துவ அமைப்பின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக உள்ளது.

 கல்வியில் காலனித்துவம் என்பது ஒரு நாடு தனது நாட்டில் அமுலில் உள்ள கல்வி முறைமையை தாம் கையகப்படுத்திய அல்லது தமது அதிகார எல்லைகளினுள் உட்பட்ட நாடுகளின் கல்வி அமைப்பினுள் பிரயோகித்து கல்வி அமைப்பை தமது கட்டுபாட்டிற்குள் கொண்டு வருதல் ஆகும். கல்வியில் காலனியம் ஆனது முன்பு அமுலில் இருந்த கல்விக் கட்டமைப்பை மாற்றி ஒரு புதிய காலனியக் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக கல்வியை மாற்றுகின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல்வேறு திசைகளில் மேலை நாட்டவரின் குடியேற்றங்களும் ஆதிக்கமும் தொடங்குகின்றன. போர்த்துக்கல், டச்சு , பிரிட்டன், பிரான்சு போன்ற ஐரோப்பிய நாட்டவர்கள் தங்களுடைய எல்லைகளைத் தாண்டி புதிய ஆயுதங்களோடும் உற்பத்திக் கருவிகளோடும் நோக்கம் மற்றும் சிந்தனைகளோடும் பல்வேறு நாடுகளில் அடியெடுத்து வைத்தனர். பிறகு அந்த நாடுகளைக் கைப்பற்றினர். பதினேழாம் நூற்றாண்டில் இவ்வாறு ஆங்கிலேய, டச்சு, பிரான்சுப் பேரரசுகள் தோன்றின. இவற்றுள் ஆங்கிலேயரின் ஆதிக்கமே மிகுதியாக இருந்தது.

 இந்தியா, மலேசியா, இலங்கை தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, பிஜி முதலான நாற்பத்தேழு நாடுகள் 1914 இல் ஆங்கிலேயரின் காலனி நாடுகள் ஆயின. இவ்வாறு அடிமைப்பட்டுக் கிடந்த இந்த நாடுகள் பல்வேறு போராட்டங்களினால் அரசியல் விடுதலையைப் பெற்றன. ஆயினும் காலனிய ஆதிக்க வடிவங்களும் அதன் தடயங்களும் இந் நாடுகளை விட்டுச் செல்லாது இன்னமும் தொடர்ந்து நிலை கொண்டுள்ளன.

அந்த வகையில் இலங்கை உள்ளிட்ட மேற்படி நாடுகளில் நடைமுறையில் உள்ள கல்வி அமைப்பினுள் காலனித்துவத்தின் செல்வாக்கு இன்றும் நிலவி வருகின்றது. அதாவது இந்த நாடுகளில் காலனித்துவக் கால கல்வி அமைப்பே தொடர்ந்தும் நிலவி வருகின்றமை குறிப்பிடற்பாலது.

 

கல்விக் காலனித்துவத்தை அகற்றுவதற்கான தேவைப்பாடு

காலனித்துவ நாடுகளின் நலன்களைப் பேணும் வகையில் குடியேற்ற நாடுகளில் தமது தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி முறைமை அவர்களின் தேவைகளையும் நோக்கத்தையும் நிறைவேற்றும் கல்வி முறைமையாக இருந்ததேயொழிய குடியேற்ற நாடுகளின் கலை, பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கும் வகையிலானதான கல்வி முறைமையாக அமையவில்லை. அதேவேளை உள்நாட்டு மூலவளங்களைப் பயன்படுத்தி பொருளாதாரத்தில் தன்னிறைவு காணக்கூடிய சொந்த நாட்டு வளங்களை உச்சப்பயன்பாட்டுக்கு கொண்டுவரும் கல்வி முறைமையாகவும் அமையவில்லை.

 மாறாக தமது அதிகார வரம்பிற்குட்பட்ட ஆங்கிலேய அரச நிர்வாகக் கட்டமைப்பை சரிவரக் கொண்டு செல்லும் வகையிலான பெருமளவில் குமாஸ்தாக்களை உற்பத்தி செய்யும் வகையிலானதும் கல்விச் சான்றிதழ் ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் வகையிலானதுமான ஒரு சான்றிதழ் நோயை உருவாக்குகின்ற கல்வி முறைமையாகவுமே ஆங்கிலேயக் கல்வி முறைமை அவற்றின் குடியேற்ற நாடுகளில் காணப்பட்டன. காலனியத்தின் உபரி உற்பத்தியையும், இலாபத்தையும் காலனியாதிக்க நாடுகள் தன்வயப்படுத்திக் கொள்கின்ற நிலைமை காலனியாதிக்கத்திற்குட்பட்ட நாடுகளில் காணப்பட்டன.

 எடுத்துக்காட்டாக ஆங்கிலேயரால் இந்தியாவில் கொண்டு வரப்பட்ட மெக்காலேவின் கல்விக் கொள்கையைக் குறிப்பிடலாம். மெக்காலேவின் மூலம் மனப்பாடக் கல்வி முறை உருவாக்கப்பட்டது. இக்காலக் கல்விமுறையின் இன்னொரு பெயர் குமாஸ்தாக் கல்வி முறை எனலாம். இதன் மூலம் பல்லாயிரக் கணக்கான வெற்றுப் படிப்பாளிகளும் வீணான பட்டதாரிகளும் உருவாயினர். இவர்கள் எத்தனை பட்டங்கள் பெற்றிருந்த போதிலும் அவர்களால் சுயமாக எதுவும் செய்யமுடியாத வெறும் படிப்பாளிகளாக இருந்தனர்.

 1813 க்கும் 1833 ஆம் ஆண்டுக்கும் இடையிலான 20 ஆண்டு காலத்தில் மேலும் ஒரு திட்டத்தை ஆங்கிலக் கல்வியை விரிவுபடுத்த பிரித்தானிய அரசு முன்மொழிந்தது. இந்தியாவின் மேல்தட்டு வர்க்கக் குடும்பங்களை ஆங்கிலக் கல்வியை நோக்கி இழுத்து அவர்களை அரசு வேலைகளில் அமர்த்த வேண்டும். இந்த நடவடிக்கை மற்றவர்களையும் ஆங்கிலக் கல்வியை நோக்கி இழுக்கும் என்று எதிர்பார்த்தது.

1834-ல் மெக்காலே இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த பென்டிங் பிரபு, மெக்காலேவை "பொது போதனை துறை” (Public instruction) எனும் கல்வித் துறையின் தலைவராக நியமனம் செய்தார். நான்கு மாதங்கள் இந்தியாவின் கல்வி முறையை ஆய்வு செய்த மெக்காலே, MACAULAY'S MINUTES (மெக்காலே குறிப்புகள்) எனும் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

மெக்காலேவின் நோக்கம் "வர்ணாஸ்ரம தர்மத்தை” கடைப்பிடித்து வந்த இந்திய பாரம்பரியக் கல்வி முறையை மாற்றி அனைவருக்கும் கல்வி வழங்குவதாக இருந்தது. “நாம் இப்போது செய்ய வேண்டிய முக்கிய பணி, நமக்கும் நாம் ஆளுகின்ற மக்களுக்கும் இடையே நல்லெண்ணத் தூதுவராக செயல்படவேண்டிய புதிய வர்க்கம் ஒன்றைக் கல்வியின் மூலம் தோற்றுவிப்பது ஆகும். இவர்கள் இரத்தத்தால், நிறத்தால் இந்தியர்கள். ஆனால் உணர்வால், நிலைப்பாட்டால் நடத்தையால், எண்ணத்தால், விருப்பு வெறுப்பால் ஆங்கிலேயர்கள்” என்றார்.

மேலும், அதாவது கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் அனைத்து இந்தியருக்கும் கல்வி அளிப்பதும், ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதும் கடினம். அது மட்டுமன்றி ஆங்கிலேயர்களுக்கு அவர்களது மொழியைப் புரிந்து கொண்டு அதை அவர்கள் ஆளும் மக்களிடம் அவர்களது மொழியில் பேச ஆட்கள் உடனடியாக தேவைப்பட்டது. எனவே முதலில் ஆங்கிலத்தை இந்தியாவில் உள்ள ஒரு சிலரிடம் கற்றுக்கொடுப்போம். அவர்கள் ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்து தங்களது மொழியில் மொழி பெயர்த்து அனைவருக்கும் கொண்டு செல்லட்டும்” என்றார்.

 மேற்படி மெக்காலேவின் கல்விக் கொள்கை வெளிப்படையாக கல்வியில் காலனித்துவத்தின் அதிகாரப் போக்கை விண்டுரைப்பதாக அமைகின்றது.

இலங்கையுட்பட்ட ஏனைய நாடுகள் ஆங்கிலேய ஆட்சி அதிகாரத்தில் இருந்து விடுபட்டு ஆறு தசாப்பதங்களைக் கடந்துள்ள நிலையிலும் கூட ஆங்கிலேயக் கல்வி முறைமையில் இருந்து விடுபடாத ஆங்கிலேயக் கல்வி அமைப்பு முறைமையே அவற்றின் குடிமைக்குட்பட்டிருந்த மேற்படி நாடுகளில் இன்னமும் காணப்படுகின்றன.

காலனிய ஆட்சியாளர்களின் நலன் பேணுகை நோக்கில் நகரமயமாக்கம், நுகர்வுப் பண்பாடு, கலாசாரத் தனியுடைமையாக்கல் என்பதான செயற்பாடுகளின் முன்னெடுப்பக்கள் இடம் பெற்றமையும் காலனிய காலகட்டத்தில் உருவாகிய ஆங்கிலம் கற்ற மத்திய தர வர்க்கத்தின் தோற்றமும் உள்ளுர் அறிவு முறைமையின் புறக்கணிப்புக்கு வழிகோலின. குறிப்பாக இன்றளவிலும் நடைமுறையில் இருக்கின்ற சான்றிதழ் மயப்படுத்தப்பட்ட கற்கை நெறி என்பது உள்ளூர் அறிவுமுறைமையின் புறக்கணிப்புக்கு வலுவான ஆயுதமாகப் பிரயோகிக்கப்படுகின்றது.

வெறுமனே புத்தக அறிவை மட்டும் பரீட்சிக்கும், பரீட்சையை மையமாகக் கொண்ட பாடசாலை மட்ட, தேசிய மட்டப் பரீட்சைகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட ஏனைய உயர்கல்வி நிறுவனங்களின் பரீட்சைகளும் வெறும் சான்றிதழ்களை வழங்கும், திறன்களை அளவிடாத மக்கள் மத்தியில் ஓர் சான்றிதழ் நோய் ஒன்றை உருவாக்கும் பரீட்சைகளாகவே அமைந்துள்ளது.

 

சுதேசியக் கல்வி அமைப்பு முறையை மீட்டுருவாக்கம் செய்தல்

 முன்னதாக, காலனித்துவ சக்திகளின் அறிவு அமைப்புகள், காலனித்துவம யமாக்கப்பட்டவர்களின் அறிவு அமைப்புகளை விலக்குவதற்கான ஒரே நியாயமான அறிவாக காலனித்துவவாதிகள் மீது தங்களைத் திணித்தன. ஒருபுறம், இந்த அறிவு முறைகளின் காலனித்துவ செயல்பாடுகள் சுதேசிய மக்கள் தங்கள் சொந்த அறிவு, இருத்தலியல் எதார்த்தங்கள் மற்றும் மரபுகள் ஆகியவற்றிலிருந்து அந்நியப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

உலகமயமாக்கப்பட்ட மற்றும் பன்முக பண்பாட்டு உலகில், பல தளங்களிலிருந்தும், பல இனங்களிலிருந்தும் அறிவு உருவாக்கப்படும் போது, உண்மையான அறிவு உற்பத்தி என்பது பல பண்பாடு மற்றும் பல இனங்களில் இருந்து தோன்றும் அறிவுத் தொகுதியாகும். இங்குள்ள தருக்கரீதியான விலக்கு என்னவென்றால், எல்லா அறிவும் பல இனமாக இருந்தால், அது போன்ற அறிவு, பல இன ரீதியாக நிறுவப்பட்ட அறிவுகளை உள்ளடக்கியது.

உள்நாட்டு அறிவு முறைகள் அறிவுசார்மயமாக்கல் மற்றும் அறிவு உற்பத்தியைப் பின்தொடர்வதன் மூலம் அறிவின் சுதேசமயமாக்கல், உண்மையான அறிவு பண்பாட்டு ரீதியாக சூழல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இந்த பார்வை அறிவின் தவறான ஐரோப்பிய மையப் புரிதல்களை எதிர்க்கிறது. அறிவு உற்பத்தி நடைமுறைகள், கலாச்சார பன்முகத்தன்மையின் எதார்த்தம் இருக்கும் போது, சில சமயங்களில் நமது மனித அனுபவங்களில் பண்பாட்டு ஒருங்கிணைப்பின் வலுவான கூறு உள்ளது என்று வாதிடப்படுகிறது. காலனித்துவத்தின் போது, மானுடவியலாளர்கள் மற்றும் மிக்ஷனரிகளால் சுதேசிய அறிவை சேகரித்தல், உற்பத்தி செய்தல் மற்றும் பரப்புதல் ஆகியவை காலனித்துவ நோக்கங்களுக்காக தகவல்களாகவும், பொதுவாக காலனித்துவ நிகழ்ச்சி நிரல்களை மேம்படுத்துவதாகவும் இருந்தன. காலனித்துவ நாடுகளில் உள்நாட்டில் கல்வி முன்னேற்றங்கள் மற்றும் சிக்கல்களுக்கு பதிலளிப்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து அறிவும் அவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதும் அனைவரும் அறிந்ததே.

எனவே, காலனித்துவ சூழலில் அறிவு பரப்பப்பட்டால், அறிவு தானே சிதைந்துவிடும் என்று பொருள். சுதேசிய அறிவு அமைப்புகளின் வளர்ச்சிக்கான நமது தற்போதைய நாட்டம், புதிய காலனித்துவ அடிப்படையில் இந்த போக்கை எதிர்ப்பது மட்டுமல்லாமல், அது உருவாக்கப்பட்டு பரப்பப்படும் பண்பாட்டு சூழல்களுக்கு பொருத்தமான சுதேசிய அறிவை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 இது சம்பந்தமாக, அறிவு உற்பத்தி என்பது சுதேசிய சமூகங்களின், அனுபவ உலகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்களிடையே ஒரு உணர்தல் உள்ளது. இதன் மூலம் சமூக மற்றும் பண்பாட்டு சூழல்கள் கருத்துக்களை உருவாக்குவதில் கல்வியில் காலனித்துவம் அகற்றல் என்பது இன்றியமையாத பங்கைக் கொண்டுள்ளது. உதாரணமாக, அறிஞர்கள் மத்தியில் ஒரு உலகளாவிய உணர்வு உள்ளது, அறிவு உற்பத்தியில் குறிப்பிட்ட நிகழ்வுகளைப் பொறுத்தவரை பயன்படுத்தப்படும் சொற்கள் மற்றும் எடுத்துக்காட்டுகள் பண்பாடு சூழல் மற்றும் வரலாற்றால் தீர்மானிக்கப்பட வேண்டும்.

காலனித்துவ வெற்றி என்பது வெளிநாட்டு பிராந்தியங்களை இணைப்பது பற்றி மட்டுமல்ல, மாறாக அது மேற்கத்திய அறிவு முறைகள் மற்றும் பழங்குடியினரை இழிவுபடுத்தும் தன்மையை அகற்றுவதுமாகும். நாகரிகம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மனித முன்னேற்றத்திற்கு சுதேசிய அறிவு அமைப்புகளின் பங்களிப்பு எதுவும் இல்லை என்று சுதேசிய அறிவு அமைப்புகள் மறுக்கப்படுகின்றன, சுதேசிய அறிவு அமைப்புகளின் அறிவுசார்மயமாக்கலுக்கான முக்கிய அணுகுமுறைகளில் ஒன்று, முன்னர் காலனித்துவ ரீதியாக மறுக்கப்பட்ட மற்றும் கண்டனம் செய்யப்பட்ட சுதேசிய பாரம்பரிய அறிவு முறைகளை மறுபரிசீலனை செய்யும் வடிவத்தை எடுத்துள்ளது. அறிவு வளர்ச்சி மற்றும் அறிவு உற்பத்திக்கான அடித்தளமாக கருதப்படும் இது புனரமைப்புக்கு தகுதியானது மட்டுமல்லாமல், புவி வெப்பமடைதல் போன்ற தற்போதைய உலக அமைப்புகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கங்களுக்காக பாதுகாத்தல் மற்றும் அறிவுசார்மயமாக்கல் ஆகியவையாகவும் கருதப்படுகிறது. மைக்கேல் கெல்ஃபாண்ட் போன்ற சில மானுடவியலாளர்கள், மேற்கத்திய பண்பாட்டு நடைமுறைகளை விமர்சிக்கும் போது, அவற்றின் உள்ளார்ந்த முதலாளித்துவ குறிக்கோள்கள் மற்றும் குறிக்கோள்களுக்காகவும், பூர்வீக கலாச்சார நடைமுறைகளைப் பாராட்டுவதற்கும் இந்த விவகாரத்தை முன் வைக்கின்றனர்.

 மேலும், புவி வெப்பமடைதல், நோய்கள் மற்றும் போர்கள் போன்ற நமது சமகால இருத்தலியல் பிரச்சினைகளை நாம் நமக்குள் இருந்து தீர்க்க வேண்டும். இத்தகைய வாதங்களில் உள்ளார்ந்தவை, மேற்கத்திய நாகரிகத்தில் அவர்களின் வரலாற்று தோற்றம் காரணமாக, தற்போது உலகம் எதிர்கொள்ளும் இருத்தலியல் மற்றும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் வந்துள்ளன என்ற வெளிப்படையான அறிக்கை அல்லது மறைமுக அனுமானமாகும். உதாரணமாக, 'ஆதிமனிதவாதம் குறித்த ஒரு குறிப்பிட்ட பாராட்டுக்கான அவரது விளம்பரத்தில், ஆதிகால மக்கள் என்று அழைக்கப்படுபவர்களின் மதிப்புகள் மற்றும் சுதேசிய அறிவு முறைகளில் மிகவும் மதிப்புமிக்க ஒன்று இருப்பதாக மேற்குலகம் மெதுவாக விழித்துக் கொண்டிருக்கிறது என்று ஐடன் காம்ப்பெல் வலியுறுத்துகிறார். சரியான வாழ்க்கை குறித்த நமது கருத்துக்களை மேற்கத்திய நெறிமுறைகளில் மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருப்பது ஒரு தலைமுறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் அதற்கு முந்தைய காலத்திலும், பண்பாட்டு பன்முகத்தன்மை இப்போது பரவலாக மாறுவதற்கு முன்பு இருந்திருக்கலாம். இனி ஏற்றுக்கொள்ள முடியாதது. கல்வி ரீதியாக வேறுபட்ட நெறிமுறையாக, மேற்கைத் தாண்டிய நெறிமுறை தத்துவத்தின் பரந்த உலகத்தை வெறுமனே புறக்கணிக்க முடியும் என்ற அனுமானமாகும். (புரோஜெஸ்கி 2007:71-73).

  உலகின் அனைத்து பண்பாடுகளையும் சிந்திக்கும் இந்த வழியில், நாகரிகமாக இருந்தாலும் அல்லது பழமையானதாக இருந்தாலும் மனித இருப்புக்கான பொதுவான தன்மைக்கு ஏதாவது பங்களிக்க முடியும். இந்த காரணத்திற்காக, சுதேச அறிவு முறைகளை மேம்படுத்துவதன் மூலம் அறிவின் சுதேசமயமாக்கல் என்பது உலகளாவிய சேர்க்கை அறிவை மேம்படுத்துவதற்கான தேடலாகும். மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி முக்கிய பங்காற்றி இருக்கின்றது. பண்டைய காலம் முதல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சுதேசிய அறிவானது தனது பங்கினைச் செலுத்தி வருகின்றது. இன்று கூட பாரம்பரிய அறிவு என்று சொல்லப்படும் அறிவின் அடிப்படை , அறிவியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டதாக அமைகிறது. கிழக்கில், விஞ்ஞானம் அவ்வளவு தத்துவார்த்தமாக இல்லாமல் இருப்பதற்கான காரணம் அது தர்க்கரீதியாக இல்லை. விஞ்ஞான உண்மைகள் காரண காரியத் தொடர்புகளோடு கருத்தேற்றப்படுவதில்லை என்பதேயாகும்.

 

கல்விக் காலனித்துவத்தை அகற்ற வேண்டியதன் முக்கியத்துவம்

 காலனியாதிக்கத்தின் கீழ் இயங்கும் காலனிய நாடுகள் கல்வியில் அடிப்படையான மாற்றம் அல்லது நவீன மயமாக்கலுக்கு ஆட்பட்டன. ஆயினும், இது ஏகாதிபத்திய நாடுகளில் சமுதாயங்களின் அசல் பிரதிகளாக மாற்றப்படவில்லை . பொதுவாக, உற்பத்திச் சக்திகள் இடை விடாமல் முழுமையாக மாற்றி அமைக்கப்படுவதற்கு இட்டுச் செல்லும் வளர்ச்சிப் போக்கிற்கு உட்படுத்துவதற்கு மாறாக, காலனிகள் வளர்ச்சி யின்மையையே சந்தித்தன. காலனிகள் நவீனமயமாயின. ஆயினும், அது காலனியாதிக்க நாடுகளில் நிகழ்ந்தது போன்ற முதலாளித்துவ நவீனமயம் அன்று. அவற்றின் எதிர்பிம்பமாக காலனிகள் உருவாக்கப்பட்டன. அதாவது, புதிதாக விடுதலை பெற்ற ஒரு காலனிநாடு, காலனியத்திற்கு முந்தைய நிலைமையிலிருந்து தன்னுடைய வளர்ச்சிப் போக்கைத் தொடங்கவில்லை.

 அது காலனியாதிக்கக் காலத்தில் உருவாக்கப்பட்ட நிலைமைகளிலிருந்தே தன்னுடைய வளர்ச்சியைத் தொடங்கியது என்பதே காலனியம்' என்பதன் பொருளாகும். கல்வியில் காலனித்துவத்தின் கூறுகளாக உள்ள பின்வரும் எதேச்சதிகார அமைப்பு முறைமை அகற்றப்படுதல் கல்வியில் காலனித்துவத்தை அகற்றுவதற்கான வழிவகைகள் ஆகும்.

 - உலக முதலாளித்துவத்திற்குக் கீழ்ப்படிந்த, அதனிடம் உதவியை எதிர்பார்க்கும் நிலையிலுள்ள காலனிய நாடுகள் கல்வியிலும் முற்றிலுமாகச் சிக்கலான முறையில் அதனுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிலைமை நீக்கப்படுதல்

- காலனிக்கும் காலனியாதிக்க நாடுகளுக்கும் பரிவர்த்தனைகளும் உள்நாட்டுப் பொருளாதாரமும் வேறுவேறு எனப் பிரிக்கப்பட்டு உள்ளன. அவ்வாறுபிரிக்கப்பட்ட கல்வி உட்பட்ட வேறு வேறு பகுதிகள் உலகச் சந்தையின் வாயிலாகவும், ஏகாதிபத்திய மேலாதிக்கத்தினாலும் ஒன்றிணைக்கப்பட்டு உள்ளன. இது நீக்கப்படுதல் வேண்டும்.

  காலனியாதிக்க நாடுகள் உயர்தொழில் நுட்பம், உயர் உற்பத்தி ஆற்றல், உயர் ஊதியம், உயர் மூலதனம் ஆகியனவற்றால் மிகுதியாகத் தேவைப்படும் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான கல்வியை வழங்கும் அதேவேளை காலனி நாடுகளில் இவை மறுக்கப்பட்டு குறைந்த ஊதியம் மற்றும் கடின உழைப்பில் மிகுதியாகத் தேவைப்படும் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் வகையிலான கல்விச் சந்தர்ப்பங்ளை வழங்குவனவாகவுள்ளன.

இந்த நிலைமை மாற்றப்பட்டு பொருத்தமான கல்வி முறைமை உருவாக்கப்படுதலுடன் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படல் வேண்டும்,

 

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ள காலனித்துவக் கல்வி

  இரண்டு மூன்று நூற்றாண்டுகளாகவே உலகத்தின் முக்கால் பகுதி நாடுகள் நேரடியாகவும், ஓரளவுக்கு முழுமையாகவும் காலனித்துவம் மற்றும் எதேச்சதி காரத்தின் பிடியில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளன. உலக வரலாறு, உலகப் பண்பாடு குறித்த இன்றைய ஆய்வு நோக்குகளில் ஐரோப்பிய மையப் பார்வையே தலைமையிடம் பெறுகின்றது. ஐரோப்பியர்கள் தங்களை உயர்வாகவும், மூன்றாம் உலக நாட்டு மக்களைத் தாழ்வாகவுமே சித்திரித்துள்ளனர். இவ்வகையில் அவர்களது பண்பாட்டு விளக்கங்கள் கட்டமைக்கப்பட்டிருப்பதாக எட்வர்டு சைத்தன் (Edward Saidhan) கீழ்த்திசையியல்' (Orientalism) என்னும் நூலில் விரிவாக எழுதியுள்ளார். ஐரோப்பியர் களின் காலனி மயமாக்கலை காலனி ஆதிக்கர் அல்லது காலனியாவோர் என்னும் பார்வையில் சைத்தும் பின்னைக் காலனியவாதிகளும் விவாதித்துள்ளனர்.

மேற்குலகை அறிவும், கற்றலும் உடையதாகவும், கிழக்குலகை அறியாமையும் இயற்கைத் தன்மையும் கொண்டதாகவும் காட்டும் ஐரோப்பியர்கள் மேற்கை உயர்தரம் என்றும், கிழக்கை அதிலிருந்து மாறுபட்ட தாகவும் அதற்கு அடிபணிவதாகவும் காட்டியுள்ளனர். கிழக்கை வேறாகவும், மேற்கிற்கு அடங்கியதாகவும் நோக்கும் பார்வையே ஐரோப்பியர்களிடம் சிறப்பிடம் பெறுகின்றது. மெக்காலேயின் கீழ்த்திசை இலக்கியங்கள் குறித்த, ஒரு சிறந்த ஐரோப்பிய நூலகத்தில் ஓரடுக்கு, இந்தியா மற்றும் அரேபிய நாடுகளின் ஒட்டுமொத்த இலக்கியங் களுக்குச் சமமானது என்னும் கூற்றை மறுக்கக்கூடிய கீழ்த்திசையியலார் எவரையும் யான் கண்டதில்லை.

அரேபிய, சமஸ்கிருதக் கவிதைகள் புகழ்வாய்ந்த ஐரோப்பிய நாட்டிலக்கியங்களோடு துணிச்சலோடு ஒப்பிடும் கீழ்த்திசையியலார் எவரையும் WITGOT 56001LE|606060” (Susan Bassnett, 'Comparative Literature - A Critical Introduction, Oxford University Literature - A Critical Introduction, Oxford UniversityPress 1998 P.17) என்னும் மதிப்பீடு ஐரோப்பிய மைய உலகப்பார்வைக்குத் தக்க சான்றாகும். ஆங்கிலேயக் கல்வி அமைப்பை பின்பற்றிய கல்வி அமைப்பு முறையே இன்றும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. அரசியல் விடுதலை பெற்றும் அந்நாடுகள் அதன் பின்விளைவுகளிலிருந்து மீளவில்லை.

காலனித்துவத்தைத் தொடர்ந்து நவீனக் காலனித்துவம் வந்ததால் முன்னைய காலனிய நாடுகளின் மொழி, இலக்கியம், அரசியல், சமூக விழுமியங்கள், கல்விக் கொள்கைகள், தேசியம், பண்பாடு குறித்த கருத்தமைவுகள் ஆகியவற்றில் ஐரோப்பிய மாதிரி வடிவங்கள் போற்றப்படும் நிலை இன்றும் கூட காணப்படுகின்றது. உணர்வு மற்றும் செயல்பாட்டு நிலைகளில் சுயங்கள் தாழ்த்தப்பட்ட மரபுகள் ஒடுக்கப்பட்ட ஆங்கிலேயக் கல்வி முறைமையின் சாயலே இன்னமும் கல்வி அமைப்பில் காணப்படுகின்றது. இந்தச் சூழல்களின் எதிர்வினைகளாகவே இவற்றைத் தவிர்ப்பதும், இவற்றிலிருந்து மீண்டு வருவதும் காலத்தின் தேவையாகின்றது.

இதுவே பின்னைக் காலனித்துவத்தின் தேவை யாகவும் நோக்கமாகவும் அமைகின்றது. ஐரோப்பியச் சிந்தனை வடிவங்களைத் தூக்கியெறிந்து விட்டு அவ்விடத்தில் தனக்கானதும் சுயமானதுமான கருத்தியல்களையும் செயல்பாடுகளையும்முன் வைக்கும் வகையிலான கல்வி முறைமை, அவற்றை மறுசீரமைப்பு செய்வது, போன்றவை கல்வியில் காலனித்துவம் அகற்றலில் அவசியமாகின்றது. இவற்றில் பின்னைக் காலனித்துவம் ஆர்வம் காட்டுகின்றது. தத்தம் நாட்டுச் கல்விச் சூழமைவுகள் மற்றும் மரபுகளோடு ஏற்கெனவே கலந்து கிடக்கின்ற உண்மைகளைப் புதிய எதார்த்தமாகப் புனரமைப்பதே கல்விக் காலனித்துவமகற்றலின் முதன்மைச் செயற்பாடாகும். அதாவது காலனித்துவ கல்வியை மறுதலிப்பதும் மாற்றுத் தேடுவதுமே கல்விக் காலனித்துவமகற்றலின் நோக்கமாகும்.

 

மனதைக் காலனித்துவமகற்றல்

 மனதைக் காலனித்துவமகற்றல் என்பது மேற்கத்திய சிந்தனை மற்றும் அணுகுமுறைகளின் மேன்மை மற்றும் சலுகையின் காலனித்துவ சித்தாந்தங்களை மறுகட்டமைக்கும் செயல்முறையாகும். ஒருபுறம், காலனித்துவமகற்றல் என்பது காலனித்துவ நிலையை நிலைநிறுத்தும் கட்டமைப்புகளை அகற்றுவதும் ஆரோக்கிமற்ற காலனிய உள இயக்கவியலைக் அகற்றுவதைக் குறிப்பதும் ஆகும். மறுபுறம், காலனித்துவமகற்றல் என்பது சுதேசிய அறிவு மற்றும் அணுகுமுறைகளை மதிப்பிடுவது மற்றும் புத்துயிர் பெறச் செய்வது மற்றும் குடியேற்ற சார்புகளை அல்லது ஊகங்களை களையெடுப்பது போன்றவற்றை உள்ளடக்கியதாக உள்ளது. காலனித்துவமகற்றல் என்பது நாம் அனைவரும் கூட்டாக ஈடுபடவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டிய ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். மனனதைக் காலனித்துவமகற்றுவதற்கு சுதேசியமயமாக்கல் என்ற கருத்தில் உள்ளிட்ட சிந்தனை அவசியமாகின்றது.

 சுதேசமயமாக்கல்

சுதேசமயமாக்கல் என்பது சுதேசிய நோக்கம், இடைவினைகள் மற்றும் செயல்முறைகளை இயல்பாக்குவதற்கும், இடங்கள், மற்றும் இதயங்களை மாற்றுவதற்கும் அவற்றை தெளிவுபடுத்துவதற்கான ஒரு கூட்டு செயல்முறையாகும். இரண்டாம் நிலைக் கல்வியின் பின்னணியில், இது சுதேச முன்னோக்குகள் மற்றும் அணுகுமுறைகளை உள்ளடக்கியது. சுதேசமயமாக்கல் மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்கள், ஊழியர்கள், சமூக உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கல்விக் காலனித்துவத்தை அகற்றும் தேவையில் அவர்களின் மனங்களைச் சுதேசமயமாக்கலில் உட்கட்டமைப்புச் செய்யப்பட வேண்டும்.

 கொள்கைகள் மற்றும் அன்றாட நடைமுறைகளில் சுதேச முன்னோக்குகள், மதிப்புகள் மற்றும் கலாச்சார புரிதல்கள் சேர்க்கப்பட வேண்டும். நிறுவனங்களின் செயல்பாடுகளில் கலாச்சார நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகள் உள்ளடக்கப்பட வேண்டும். சுதேசமயமாக்கல் ஒரு சுதேசியப் பிரச்சினை" அல்ல, மேலும் சுதேசிய மாணவர்களுக்கு பயனளிப்பதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படவில்லை. சுதேசமயமாக்கல் அனைவருக்கும் பயனளிக்கிறது. சுதேசிய அறிவு மற்றும் முன்னோக்குகள் பற்றிய விழிப்புணர்வின் மூலம் நாம் அனைவரும் உலகத்தைப் பற்றியும் உலகில் நம்முடைய குறிப்பிட்ட இருப்பிடத்தைப் பற்றியும் ஒரு சிறந்த புரிதலைப் பெறுகிறோம்.

சுதேசமயமாக்கல் ஒரு நியாயமான உலகத்திற்கு பங்களிக்கிறது, இது ஒரு பகிரப்பட்ட புரிந்துணர்வை உருவாக்குகிறது. இது சுதேசிய மற்றும் வெளிநாட்டு மக்களிடையே நல்லிணக்கத்திற்கான வழியைத் திறக்கிறது. இது சுதேச அறிவையும் வரலாற்றையும் தள்ளுபடி செய்து காலனியச் சிந்தனைப் போக்கை அகற்றி சுதேசிய சிந்தனை முறையை மேம்படுத்துவதன் மூலம் காலனித்துவத்தின் தாக்கங்களை எதிர்கொள்கிறது.

 

மனதை காலனித்துவமகற்றுவதன் அர்த்தம் என்ன?

மனதை காலனித்துவமகற்றுதல் என்பது காலனித்துவ சிந்தனையிலிருந்து பெறப்பட்ட எண்ணங்கள், விருப்பத்தேர்வுகள் மற்றும் மதிப்புகளை மறுகட்டமைப்பதாகும். இது தவிர்க்க முடியாமல் மேலும் அடிப்படைக் கேள்விகளுக்கு வழிவகுக்கும் ஒரு செயல்முறை. காலனித்துவ சிந்தனை வழி என்ன? இந்த வழியில் யார் நினைக்கிறார்கள்? மக்களின் மனம் எவ்வாறு முதலில் "காலனித்துவப்படுத்தப்பட்டது”? என்பவற்றுக்கு விடைகாண்பதன் மூலம் மக்களின் மனமானது காலனியமகற்றப்படுதல் வேண்டும். ஒரு காலனித்துவ மனநிலை”, அல்லது காலனித்துவ மனம்”, வெண்மை மற்றும் பண்பாட்டு விழுமியங்கள், நடத்தைகள், உடல் தோற்றங்கள் மற்றும் மேற்கு” (அதாவது மேற்கு ஐரோப்பா அல்லது அமெரிக்கா) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட அல்லது பெறப்பட்ட பொருட்களின் விருப்பம் அல்லது விரும்பத்தக்க தன்மையைக் காட்டுகிறது.

இது ஐரோப்பியர்களின் பண்பாட்டு மற்றும் உயிரியல் மேன்மையின் உணர்வை அடிப்படையாகக் கொண்டது, இது நாகரிகமற்ற இனங்களை அவர்களிடமிருந்து காப்பாற்ற நாகரிக பணி” என்று அழைக்கப்படுவதற்கு வழிவகுத்தது

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காலனித்துவ கல்வியின் நோக்கம் காலனித்துவத்திற்குட்பட்டோரை இழிவுபடுத்துவதோடு அவர்களின் சொந்த பண்பாடுகளை நிராகரிப்பதும் ஆகும். குழந்தைகள் ஐரோப்பிய மொழிகளில் படித்தவர்கள் மற்றும் "உள்ளார் மொழி” பேசுவதற்காக கண்டிக்கப்பட்டனர். இதே நடைமுறை அமெரிக்காவில் உள்ள சுதேசிய அமெரிக்க குழந்தைகளிலும் பயன்படுத்தப்பட்டது, அவர்கள் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடவும், நாகரிகத்திற்கு பழக்கப்படுத்தவும் விடுதிப் பாடசாலைகளில் சேர வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர், அவர்கள் தங்கள் மொழிகளையும் பண்பாடுளையும் கைவிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இந்த நடைமுறைகள் மற்றும் பல, காலப்போக்கில், பரவலான காலனித்துவ மனநிலைக்கு வழிவகுத்தன.. காலனித்துவ மனநிலை வெள்ளை மேலாதிக்கத்தின் கொள்கைகளையும், மேற்கின் மேன்மையையும், பலப்படுத்துகிறது.

எனவே, மனதை காலனித்துவப்படுத்துவது என்பது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் 'மேற்குக்கு சாதகமான படிநிலைகளை மறுகட்டமைப்பதை உள்ளடக்குகிறது. முதன்மையாக, காலனித்துவ மனதை மறுகட்டமைப்பது என்பது விரும்பத்தக்க விரும்பத்தகாத , கவர்ச்சிகரமான அழகற்ற, நாகரிக நாகரிகமற்ற, போன்றவற்றின் இருமைகளை மறுகட்டமைப்பதாகும்.

காலனித்துவ மனநிலை' நம் அன்றாட வாழ்க்கையை பல வழிகளில் பாதிக்கின்றது. எடுத்துக்காட்டுகள் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் சூழலிலிருந்தும் எண்ணற்ற வடிவங்களில் உள்ளன. நம்முடைய ஒவ்வொரு காலனித்துவ மனநிலையையும் விமர்சிப்பதும், அதை எதிர்கொள்ளும்போது அதை மறுகட்டமைப்பதும் நம் ஒவ்வொருவரின் மீதும் தங்கி உள்ளது.

இதற்கு நோக்கம் தேவை. காலனித்துவ மனநிலை என்பது நமது அன்றாட எண்ணங்கள் மற்றும் உணர்வுகளில் ஆழமாக பதிக்கப்பட்டுள்ளது, அதாவது நமது சார்பு, விருப்பத்தேர்வுகள் மற்றும் எண்ணங்கள் எங்கிருந்து பெறப்படுகின்றன என்பதை நாம் தொடர்ந்து கேள்வி கேட்க வேண்டும்.

 நம் மனதை காலனித்துவமகற்ற, வெள்ளை அல்லாத மற்றும் மேற்கத்திய' அல்லாதவற்றின் மதிப்பை அங்கீகரிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான ஆண்டுகால வெள்ளை மேலாதிக்கத்தை மறுகட்டமைக்க செயலூக்கமுள்ள விழிப்புணர்வு அதிகமாக தேவைப்படுகிறது, மேலும் “மனதைக் காலனித்துவமகற்றல்” பற்றிய விழிப்புணர்வு அதை மறுகட்டமைப்பதற்கான முதல் படியாகும்.

 

நிறைவாக....

ஆங்கிலேய கல்வி முறையே, காலனித்துவ அறிவியலில் உறுதியாக வேரூன்றியுள்ளது, இது ஆங்கிலேய சாம்ராஜ்யத்தையும் இன்று எடுக்கும் வடிவங்களையும் மையமாகக் கொண்டுள்ளது.

"பண்பாட்டில் ஒழுக்கவியல், அறவியல், அழகியல் மதிப்புக்கள் அடங்கியுள்ளன. இம் மதிப்புக்களே அம்மக்களின் பண்பாட்டின் அடித்தள மாகும். மனித இனத்தின் தனித்தன்மையைக் காட்டும் உணர்வு மொழியில் உள்ளது. மக்களின் வரலாற்று அனுபவங்களின் கூட்டு, நினைவு வங்கியாக உள்ளது மொழ மொழியே பண்பாட்டின் ஊடகம். இத்தகைய தாய்மொழியைப் புறக்கணித்து, காலனிய மொழிகள் என்னும் காலனியக் கண்ணாடிகள் வாயிலாக உலகைக் காணும் காலனிய ஆதிக்கத்திற்கு உட்பட்டோர் அவர்களது சமூகத்தின் அடையாளத்தி லிருந்து 016081 nimaloom60)” (Elleke Bochmer, “Colonial And Post Colonial Literature Oxford University Press (1995) Pp.88-90) 66075 குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள காலனித்துவத்தின் பகிரப்பட்ட அனுபவங்களிலிருந்து கல்வியை காலனித்து மகற்றுதலும் சுதேசப்படுத்தவும் வேண்டிய தேவை உள்ளது. உலகமயமாக்கல் மற்றும் முதலாளித்துவ சிந்தனைப்போக்கால் தூண்டப்பட்ட உலகில், கல்வி மேலாதிக்க நலன்களுக்கு

 செல்வாக்குச் செலுத்தும் வழிகளை உன்னிப்பாக ஆராய வேண்டிய அவசியம் உருவாகின்றது. இதனால் எதிர்கால கல்வி முயற்சிகளை முன்னெடுக்க உதவுவதோடு, கல்வியில் காலனித்துவமகற்றலையும் மேற்கொள்ள முடியும்.

காலனித்துவத்தின் மோசமான விளைவுகளைத் தாங்கியவர்கள். அச்சுறுத்தப்பட்ட மரபுகளை மீட்டெடுப்பதற்கும், புத்துயிர் பெறுவதற்கும் இன்றைய முயற்சிகள் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளால் ஆதரிக்கப்படுகின்றன, தேசிய மட்டங்களில் பலவிதமான அணுகுமுறைகளுடன் இணைந்து இது செயற்படுத்தப்படுவதாக உள்ளது. கல்வியை காலனித்துவமகற்றுதல் என்பது காலனித்துவம் கல்வியை எவ்வாறு பாதித்தது என்பதைக் கண்டறிதல் மற்றும் கல்விச் சூழல்களில் காலனித்துவ கட்டமைப்புகள், அமைப்புகள் மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைத் கண்டறிந்து காலனித்துவம் அகற்றலுக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.

இன்று எமது நாட்டில் நடைமுறையில் உள்ள முறையான கல்வி மேற்கத்திய பாடசாலைகளில் நடைமுறையில் உள்ள கல்வி முறைமையை அடியொற்றியதாகவே கட்டமைக்கப்பட்டவை. கல்வியை காலனித்துவமகற்றல் சமூக - அரசியல் மட்டங்களில் காலனித்துவமகற்றல் மற்றும் சுதேசமயமாக்கல் பற்றிய பாரிய புரிதல்களுக்குள் பொருந்துவதாக அமைகின்றது.

எவ்வாறாயினும், இந்த முயற்சிகள் குறிப்பாக மனதின் காலனித்துவம், அறிவு, மொழி மற்றும் பண்பாடு மற்றும் உடல், உணர்ச்சி, ஆன்மீகம், உளவியல் மற்றும் அறிவுசார் அனுபவத்தின் தனிப்பட்ட மற்றும் கூட்டு மட்டங்களில் காலனித்துவத்தின் தாக்கங்களை விளக்குகின்றன. இந்த மாற்றத்தின் போது, கல்வியை காலனித்துவம் அகற்றும் பணி பெரும்பாலான கல்வியாளர்களுக்கும் கற்பவர்களுக்கும் கல்வியை சுதேசமயமாக்குவதற்கு முன்னதாகவே இருக்க வேண்டும். ஆயினும்கூட, சுதேசிய அறிவு மரபுகளுக்கு ஏற்ப, இந்த வேலையை நாம் கூட்டாக மேற்கொள்ள வேண்டிய தேவையாகவும் அமைந்துள்ளது.

மனித இனத்தின் தனித்தன்மையைக் காட்டும் அவர்களுக்கே உரித்தான கல்வி அனுபவங்களின் ஊடான கல்விப் பாரம்பரியம் ஒன்றை ஏற்படுத்தி அதை நோக்கி செயற்படுகின்ற மாற்றுச் சிந்தனை மற்றும் மீள் பார்வையுடன் கூடிய கல்வி அமைப்பொன்றை உருவாக்கி காலனித்துவ வாசம் களையப்பட்ட ஒரு சமூகத்தின், ஒரு நாட்டின் சுயத்தை காட்டி நிற்கும் கல்வி முறைமை காலத்தின் தேவையாகவும் உள்ளது.

 

கட்டுரைகள்

{youTube}/HvhurorfkeA{/youtube} உலகளாவிய மாற்று சிந்தனை கல்வி முறைகள் எவ்வாறு உள்ளன? எனும் கேள்விக்கு பதிலளித்தார் சமூக ஆய்வாளரும், ஆசிரியம் இதழின் பிரதம ஆசிரியருமான தெ. மதுசூதனன்.

{youTube}/8qHc2Osvtpk{/youtube} - தெ. மதுசூதனன்.- இலங்கையில் ஆசிரிய சேவையிலும் பார்க்க கல்வி நிர்வாக சேவை உயர்வானதாக கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்களவு ஆசிரியர்களின் இலக்கு நிர்வாக...

கலாநிதி அதிரதன் கல்வியியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் கீழை நாடுகளில் வேரூன்றியுள்ள ஆணாதிக்கச் சிந்தனையும் அதன் புறவிசைகளும் பெண்கல்வி தொடர்பாக எதிர்மறைச் சிந்தனைகளை கட்டுமானம் செய்வதுடன்...

உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வது மூளைதான். தேவையான சத்துணவு, தேவையான அளவு கிடைக்காதபோது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.

ஞாபக சக்தி அதிகமாக இருக்க வேண்டும் என்றால் , அது அந்த தாயோட கையில தான் இருக்கு. சின்ன வயசுலேயே நம்ம குழந்தைகளுக்கு எந்த விஷயத்தையும் நல்லா மனசுல பதியுற மாதிரி சொல்லிக் கொடுத்தா, அதை அவங்க...

file:///C:/Users/Bruger/Downloads/pgde-reflection-final%20(1).pdf

Brain-wavesபொதுவாக உடலைக் கட்டுக்கோப்புடன், தகுதியாக வைத்துக் கொள்ள, உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் மனதைக் கட்டுக்கோப்புடன் தகுதியாக வைத்துக் கொள்ள என்ன செய்வது? தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும்...

வெற்றி என்னும் சாத்தியம் இருக்கையில், ஏன் சிலர் தோல்வியை எப்போதும் தேர்ந்தெடுக்கிறார்கள்? நீங்கள் மேற்கொள்ளும் தேர்வுகளிலிருந்தே துன்பத்திலிருந்து சவுகரியத்துக்கு நகர்கிறீர்கள்.

வாழ்க்கைமுறை

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம்...

சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

-ரூபன் சிவராஜா- படம் தனிமனித சாகசத்தை முன்வைக்கவில்லை. மாறாக அடித்தட்டு மக்கள் தமது வாழ்வாதார, இருத்தலியல் அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதாக முன்வைக்கப்படுகின்றது....

சினிமா

நடிகர் விவேக் மறைவு பலராலும் சோகத்துடன் எண்ணிப் பார்க்கப்படுகிறது. ''ஒரு நடிகன் நடிப்பைத் தாண்டி தன்னை ஆளாக்கிய சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் அதை செய்தவர் விவேக்'' என்ற கமலின் வார்த்தைகள்...

சினிமா

 சினிமா இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு மனித நாகரிகத்திற்கு விஞ்ஞானமும் கலையும் இணைந்தளித்த கொடை. உலக வரலாற்றில், மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்தாக இருந்து சிறப்பு பெற்றது. தமிழ்க்...

சினிமா

கர்ணன், 'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாவது படைப்பாக வெளியாகியுள்ள திரைப்படம். இப்படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க, ராஜீஷா விஜயன், யோகி பாபு,...

ஆன்மீகம்

ரதிகலா புவனேந்திரன்நுண்கலைத்துறைகிழக்குப் பல்கலைகழகம்.   வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள்...

குருந்தூர் மலையில் கிடைத்திருப்பதுஎண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாராலிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர்கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன்...

உளவியல்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும்...

- கி.புண்ணியமூர்த்தி- பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

 {youTube}/BZtEAoShpDQ{/youtube} 01. தோல்வியின் அடையாளம் தயக்கம்! வெற்றியின் அடையாளம் துணிச்சல்!துணிந்தவர் தோற்றதில்லை!!தயங்கியவர் வென்றதில்லை!!

 {youTube}/H7RVRGVWkqM{/youtube} 1. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால்வலிமை படைத்தவன் ஆவாய்!  02. மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி...

X

Right Click

No right click