Skærmbillede 1025கலாநிதி. க.சுவர்ணராஜா

பிள்ளைகளின் இயற்கையான திறன்களை வளரவிடாமல் முளையிலே கிள்ளியெறிந்துவிடும் அபாயம் சில ஆசிரியர்களின் மூலம் வெளிப்படுகின்றது. இந்த ஆசிரியர்களிடம் மாணவர்களின் எதிர்காலம் ஒப்படைக்கப்படும் போது பிள்ளைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்? இவை குறித்து இன்றைய பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகின்றது.

தமது பிள்ளைகள் பொதுப்பரீட்சைகளில் உயர் புள்ளியை பெற வேண்டும் என துடிக்கும் பெற்றோர்களின் மத்தியில் தமது பிள்ளைகளின் ஆரோக்கியமான எதிர்காலம் குறித்து சிந்திக்கும் பொருந்தொகையான பெற்றோர்களும் உள்ளனர்.

பிள்ளைக்கு என்ன தெரியும்? பிள்ளையைப் பற்றி எனக்கென்ன தெரியும்? என்ற அலைவரிசையில் இயங்கும் ஆசிரியர்களும் நம் மத்தியில் உள்ளனர். இவர்கள் பிள்ளைகளின் விருப்பங்கள், தேவைகள் பற்றி அறிய முற்படுவதோடு அவர்களுக்குள் உள்ள திறமைகளை, ஆற்றல்களை இனங்காண விளைகின்றனர்.

வகுப்பறையில் பிள்ளைகள் செலவிடும் ஒவ்வொரு நிமிடத்தையும் அப்பிள்ளைகளின் எதிர்கால வாழ்வின் முன்னேற்றத்திற்காக எவ்வாறு பயன்படுத்தலாம் என ஆசிரியர்கள் கவனமாகச் சிந்திக்கும்போது அவர்களின் கற்றலும் கற்பித்தலும் அர்த்தமுடைய ஒரு. செயலாக மாறும். மேலும் பிள்ளைகளின் நேரமும் பெறுமதியுடையதாக மாறிவிடும்

பிள்ளைகள் தமது ஆசிரியர்களிடம் அவர் கற்பிக்கும் விடயத்தினை மட்டும் கற்றுக்கொள்வில்லை. அவரையும் கற்றுக்கொள்கின்றனர். பொதுவாகப் பிள்ளைகள் ஆசிரியர்களின் நடத்தைகளையும் நன்கு அவதானிக்கின்றனர். அந்த நடத்தைகளை உடனே அல்லது பின்னர் பின்பற்ற முயலுகின்றனர். உதாரணமாக நேரமுகாமைத்துவத்தை நன்கு கடைப்பிடிக்கும் ஆசிரியர்களிடம் கற்கும் பிள்ளைகள் நேர முகாமைத்துவம் தொடர்பான அக்கறை கொண்ட பிள்ளைகளாக மாறிவிடுகின்றனர். நன்கு திட்டமிடாது வரும் ஆசிரியர்களிடம் கற்கும் பிள்ளைகள் திட்டமிடாத வகையில் இயங்குவதற்கு கற்றுக்கொள்கின்றனர்.

 

மிக அண்மையில் 10 ஆசிரியர்களின் வகுப்பறைக் கற்பித்தலை மேற்பார்வை செய்ய வேணடிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அவர்களின் வகுப்பறைக் கற்பித்தலில் அவர்கள் எப்படி பாடத்தினை ஆரம்பிக்கின்றனர் என தேடிப்பார்த்த போது கிடைத்த முடிவுகள் பின்வருமாறு அமைந்தது

நேற்று என்ன படித்தோம் 60%

வீட்டு வேலைகள் செய்துக் கொண்டுவந்தீர்களா? 10%

கடும் வெப்பமாகவுள்ளது எப்படி படிப்பது? 2 20%

நான் கரும்பலகையில் எழுதியுள்ள தலைப்புப் பற்றி நீங்கள் அறிந்தவற்றை கூறுங்கள்.

1 10%

மேற்கண்டவாறு 10 ஆசிரியர்களின் பாடஆரம்பம் நிகழ்ந்தது. இதில் 60%மான ஆசிரியர்கள் நேற்று என்ன படித்தோம் என்பதில் தொடங்கினார்கள். ஏன் இப்படி பாடத்தை ஆரம்பிக்கின்றார்கள் என தேடிப்பார்த்த போது சில ஆசிரிய கல்வியலாளர்கள் கூறிய பதில் பின்வருமாறு அமைந்தது.

*முதல் நாள் கற்பித்த விடயத்தை ஆசிரியர் மறந்திருக்கலாம்

*முதல்நாள் படித்தது தொடர்பாக மாணவரின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கலாம் *ஆசிரியரின் இன்றைய நாளுக்குரிய திட்டமிடல் இல்லாமல் வந்து நேரத்தைக் கடத்தலாம்

*ஆசிரியர் புதியதொரு நாளை ஆக்கப்பூர்வமாக ஆரம்பிக்க ஆர்வமில்லாமல் இருக்கலாம்

மேற்கண்டமுடிவுகளின் படி இந்த ஆசிரியர்களிடம் கற்கும்

பிள்ளைகள்

*திட்டமிடல் தொடர்பான பிழையான எண்ணக்கருவை கற்றுக் கொள்ளலாம். *மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் முறை பற்றி சரியான எண்ணக்கரு பற்றிச் சிந்திக்கலாம்.

*நேரத்தை எவ்வாறு கடத்தலாம் என்பது பற்றிய பிழையான கற்றல் பிள்ளைகளிடம் ஏற்படலாம்.

*ஒரு புதிய நாளை எப்படி ஆரம்பிக்கலாம் என்பது பற்றிய கற்பனை, கற்றல் பிள்ளைகளிடம் இடம்பெறாது போகலாம்.

ஆசிரியர்களின் இத்தகைய நடத்தை பிள்ளைகள் எதிர்காலத்தில் முறையான திட்டமிடலின்றி எதனையும் செய்யலாம் என்பதை கற்றுக்கொள்ளவதை மறைமுகமாக ஊக்குவிக்கலாம்.

அதுமட்டுமின்றித் திட்டமிடலாசிரியர்களை பிள்ளைகள் வெறுப்பதோடு, அவரது பாடத்திலும் விருப்பமின்றி நடந்துக்கொள்ளலாம்.

 

வீட்டு வேலை செய்து கொண்டு வந்தீர்களா? என பாடத்தை ஆரம்பித்தல்

உரிய ஆசிரியர்கள் ஏற்கனவே வீட்டு வேலைகளை பிள்ளைகளுக்கு வழங்கியிருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இவ்வாறான பாட ஆரம்பம் மாணவர்களின் முன் ஆயத்த நிலையை, அல்லது செயலாற்றுகையை கணிப்பிடுவதாக அமையும்

O உரிய வீட்டுவேலைகளை ஒழுங்காக செய்து கொண்டு வரவேண்டும்

0 உரிய வேலைகளை உரிய நாளில் உரிய நேரத்தில் முடிக்கவேண்டும்

0 யாருக்காவது ஏதாவது கடமைகளை ஒப்படைத்தால், பொறுப்பு வழங்கினால் அது பற்றி தொடர்ச்சியான தேடல் அவசியம்

இதுபோன்ற விடயங்களை பிள்ளைகள் கற்றுக் கொள்வதற்கு இவ்வாறான பாட ஆரம்பம் தூண்டுதலாக அமையலாம்.

கடும் வெப்பமாகவுள்ளது எப்படி படிப்பது என்ற பாட ஆரம்பம் எதனை காட்டுகிறது.

* ஆசிரியர் வெப்பமான காலத்தில் கற்பிப்பதற்கான நுட்பங்களைக் கொண்டிருக்கவில்லையா?

*வெப்பமான காலத்தில் படிக்க முடியாது என்ற கருத்தை மாணவரிடத்தே ஏற்படுத்த நினைக்கின்றாரா?

*வெப்பமான காலத்தில் படிக்காமல் இருப்போம் என்பதற்கான ஆதரவை மாணவரிடமிருந்து திரட்டுகின்றாரா?

இவை போன்ற வினாக்களை இவ் வகையான பாட ஆரம்பம் எம்மிடத்தே ஏற்படுத்துகின்றது. கடும் வெப்பமாக உள்ளது எப்படி படிக்கலாம் என்ற வினாவிற்கு மாணவர்கள் பின்வருமாறு விடையளிக்கலாம்.

* படிக்காமல் இருப்போம்

*வகுப்பறைக்கு வெளியிலே சென்று மரநிழலின் கீழிலிருந்து படிப்போம்

*படிக்காமல் ஓய்வாக இருப்போம்

என்பதாக அமையலாம், பெரும்பாலான மாணவர்கள் படிக்காமல் இருப்பதை விரும்பினால், அவர்கள் கடும் வெப்பம் நிலவும் காலங்களில் கற்காமல், சோம்பி இருப்பதை ஆதரிப்பதாகவும் அமையலாம்.

நான் கரும்பலகையில் எழுதியுள்ள தலைப்புப் பற்றி நீங்கள் அறிந்தவற்றை கூறுங்கள் என பாடத்தை ஆரம்பிக்கும் நுட்பமானது

*மாணவர்களின் கருத்தை அறியும் ஆவலை வெளிக்காட்டுகின்றது

*பிள்ளைகள் எல்லோரும் பாடத்துடன் இதணைதல் வேண்டுமென எதிர்பார்ப்பினை உருவாக்கின்றது

*பிள்ளைகளின் துடிப்பான பங்கேற்பினை வலியுறுத்துகின்றது

*பிள்ளைகளின் சரியான விடை, தவறான விடை என்பவற்றை கூர்ந்து பதிலளிக்க வேண்டும் என்ற கடப்பாட்டினை உருவாக்குகின்றது

* பிள்ளைகளின் விடைகள், நேர்மறையாக, எதிர் மறையாக,

மகிழ்ச்சிகரமானதாக, வேடிக்கையானதாக அமையலாம்

இத்தகைய பாட ஆரம்பம் மாணவரிடத்தே

*சுதந்திரமான பங்குபற்றல்

*தன்னார்வப் பங்குபற்றல்

* வித்தியாசமான முறையில் விடையளிக்கும் ஆர்வத்தை மேம்படுத்தல்

*உடனடித் துலங்கல்

இவை போன்ற திறன்கள் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு சாதகமாக அமையலாம்.

பாடத்தை ஆரம்பித்தல் தொடர்பாக கல்வியியலாளர்கள் பின்வருமாறு கூறுகின்றனர்

“பாட அறிமுகமானது கற்பித்தலில் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. ஆசிரியர் கற்பிக்கும் விடயத்தை மாணவர் தம் மனதில் பதியவைத்துக் கொள்வதற்கான சூழ்நிலை பாட ஆரம்பத்திலேயே ஏற்படுத்தப்பட வேண்டும். நல்லமுறையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு விடயம் அரைப்பங்கு முற்றுபெற்றதாகும்.”

"பாடஅறிமுகம் என்பது, நாம் குறிப்பிடும் போது அதற்கும் மாணவர்கள் கற்கப் போகும் விடயத்திற்கும் தொடர்பில்லாத ஒரு நிலையை எவரும் கருத்திற் கொள்ளக்கூடாது. மாணவர் கற்கப்போகும் புதிய பாடப் பொருளுடன் ஏதோ ஒருவகையில் தொடர்புடையதாக அது அமைவது முக்கியமாகும். இல்லையேல் பாட அறிமுகம் வீண் அரட்டையாகிவிடும்.”

(வ.ஆறுமுகன், வகுப்பறைக் கற்பித்தல், 1994)

“பாடங்களைக் கற்கும்போது வகுப்பறையில் பார்வைக்கு வைக்கப்படும் விடயங்களை உருவாக்குவதற்கும் பாட உள்ளடக்கத்தை விருத்தி செய்வதற்கும் ஆசிரியர்கள். மாணவர்களின் முன் அறிவுடனும் அவர்களது அனுபவங்களு டனும் தொடர்புபடுத்தி நடத்தையைக் கட்டியெழுப்புவார்கள்.”

(கலாநிதி. ஜெரேப்ரோஃபி, கற்பித்தல் 2007)

மாணவர்கள் பாடங்களையும் செயற்பாடுகளையும் முன்கூட்டியே ஒழுங்கபடுத்தி ஆரம்பிப்பதன் மூலம் கற்றல் தொடர்பான திசைமுகப் படுத்தலை நிறுவுவதன் பெறுமதியை ஆராய்ச்சிகள் எடுத்துகாட்டுகின்றன. செயற்பாட்டின் இயல்பையும் நோக்கத்தையும் அறிவித்தல் மாணவர்களிட முள்ள முன்னறிவுடன் அதனைத் தொடர்புபடுத்தல், செயற்பாட்டிற்கு பொருத்தமான விதத்தில் துலங்குவதற்கு வழிகாட்டுதல் முதலான அறிமுகங்கள் மாணாக்கர்கள் கற்பதற்கு உதவும்.

முன்கூட்டியே ஒழுங்கமைத்துக் கொள்ளும் ஆசிரியர்கள் மாணாக்கர்கள் எதைக் கற்கப் போகிறார்கள் என்பதைப் பற்றி கற்பித்தலை ஆரம்பிப்பதற்கு முன்னரே மாணாக்கர்களைத் திசைமுகப்படுத்தி விடுவார்கள்.

ஆவசியமான முன்னறிவு மாணாக்கர்களிடம் உள்ளதென்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் இவ்வறிவை இயக்கிச் செயற்படுத்துவதற்காகவும்

பாடத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆசிரியர் பாட உள்ளடக்கத்தைப் பற்றிக் கலந்துரையாடல் செய்ய வேண்டும்.

(கலாநிதி ஸ்டெல்லா வொஸ்னியாபிள்ளைகள் எவ்வாறுகற்கிறார்கள். 2008)

பாடத்தில் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்காக பின்வறுமாறு ஆசிரியர்கள் செயற்படலாம் என (கலாநிதி.ப.கா. பஷீர்ஜ'. பார் “வெற்றிகரமான வகுப்பறைக் கற்பித்தல்” (2007) என்ற நூலில் கூறுகின்றார்).

கற்றல் செயற்பாட்டினை தொடங்கும்போது கடந்தகால மற்றும் நிகழ்கால கற்றல் அனுபவங்களிடையே தொடர்பை ஏற்படுத்துவதாக செயற்பாடுகள் அமைய வேண்டும்.

தற்போதைய செயற்பாடுகள் பலன் அல்லது விளைவுகளை நோக்கியதாக மாணவர்களின் சிந்தனையை ஒழுங்குபடுத்தல் வேண்டும்.

பாட ஆரம்பம் மாணவர்களிடையே இரசனை, ஆவல் என்பவற்றை உண்டாக்கும் வினாக்களையும் பிரச்சினைகளையும் எழுப்புதல் எண்ணக் கருத் தலைப்பு பற்றி மாணவர்களின் தற்போதைய அறிவுடன் தொடர்புடைய துலங்கல்களை வெளிக்கொணர ஊக்குவித்தல் வேண்டும்.

பாட ஆரம்பத்தில் ஆசிரியரினால் மேற்கொண்ட செயற்பாட்டினால் இது ஏன் நிகழ்ந்தது. இது தொடர்பாக ஏற்கனவே எனக்கு என்ன தெரியும்? இதைப்பற்றி என்னால் எதைக் கண்டுபிடிக்க முடியும்? இப்பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட முடியும் போன்ற நடத்தைகள் மாணவரிடத்தே வெளிப்படல் வேண்டும்.

பாட ஆரம்பத்தின் முதல் 10 விநாடிகளில் பிள்ளைகளின் ஆர்வத்தை, கவனத்தை ஈர்த்துக்கொள்ள முடியாத ஆசிரியர்கள் பெரும்பாலும் அன்றைய கற்பித்தலில் தோல்வி அடைகின்றார்கள். ஏனெனில் இளமையும் துடிப்புமுள்ள பிள்ளைகள் ஒவ்வொரு நிமிடத்தையும் புதிதாக ஆக்கப்பூர்வமாக எதிர்பார்க்கின்றார்கள்.

பாட ஆரம்பத்தினை சுவையாகவும், பிள்ளைகள் அதனை பொருத்த மாகவும், ஆர்வமாகவும் பின்பற்ற பின்வரும் நுட்பங்களைக் கையாளலாம்.

0 புன்னகையோடு மாணவரை நோக்குதல்.

0 பாடத்தினை நேரடியாக ஆரம்பிக்காது இருத்தல்.

0நகைச்சுவையோடு பாடத்தினை ஆரம்பித்தல்.

0புதிர்களோடு ஆரம்பித்தல்.

0மாணவரிடத்தே திறந்த வினாக்களை வினவுதல்.

0பிரதிபலிப்புடன் பாடத்தினை ஆரம்பித்தல்.

0பிள்ளைகளை வாழ்த்துவதோடு பாடத்தினை ஆரம்பித்தல்.

0 - விளையாட்டுக்கள் ஊடாகப் பாடத்தினை ஆரம்பித்தல். என்பனவாகும்.

பாட ஆரம்பத்தில் புதுமையை விருத்தியாக்கும் வழிமுறைகள் பின்வருமாறு அமைகின்றது.

*மூளைக்கலக்கல்

*கருதுகோள் அமைத்து பரிசோதித்தல்

*வாசிப்பு விருத்தி

*ஊக்குவிப்பு

*மாறுபட்ட வினாக்கள்

*கருத்துக்களுக்கு மதிப்பளித்தல்

*சுய கற்றல் விருத்தி

*செய்தி சேகரிப்பு

*ஆராய்வு

*வகுப்பறைச் சூழல் மாற்றம்

*படைப்புகளை மதித்தல்

*வழக்கத்திற்கு மாறான வினாக்கள்

*ஆசிரியர் மாணவர் பரஸ்பர கருத்துப் பரிமாற்றம்

*மாணவரைக் கேலி செய்யாதிருத்தல்

*விளையாட்டு மனப்பான்மை

என்பனவாகும்.

பாடத்தினை தினமும் புதியதொரு முறையில் ஆரம்பிப்பதை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் இலட்சியமாகக் கொள்ளல் வேண்டும். உதாரணமாக

* சில ஆசிரியர்கள் தினமொரு பாடலை பாடத்திற்கேற்றதாக இயற்றி

பாடிக்காட்டுவார்கள். இந்த ஆசிரியரின் பாடலுக்காக பிள்ளைகள் காத்திருப்பர். பிள்ளைகளின் இரசிக்கும் ஆற்றல் உயர்வடையும்.

*சில ஆசிரியர்கள் பாடத்துடன் ஒட்டிய புதிய செய்திகளோடு பாடத்தினை ஆரம்பிப்பர். பிள்ளைகளின் தேடல் ஆற்றல் உயர்வடையும்.

*சில ஆசிரியர்கள் பாடத்துடன் ஒட்டிய படங்கள், ஒளி துணுக்குகள் போன்ற காண்பியங்களோடு பாடத்தினை ஆரம்பிப்பர். இதனால் பிள்ளைகளின் கட்புல ஆற்றல் கண்டுபிடிக்கும் ஆற்றல் என்பன விருத்தியடையும்.

* சில ஆசிரியர்கள் பாடத்துடன் ஒட்டிய விளையாட்டுகளுடன் பாடத்தினை ஆரம்பிப்பர். பிள்ளைகளின் அணியாக இயங்கும் திறன்கள், நேர்மறைச் சிந்தனை என்பன விருத்தியடையும்.

*சில ஆசிரியர்கள் பிள்ளைகளை இருக்கையிலிருந்து எழுப்பி அமரச்செய்யும் முறைகளை வேடிக்கையாகச் செய்து பாடத்தினை ஆரம்பிப்பர். இங்கு பிள்ளைகளிடையே புத்தாக்கம் அதிகரிக்கும்.

ஆகவே ஆசிரியர்களின் பாட ஆரம்பம் பிள்ளைகளின் கற்றலையும் எதிர்கால வாழ்க்கைக்கான திறன்களையும் தருகின்றது. இவை தொடர்பில் ஆசிரியர்கள் தமது அறிவையும் ஆற்றுகையையும் திட்டமிடலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

 

 

கட்டுரைகள்

{youTube}/HvhurorfkeA{/youtube} உலகளாவிய மாற்று சிந்தனை கல்வி முறைகள் எவ்வாறு உள்ளன? எனும் கேள்விக்கு பதிலளித்தார் சமூக ஆய்வாளரும், ஆசிரியம் இதழின் பிரதம ஆசிரியருமான தெ. மதுசூதனன்.

{youTube}/8qHc2Osvtpk{/youtube} - தெ. மதுசூதனன்.- இலங்கையில் ஆசிரிய சேவையிலும் பார்க்க கல்வி நிர்வாக சேவை உயர்வானதாக கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்களவு ஆசிரியர்களின் இலக்கு நிர்வாக...

கலாநிதி அதிரதன் கல்வியியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் கீழை நாடுகளில் வேரூன்றியுள்ள ஆணாதிக்கச் சிந்தனையும் அதன் புறவிசைகளும் பெண்கல்வி தொடர்பாக எதிர்மறைச் சிந்தனைகளை கட்டுமானம் செய்வதுடன்...

உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வது மூளைதான். தேவையான சத்துணவு, தேவையான அளவு கிடைக்காதபோது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.

ஞாபக சக்தி அதிகமாக இருக்க வேண்டும் என்றால் , அது அந்த தாயோட கையில தான் இருக்கு. சின்ன வயசுலேயே நம்ம குழந்தைகளுக்கு எந்த விஷயத்தையும் நல்லா மனசுல பதியுற மாதிரி சொல்லிக் கொடுத்தா, அதை அவங்க...

file:///C:/Users/Bruger/Downloads/pgde-reflection-final%20(1).pdf

Brain-wavesபொதுவாக உடலைக் கட்டுக்கோப்புடன், தகுதியாக வைத்துக் கொள்ள, உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் மனதைக் கட்டுக்கோப்புடன் தகுதியாக வைத்துக் கொள்ள என்ன செய்வது? தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும்...

வெற்றி என்னும் சாத்தியம் இருக்கையில், ஏன் சிலர் தோல்வியை எப்போதும் தேர்ந்தெடுக்கிறார்கள்? நீங்கள் மேற்கொள்ளும் தேர்வுகளிலிருந்தே துன்பத்திலிருந்து சவுகரியத்துக்கு நகர்கிறீர்கள்.

வாழ்க்கைமுறை

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம்...

சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

-ரூபன் சிவராஜா- படம் தனிமனித சாகசத்தை முன்வைக்கவில்லை. மாறாக அடித்தட்டு மக்கள் தமது வாழ்வாதார, இருத்தலியல் அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதாக முன்வைக்கப்படுகின்றது....

சினிமா

நடிகர் விவேக் மறைவு பலராலும் சோகத்துடன் எண்ணிப் பார்க்கப்படுகிறது. ''ஒரு நடிகன் நடிப்பைத் தாண்டி தன்னை ஆளாக்கிய சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் அதை செய்தவர் விவேக்'' என்ற கமலின் வார்த்தைகள்...

சினிமா

 சினிமா இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு மனித நாகரிகத்திற்கு விஞ்ஞானமும் கலையும் இணைந்தளித்த கொடை. உலக வரலாற்றில், மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்தாக இருந்து சிறப்பு பெற்றது. தமிழ்க்...

சினிமா

கர்ணன், 'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாவது படைப்பாக வெளியாகியுள்ள திரைப்படம். இப்படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க, ராஜீஷா விஜயன், யோகி பாபு,...

ஆன்மீகம்

ரதிகலா புவனேந்திரன்நுண்கலைத்துறைகிழக்குப் பல்கலைகழகம்.   வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள்...

குருந்தூர் மலையில் கிடைத்திருப்பதுஎண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாராலிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர்கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன்...

உளவியல்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும்...

- கி.புண்ணியமூர்த்தி- பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

 {youTube}/BZtEAoShpDQ{/youtube} 01. தோல்வியின் அடையாளம் தயக்கம்! வெற்றியின் அடையாளம் துணிச்சல்!துணிந்தவர் தோற்றதில்லை!!தயங்கியவர் வென்றதில்லை!!

 {youTube}/H7RVRGVWkqM{/youtube} 1. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால்வலிமை படைத்தவன் ஆவாய்!  02. மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி...

X

Right Click

No right click