Skærmbillede 1350கலாநிதி சபாரட்ணம் அதிரதன்

சிரேஷ்ட விரிவுரையாளர்,

கல்விப்பீடம்,

கொழும்புப் பல்கலைக்கழகம்

Covid 19 தொற்று நோயின் பரவலானது தனியாள், குடும்ப, சமூக மற்றும் தேசிய அளவில் மிகவும் எதிர்பாரததும் மேசமானதுமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக, பொருளாதார மற்றும் உளவியல் அம்சங்களை ஆட்டங்காணச் செய்துள்ளது. பல்தரப்பட்ட பராயத்தினர் மத்தியில் சிறுவர்களே மிகவும் பாரதூரமான பாதிப்புகளுக்கு உள்ளான தரப்பினராக உள்ளனர். கற்றலில் பின்னடைவு ஏற்படும் அதே வேளை எதிர்காலத்தில் பாடசாலை இடைவிலகலும் அதிகரிப்பதற்கான ஏதுநிலையும்; அதிகரித்துள்ளது. வழக்கமான செயற்பாடுகள் தடைப்படும்போது பொருத்தப்படற்ற செயற்பாடுகள் மேற்கிழம்புகின்றன.

ஏறத்தாள 18 மாதங்களாக பாடசாலைகள் நடைபெறவில்லை. முதலாந் தரத்துக்கு அனுமதி பெற்ற மாணவர்கள் பாடசாலை பற்றிய அடிப்படை விளக்கமே இல்லாமல் இரண்டாந் தரத்துக்கு நுழையத் தயாராகின்றனர். பாடசாலையுடன் தொடர்புடைய வழமையான செயற்பாடுகளில் மாணவர்கள் பரீடசயமற்றவர்களாகி விடுவதுடன் மாணவர்களிடத்தில் பாடசாலைக் கல்வி தொடர்பாக எதிர்மறைச் சிந்தனைகளும் தோற்றம் பெற நேரிடலாம். வயதில் கூடிய வெளியாட்களுடனான அதிகரித்த தொடர்புகள் மாணவர்களிடத்தில் தவறான பழக்கங்களுக்கும் நடத்தைகளுக்கும் காரணமாகலாம். மறுபுறமாக பெற்றோர் பிள்ளைகள் அனைவரும் தொடர்ச்சியாக வீட்டிலேயே தங்கியிருப்பதனால் பெற்றோர் பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் அதிகரிக்கின்றன.

இணையவழிக் கற்பித்தல் நிலைமைகள்

ஆசிரியர்களாயினும் சரி மாணவர்களாயினும் சரி எந்தவிதமான முன்னறிவோ பரீட்சயமோ அற்ற நிலையில் முற்று முழுதான இணையவழிக் கற்றல் கற்பித்தலை தொடர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகினர். மேலை நாடுகளில் உள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் சாதாரண காலங்களிலேயே கலப்பு முறை (டீடநனெநன டுநயசniபெ) கற்றல் கற்பித்தலுக்குப் பழக்கப்பட்டவர்கள். அதாவது பகுதியளவில் நேரடி வகுப்பறைக் கற்றலாகவும் பகுதியளவில் இணையவழிக் கற்றலாகவும் பயின்றவர்கள் அதனால் அவர்களுக்கு முழுமையான இணையவழிக் கற்றலை எதிர்கொள்வது சவாலாக இருக்கவில்லை. ஆனால் எமது பிள்ளைகளும் ஆசிரியர்களும் கலப்பு முறைக் கற்றல் பற்றிய பயிற்சிகூட இல்லாத நிலையில் ஒரு பாய்ச்சலாக இணையவழிக் கற்றல் கற்பித்தலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர்களுக்கு இணையவழிக் கற்பித்தல் தொடர்பான அடிப்படை அறிவு இருக்கவில்லை. அனேகமானவர்களுக்கு தொழில்நுட்ப கருவிகளைப் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்கவில்லை. செயலிகளை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்கவில்லை. அதற்கான முறையான பயிற்சிகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

மாணவர்களைப் பொறுத்த வரையில் இணைய வழிக் கற்றல் மீதான பங்குபற்றல் வீதம் மாநகரம், நகரம், கிராம் மற்றும் பெருந்தோட்டம் என்ற அடிப்படைகளில் வேறுபட்டுக் காணப்படுகிறது. கிராமங்களிலும் பெருந்தோட்டப் பகுதிகளிலும் மாணவர் பங்கு பற்றல் வீதம் 20-50மூ என்ற அளவிலேயே காணப்படுகிறது. பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த வறிய மாணவர்களின் இணையவழிக் கற்றலின் மீதான பங்குபற்றல் தொடர்பான இப் புள்ளிவிபரங்கள் எதிர்காலத்தில் பாரதூரமான கல்வி இடைவெளியை உருவாக்கப் போகிறது என்பதை தெளிவாகக் கோடிட்டுக் காட்டி நிற்கிறது. வசதி குறைந்த குடும்பத்திலுள்ள பிள்ளைகள் கணினி அல்லது திறன் பேசிகள் இல்லாததால் இணைய வகுப்புகளில் பங்குபற்ற முடியாத நிலையில்உள்ளனர்.

இன்னொரு புறமாக வறிய குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் அவர்களது பொரளாதார வல்லமைக்கேற்ப பெற்றுக்கொண்ட தனியொரு சாதனத்தை வைத்துக் கொண்டு வேறுபட்ட தரங்களில் கற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் சம நேரத்தில் ஒழுங்கு செய்யப்படும் இணையவழி வகுப்புக்களில் பங்குபற்ற முடியாது திண்டாடுகின்றனர். மேலும் கிராமப்புற மற்றும் பெருந்தோட்ட பகுதிகளில் வலுக்குறைந்த இணைய வலைப்பின்னலின் காரணமாக இணையவழிக் கற்றல் தெளிவின்மைக்கும் தொடர்ச்சியான தடங்கல்களுக்கும் உள்ளாகின்றது. இவ்வாறான பின்னணியில் இலங்கையில் இணையவழிக் கற்றல் என்பது பெரு நகரம் மற்றும் நகரங்களில் உள்ள பிள்ளைகளுக்கு ஓரளவு சாத்தியமானதாக காணப்பட்டபோதிலும் கிரமம் மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பிள்ளைகளுக்கு பெயரளவிலேயே நடைபெறுகிறது. தற்போது நடைபெறும் இணையவழி வகுப்புக்களில் கூட கற்பித்தலுக்கு பதிலாக மதிப்பிடுகளுக்கே ஆசிரியர்கள் முன்னுரிமையளிக்கின்றனர். இந்த நிலையில் பாடசாலைகள் மீள திறக்கப்படும்போது இணையவழிக் கற்பித்தலின்போது முடிக்கப்பட்ட பாடப்பகுதிகளில் இருந்தே ஆசிரியர்கள் பாடங்களைத் தொடங்கப் போகிறார்கள். இதன்காரணமாக இணையவழிக் கற்பித்தலில் கலந்து கொள்ள முடியாமற்போன பிள்ளைகளுக்கான பரிகாரக் கற்பித்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

கிராம மற்றும் பெருந்தோட்ட பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள், இல்பாகவே அங்கு நிலவும் ஆளணி, பௌதிக வளப் பற்றாக்குறை காரணமாக கற்றலில் பின்னடைவைச் சந்தித்திருந்த நிலையில் பாடசாலைகள் மூடப்பட்டதன் காரணமாக அதிகபட்ச பாதிப்பினைச் சந்தித்துள்ளனர். இக் கற்றல் இடைவெளி அவர்களது வாழ்க்கை காலம் முழுவதும் பாதிப்பினை தரப்போவதுடன் சமூக வேறுபாடுகளையும் அதிகரிக்கச் செய்யப் போகிறது. எனவே தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டு பிள்;ளைகளின் கற்றல் பாதிப்பினை ஈடு செய்யவேண்டிய பொறுப்பினை பெற்றோரே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. கணிசமான எண்ணிக்கையுடைய பெற்றோர் மாணவர்களின் கல்வியானது முற்று முழுதாக ஆசிரியர்களின் கைகளில் தங்கியிருக்கின்றது என்ற பிழையான விளக்கத்துடன் செயற்படுகின்றனர். சமகாலப் பெற்றோர் தமது திறமைகளை குறைத்து எடைபோட்டு தம்மால் தமது பிள்ளைகளின் கல்விக்கு உதவ முடியாது என்ற கருத்துடையவர்களாக உள்ளனர். உண்மையில் சமகால பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு கற்பிக்கக்கூடிய கல்வித் தகமைகளைக் கொண்டவர்கள். பிள்ளைகளின் கற்றலை ஓரளவேனும் தடையின்றி; முன்னெடுத்துச் செல்ல அவர்களால் முடியும். இதற்காக பெற்றோர் பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியமாகின்றது.

பாடநூல்களில் உள்ள உள்ளடக்கங்களை பெற்றோர் வாசித்து விளங்கிக் கொள்ளுதல்

மாணவர்களுடைய கற்றலுக்கான சிறந்த வளமாக இலவசப் பாடநுல்கள் விளங்குகின்றன. பாடசாலைகளில் ஆசிரியர்களும் இப் பாடநுலை அடிப்படையாகக் கொண்டே கற்பிக்கின்றனர். முன்பிருந்த பாடநூல்கள் போலன்றி தற்போது பாவனையிலுள்ள பாடநூல்கள் எளிமையான விளக்கங்கள், உதாரணங்கள், செயற்பாடுகள், பயிற்சிகள் என கற்பவருக்கு சார்பான முறையில் (டுநயசநெச குசநைனெடல) உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் சுய கற்றலுக்கு ஏற்ற வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. சுய மதிப்பீடுகளுக்கும் அவற்றில் பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. சாதாரணமான அல்லது குறைந்த கல்வித்தகைமையுடைய பெற்றோராலும் இந்த இலவசப் பாடநூல்களை வாசித்து விளங்கிக் கொள்ள முடியும். சமகாலப் பெற்றோர் சராசரிக்கும் உயர்வான கல்வித்தரங்களைக் கொண்டவர்கள். நவீன தகவல் ஊடகங்களை அதிகம் பயன்படுத்தும் திறன் மிக்கவர்களாக இருப்பதனால் அவர்கள் உயர் கிரகித்தற் திறன் கொண்டவர்கள். சமூக இடைவினை மிகுந்தவர்கள். தமக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் குறைந்த கல்வி இடைவெளியைக் கொண்டவர்கள். உயர் எண்ம அறிவுடையவர்கள். இவர்களுக்கு பாடநூல்களில் தரப்பட்டுள்ள விடயங்களை விளங்கிக் கொள்வது சவலான ஒரு விடயமல்ல. பாடசாலைகளில் கற்பிக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் பாடநூல்களை நன்றாக வாசித்து விளங்கிக் கொண்டதன் அடிப்படையிலேயே பிள்ளைகளுக்குக் கற்பிக்கின்றனர். எனவே பெற்றோர்களும் பாடநூல்களை வாசித்து நன்றாக விளங்;கிக் கொள்வதன் மூலம் தமது பிள்ளைகளுக்கு கற்பிக்க முடியும். அவர்களால் வீடுகளில் மாற்று ஆசிரியர்களாகச் செயற்பட முடியும். தமது பிள்ளைகள் எதனைக் கற்கிறார்கள்?. எவ்வாறு கற்கிறார்கள்?. கற்ற விடயங்கள் எந்தளவுக்கு அவர்களால் உள்வாங்கப்பட்டுள்ளது?. எந்தப் பகுதியில் அவர்கள் இடர்ப்படுகின்றனர்?

என்றதான வினாக்கள் பெற்றேரிடம் எழ வேண்டும். அந்தக் கேள்விகளுக்கான பதிலையும் அவர்களே கண்டறிய வேண்டும். அதற்குத் தீர்வு காணக்கூடிய திட்டங்களையும் உபாயங்களையும் வகுத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகளின் கற்றலை, கற்றலில் அவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தை, கற்றல் முன்னேற்றங்களை அளவிடத் தெரிந்திருத்தல் வேண்டும். அவற்றை பகுப்பாய்வு செய்து மாற்றங்களை அறிந்து கொள்ள கூடியவர்களாக தம்மை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றை தம்மால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும் தைரியத்தையும் பெற்றோர் தமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நடைமுறையில் வெற்றி பெறும் பெற்றோரின் பிள்ளைகள் சிறந்த, உயர்ந்த அடைவுகளை எப்போதும் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களாக விளங்குவார்கள்.

வீட்டுப் பாடசாலை முறையை செயற்படுத்துதல்;

தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்கு மேலை நாடுகளில் காணப்படும் வீட்டுப்பாடசாலை முறை (ர்ழஅந ளுஉhழழட) ஒரு சிறந்த முன்னுதாரணமாகும். விட்டுப் பாடசாலை என்பது அரச அல்லது தனியார் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பாமல் அங்கீகரிக்கப்பட்ட கலைத்திட்டத்தை பெற்றோரே தங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் வைத்துக் கற்பிக்கும் ஒரு வகைப் பாடசாலையாகும். நெருக்கடிகளற்ற சாதரண காலங்களிலேயே உலகின் முக்கியமான பல நாடுகளில் இவ்வகைப் பாடசாலைகள் பிரபல்யமானவை. குறிப்பாக இங்கிலாந்து, ஐரோப்பா, நியூசிலாந்து, வட அமெரிக்கா, மற்றும் தென்னாபிரிக்கா உள்ளிட்ட முன்னேற்றங்கண்ட நாடுகளில் இது ஒரு சட்டபூர்வமான பாடசாலையாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் 90 இலட்சம் மாணவர்கள் வீட்டுப் பாடசாலைகளில் கல்வி பயில்கின்றனர். (மொத்த எண்ணிக்கையில் இது ஒன்பது சதவீதமாகும்) கொவிட் தொற்றுக் காலத்தில் வீட்டுப் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர் எண்ணிக்கை இந் நாடுகளில் வெகுவாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். எமது நாட்டில் தற்போதைய நெருக்கடியான சூழலில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஒரு மாற்றுப் பாடசாலையாக நாம் வீட்டுப்பாடசாலை முறையையோ அல்லது அதற்கிணையான ஒரு ஏற்பாட்டையோ பின்பற்ற முடியும். எனவே வீடுகளில் பிள்ளைகளுக்கு பெற்றோரினால் அல்லது வயதுகூடிய சகோதரர்களினால் கல்வியை புகட்ட முடியும். நெகிழ்ச்சியான நேர ஏற்பாடு, நெகிழ்வுப்பாங்கான அணுகுமுறையூடாக பிள்ளைகளுக்குப் பாடங்களைக் கற்பிக்கலாம். மதிப்பீடுகளைச் செய்யலாம். பரிகாரக் கற்பித்தலை திட்டமிடலாம். அதனைச் செயற்படுத்தலாம். எனவே இந்த நெருக்கடியானதும் பாதுகாப்பற்றதுமான கால கட்டத்தில் பாதுகாப்பாக கல்வியை வழங்கும் பாடசாலையாக வீட்டுப் பாடசாலை முறைiயை செயற்படுத்தி பிள்ளைகளையும் பிள்ளைகளின் கல்வியையும் பாதுகாக்கும் வகையில் பெற்றோரால் செயற்பட முடியும்.

மாணவ ஆசிரிய முறையை நடைமுறைப்படுத்துதல்

மாணவ ஆசிரிய முறையென்பது புதியதொரு அம்சம் அல்ல. நீண்ட காலமாக உலகளாவிய அளவில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இல்ஙகையில் கூட ஐரோப்பியர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலப் பாடசாலைகளிலேயே இந்த மாணவ ஆசிரிய முறை பின்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அதாவது ஆளணிப் பற்றாக்குறை அல்லது செலவைக் குறைக்கும் நோக்கத்துக்காக இவ் மாணவ ஆசிரிய முறை பின்பற்றப்பட்டுள்ளது. மாணவ ஆசிரிய முறையென்பது வயது கூடிய மாணவர்களைப் பயன்படுத்தி வயது குறைந்த மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறையாகும். இந்த மாணவ ஆசிரிய முறையை தற்போதைய சூழ்நிலையில் வீடுகளில் செயற்படுத்துவதன் மூலம் பிள்ளகைளின் கற்றலில் ஏற்பட்டுள்ள தொய்வினைக் குறைத்துக்கொள்ள முடியும். வயதில் மூத்த பிள்ளைகளைப் பயன்படுத்தி வயதில் இளைய மாணவர்களுக்குக் கற்பிக்க முடியும். இம் மாணவ ஆசிரிய முறையில் கற்றல் கற்பித்தலை வீடுகளில் முன்னெடுப்பதன் மூலம் கற்கின்ற மாணவர் மட்டுமன்றி கற்பிக்கின்ற மாணவரும் அறிவை இற்றைப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. இதன்மூலம் கற்றல் கலாசாரத்தையும் கற்றல் சூழுலையும் விடுகளில் கட்டியெழுப்ப முடியும்.

நேரசூசிக்கமைய செயற்பாடுகளைத் திட்டமிடுதல்

விட்டில் முறையான நேரசூசியை தயாரித்து அவ் நேர சூசிக்கமைய பிள்ளைகள் உரிய இடத்தில் அமர்ந்திருத்து கற்க்க வழிப்படுத்த வேண்டும். நேர சூசியைத் தயாரிக்கும் போது நெகிழ்வுப் பாங்கானதாக தயாரிக்க வேண்டும். பிள்ளைகள் தமது அடைவுகளை தாமே சுயமாக மதிப்பீடு செய்வதற்கு அவர்களுக்கு வழிகாட்டவேண்டும். அதே நேரத்தில் பெற்றொரும் அவற்றை மீள் மதிப்பீடு மற்றும் மேற்பார்வை செய்ய வேண்டும். மாணவர்கள் தங்கள் அடைவுகள் தொடர்பாக திருப்தியடையகூடிய வகையில் அர்களை ஊக்கப்படுத்த வேண்டும். சிறிய இலக்குகளை தீர்மானித்து அதனை வெற்றிகொள்ள வழிப்படுத்துங்கள். ஓய்வு நேரத்தின் போது மிக எளிமையான புத்தாக்க மற்றும் ஆக்கத்திறன் செயற்பாடுகளில் ஈடுபடுத்துங்கள் அவர்களது அடைவுகளை அங்கீகரியுங்கள் பாராட்டுங்கள்.

வீட்டுச் சூழலை நட்புணர்வான சூழலாக மாற்றியமைத்தல்

உளவியல் தொடர்பாக அனேகமான பெற்றோருக்குப் போதுமான அறிவு இருப்பதில்லை. தற்போதுள்ள நெருக்கீடுகளும் பாடசாலைகள் மூடப்பட்டமையும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலைமையும் தனியாட்களிடத்தில் குறிப்பாக இளையோரிடத்தில் அவநம்பிக்கையையும் உள நெருக்கீடுகளையும் அதிகரிக்கச் செய்துள்ளது. வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாமை, சகபாடிகளைச் சந்திக்க முடியாமை என்பன மன அழுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இவ்வாறான சூழநிலையில் பெற்றோர் மிகக் கவனமாக பிள்ளைகளைக் கையாள வேண்டியுள்ளது. பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பெற்றோர் என்ற நிலை கடந்து நண்பர்களைப் போன்று நடந்து கொள்ள வேண்டும். நட்புணர்வுடன் இடைவினை கொள்ள வேண்டும். பிள்ளைகளுடன் கூட்டாக விளையாட்டுக்களில் ஈடுபட முடியும். அவர்களது கருத்துக்களை அமைதியாகச் செவிமடுக்க வேண்டும். அவர்களது கருத்துக்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

மன அழுத்தம், பதற்றம் என்பன கற்றலை பாதிக்கும் முக்கிய விடயங்கள் என்பதற்குமப்பால் அது உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கச் செய்துவிடும். மன அழுத்தமும் பதற்றமும் மனித மூளையில் கற்றலுக்கு அல்லது ஞாபகத்துக்குப் பொறுப்பான பகுதியான ஹிப்போஹம்பஸ் (ர்ippழஉயஅpரள) என்ற பகுதியை பாதிக்கின்றது என்றும் இதனால் எதிர்மறைச் சிந்தனைகள் மேற்கிழம்புவதுடன் பிள்ளைகளின் கற்றல் திறனும் பாதிப்படைய நேரிடுகிறது. ஹவார்ட் பல்கலைக்கழக உளவியற் பேராசிரியரான னுயnயைட னுடைடழn என்பவர் மன அழுத்தத்துக்கு உடபடாதவர்கள் எப்போதும் சிறந்த ஞாபகசக்தி உடையவர்களாக இருக்கின்றனர் என்று தனது ஆய்வினூடாகக் கண்டறிந்துள்ளார். எனவே பிள்ளைகளின் உளநலத்தின் மீது பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளிடத்தில் ஏற்பட்டிருக்கும் கற்றல் தொடர்பான பயத்தை நீக்குவதற்கான பொறுப்பு பெற்றோருடையதாகியுள்ளது. தனியாட்களிடத்தில் காணப்படும் தொடர்ச்சியான கவலை, பதற்றம் என்பன மூளையின் வளர்ச்சியையும் செயற்திறனையும் பாதிக்கச் செய்வதுடன் அது நீடித்த பின் விழைவுகளை ஏற்படுத்துகின்றது என்று ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் குழந்தை அபிவிருத்தி மையம் தனது ஆய்வுகள் ஊடாகக் கண்டறிந்துள்ளது. இந் நீடித்த கவலை பிள்ளைகளிடத்தில் கற்றற் திறன்களையும் சமூக தொடர்பகளையும் பாதிக்கின்றது. என்வே இந் நெருக்கடியான சூழ்நிலையில் பிள்ளைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பும் பெற்றோருக்குரியதாகும்.

கட்டுரைகள்

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் அறிமுகம் 21 ஆம் நூற்றாண்டின் சகாப்தம் பெரும்பாலும் ஒரு தொழில்நுட்ப சகாப்தமாககருதப்படுகிறது. தொழில்நுட்பம், இன்று மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.எங்கள்...

 சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் "பனிப்போர் காலம் முடிவடைந்தது உலகம் ஒரு ஒழுங்கில் அமெரிக்கா தலைமையில் பயணிக்க ஆரம்பிக்கின்றது. இந்த ஏகாதிபத்தியம் தனக்கு விசுவாசம் உள்ள கல்விமுறையினை...

வாழ்க்கைமுறை

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம்...

சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

ரதிகலா புவனேந்திரன்நுண்கலைத்துறைகிழக்குப் பல்கலைகழகம்.   வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள்...

குருந்தூர் மலையில் கிடைத்திருப்பதுஎண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாராலிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர்கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன்...

உளவியல்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும்...

- கி.புண்ணியமூர்த்தி- பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click