Skærmbillede 1743திரு. ச. அல்பேட் றீகன்
BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL).

“உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி செய்யவும், பிரச்சினைகளை வளர்ச்சி தரும் முறையில் கையாளவும், தனது ஆளுமையையும்,  உறவுகளையும் மேம்படுத்தவும் நெறிப்படுத்துதல் உள ஆற்றுப்படுத்தல் ஆகும்.” 

உளவளத்துணையின் வெற்றியில் கணிசமான பங்களிப்பு செலுத்தும் காரணிகளில் உளவளத்துணையாளரின் பண்புகள் மிக முக்கியபங்குவகிக்கின்றன. உளவளத்துணையில் ஈடுபடும் ஒரு உளவளத்துணையாளர் துணைநாடுநர்களை விளங்கிக் கொள்ளவும் அவர்களது பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொள்ளவும் ஓர் தொழில்வாண்மை மிக்க உளவளத்துணை சேவையை வழங்குவதற்கும் சிறந்த பண்புகள் மற்றும் திறன்கள் என்பன மிக அவசியமாகின்றன. உளவளத்துணைக்கான வரைவிலக்கணத்தை பிரிட்டிஷ் உளவளத்துணை சங்கம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“ஒருவர் தனது தனியாள் வளங்களை சிறப்பான மேம்பட்ட நிலையில் பயன்படுத்துதல்,  உணர்ச்சிகளின் சீரான வளர்ச்சி, சுய அறிவு மற்றும் ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றை உயர்த்துவதற்கான அல்லது விருத்தி செய்வதற்கான திறன் மிக்கதும் கொள்கை ரீதியானதுமான உறவு செயற்பாடாகும்.”

உளவளத்துணைக்கான வரைவிலக்கணத்தை இலங்கையின் வடபுலத்தில் இயங்கிவரும் குடும்ப உளவளத்துணை மையமாகிய அகவொளி நிறுவனத்தின் இயக்குனர் அருட்திரு இராசேந்திரம் ஸ்ரலின் அவர்கள்
பின்வருமாறு தருகின்றார். “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் டுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி செய்யவும், பிரச்சினைகளை வளர்ச்சி தரும் முறையில் கையாளவும், தனது ஆளுமையையும்,  உறவுகளையும் மேம்படுத்தவும் நெறிப்படுத்துதல் உள ஆற்றுப்படுத்தல் ஆகும்.” மேற்படி வரைவிலக்கணங்களை எடுத்துநோக்கும் போது உளவளத்துணையானது ஒட்டுமொத்த ஆளுமை விருத்தியை சுட்டிக்காட்டி நிற்கும் ஓர் உணர்வுபூர்வமான செயற்பாடாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பணியில்,  உளவளத்துணையாளரின் அறிவு, திறன், மனப்பாங்கு (KSA) என்பவற்றுடன் அவரது அனுபவம் முக்கியத்துவம் வாய்ந்தது.Skærmbillede 1751


உளவளத்துணையாருக்கு அவசியம் தேவைப்படும் பண்புகள் பற்றி இனிநோக்குவோம்.

1. நிபந்தனையற்ற நேர்மய அன்புறவு (Unconditional Positive Regard) :-

 வாழ்வில் நிபந்தனையற்ற அன்பை நாம் எளிதில் பெற்றுவிட முடியாது. இது தாயன்புடன் ஒப்பிட்டு நோக்கப்படுகிறது. இதில் துணைநாடுனருக்கு மதிப்பளித்தல்,  அன்பு,  அக்கறை என்பன உள்ளடங்கும். துணைநாடுநர்களை புரிந்து கொள்வதற்கும் அவர்களது பிரச்சினையை அறிந்து உதவி புரிவதற்கும் நிபந்தனையற்ற அன்பினை தொழில்ரீதியாக வழங்குவது அவசியமாகும்.

2. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance) :-

ஏற்றுக் கொள்ளுதல் இன்றி நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியாது. துணைநாடுனர் - உளவளத்துணையாளரிடையிலான உறவின் முதிர்ச்சித் தன்மைக்கு ஏற்றுக்கொள்ளல் அவசியமாகும். துணைநாடுனரை அவர் உள்ளபடியே அவரது குறை, நிறைகள், பிரச்சினைகள், வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்கள் என்பவற்றுடன் ஏற்றுக் கொள்ளுதலை இது குறிக்கின்றது.

3. உண்மைத் தன்மையுடன் செயலாற்றுதல் (Congruence/ Genuineness) :-

உளவளத்துணை என்பது ஓர் நடிப்புக்கலை சார்ந்தது அல்ல. இது அகமலர்ச்சியுடனும் முழு ஈடுபாட்டுடனும் மேற்கொள்ளப்படும் அன்புறவுச் செயற்பாடு ஆகும். உண்மைத் தன்மையுடன் உரையாடுதல்,  அகவுணர்வுகள், 
சிந்தனைகள், மனப்பாங்குகள் என்பவற்றைப் பொருத்தமாக வெளிப்படுத்தல் என்பன இதனுள் அடங்கும்.

4. ஒத்துணர்வு வழங்குதல் (Empathy) :-

ஒத்துணர்வு வழங்குதல் என்பது, துணைநாடுனருக்காக உணர்வது அல்ல மாறாக துணைநாடுனருடன் உணர்வது (Feeling with, not feeling for him). துணைநாடுனரின் அக உலகில் சஞ்சரித்து அவரது அக உலகை புரிந்துகொண்டு அவர் உணர்வது போன்று அவரது உணர்வைப் பிரதிபலித்தல் ஆகும். பரிதாபப்படுத்தலும் ஒத்துணர்வு வழங்குதலும் ஒன்றே என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இரண்டும் வேறுபாடு கொண்டவை. பிறிதொருவரின் பாதணியில் நமது பாதங்களை இட்டு அவர் உணர்வது போல நாம் உணர்வதும்,  அதனை சரியாக வெளிப்படுத்தலுமே ஒத்துணர்வு வழங்குதல் ஆகும் என உவமானமாக கூறுவர்.

5. இரகசியம் பேணல் (Confidentialty) :-

“ஒருவர் உங்களிடம் நம்பிக்கை வைத்து கூறிய விடயங்களை அவர் உங்களுக்கு எதிரியாகின்ற சந்தர்ப்பத்தில் கூட வெளிப்படுத்தி விடாதீர்கள்!” என எமர்சன் என்பவர் குறிப்பிடுகின்றார். உள ஆற்றுப்படுத்தல் உறவு நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததே. இரகசியம் பேணல் பண்பு இல்லாதவர் உளவளத்துணையாளர் எனும் தகுதியை இழப்பார். ஆக, இரகசியம் பேணும் பண்பு உள்ளபோது துணைநாடுனர் பாதுகாப்பாக உணர்வார்,  மேலும் பகிர்வார்.


6. தீர்ப்பிடாத நிலை (Non Judgmental) :-

நடைபெற்ற சம்பவங்கள், நிகழ்வுகளுக்காக துணைநாடுநரை குற்றஞ் சாட்டாது அல்லது தீர்ப்பிடாது இருத்தல். உளவளத்துணையாளர் துணைநாடிக்கு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் விதத்தில் மதிப்பீடுகளை மேற்கொள்ளலாம். மாறாக துணைநாடியின் சிந்தனைகள்,  முடிவுகள்,  நடத்தைகளை விமர்சிப்பதோ குறைகூறுவதோ எவ்வகையிலும் பயனளிக்காது.

7. ஆக்கபூர்வமான அன்புறவு (Warmth & Harmonious) :-

உள ஆற்றுப்படுத்துனர் சுமூகமாகப் பேசக்கூடியவராகவும் மலர்ந்த முகம் உள்ளவராகவும் இருத்தல்.

8. உணர்வெழுச்சியில் ஸ்திரத்தன்மை (Emotionally Stable) :-

 தனது சொந்த உணர்வுகளினால் அலைக்கழிக்கப்படாமல் அல்லது அடித்துச்செல்லப்படாமல் நிதானத்துடன் துணைநாடுநருக்கு செவிமடுக்கும், செயல்படும் பண்பை இது குறிக்கின்றது.

9. ஒழுக்கமுடையவராக இருத்தல் (Be Ethical) :-

 உளவளத்துணையாளர் தனது சொந்த வாழ்வில் ஒழுக்க விழுமியங்களை தவறாது கடைப்பிடிப்பதை இது குறிக்கின்றது. உதாரணமாக மது மற்றும் போதை பொருட்களை தாராளமாக பயன்படுத்தும் ஒரு உளவளத்துணையாளர் மதுவுக்கு அடிமையாகியுள்ள ஒரு துணைநாடுநரை உளவளத்துணை மூலம் மீட்டெடுக்கும் பணியை ஆற்றுவது பொருத்தமற்றது என்பதுடன் அவரது தொழில்வாண்மையான சேவையில் சந்தேகத்தையும் ஏற்படுத்தும். சுருங்கக்கூறின் உளவளத்துணையாளர் ஏனையோருக்கு முன்னுதாரணமான ஒழுக்கம் உடையவராக இருத்தல் எதிர்பார்க்கப்படுகின்றது.

10. உணர்ச்சிவசப்படாதவராக இருத்தல் (Emotionally Detached) :-

 தனது சொந்த மனவெழுச்சிகள் மீதான கட்டுப்பாட்டை கொண்டவராகக் காணப்படுவார். அதாவது தனது உணர்ச்சிகளை தேவைக்கேற்றவாறு குறிப்பிட்ட அளவில்,  குறிப்பிட்ட நேரத்தில்,  குறித்த நபரிடம் பயன்படுத்தக் கூடிய ஆற்றலை இது குறிக்கின்றது.

உளவளத்துணையாளர்களிடம் காணப்பட வேண்டிய சிறப்பியல்புகளை குரோமியரும் குரோமியரும் (Cromier & Cromier, 1985) ஆறு பண்புக்கூறுகள் கூறுகளாக வகுத்துள்ளனர்.

1. அறிவுத் தொகுதி (Intellectual Competence)
2. சக்தி (Energy)
3. நெகிழ்ச்சித் தன்மை (Flexibility)
4. ஆதரவளித்தல் / பக்கத்துணையாய் இருத்தல் (Supportive)
5. நல்லெண்ணம் (Goodwill)
6. சுய விழிப்புணர்வு (Self Awareness)

உளவளத்துணையில் உளவளத்துணையாளர்களிடம் காணப்படும் ஏனைய பண்புகள் :-

❖ முழு ஈடுபாடு.

❖ உற்சாகம் நிறைந்திருத்தல்.

❖ நெகிழ்ச்சித்தன்மை.

❖ ஆதரவு வழங்குதல்.

❖ விழுமியங்களை ஒழுங்குபடுத்துதல்.Skærmbillede 1747

❖ நம்பிக்கை ஊட்டுதல்.

❖ தமது எல்லைகளை தெரிந்திருத்தல்.

❖ உளவளத்துணை அறிவு.

❖ வேகமாக ஆனால் நிதானமாக சிந்திக்கும் ஆற்றல்.

என்பவற்றுடன், இவர்கள் தமது தொழில் வாழ்வில் நம்பிக்கை வைத்து, தமது பணியில் முழுமையாக ஈடுபடுவர். பிறருடனான வாழ்வில் பிறர்நலம், சமூக அக்கறை கருதி செயற்படுவர்.

 

உளவளத்துணையாளரின் சுய ஆளுமையில் பிரதிபலிக்கும் தனித்துவப் பண்புகளாவன :-

❖ சுயமதிப்பும் பாராட்டும்.

❖ ஆற்றல்களை ஏற்றுக்கொள்ளல்.

❖ திறந்த மனப்பான்மை.

❖ அர்த்தமுள்ள வாழ்க்கை.

❖ தன்னிறைவு.

❖ உணர்ச்சி மற்றும் அனுபவ முதிர்ச்சி.

❖ நிகழ்காலத்தில் வாழுதல்.

❖ பாடம் கற்கும் மனப்பாங்கு.

❖ நெகிழ்ச்சித் தன்மை.

❖ குற்றங்களை ஏற்றுக்கொள்ளுதல்.

❖ தனித்துவ அடையாளம் பேணுதல்.

❖ வாழ்க்கை அனுபவங்களை சிறப்பாக கையாளுதல்.

முழுமையில், உளவளத்துணையாளர் ஓர் சிறந்த மனிதனாக இருப்பர்.

 

உளவளத்துணையாளருக்கு அவசியமான திறன்கள்

மேலே குறிப்பிட்ட பண்புகளுடன், தொழில்வாண்மை மிக்க உளவளத்துணை சேவையினை மேற்கொள்ளும் பொருட்டு ஒரு சிறந்த உளவளத்துணையாளர் உளவளத்துணை திறன்களிலும் தேர்ச்சியும் அனுபவமும் மிக்கவராக காணப்படுவார். உளவளத்துணை திறன் விருத்தியானது உளவளத்துணையாளர் தமது தொழிலை விருத்தி செய்துகொள்வதற்கு இன்றியமையாததாகும். அதாவது உளவளத்துணை செயற்பாடுகளின் போது திறன்கள் மிக மிக முக்கியத்துவம் பெறுகின்றன. அத்திறன்கள் பற்றி தொடர்ந்து நோக்குவோம். “திறன்கள் என்பது கற்றல், தன்னை கையாளுதல், பிறரோடு உறவாடுதல்,குழுவில் அல்லது சமூகத்தில் அல்லது நிறுவனத்தில் பங்கேற்று செயற்படுதல் போன்ற வாழ்வின் பல்வேறு துறைகளிலும் சிறப்பாக இயங்க உதவுகின்ற உடல் உள சமூக ஆளுமை அம்சங்களே, என ஈகன் என்ற உளவியலாளர் குறிப்பிடுகின்றார். அந்த வகையில் உளவளத்துணையின் திறன்களை இரண்டு முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவையாவன:


1) ஆரம்பநிலை திறன்கள்
2) தேர்ச்சி நிலை திறன்கள்

 

ஆரம்பநிலை திறன்களில்:

● வரவேற்றல் திறன்

● உடனிருத்தல் திறன்

● ஆரம்ப தொடர்பும் உள்ளேற்பும்

● தற்போதைய நிலை மதிப்பிடல்Skærmbillede 1754

● உடன்பாடு செய்தல்

● சொற்களுக்கு செவிமடுத்தல்

● உடல்மொழி அவதானித்தல் திறன்

● மொழி கடந்தவற்றை அவதானித்தல் திறன்

● பிரதிபலித்தல் திறன்

● ஆரம்பநிலை புரிந்துணர்வு

● விபரம் அறிதல்

● பகிர்வை நெறிப்படுத்தும் திறன்

● தெளிவுபடுத்துதல் திறன்

● சுருக்கமளித்தல் திறன். என்பன உள்ளடங்குகின்றன.

 

தேர்ச்சி நிலைத் திறன்களில்:

▪ தேர்ச்சி நிலை புரிந்துணர்வுSkærmbillede 1755

▪ உளத்திறன்கள்

▪ விளக்கமளித்தல் திறன்

▪ சுட்டிக்காட்டல் திறன்

▪ சுய செவிமடுத்தல்

▪ சுய வெளிப்படுத்துதல்

▪ உறவு நிலை பகிர்வு

▪ இலக்கை நிர்ணயித்தல்

▪ செயல் திட்டமிடல்

▪ வளங்களை அடையாளங்காண வைத்தல்

▪ மதிப்பீடு செய்தல்

▪ மேற்பார்வை திறன்

▪ பயிற்சி அளித்தல் திறன். என்பன உள்ளடங்குகின்றன.

 மேற்படி திறன்களை ஓர் உளவளத்துணையாளர் தனது தொழில் வாழ்வில் கற்றுக்கொண்டு, அதனூடாக தனது உளவளத்துணைப் பணியினை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். எவ்வாறிருப்பினும் மேற்படி இரண்டு வகையான திறன்களையும் கற்றுக்கொண்டு அவற்றில் தேர்ச்சி பெறுவது என்பது இலகுவான விடயமல்ல. ஏனைய துறைகளைப் போன்று அல்லாது உளவளத்துணையானது விசேட தேர்ச்சி நிலைத் திறன்களை உள்ளடக்கிய ஒரு சிறப்பு வாய்ந்த துறையாக காணப்படுகின்றது. இங்கு கற்கப்படுகின்ற திறன்கள் குறிப்பிட்ட உளவளத்துணையாளரின் பணி வாழ்வில் மட்டுமல்ல,  அவரது சொந்த வாழ்க்கை,  குடும்ப வாழ்க்கை,  சமூக வாழ்க்கை ஆகிய அனைத்து தளங்களிலும் தாக்கம் செலுத்தக் கூடியதாக காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

 அந்த வகையில் உளவளத்துணை திறன்களை கற்றுக் கொள்ளுகின்ற உளவளத்துணையாளர் அவற்றை தனது சொந்த வாழ்க்கையில சிறப்பாக பயன்படுத்தக்கூடிய ஆளுமை மிக்கவராக காணப்பட வேண்டும். அவை அவரது சொந்த வாழ்வில் எவ்வாறு உதவி புரிகின்றது என்பதை பிறர் அவதானிக்க கூடியதாக இருக்கும்.

உளவளத்துணையில் பயன்படுத்தப்படுகின்ற ஆரம்ப நிலை திறன்களை எடுத்து நோக்குகின்றபோது முதலாவதாக வரவேற்றல் திறன்கள் முக்கியம் பெறுகின்றன. ஓர் சிறந்த உளவளத்துணையாளர் தன்னை நாடி வரும் துணை நாடியை உரிய வகையில் வரவேற்று அவரில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி உளவளத்துணையின் அவசியத்தை எடுத்துக்கூறி அவரது பிரச்சினைகளுக்கு அவரே தீர்வினை பெற்றுக் கொள்வதற்கு அல்லது மாற்று வழிகளை அடையாளம் காண்பதற்கு வழி காட்டுகின்றார். அதேவேளை உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் குறித்த துணைநாடியுடன் உடனிருந்து அவரது பிரச்சனைகளுக்கு சிறப்பாக செவிமடுக்கின்றார்.

 ஒருவரை செவிமடுத்தல் என்பது அவரது குரலில் வருகின்ற சொற்களுக்கு மாத்திரமன்றி உடல் மொழிகளுக்கும், அவரது மௌனத்திற்கு கூட செவிமடுக்க வேண்டும். இதனை எல்லோராலும் இலகுவில் செய்துவிடமுடியாது. செவிமடுத்தல் என்பது ஒரு கலையாகும். இதனை சிறப்பாக கற்றுக்கொண்ட உளவளத்துணையாளர் வெற்றிகரமாக தனது சேவையை வழங்க கூடியவராக இருப்பார்.


 பொது வாழ்க்கையிலும் நாம் பல பேருக்கு செவிமடுக்க வேண்டி இருக்கின்றது. ஆயினும் நிஜ வாழ்க்கையில் நாம் நமக்கு விருப்பமான அல்லது அவசியமானவற்றை மட்டுமே பொதுவாக செவிமடுக்கின்றோம். ஆனால் உளவளத்துணையில் செவிமடுத்தல் என்பது முற்றிலும் மாறுபட்டது. சரியான ஒத்துணர்வினை வழங்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் துணை நாடுநருக்கு முழுமையாக செவிமடுத்தல் என்பது இங்கு அவசியமாகிறது. இதனை நாங்கள் பொது வாழ்வில் கற்றுக் கொள்கின்ற போது எமது நண்பர்கள்,  நமது மேலதிகாரிகள்,  வீட்டில் இருக்கின்ற எமது உறவுகள் அனைவருக்கும் துல்லியமாக செவிமடுக்கும் ஆற்றல்
வளரும்.

 அதுமாத்திரமன்றி நாம் புரிந்து கொண்டவற்றை செம்மையாக பிரதிபலிப்பது அவசியமாகும். அவ்வாறு பிரதிபலிப்பு செய்கின்றபோது துணைநாடுனர் தான் சரியாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளேன் என்பதை
உணர்ந்து உளப்பூர்வமாக திருப்தி கொள்வார். இதன் ஊடாகவே உளவளத்துணையாளர்கள் சிறப்பாக பகிர்வினை நெறிப்படுத்தி செல்ல முடியும். மேலும் விவரம் அறிதல், தெளிவுபடுத்துதல்,  சுருக்கம் அளித்தல் ஆகிய பிற திறன்களும் உள்ளடங்கியுள்ளன.

 மேலும் தேர்ச்சி நிலைத் திறன்களான, தேர்ச்சி நிலை புரிந்துணர்வு, விளக்கமளித்தல், சுட்டிக்காட்டுதல்,  சுய செவிமடுத்தல், சுய வெளிப்படுத்தல் போன்ற பல்வேறு திறன்களும் வளர்த்தெடுக்கப்பட வேண்டி உள்ளன. இவை நுண் திறன்களாக (micro skills) இருக்கின்ற காரணத்தினால் இவற்றினை குறிப்பறிந்து கற்றுக்கொள்ளுதல் மிக மிக அவசியமாகிறது. அதேவேளை துணைநாடுநரை நாம் சரியாக விளங்கிக் கொண்ட பின்னரே தேர்ச்சி நிலை திறன்கள் பயன்படுத்தப்பட வேண்டும.; அப்போதுதான், துணைநாடுநர் தனது பிரச்சினையின் மையப்புள்ளியை புரிந்து கொள்ளும் வகையில் அவரை வழிநடத்த முடியும்.

 அதாவது பல்வேறு திறன்கள் காணப்பட்ட போதிலும் எல்லாத் திறன்களையும்,  எல்லா வேளைகளிலும்,  எல்லோரிடமும், ஒரே விதமாக பயன்படுத்த முடியாது. இது தொடர்பில் உளவளத்துணையாளர் விழிப்புடன் செயல்படுவது மிகவும் அவசியமானது. உளவளத்துணையானது ஒரு தொடர் செயல்பாடு. இத்தொடர் செயற்பாட்டில் படிப்படியாக ஒவ்வொரு திறன்களையும் நாம் பயன்படுத்துகின்ற தேர்ச்சி அவசியம். அதனை சரியாக மேற்கொள்கின்ற போது துணை நாடுநர், அவரது பிரச்சினையை சரியாக அடையாளம் காண வைக்க முடியும். மேலும் தனது பிரச்சனைக்கு உரிய வகையில் தீர்வு காண்பதற்கு இலக்கை அல்லது இலக்குகளை நிர்ணயித்து செயற்படுவதற்கு தூண்ட முடியும். இத்தகைய செயல் திட்டம் ஒன்றை அமைப்பதற்கு துணைநாடியை உளவளத்துணையாளர் தனது திறன்கள் மூலம் தயார் படுத்துகின்றார். மேற்படி திறன்களை நாங்கள் நமது சொந்த வாழ்க்கையிலும் பயன்படுத்துகின்ற போது எமது குடும்ப வாழ்வும் தொழில் வாழ்வும் மென்மேலும் சிறப்புடன் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உதாரணமாக செவிமடுத்தல் பண்பை நாம் மென்மேலும் வளர்த்துக் கொள்கின்ற போது நமது நண்பர்கள்,  நமது குடும்பத்தில் இருக்கின்றவர்கள், நம்மை நாடி வருகின்ற அனைவரும் சிறப்பான பலனை பெற்றுக் கொள்ள முடியும்.

 பாடசாலைகளை எடுத்துக்கொண்டால் ஒரு மாணவனை சிறப்பாக செவிமடுக்கும் பண்பை வளர்த்துக் கொண்டிருக்கின்ற ஒரு ஆசிரியர் மட்டுமே அந்த மாணவனை சிறப்பாக அடையாளம் காணவும் சிறந்த நடத்தை மாற்றங்களை அவனில் ஏற்படுத்தவும் முடியும். தாம் விளங்கிக் கொள்ளப்பட்டோம் என்பதை புரிந்து கொள்ளும் ஒருவர் அத்தகைய ஒத்துணர்வை வழங்கிய நபருக்கு நடத்தை மாற்றத்திற்கான சாதகமான சமிக்கைகளை முன்வைப்பார்.

 சில பாடசாலைகளில் மாணவர்கள் தாமாக முன் வந்து தமது பிரச்சனைகள் பற்றி கலந்துரையாடும் சூழல் காணப்படுகின்றது. இதற்கு காரணம் பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற வழிகாட்டல் மற்றும் உளவளத்துணை ஆசிரியர்களின் சிறப்பான செவிமடுக்கும்,  ஏற்றுக் கொள்ளும் மற்றும் மதிப்பளிக்கும் திறன்கள் என்பன சிறப்பாக காணப்படுகின்றமையே ஆகும்.Skærmbillede 1750

 ஆயினும் வேறு சில பாடசாலைகளை எடுத்துக்கொண்டால் அத்தகைய பாடசாலைகளில் பணியாற்றுகின்ற வழிகாட்டல் மற்றும் உளவளத்துணை ஆசிரியர்கள் தமது தொழில்வாண்மை திறன்களை வளர்த்துக் கொள்ளாமையால் அல்லது தொழில்வாண்மை திறன்களை சேவையில் பயன்படுத்தத் தவறுவதால் அவர்களிடம் மாணவர்கள் தாமாக முன்வந்து தமது பிரச்சினைகளை வெளிப்படுத்தி பேசுவதற்கு தயங்குகிறார்கள். இது அவர்கள் தமது திறன்களில் பின்தங்கி இருப்பதையே காட்டுகின்றது.

 இவ்வாறு தனிமனித உறவுகளை மேம்படுத்தக்கூடிய உளவளத்துணை திறன்களை குடும்ப வாழ்க்கையிலும சிறப்பாக கையாளுகின்ற குடும்பங்களில் பெற்றோர் பிள்ளைகள் உறவு மற்றும் ஏனைய குடும்ப உறவுகள் என்பன ஆக்கபூர்வமாக பயனளிக்கக்கூடிய வகையில்,  ஒருவருக்கொருவர் உதவி புரிகின்றன வகையில் அமைந்திருப்பதை காணமுடியும். உளவளத்துணை திறன்களாவன தொழில்வாண்மை உளவளத்துணை விருத்திக்கு மட்டுமன்றி உளவளத்துணையாளர் சொந்த வாழ்விலும் பல்வேறு பயனளிக்கக் கூடிய விதங்களில் பயன்படுத்த முடியும் என்பதுடன் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கைக்கும் அவை பெரிதும் வேண்டப்படுகின்றது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

உசாத்துணைகள்
1. ஸ்ரலின் இ. (2016). ஆளுமை மலர உள ஆற்றுப்படுத்தல். யாழ்ப்பாணம்: ஆயர் இல்லம்.

2. ரிட்லி ஜெயசிங்க, (2010). உளவியல்சார் உளவளத்துணை அணுகுமுறை. பொரலஸ்கமுவ: சீ . ஆர் .
அச்சகம்.

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click