Skærmbillede 2056-விஸ்வலிங்கம் பிரசாந்தன்-

நிலைமாற்ற வகிபாக (Transformation Role) நிலையினை இன்று ஆசிரியர்கள் கொண்டிருக்கின்றமையானது அவர்களது தொழில்வாண்மையை மேலும் வலுப்படுத்துகின்றது. பூகோளமயமாக்கலின் காரணமாக நாம் இன்று எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்ளக் கூடிய வகையில் பாடசாலைக் கல்வியினை வழங்குவதற்குச் சிறப்பான வகிபாகமாக நிலைமாறு வகிபாகம் விளங்குகின்றது. ஆசிரியருக்குப் பதிலாக மாணவனையும் கற்பித்தலுக்குப் பதிலாகக் கற்றலையும் வலியுறுத்துவதாக இது அமைந்திருக்கும்.

இன்றைய காலத்தில் கல்வியினை வழங்குவதில் ஆசிரியர்கனின் பங்களிப்பபு என்பது முக்கியமான ஒன்றாகும். இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் ஒரு சமூகத் தொழிற்பாடுகளின் வேகம், தன்மை, போக்கு என்பவற்றை நிர்ணயிப்பதில் அதிகளவு ஆசிரியர் தொழில்வாண்மையூம் பாடசாலை அபிவிருத்தியும் ஆசிரியர் தொழில்வாண்மையூம் பாடசாலை அபிவிருத்தியும் செல்வாக்கு செலுத்துகின்றனர்.
ஆசிரியர் தொழிலானது ஒரு புனிதமான சேவை என்றும், அறிவு மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. ஆசிரியரானவர் கற்றலுக்கு உதவும் வகையில் செயற்படுகின்றார். மனித சமுதாயத்தில் ஆற்றப்படுகின்ற பயனுள்ள பணிகளுக்கிடையில் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் இருக்க முடியாது. அவையாவும் கௌரவத்துக்குரியவையே. ஆனால் சகல தொழில்களும் வாண்மை நிறைந்த தொழில்களாகிவிடமாட்டாது. எனவே வாண்மை நிறைந்த தொழில்கள் என்றால் என்ன எனும் வினா மிக இயல்பாகவே எழுகிறது. ஒரு வாண்மைத் தொழில் பின்வரும் பண்புகளை கொண்டிருக்க வேண்டும்.

1. சமூக பயன்பாடு,சமூக இயக்கத்துக்கு தொழில் மிகவும் அவசியமானது.
2. அத்தொழில் பற்றிய பரந்த அறிவுத்தொகுதி
3. தொழில் தொடர்பான ஒழுக்கக் கோவை
4. தொழிலுக்குரிய வாண்மைசார் அமைப்பு
5. தொழில் புரிவோர் அர்ப்பணிப்பும் பொறுப்பும் கடமையும் வகை கூறலும் கொண்டிருத்தல்
6. தொழில் புரிவோர் தமது தொழில் சார் அறிவை இற்றைப்படுத்திக் கொள்ளல்
7. தொழில் புரிவோர் தமக்குள் தொழில் சார் ஒற்றுமை மற்றும் தோழமை பூண்டிருத்தல்
8. தொழில் தொடர்பான தீர்மானங்களை சுதந்திரமாக மேற்கொள்ளல்.

தொழிவாண்மை விருத்தி என்பது இன்று சமகால தொழில் முறைமையில் பிரதானமானதும் விளைப்பாடுமிக்கதுமான விடயமாகவே நோக்கப்படுகிறது. இன்று ஆசிரியராக விளங்குவதோடு ஆசிரியருக்கான பயிற்சி என்பது அடிப்படை தேவைப்பாடாக விளங்குகிறது. இதற்கென முறைசார்இ முறைசாரா அமைப்புகளில் பல்வேறு பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு உலகெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பணி ஒரு சேவையாகவும் அதே சமயம் ஒரு தொழிலாகவும் கருதப்பட வேண்டும் என யூனெஸ்கோவின் ஆசிரியர் உடன்படிக்கை குறிப்பிடுகிறது. ஆசிரியர் பணியினை ஒரு தொழிலாகவும் சேவையாகவும் கைகொள்ள வேண்டுமாயின். இடையறாது மேற்கொள்ளும் ஆற்றல்,  பேணப்படும் விசேட ஞானம் ,  விசேட திறமைகள் என்பன ஆசிரியருக்கு அவசியம்.

யூனெஸ்கோ ஆசிரியர் உடன்படிக்கை மூலம் ஆசிரியர் சாசனம் தயாரிக்கப்படுகையில் ஆசிரியர் தொழில்வாண்மையானது ஆசிரியர்களால் பெறப்பட வேண்டிய ஒரு தன்மை என 146 சரத்துகளாலான அறிக்கை வெளிப்படுத்துகிறது.

ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ளோரை 4 வகையாக பிரிக்கலாம்
1. தொழில்வாண்மை மட்டத்தினை அண்மித்தோர்.
2. சாதாரண திறமைகளை உடையோர்
3. உதவிகள்,ஆலோசனைகள், வழிகாட்டல்கள் என்பன அதிகளவு அவசியமானோர்.
4. கடுமையான பயிற்சி அளிக்கப்பட வேண்டியோர்.

தொழில்வாண்மையை அடைய வேண்டுமாயின் தற்போது ஆசிரியர் சேவையில்  நல்ல தன்மைகளை மென்மேலும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையூம் நிலவூம் நலிவூகளை பாரியளவில் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதையூம் இது எடுத்துக்காட்டுகிறது. ஆசிரியர் தொழிலானது மிகுந்த பொறுப்பு வாய்ந்த பணியெனக் கல்விச் சேவை ஆணைக்குழு குறிப்பிடுகிறது.பொதுவாக ஒரு தொழிலோடு சம்பந்தப்பட்ட உயர்ந்த நிலைமையை அடைவதற்காக 3 விதமான தகைமைகள் அவசியமாகின்றன. மேற்படி விஷேட தேர்ச்சிகளை பெற்றுக்கொள்கையில் வைத்தியத்துறை போன்ற வேறு துறைகளில் ஏற்கப்பட்ட குறிப்பிட்ட சில நிலைபாடுகள் உண்டு.அத்தகைய நிலைபாடுகள் ஆசிரியர் பணியில் இதுவரை கட்டியெழுப்பப்படவில்லை.

(உ.ம்) பொறியியல் சேவைஇவைத்திய சேவை போன்றவை தொடர்பாக பல்வேறு தகவல்கள் நிமித்தம் பெற்றுக்கொள்ள வேண்டிய விசேட தேர்ச்சிகள் பற்றிய எழுத்து மூலமான அங்கீகாரங்கள் உண்டு.அவ்வாறான விஷேடத்துவங்கள் தொடர்பான ஓர் அங்கீகாரம் ஆசிரியர் சேவையில் கிடையாது.

பொறியியல் சேவையை பொறுத்த வரையில் கட்டிடங்கள் நிர்மாணிக்கும் விதம், அதன் விஞ்ஞான ரீதியான அடித்தளம் என்பனவற்றை நிச்சயமாகவே ஆய்வூ கூடமொன்றில் பரீட்சித்து பார்க்க முடியூம்.அது தொடர்பான பயிற்சியினையூம் பெற இயலும்.ஒரு வைத்தியராக முன்னர் நோய்க்கான காரணங்களை ஆய்ந்தறிதல், உபகரணங்களைக் கையாளும் விதம், சத்திர சிகிச்சை செய்யும் விதம் என்பன தொடர்பான சரியான பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற விதத்திற்கேற்பவே சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆசிரியர் சேவை பயிற்சி இதனை விட வேறுபட்டதாகும். கற்ற விடயத்துக்கும் செய்முறையாக ஆற்றும் விடயத்துக்கும் இடையே சிந்தையில் கொள்ள வேண்டியனவோ ஏராளம். பரீட்சார்த்தங்களில் ஈடுபட நேரிடுவதுண்டு. ஓர் ஆய்வுகூடத்தில் பெறும் நிபுணத்துவத்தை ஆசிரியரொருவரால் பெறவியலாது.

ஏனைய சாதாரண தொழில்வாண்மையாளர்கள் போலன்றி ஆசிரியர்கள் பிள்ளைகளோடு பணிபுரிகிறார்கள். பிள்ளைகளோ விரைவாக திருப்தியடையக் கூடியவர்கள், வேறுபாடுகளுக்கு ஆளாகக் கூடியவர்கள், வெறுப்படையக் கூடியவர்கள், உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், குறைந்த அனுபவங்களை உடையவர்கள், எண்ணக்கருக்களை ஆட்படுத்திக் கொள்வதில் பல்வேறு மட்டங்களை, அபிவிருத்திப் பருவங்களை வெவ்வேறு விதத்தத்தில் கடக்கும் முதிர்ச்சியடையாத கூட்டத்தாராவர். முன்கூட்டியே மேற்கொள்ளும் தீர்மானத்தோடு மாத்திரம் ஆசிரியரால் செயற்பட முடியாது. எனவே கற்பிப்பவராகவும், உளவியலாளராகவும் அவர் செயற்பட நேரிடுகிறது.

ஆசிரியரது பணி பிள்ளையின் உளச்செயற்பாட்டுடன் தொடர்புறுகிறது. அவர் பெற்றார் போன்று பிள்ளைகளைக் காப்பவர் என்ற அர்த்தத்தோடு குறிப்பிடப்படுகிறார். ஆசிரியர் பாடசாலையில் தந்தையாக அல்லது தாயாகச் செயற்பட நேரிடுவதுண்டு. அப்பொழுதுதான் மாணவர்களின் உளவியல் ரீதியான விடயங்களை ஒரு ஆசிரியர் என்ற வகையில் அறிய முடியூம். வகுப்பில் நாற்பது பேருக்கு தாயாகும் போது முகங்கொடுக்கும் பாரதூரமான சந்தர்ப்பங்களில் பிள்ளைகளில் உளத்தாக்கம் ஏற்படாத விதத்தில் செயற்படல் ஆசிரியரது பணியாகும். உளவியல் சார்ந்த இந்த அடித்தளம் வேறு எந்தவொரு தொழிலிலும்; அவ்வளவு செல்வாக்கு செலுத்துவதில்லை. ஆசிரியரது தொழில்வாண்மைக்குரிய விசேடமான தரக்கட்டுப்பாடுகள், நல்லொழுக்கங்கள் என்பன வற்றை எதிர்காலத்தில் நாம் கட்டியெழுப்பிக்கொள்ள வேண்டும். அதனை எம் சிந்தையில் கொண்டு அதனை ஈட்டிக்கொள்ள முனைதல் வேண்டும்.

இதன் பிரகாரம் ஆசிரியர் தொழில் வாண்மையில் பிரவேசித்தல் அவசியம்.ஆசிரியர் தொழிலை தெரிவு செய்யூம் ஒருவர் அவ்விதம் முனைந்து தொழில்வாண்மையை அடைந்து கொள்ளலாம். இதன் மூலம் இலங்கையின் ஆசிரியர் தொழில் வாண்மை பொருந்தியதாக அமையும்.

கல்வியினை எவ்வாறு எம்மால் இலகுவாகப் பெற முடியும் என்பதனைச் சுட்டிக்காட்ட ஒரு சிறந்த வழிகாட்டி அவசியமாகும். இவ்வாறான வழிகாட்டி வாண்மைமிக்க ஆசிரியர் ஆவார். வாண்மை என்பது ஒரு குறித்த துறை தொடர்பான சிறப்பான அறிவும் சுதந்திரமாக செயற்படும் திறனும் எதனையும் தயங்காமல் பொறுப்பேற்கும் ஆற்றலுமாகும். எனவே இம்மூன்று அம்சங்களும் எந்த ஆசியரிடம் நிறைந்து காணப்படுகின்றதோ அவரே வாண்மைமிக்க ஆசிரியராவார். வாண்மையாளர்கள் தாம் மேற்கொள்ளும் தொழில் துறையில் சிறப்பான ஆற்றலும் நிறைவான தேர்ச்சியினையும் பெற்றிருப்பது அவசியமாகும். ஒரு சாதாரண மனிதனின் இயலுமைக்கு அப்பாற்பட்டவைகளே வாண்மைத் துறைகளாகும். எனவே வாண்மையாளர்கள் சாதாரணமானவர்களாக அல்லாமல் 'நீண்ட காலப் பயிற்சிகளோடு சிறப்புத் துறையில் சேவையாற்றுவதோடு ஆய்வு அடிப்படையிலான அறிவுத் தொகுதிகளை விளங்கிக் கற்பதற்கான வாய்ப்பும் கற்றுக் கொண்ட அறிவை பொருத்தமான சந்தர்ப்பத்தில் பயன்படுத்தும் திறனையும் பெற்றிருக்க வேண்டும்.'

கல்வியானது தனியாள் விருத்திக்கும் சமூக விருத்திக்கும் அடிப்படைக் காரணியாக அமைவதால் அது தொடர்பாக தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு தனியாள் ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுவதும் கற்பதும் அவ்வாறு கற்ற அறிவினை வாழ்க்கையினதும் சமூகத்தினதும் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தல் வேண்டும். இச்செயற்பாட்டிற்கு ஆணிவேராகத் திகழ்பவர்கள் ஆசிரியர்களாவர்.

சிக்கலான இப்பணியினை நிறைவு செய்வதற்கு ஆசிரியர்களிடம் வாண்மை தொடர்பான உயர் நிலைத் தேர்ச்சி தேவைப்படுகின்றது. எனவே ஆசிரியர்கள் இப்பணியினை செய்பவர்ளக்குரிய தேர்ச்சியைப் பெறும் போது ஆசிரியர்களால் தம்மிடம் கற்க வரும் இளம் தலைமுறை யினரை உரியவாறு தயார் செய்ய முடியூம் எதிர் காலத்தில் எழுகின்ற சவால்களை துணிச்சலோடு எதிர் கொள்ளவூம் அவர் களின் கற்றலை இலகுள்ளதாக்குவதற்கும் அவர்களின் கற்றலுக்கு அவர்களையே பொறுப்புடையவர்களாக்கும் பணியூம் ஆசிரியரின் வாண்மை விருத்திலேயே தங்கியுள்ளது.

ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் தொடர்பான மனப்பாங்குகளை விருத்தியடையச் செய்யூம் முகவர்களாவர். இவர்களே மாணவர் மத்தியில் நேரானதும் எதிரானதுமான மனப்பாங்குகளையூம் ஏற்படுத்த முடியும். ஆசிரியர்கள் மாணவர் களிடையே கற்றல் தொடர்பான ஆர்வத்தையும் சுதந்திர உணர்வையும் உயர் சிந்தனை ஆற்றலையும் விருத்தி செய்ய முடியும். இங்கு முறைசார் கல்வியினை பிரயோகிப்பவர்கள் ஆசிரியர்களாவர். எனவே முன் குறிப்பிட்ட தேர்ச்சிகளை மாணவர் மத்தியில் உருவாக்க ஆசிரியர் வாண்மையில் உரிய பங்கு கொடுக்கப்பட வேண்டும்.

மாறும் உலகில் பணியாற்றும் ஆசிரியர்கள் சர்வதேச வர்த்தமானங்களுக்கு உரியவாறு தமது வாண்மையை விருத்தி செய்வது முக்கியமானதாகும். எனவேதான் இன்றைய கல்வியில் தொடருறு கல்விக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தாம் பெற்ற கடந்த கால அனுபவங்களை வைத்துக் கொண்டு தற்கால கல்வித் தேவைக்கு ஈடுகொடுக்க முடியாது. ஏனெனில் மாறிவருகின்ற நவீன உலகிற்கு தக்க வகையில் தம்மைப் புதுமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு விளங்கும் வாண்மைமிக்க ஆசிரியர்கள் சில பண்புகளை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 நேர்த்தியான உடை நடையும் மனவெழுச்சி உறுதிப்பாடு அதிகமுள்ளவரும்
 எப்போதும் கரிசணையுடனும் சுறுசுறுப்புடனும் செயற்படும் ஆற்றல்.
 தமது பாடத்தினை மட்டும் கற்பிக்க போதுமான அறிவு இல்லாமல் பரந்த அறிவு கொண்டவர்.
 சுய ஒழுக்கக் கட்டுப்பாடும் மாணவரது ஒழுக்கத்தைப் பேணுவதில் அதிக ஆர்வம் காட்டுபவரும்.
 கற்றல் கற்பித்தல் செயன்முறையின் தர மேம்பாட்டிற்காக புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துபவர்.
 ஆக்கத்திறன் மிக்கவரும் தமது பணியினை கடமை தவறாமல் செய்பவரும்.
 தமது கருத்திற்குள் மாத்திரம் நிற்காமல் நெகிழ்ச்சியாக சகல கருத்துக்களையும் வரவேற்கக் கூடியவர்.
 நேர முகாமைத்துவமும் மத சிந்தனையும் உடையவர்.
 பிரச்சினைகள் இடர்பாடுகளின் போது பொறுமையாகச் செயற்படுபவர்.
 சாதாரணமானவர்கள் போல் அல்லாமல் பரந்த நோக்குடையவர்.
 மாணவர் மையக் கற்றல், கற்பித்தல் உத்திகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாணவரையும் குறைந்தபட்ச அடைவுக்கேனும் இட்டுச் செல்ல முற்படுபவர்.

காலத்துக்குக் காலம் கல்வியில் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காக கல்வியானது மறுசீரமைக்கப்பட்டு வருகின்றது. இவ்வகை மறுசீரமைப்புக்களால் மக்கள் பெரும் அடைவுகளை எதிர்பார்க் கின்றனர். பாடசாலைவும் ஆசிரியர்களும் தரம் நோக்கிய வகையில் ஏற்படும் முன் னேற்றம் தொடர்பாக செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி அமைப்பில் ஈடுபடும் உயர் நிலை அதிகாரிகளான திட்டமிடல் அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியியலாளர்கள் போன்றவரின் கருத்துப்படி 'பயனுறுதியுள்ள மாணவர் கற்றல், கலைத்திட்ட அமுலாக்கல் பாடசாலை தொடர்பான முழுமையான முன்னேற்றம் ஆகியவை தொடர்பாக ஆசிரியர்களே முக்கிய பங்காற்ற வேண்டும் என நம்பப்படுகிறது.

இலங்கையில் காலத்துக்குக் காலம் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி மறுசீர மைப்பில் ஆசிரிய வாண்மை விருத்தி தொடர்பாக அதிக அளவூ அக்கறை காட்டப் படுகின்றது. இலங்கையில் இன்று நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்வி மறுசீரமைப்பிலும் கூட ஆசிரியர் தொழில்சார் விருத்திக்கான பல்வேறு விதப்புரைகள் முன்மொழியப்பட்டுள்ளன. ஆசிரிய வாண்மை விருத்தியை இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிப்பது பொருத்தமானது.

ஆசிரியர் தொழிலில் ஈடுபடுவதற்கு முன்னர் வழங்கப்படும் பயிற்சி, ஆசிரியர் முன்சேவைப் பயிற்சி அல்லது தொடக்க நிலைப் பயிற்சி எனப்படும். ஆசிரியர் தொழிலில் இருக்கும் போது வழங்கப்படும் தொழில் வாண்மைப் பயிற்சி தொடருறு ஆசிரியர் பயிற்சி அல்லது சேவைக்காலப் பயிற்சி எனப்படும். இவ்விரு வகைப் பயிற்சிகளையும் வழங்குவதன் மூலம் எதிர்பார்க்கப்படுவது ஆசிரிய வாண்மை விருத்தியாகும். இவ்வாறு பயிற்சி பெறம் ஆசிரியர்கள் மேற் குறிப்பிட்ட பண்புகளையும் கொண்டிருக்கும் போது அவர்களையே வாண்மை விருத்தியுள்ள ஆசிரியர்கள் என வர்ணிக்கலாம்.

வாண்மைமிக்க ஆசிரியர் ஒருவரின் வகுப்பறையானது மிகவூம் சந்தோஷமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மன அமைதி நிறைந்த ஒரு இடமாகவும் காணப்படல் வேண்டும். ஏனெனில் குடும்பச் சூழலை விட்டு பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு அவர்களின் குடும்பத்தில் கிடைக்கின்ற சந்தோசம், அமைதி போன்ற அனைத்துத் தேவைகளும் பூரணமாக முறையில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இது போலவே ஆசிரியர்கள் குடும்பத்தவர்கள் கவனிப்பதை விட சிறப்பான முறையில் மாணவர்களைக் கவனிக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளின் போது ஆசிரியர்களின் அபிவிருத்தியானது படிப்படியாக அதிகரிக்கும் அத்துடன் தொழிற்தகைமை என்பது ஏற்படுகின்றது.

சாதாரணமாக இன்று ஆசிரியர் தொழிலானது வெறுமனே வியாபார நோக்கில் செல்வதனை நாம் காணலாம். அதாவது தொழில் என்ற வகையில் பாராது இதனை ஒரு சேவையாக செய்வோர் எம்மத்தியில் மிகவும் குறைவாகும். இதற்கு அடிப்படையில் தொழில்கள் என்ற அடிப்டையில் பாரபட்சம் காணப்படுவதும், ஆசிரியர்களின் தொழில் ரீதியான கல்வி தகைமை போன்ற விடயங்கள் செல்வாக்கு செலுத்துகின்றது. ஒரு பாடசாலையினை எடுத்துக்கொண்டால் அங்கு ஆசிரியர்களிடையே பல்வேறு விதமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்இ பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்கள் என்ற வகைப்பாடுகளில் இருக்கின்றார்கள். இதன் காரணமாக இவர்கள் மத்தியிலே போட்டி, முரண்பாடு தன்மைகள் அதிகரித்து இறுதியில் பாடசாலையின் அபிவிருத்திக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது.

ஆசிரிய கல்வியை புதிதாக வடிவமைக்க வேண்டியதொரு தேவையூள்ளது. பாடசாலை மட்டத்திலான ஆசிரியர் வகிக்கும் பங்கினை மாற்றியமைக்க வேண்டியூள்ளது. தேசிய கல்வி அபிவிருத்திக்கான ஆசிரியர்களின் புதிய பொறுப்புக்களை ஒதுக்கீடு செய்வது பற்றி தேசிய கல்வித் திட்டமிடல் ஊடாக அதிகளவூ கவணம் செலுத்தப்படும் போது பாடசாலையின் அபிவிருத்தி என்பது நீண்டகாலத்தினை கொண்டதாக அமையும். குறிப்பாக புதிய சட்டதிட்டங்களை தயாரிப்பதும்இ புதிய ஒழுங்கமைப்புடன் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை முகாமை செய்வதும், ஆசிரியர் தொடர் கல்வியில் ஈடுபாடு காட்டக் கூடியதான பொருளாதார நலன்களை முன்னேற்றுவதும் அவசியமாகும். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதான ஆசிரியதிட்டம் (Teacher Plan) தயாரிக்க வேண்டும். இதன் பின்னர் பல நிலைகளிலும் ஆசிரியர்கள் தமது அபிவிருத்தியினை முன்னெடுத்து செல்வதற்கு வாய்ப்பாக அமையும்.

ஆசிரியர்களை பொருத்தமட்டில் கற்பித்தலுக்குரிய தேர்ச்சிகளை ஆகக் குறைந்த அளவுக்கேனும் மாணவர் பெறுவதை உறுதிப்படுத்துவது மிகவூம் அவசியமான ஒன்றாகும். பொதுவாக உலகரீதியில் கல்வி ஒரு பண்டமாக அங்கீகரிக்கப்பட்டு கல்வித் தொழிலில் முதலீடு செய்யப்பட்டு வருகின்து. ஆசிரிய கல்வியினூடாக அவர்கள் பெறுகின்ற தகுதியை மிகவும் வலுவான முறையில் அங்கீகாரம் செய்தல் வேண்டும். பாடசாலைகளை பொருத்தளவில் தகுதிமிக்கவர்கள் மாத்திரம் ஆசிரியத் தொழிலில் நுழைவதை நிச்சயித்தல் வேண்டும். அத்தகு உயர் தகுதியுடையவர்களை ஈர்த்துக் கொள்ளத்தக்கதாக கவர்ச்சி மிக்க சம்பள அளவுகளையயும் நிர்ணயிக்கும் போது ஆசிரியர்களின் தொழில்சார் விருத்தி ஏற்படும் அதேவேளை பாடசாலையினதும் அபிவிருத்தி என்பது அதிகரிக்கின்றன.

நிலைமாற்ற வகிபாக (Transformation Role) நிலையினை இன்று ஆசிரியர்கள் கொண்டிருக்கின்றமையானது அவர்களது தொழில்வாண்மையை மேலும் வலுப்படுத்துகின்றது. பூகோளமயமாக்கலின் காரணமாக நாம் இன்று எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்ளக் கூடிய வகையில் பாடசாலைக் கல்வியினை வழங்குவதற்குச் சிறப்பான வகிபாகமாக நிலைமாறு வகிபாகம் விளங்குகின்றது. ஆசிரியருக்குப் பதிலாக மாணவனையும் கற்பித்தலுக்குப் பதிலாகக் கற்றலையும் வலியுறுத்துவதாக இது அமைந்திருக்கும். நிலைமாற்ற வகிபாகத்தின் இறுதிப் பேறாக விளங்குவது தேர்ச்சிமட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள தேர்ச்சிகளை அடைவதாகும். இதனூடாக மாணவர்களின் சுயதிறன் விருத்தி செய்யப்படும். இங்கு செயற்பாட்டினை மேற்கொள்வதற்கான நேரம் நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக அமைந்திருக்கும். இங்கு ஆசிரியரின் பணியாக விளங்குவது மாணவர்கள் அறிவைத்தேடி நகர்ந்து செல்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதாகும். ஆசிரியரானவர் ஓர் வளவாளராகச் செயற்படுவதோடு கற்பதற்கான சுதந்திரத்தினை ஏற்படுத்திக் கொடுப்பவராகவும் விளங்குகின்றார்.

ஆசிரியர்கள் மத்தியில் கட்டாயமாக தமது தொழில் தொடர்பான தெளிவினைவும் நிலைப்பாட்டையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். தமது பாடசாலை மட்டங்களில் அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் போன்ற செயற்பாடுகளில் பங்களிப்பினை வகித்தல் வேண்டும். பாடசாலையில் ஆசிரியரின் முக்கியமான செயற்பாடாக கற்பித்தல் பணியே காணப்படுகின்றது. இங்கு இடையூறுகள் ஏற்படும் போது இறுதியிலே மாணவர்களே பாதிப்படைவார்கள். ஆகவே ஆசிரியர்கள் தமது தொழில் தொடர்பான விடயங்களில் ஆர்வத்தினை செலுத்தும் போது அவை பாடசாலை மற்றும் மாணவர்களின் கல்வியினை பாதிக்காத வகையில் தொழில்வாண்மை என்பது காணப்படல் வேண்டும்.

மூலம்:- https://teachsrilanka.blogspot.com/

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி  "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

வாழ்க்கைமுறை

Kaviraj BSc Hons in Nursing டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும். நோய்க்காரணிஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும்...

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click