Skærmbillede 1048

கலாநிதி க.சுவர்ணராஜா

ஓய்வுநிலை பீடாதிபதி

“தனது மூளையின் முழு சக்தியையும் பயன்படுத்தும் திறனுள்ள மனிதன் இதுவரை பிறக்கவில்லை. இந்த காரணத்தினால் தான் மனித மூளையின் சக்திக்கு எல்லையே இல்லை என்று சொல்கிறோம். (TONY BYZAN 2011). மனித மூளை என்பது நெசவாளியின் தறியைப் போன்றது. பல இலட்சக் கணக்கான அற்புதமான வடிவங்களை நெய்கிறது.
அவை நாளடைவில் மறைந்து போகலாம் அல்லது காலத்தில் கரைந்து போகலாம். ஆனால் அவை அர்த்தமுள்ள வடிவங்கள்.

ஒவ்வொரு மனித மூளையிலும் ஒரு மில்லியன் (1000,000,000,000) செல்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு செல்லும் (நியூரான்) சிக்கலான மின் வேதியியல் கட்டமைப்பையும் மிகச் சக்தி வாய்ந்த தகவல் கையாளும் திறன் மற்றும் தகவல் பரிமாற்று அமைப்பையும் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு செல்லும் அதனுடன் தொடர்பு கொண்டுள்ள பல்வாயிரக் கணக்கான செல்களிலிருந்து வினாடிதோறும் செய்திகளை பெற்றுக் கொண்டே இருக்கிறது. ஒரு பெரிய தொலைபேசி பரிவர்த்தனையை போன்று ஒரு செல் தனக்கு கிடைக்கும் செய்திகளை உடனுக்குடன் பகுத்தறிந்து சேர வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைக்கிறது.
இப்படி ஒரு செய்தியோ, அல்லது எண்ணமோ அல்லது பழைய நினைவுகளோ ஒரு செல்லிருந்து இன்னொரு செல்லுக்குச் செல்லும் போது ஒரு உயிர் வேதியியல், மின் காந்தமானது (BIO — CHEMICAL & MAGNETIC PATHWAY) உருவெடுக்கிறது.

 மனிதர்களின் காலடிப் படாத ஒரு காட்டுப் பிரதேசத்தை நீங்கள் முதன்முதலாக கடக்கும் போது மிகவும் க~;டப்படவேண்டியிருக்கும். ஏனெனில் வழியில் பல தடைகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆனால் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு சமாளித்து உங்கள் பயணத்தை தொடருகிறீர்கள். இப்படிச் செய்வதால் அடுத்த முறை அதே காட்டுக்கு நடந்து போகும் போது ஒரு தடையற்ற அகலமான பாதை உங்களுக்கு கிடைத்து விடுகிறது. இல்லையாயின், இதே போலவே உங்கள் மூளையில் புதிதாக எண்ணங்கள் தோன்றி அவை மற்ற செல்களுக்கு செல்லும் போது சில தடைகளை சந்திக்கின்றன.
ஆனால் உங்கள் எண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க அந்த தடைகள் நீங்கி உங்களுடைய எண்ணங்கள் எளிதாக பயணிக்கின்றன. வேறு விதமாகச் சொன்னால் அது மீண்டும் மீண்டும் உருவாவதற்கான சாத்திய கூறுகள் நிறையவே இருக்கின்றன.

  மீண்டும் அந்த காட்டுப் பாதைக்கே செல்வோம். நாம் அந்தப் பாதையை அடிக்கடி உபயோகப்படுத்தினால் அதிலுள்ள தடைகள் நீங்கி கூடுதல் வேகத்துடன் நடக்க முடிகிறது. அதேப்போலவே நமது மூளையை நாம் உபயோகிக்க உபயோகிக தான் அதன் செயல்திறன் அதிகரிக்கின்றது.
மாஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பியோட்டோர் அநோகின் ((PYOTR ANOKHIN) அறுபது வருடங்களாக மனித மூளையை பற்றி தான் செய்து கொண்டிருந்த ஆய்வுகளின் முடிவுகளை 1973 இல் வெளியிட்டார்.

  மனித மூளையிலுள்ள பத்து மில்லியன் நியூரான்களில் ஒவ்வொன்றும் மற்ற கோடிக்கணக்கான நியூரான்களுடன் கொண்டுள்ள இணைப்புகளின் எண்ணிக்கையானது ஒன்றுக்கு பின் 28 பூஜியங்களைக் கொண்ட எண் மதிப்புடையது. ஒரு செல்லுக்கே இந்த செயல்திறன் இருக்குமென்றால் முழு மூளையின் செயற்றிறனை நம்மால் கணக்கிடவே முடியாது. அதாவது ஒவ்வொரு நியூரானும் மற்ற நியூரான்களுடன் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ செயல்படும் போது அந்த செயல்களின் மொத்த எண்ணிக்கை ஒன்று அதன் பின்னர் 10.5 மில்லியன் கிலோமீற்றர் நீளத்திற்கு பூஜ்ஜியங்கள்என்று வரும்.
“தனது மூளையின் முழு சக்தியையும் பயன்படுத்தும் திறனுள்ள மனிதன் இதுவரை பிறக்கவில்லை. இந்த காரணத்தினால் தான் மனித மூளையின் சக்திக்கு எல்லையே இல்லை என்று சொல்கிறோம். (TONY BYZAN 2011).

 

 

X

Right Click

No right click