Skærmbillede 1305ஆடை என்பது பெரும்பாலானோருக்கு உடலை மறைப்பதற்கும், குளிர், வெப்பம் போன்றவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கும், தங்களை மேலும் அழகாகக் காட்டிக்கொள்வதற்குமான விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆடையையே தங்கள் அடையாளமாக, தங்கள் அரசியலாக, தங்கள் போராட்டமாக மாற்றியவர்கள் வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். ஏழை எளியோர் இடுப்பில் அரையாடையுடன் இருக்கத் தனக்கு மட்டும் பாதத்திலிருந்து தலைப்பாகை வரை ஏன் இத்தனை ஆடம்பரம் என்று அரையாடைக்கு மாறியது காந்தியின் ஆடை அரசியல் என்றால்

 Skærmbillede 972தமிழில்: ஆசை

இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முழு வெளியுறவுத் தொடர்புகளை நிறுவுவதற்கான உடன்படிக்கை சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் மத்தியஸ்தராக இருந்தது அமெரிக்கா. இது இஸ்ரேலுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம்.

Skærmbillede 964முனைவர் செ. சந்திரசேகரம்

"ஜனநாயகம் குறைவிருத்தி நாடுகளில் மக்கள் மத்தியில் சீராக தொழிற்படாது என்பதாகும். ஜனநாயகத்தில் இருக்கின்ற கோட்பாட்டு ரீதியான குறைபாடுகளுக்கு அப்பால் ஜனநாயகத்தை சரியாகப் பயன்படுத்துவதற்கு ஜனநாயக உரிமைகளை அனுபவிக்கும் மக்கள் அறிவுடையவர்களாக இருக்க வேண்டும். மக்கள் அறிவற்றவர்களாக மந்தை கூட்டங்கள் போன்று சிந்தனையற்றவர்களாக ஒருவர் பின் ஒருவர் செல்பவர்களாக இருந்தால் ஜனநாயகம் தோல்வியடைந்து விடுகிறது."

1. அறிமுகம்

சிங்கப்பூரின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக இக் கட்டுரை அரசியல் தலைமைத்துவத்துக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் இடையிலான தொடர்பை விபரிக்கின்றது.

இற்றைக்கு 60 ஆண்டுகளு க்கு முன்னர் ஆசியக் கண்டத்தில் 692 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் பல மீனவக் கிராமங்களையும் மரத்தினால் அமைக்கப்பட்ட குடிசைகளையும் கொண்டிருந்த சிங்கப்பூர் இன்று பல நுாற்றுக்கணக்கான தொடர்மாடி வீடுகளையும் விரைவான கடுகதி பெருந்தெருக்கள் மற்றும் புகையிரத வீதிகளையும் கொண்டு உலகிலே பல பொருளாதார நிபுணர்களின் உள்ளங்களைக் கவரக் கூடிய அளவுக்கு அபிவிருத்தியில் முன்னேறிய நாடாக ஜப்பானுக்கு அடுத்ததாக காணப்படுகின்றது'. 1950 களில் சிங்கப்பூரிலுள்ள அரசியல் தலைவர்கள் இலண்டனுக்குப் பயணம் செய்வதற்கு சிங்கப்பூரிலிருந்து நேரடியான விமான சேவை இல்லாத காரணத்தினால் இலங்கையின் கட்டுநாயக்கா விமான நிலையத்தை தெரிவு செய்து கொழும்பிலிருந்து லண்டனுக்கு நேரடியாக பயணம் செய்துள்ளனர்'. 1961 இல் இலங்கையின் தலா வருமானத்துக்கும் சிங்கப்பூரின் தலாவருமானத்துக்கும் இடையிலான வேறுபாடு ஆக US$ 150 ஆகும். 2005ல் இவ்வேறுபாடு 1961 இல் இருந்ததை விட 81 மடங்குக்கு அதிகமாக அதிகரித்து US$ 26000 ஆக காணப்படுகின்றது. சிங்கப்பூரின் இவ் வாறான ஓர் துரித அபிவிருத்தியை துாண்டிய காரணிகளை ஆய்வு செய்பவர்கள் முன் வைக்கும் பல காரணிகளில் மிகவும் முக்கியமான ஒரு காரணியாக சிங்கப்பூரை கட்டியெழுப்பிய பொருளாதார சிற்பியான லீ குவான யூவின் (Lee Kuan Yew) அரசியல் தலைமைத்துவத்தைக் குறிப்பிடுகின்றனர்.

உலகிலே பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக பலரால் பல தடவைகள் மேற்கோள் காட்டப்பட்டு முன்னணி வகிக்கும் ஓர் தலைவராக லீ விளங்குகின்றார். சிங்கப்பூரின் அதி வேகமான பொருளாதார அபிவிருத்திக்கு பின்னால் அத்திவாரமாக அமைவது சிங்கப்பூரில் லீயினால் தலைமை தாங்கப்பட்ட அரசியல் தலைமைத்துவம் ஆகும். இக் கட்டுரையானது ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அரசியல் தலைமைத்துவம் எவ்வாறு பங்காற்று கிறது என்பதனை சிங்கப்பூரின் நீண்டகால தலைவரும் தற்போது சிங்கப்பூரின் அமைச்சரவையில் சிரேஷ்ட ஆலோசனை அமைச்சராக இருக்கும் லீ குவான் யூ இன் தலைமைத்துவத்தை எடுத்துக் காட்டுவதன் ஊடாக விளக்குகின்றது. இக்கட்டுரை லீயின் பொருளாதார அபிவிருத்திக்கான தளத்தை ஏற்படுத்திய வாழ்க்கை வரலாறு, அரசியல் சிந்தனை, இன ஒற்றுமை, தொழிற் சங்கம், ஊழல் ஒழிப்பு, துார நோக்குத் திட்டமிடல், நடைமுறைவாதம் மற்றும் நல்லாட்சி போன்ற தலைப்புக்களில் ஆய்வு செய்கின்றது.

 

2. வாழ்க்கை வரலாறு

லீயின் பரம்பரை சீனாவில் இருந்து சிங்கப்பூருக்கு குடி பெயர்ந்து பொருளாதார நோக்கில் சிங்கப்பூரை தாய்நாடாக கொண்டிருந்தது. இவர் சிங்கப்பூரில் குடியேறிய சீனர்களில் நான்காவது பரம்பரை ஆகும். இவருடைய தாத்தா Lee Bok Boon 1846 இல் சீனாவின் குவாங்டொங் மாகாணத்தில் (ஹொங்கொங்குக்கு அருகில் உள்ள பொருளாதார செழிப்பு நிறைந்த மாகாணம்) பிறந்தார். சிறு வயதிலிருந்து ஆங்கிலக் கலாசாரத்தின் செல்வாக்குக்கு உட்பட்டவராக லீ குவான் யூ விளங்கினார். இவருடைய ஆங்கிலப் பெயர் “Harry” ஆகும். 1923ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ம் திகதி பிறந்த இவர் 1950 Kwa Geok Choo என்பவரை திருமணம் செய்து இரண்டு மகன்மார்களையும் ஒரு மகளையும் பெற்று எடுத்தனர். இவருடைய மூத்த மகன் Lee Hsien Loong முன்னாள் இராணுவ பிரிகேடியர், 2004 இல் இருந்து சிங்கப்பூரின் பிரதம மந்திரியாக இருக்கின்றார். 1945-1949 காலத்தில் அவர் கேம்பிறிட்ஜில் உள்ள Fitzwilliam கல்லுாரியில் சட்டம் பயின்று முதல் வகுப்பில் பட்டம் பெற்றதோடு இலண்டனிலுள்ள அரசியலுக்கும் பொருளியலுக்குமான பள்ளியிலும் (LSE) பகுதியாக கல்வி கற்றுள்ளார்', - 1950 இல் லீ குவான் யூ லேசாக் அன்ட் ஒவ் (Laycock & ong) என்ற சட்ட நிறுவனத்தில் தனது பாரிஸ்டர் பட்டத்துக்கு வக்கீல் தொழிலின் பயிற்சிக்காக சோந்தார். அக்காலத்தில் சிங்கப்பூரின் அரசியல் நிலமை மிக மோசமாக இருந்தது. ஆட்சி அதிகாரங்கள் யாவும் பிரித்தானியரால் நியமிக்கப்பட்ட ஆளுனரிடமிருந்தது. இக்காலத்தில் சிங்கப்பூரில் அரசியலில் இருந்த உள்நாட்டவர்களில் அநேகமானவர்கள் பிரித்தானியாவில் சட்டம் அல்லது மருத்துவம் படித்த ஒர் மேட்டுக்குடி வர்க்கமாக இருந்தார்கள். அவர்கள் ஆங்கில மோகத்தில் அதிக மதிப்புக் கொண்டிருந்தமையால் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக சிங்கப்பூரின் சுதந்திரத்துக்காக மிகவும் தயக்கமான எதிர்ப்பைக் காட்டினார்கள். இவ்வாறான ஓர் சூழ்நிலையில் அரசியலின் ஆரம்பத்தில் மக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு தொண்டாற்றும் நலனியலிட் அதிக அக்கறை கொண்ட. ஒரு சோஸலிச வாதியாக லீ குவான் யூ சிங்கப்பூரின் அரசியலுக்கு நழைகிறார். ஆனால் இவருடைய மூலப் பெட்டுக்குடி வர்க்கம் ஆகும்.

 

3. தலைமைத்துவத்தின் அரசியல் சிந்தனை

லீ பற்றிய தலைமைத்துவப் பண்பில் காணப்படுகின்ற ஓர் முக்கியமான பண்பு யாதெனில் இவருடைய அரசியல் சிந்தனையானது முன்னுக்கு பின்னுக்கு முரணாகக் காணப்பட்டமையாகும். அதாவது லீயை ஒரு முதலாளித்துவவாதி என்றும் அவரால் சிங்கப்பூரில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரம் முதலாளித்துவம் சார்ந்தது என்பதும் பொதுவாக பலராலும் அடையாளம் காணப்பட்ட போதும் இவருடைய அரசியல் ஆரம்பம் முதலாளித்துவமாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேறு ஒரு வார்த்தையில் குறிப்பிடுவதாயின் லீயின் அரசியல் ஆரம்பம் சோஸுலிச பாதையாக இருந்து முடிவு முதலாளித்துவமாக இருந்துள்ள து', Michael. D (2000) இன் கட்டுரையானது லீயின் முரண்பட்ட அரசியல் சிந்தனையை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. அரசியல் தலைவர் ஒருவர் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு பொருளாதார சிந்தனையின் இரண்டு துருவத்திலும் பூரணமான அறிவு இருக்க வேண்டும் என்பது லீயின் அனுபவத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். சோஸலிசத்தில் ஆரம்பமாகி அதில் உள்ள நன்மை தீமைகளை அனுபவ ரீதியாக பெற்று, பின்னர் முதலாளித்துவத்துக்கு மாறுகின்ற போது ஒரே தலைமைத்துவம் இரண்டு முறையிலும் உள்ள நன்மைகளை பெறுவதற்கான ஒரு பொதுவான பொருளாதார முறையை கடைப்பிடித்து நாட்டை முன்னேற்ற முடியும். பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கு தேவையான தலைமைத்துவத்துக்கு இருக்க வேண்டிய இவ் அரசியல் பொருளாதார சிந்தனையின் பண்பு லீயிடம் கல்வியறிவூடாகவும் அனுபவ ரீதியாகவும் இருந்துள்ளது. லீயின் சோஸலிச நடவடிக்கைகள் லீயைப் பற்றிய ஆய்வுகள் பல இவருடைய தோற்றத்தில் இருந்த சோஸலிசம் சார்ந்த நடவடிக்கைகளை இனம் காட்டுகின்றன.

i) 1952 இல் சிங்கப்பூரில் நடந்த தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாக பல சட்ட உதவிகளை செய்து தன்னை ஓர் தொழிலாளர் நலன் சார்ந்த சிந்தனையாளன் என அடையாளப்படுத்தியுள்ளார்.

ii) இவர் சிங்கப்பூரில் பல தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக நீதிமன்றங்களில் வாதாடியுள்ளார்.

iii) இவருடைய நண்பர்கள் பலர் தொழிற்சங்க வாதிகளாகவும் சோஸலிசவாதிகளாகவும் காணப்பட்டுள்ளனர். உதாரணமாக Kenny Byrne, ராஜரத்தினம், Samad Ismail, தேவன் நாயர் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

iv) லீயின் ஆரம்பகால சிந்தனைகளையும் சொற் பொழிவுகளையும் பிரசுரித்த பத்திரிகைகளாகிய உடுசதன் மெலாயு என்பது சோஸலிசம் சார்ந்த ஓர் இடதுசாரி பத்திரிகையாக இருந்துள்ளது.

v) சிங்கப்பூரில் 1954 மே 13 இல் நடைபெற்ற மாணவப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் சார்பாக லீ ஆஜராகி வாதிட்டுள்ளார். இந்நடவடிக்கை சோஸலிச சிந்தனையுள்ள மாணவர்கள் மத்தியில் லீயின் ஆதரவை அதிகரிக்கச் செய்துள்ளது.

vi) 1954 நவம்பர் 21 இல் உருவாக்கப்பட்ட மக்கள் செயல் கட்சி (People's Action Party - PAP) கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற தொழிற்சங்க உறுப்பினர்களை கொண்டிருந்துள்ளது. கம்யூனிஸ்ட்டுக்கள் மேலும் பிற்காலத்தில் அதிகரிக் கப்பட்டது.

vii) 1955 இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் PAP க்கு 3 இடங்கள் மட்டும் கிடைத்து எதிர்கட்சித் தலைவராகவும் இடதுசாரிக்கட்சியாகிய PAP க்கு தலைவராகவும் லீ இருந்துள்ளார். இடதுசாரிகள் சோஸலிசவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

vili) 1957 இல் PAP க்குள் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் அளவுக்கு லீ குவான் யூ ஓர் இடதுசாரிகளை 'ஆதரிக்கும் ஓர் தலைவராக இருந்துள்ளார்.

இவ்வாறு லீயின் அரசியல் ஆரம்பம் ஓர் சோஸு லிசம் சார்ந்த கொள்கையாகவே இருந்துள்ளது. ஆனால் இக் கொள்கை ஊடாக நாட்டின் துரித * அபிவிருத்தியை அடைய முடியாது என்பதை நன்கு உணர்ந்த லீ PAP இல் இருந்து கம்யூனிஸ்ட்டுக்களை அகற்றி கட்சியை முதலாளித்துவம் சார்ந்ததாக மாற்றியமைத்துள்ளார். லீயின் தலைமையில் PAP பின்வரும் வழிகளில் கம்யூனிஸ்ட் டுக்களை கட்சியில் இருந்து அகற்றியது.

i) லிம்' யூ ஹாக் அரசு கம்யூனிஸ்ட்டுக்களுக்கு எதிரான நடவடிக்கையில் 35 க்கு மேற்பட்ட கம்யூனிஸ்ட்டுக்களை சிறைப்பிடித்தது. இதில் PAP ஐ சேர்ந்த 5 நிர்வாகசபை உறுப்பினர்களும் 11 நிர்வாகிகளும் உள்ளடங்கி இருந்தனர். இந்நடவடிக்கை PAP இல் லீயை முதலாளித்துவம் சார்ந்த ஆதரவாளர்கருடன் தொழிற்படச் செய்தது.

ii) PAP இன் யாப்பில் செய்யப்பட்ட மாற்றமானது புதிதாக கட்சியில் சேர்பவர்கள் நிர்வாக குழுவில் இடம் பெறுவதையும் பதவி வகிப்பதையும் தடை செய்தது. இந்நடவடிக்கை கம்யூனிஸ்ட்டுக்களை ஓரங்கட்டிக் கொண்டு வலதுசாரிகளின் கைகளை ஓங்கச் செய்தது.

iii) 1961 இல் PAP இருந்த கம்யூனிஸ்ட்டுக்கள் சிங்கப்பூர்-மலேசியா இணைப்புக் குறித்து எழுந்த பிரச்சனையால் தனியே பிரிந்து பாரிஸான் சோஸலிசக்கட்சியை தொடங்கியமையானது லீயை முற்றுமுழுதாக PAP ஐ முதலாளித்துவம் நோக்கி செல்ல வழிவகுத்தது.

iv) பாரிஸான் சோஸலிசக் கட்சிக்கு தலைமை தாங்கிய லீ சியு சோ (Lee Siew Choh) சீனாவில் மவோசேதுங்கின் கலாச்சாரப் புரட்சியால் துாண்டப்பட்டு சிங்கப்பூரையும் அதே பாணியில் புரட்சியை ஏற்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி கம்யூனிஸ்ட்டுக்களுக்கு சிங்கப்பூரிலிருந்து ஆதரவு குறையத் தொடங்கியது. இது மறுபுறத்தில் PAP இன் ஆதரவை அதிகரிக்க செய்தது.

v) 1965 இல் மலேசியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற சிங்கப்பூரில் PAP இன் பல திட்டமிட்ட நடவடிக்கைகள் கம்யூனிஸ்ட்டுக்களை அரசியலில் இருந்து அகற்றுவதற்கு காரணமாக அமைந்தது. லீ குவான் யூ எதிரிகளை 8தன்னை ஆரம்பத்தில் அரசியலுக்குக் கொண்டுவந்து பிரபல்யமடையச் செய்த இடதுசாரிகளை) திட்டமிட்டு அகற்றிய அதே நேரம் தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத் திட்டங்கள் மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு அதிகரிக்க காரணமாகியது. இவரின் சிறந்த அரசியல் தலைமைத்துவம் என்பது அரசியல் எதிரிகளை அரசியலிலிருந்து வெளியேற்றியதுடன் முற்றுப்பெறவில்லை. மாறாக வெளியேற்றிய பின்னர் கிடைத்த அரசியல் வெற்றியை பொருளாதார அபிவிருத்திக்கு பயன்படுத்தி மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தியதால் உருவானதாகும்.

i) லீயின் தலைமையின் கீழ் PAP ன் பொருளாதாரக் கொள்கையானது மக்களின் வாழ்க்கைகைத் தரத்தை உயர்த்தியதன் காரணமாக எதிர்க்கட்சியான கம்யூனிஸ்துக்களுக்கு இருர்த ஆதரவு குறைவடைந்து இறுதியாக 1980 ல் தேர்தல் பிரச்சாரத்தில் “1966ல் நாங்கள் செய்தது பெரும் தவறுதான் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என லீ சியு கோ மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் அளவுக்கு லீயின் அரசியல் தலைமைத்துவம் மேம்பட்டுள்ளது.

லீ குவான் யூ பிரித்தானியாவில் கல்வி கற்ற போது அவருடைய நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இடதுசாரிகளாக பிரித்தானிய தொழிற்கட்சியை சார்ந்தவர்களாக இருந்துள்ளனர்.

இவருடைய ஆரம்ப கால அரசியல் பொருளாதாரக் கொள்கையில் கூட தொழிற்கட்சி அரசாங்கம் பிரித்தானியாவில் கடைப்பிடித்த கொள்கையின் செல்வாக்கு காணப்பட்டுள்ளது. உலகத்தில் இரண்டாம் உலகயுத்தம் முடிந்த பின்னர் பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற மேலைத்தேச நாடுகள் பொருளாதார வளர்ச்சியை சமூக நலசெலவீடுகள் ஊடாக பங்கீடு செய்வதற்கு வேண்டிய கொள்கைகளை கடைப் பிடித்தன. எனவே பிரித்தானியாவில் தொழிலாளர் கட்சி பல நலன்புரி செலவீடுகள் ஊடாக அபிவித்தியை அடைய வேண்டிய கடப்பாட்டில் இருந்தது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற பிரித்தானியக் குடியேற்ற நாடுகளிலிருந்து கல்வி கற்பதற்கு UK சென்ற இளம் புலமையாளர்கள் பிரித்தானியாவில் தொழிற்கட்சி கடைப்பிடித்த சமூக நலக் கொள்கையை சோஸலிசத்துக்கு மாற்றீடான ஓர் கொள்கையாகக் கருதி தங்கள் நாடுகளிலும் அக் கொள்கையை அமுல்படுத்தி, ஓர் சமூகநல அரசை உருவாக்க முயன்றனர்'.

உண்மையில் மேலைத்தேச நாடுகளின் சமூகநல செலவீடுகள் ஊடான வருமான மீள்பங்கீடு என்பது அவைகளின் பொருளாதார அபிவிருத்தியின் வரலாற்று ஓட்டத்தில் அவசியமாக இருந்தது. இந்நாடுகள் பல்வேறு ஆசிய, ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் குடியேற்றங்களைத் ஸ்தாபித்து பாரிய சந்தையை முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டிருந்து. செல்வத்திரட்சியைப் பெற்ற பின்னர் முதவாளித்துவத்தின் முதிர்ச்சிக் காலத்தில் சமூக அமைதியை உருவாக்க வருமான மீள்பங்கீடு அவசியமாக இருந்தது. சமூக அபிவிருத்தி, இலவசக்கல்வி, இலவச உணவு, இலவச மருத்துவம், இலவச அல்லது மானிய அடிப்படையிலான வீடு போன்ற பல்வேறுபட்ட சமூகநலச் செலவீடுகளை பயன்படுத்தி சமூக அபிவிருத்தி அடையப் பெற்ற மேலைத்தேச முதலாளித்துவத்தில் இருந்து விடுபட்டு சுதேச முதலாளித்துவத்தின் ஆரம்ப கட்டத்தை கொண்டிருந்த குடியேற்றத்துக்கு உட்பட்டிருந்த இலங்கை இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த சமூகநலச் செலவீடுகள் மற்றும் சோஸலிசம் சார்ந்த கொள்கைகளை விட சமூக அபிவிருத்திக்கு முன்னர் பொருளாதார வளர்ச்சியைத்தாண்டக் கூடிய செலவீடுகள் அவசியப்பட்டன. சுருக்கமாகக் கூறினால் மேலைத் தேசத்துக்குத் தேவைப்பட்ட நல அரசு இருந்த காலம் (2ம் யுத்த முடிவு) குறைவிருத்தி நாடுகளுக்கு அபிவிருத்தி அரசை உருவாக்க வேண்டிய காலமாக இருந்தது. குறைவிருத்தி நாடுகளில் இருந்து மேலைத்தேசத்துக்கு (பிரித்தானியாவிற்கு) கல்வி கற்கச் சென்ற கொள்கை வகுப்பில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய தலைவர்களில் இந்த உண்மையை சரியாக உணர்ந்தவர் லீ குவான் யூ ஆவார்'.

4. தலைமைத்துவமும் யதார்த்தவாதமும்

சோஸலிசப் பின்புலத்திலும் சோஸலிச ஆதரவாளர்களையும் அதிகமாகக் கொண்டிருந்த PAP கட்சியும் அதன் தலைவர்களும் குறிப்பாக லீ குவான் யூ மேலைத்தேச அபிவிருத்திக் கோட்பாடு எங்களுக்குப் பொருத்தமானதா? என்பது தொடர்பாக யதார்த்த பூர்வமாக சிந்திக்கத் தலைப்பட்டிருந்தனர். பிரித்தானியாவில் கல்வி கற்றாலும் அந்நாட்டின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் யாவும் எமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பயன்படுத்த முடியாது என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டனர்.

தலைவர்கள் நடைமுறைவாதத்தை பின்பற்றி அபிவிருத்தியை எய்தினர். எனவே சோஸலிசத்துக்கு மாற்றீடு எனக் கூறத்தக்க சமூகநல செலவீடுகள் மற்றும் சமூக அபிவிருத்தியை விட பொருளாதார வளர்ச்சியை முன்னிலைப்படுத்துகின்ற சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்க கூடிய அபிவிருத்தி அரசு ஒன்றைத் ஸ்தாபிக்க முற்பட்ட மையானது தலைமைத்துவத்தின் பொருளாதார சிந்தனை தொடர்பான யதார்த்தவாதத்தை தெளிவாகக் காட்டுகின்றது. அவ்வாறான ஓர் அபிவிருத்தி அரசு ஒன்றை உருவாக்க முற்பட்டவேளை அவர் இரண்டு பிரதான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. முதலாவது தனது PAP கட்சிக்குள் பலர் சோஸலிச இடதுசாரிகளாக இருந்தனர். இவர்கள் இடதுசாரிகளாக இருப்பதனால் சமூகநலச் செலவீடுகளையும் சமூகநல அரசையும் ஆதரித்தனர். இரண்டாவது PAP க்கு வெளியேயும் சோஸலிசவாதிகள் எதிர்க்கட்சியாக மக்களின் குறுங்கால விருப்பங்களுக்கு தீனி போடக்கூடிய வகையில் சமூகநலச் செலவீடுகளை முதன்மைப் படுத்தியிருந்தனர்.

சிங்கப்பூரின் அன்றைய தேவை ஓர் சமூகநல அரசு அல்லாமல் ஒர் அபிவிருத்தி அரசுதான் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட லீ குவான் யூ சமூகநலச் செலவீடுகளை தாண்டக் காரணமாக இருக்கின்ற அரசியல் பன்முகத்தன்மை மற்றும் ஏனைய ஜனநாயக மரபுகள் போன்ற வற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் நசுக்கமுற்பட்டிருந்தனர்". பல எதிர் கட்சி சார்பான அங்கத்தவர்களுக்கு கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் கூட இடம் பெற்றுள்ளது. எதிர்கட்சியின் தேர்தல் காலங்களில் சுதந்திரமாக தேர்தல் பிரச்சாரங்களை செய்ய முடியாமல் இருந்தது. எதிர்கட்சியினர் தங்கள் கருத்துக்களை பொது மேடைகளில் கருத்துக் கூற அனுமதி மறுக்கப்பட்டிருந்த வேளையில் தமது கருத்துக்களை ஒலிநாடாக்களில் பதிவு செய்து மக்களுக்கு இரகசியமாக வினியோகித்திருந்தனர். இவ்வாறு ஜனநாயக மரபுகளை நசுக்குவது அதன் அடிப்படையில் ஒரு கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருப்பது பொருளாதார ரீதியாக பல நன்மைகளை பெற்றுக் கொடுத்தது.

எதிர்க்கட்சியினரை அடக்குவதற்கு PAP மேற்கொண்ட பிரதான தந்திரோபாயம் அவர்கள் மீது அவதுாறு வழக்குப் போடுதல். எதிர்கட்சி உறுப்பினர்கள் மீது போடப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளில் அதிக தண்டம் விதிக்கப்பட்டிருந்தது. அத்தொகையை செலுத்த முடியாமல் பெரும்பாலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். மேலும் தண்டம் செலுத்த முடியாதவர்கள் திவாலானவராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டது. பலருக்கு சிறைத் தண்டணை வழங்கப்பட்டது''.

எதிர்க்கட்சியின் பலத்தை சிதைப்பதற்கு வீடமைப்புத்திட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்தினர். ஓர் கிராமம் முழுமையாக எதிர்க்கட்சிக்கு ஆதரவாக இருந்த போது தொடர்மாடி மனைகள் அமைப்பதற்காக அவ்வாறான எதிர்க்கட்சி ஆதரவான கிராமங்களை தேர்ந்தெடுத்து மக்களை வேறு இடத்தில் தற்காலிகமாக குடியமர்த்தினர். பின்னர் தொடர்மாடிக் கட்டடத்தில் வீடு பகிர்ந்தளிக்கும் போது எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஒன்று சேராதவாறு வேறுபட்ட மனைகளுக்கும் இடங்களுக்கும் மாற்றப்பட்டனர். எதிர்க்கட்சியான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின், (SDP) பொதுச்செயலாளரான சீசூன் ஜீவான் (Chee Soon Juan) பொது இடங்களில் பேசியமைக்காக பல தடவைகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பல சோஸலிச சார்புடைய தலைவர்கள் தமது சோஸலிச சிந்தனையை கைவிடுவதாக அறிவித்த பின்பே சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். மேலும் இவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு இருந்த பழைய திரைமறைவு செயல்களை தெரியப்படுத்துவதோடு எதிர்காலத்தில் எந்த தொடர்பும் வைத்திருக்க மாட்டோம் என்ற எழுத்து மூலமான உத்தரவாதத்தை வழங்கிய பின்புதான் உள் நுழைய அனுமதிக்கப் பட்டனர்.

ஜனநாயகத்தை லீ குவான் யூ தனது பார்வையில் மக்'களுக்கு வேண்டாத ஓர் அரசியல் உரிமை எனக் கருதவில்லை. அவர் ஜனநாயகத்தை வரவேற்றார். ஆனால் ஜனநாயகம் தொடர்பாக அவருடைய நடைமுறையில் வாதம் என்னவெனில் ஜனநாயகம் குறைவிருத்தி நாடுகளில் மக்கள் மத்தியில் சீராக தொழிற்படாது என்பதாகும். ஜனநாயகத்தில் இருக்கின்ற கோட்பாட்டு ரீதியான குறைபாடுகளுக்கு அப்பால் ஜனநாயகத்தை சரியாகப் பயன்படுத்துவதற்கு ஜனநாயக உரிமைகளை அனுபவிக்கும் மக்கள் அறிவுடையவர்களாக இருக்க வேண்டும். மக்கள் அறிவற்றவர்களாக மந்தை கூட்டங்கள் போன்று சிந்தனையற்றவர்களாக ஒருவர் பின் ஒருவர் செல்பவர்களாக இருந்தால் ஜனநாயகம் தோல்வியடைந்து விடுகிறது. எனவே அரசியல்வாதி ஜனநாயகம் என்ற மாய மானைக் காட்டி நாட்டையும் பொருளாதாரத்தையும் சீரழிப்பான் என்பதை உறுதியாக நம்பினார். ஜனநாயகத்தை நடைமுறையோடு ஒப்பிட்டு எங்கள் சமூகத்திற்கு அது பொருத்தம் உடையதாக இருக்கிறதா? என்பதை சற்று அவதானிக்க வேண்டும் என பல நேர் காணல்களில் லீ குவான் யூ குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சிக்கு ஜனநாயகம் ஓர் அத்திவாரமாக இருப்பினும் ஊழல் மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் இல்லாத எல்லா மக்களும் பொருளாதாரத்தில் உயரக்கூடிய ஓர் பொருளாதார சுபீட்சத்தை ஜனநாயகம் ஏற்படுத்தி தரமாட்டாது என்பதில் உறுதியாக இருந்து இருக்கிறார்". மேலைத்தேசத்தில் மேட்டுக்குடி வர்க்கமாக கல்வி கற்று அரசியலில் புகுந்த லீ ஏனைய பிரித்தானியாவின் குடியேற்ற நாடுகள் கடைப்பிடித்த தாராள ஜனநாயகம் என்ற கோட்பாட்டில் இருந்து விலகி மென்மையான சர்வதிகார ஆட்சி என்ற நடை முறைவாதத்தை உணர்ந்து அதை துஸ்பிரயோகம் செய்யாது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பயன்படுத்தியமை அவரின் யதார்த்த வாத தலைமைத்துவ பண்பை எடுத்துக் காட்டுகின்றது.

5. தலைமைத்துவமும் இன ஒற்றுமையும்

லீ குவான் யூ தாராள ஜனநாயகத்தின் வழி பொருளாதார அபிவிருத்தி மீது அதிக 'நம்பிக்கை கொள்ளாமைக்கு இன்னொரு காரணம் சிங்கப்பூரின் இனக் குழுக்களின் பிரிவுகள் ஆகும். இலங்கையின் இன விகிதாசாரம் போன்று ஏறத்தாழ 76 சதவீதமான மக்கள் சிங்கப்பூரில் சீன மக்களாக இருக்கின்றனர். எனவே ஜனநாயகப் பொறிமுறையூடாக நாட்டை அபிவிருத்தி செய்வதாக இருந்தால் இன அடிப்படையில் பெரும்பான்மை மக்கள்தான் தொடர்ந்தும் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள். சீன மக்கள் பெரும் பான்மையாக இருப்பது மட்டுமல்ல அவர்கள் நாட்டின் அரசியல் அமைப்பை மாற்றக் கூடிய வகையில் 2/3 பெரும்பான்மையைக் கொண்டிருக்கின்ற நிலையில் நாட்டின் பாராளுமன்ற தாராள ஜனநாயகம் ஊடாக அபிவிருத்திக்கு தேவை யான வளங்கள் பங்கிடப்படும் போது பெரும்பான்மை மக்கள் சார்பாக பங்கீடு இருக்கும் என்பது தவிர்க்க முடியாது. எனவே சிறுபான்மையாக இருக்கின்ற தமிழ் மற்றும் மலே மக்கள் அபிவிருத்தியில் இருந்து ஓரம் கட்டப்படுவதற்கான சாத்தியங்கள் தாராள ஜனநாயகத்தில் இருப்பதை உணர்ந்தார். இதனால் அரசியல் கட்சிகள் இன மத மொழி பிரதேச அடிப்படையில் ஜனநாயக சுதந்திரம் ஊடாக சமூகத்தை சின்னாபின்னமாக்கி நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதி சீர் குலைவதை அவதானித்தார். 1965 இற்கு முன்னர் இனக்கலவரங்கள், அரசியல் குழப்பங்கள், ஊர்வ லங்கள், வேலை நிறுத்தங்கள் போன்ற பல அமைதிக்கு ஊறு விளைவிக்கக் கூடிய சம்பவங்கள் தாராள ஜனநாயகத்தின் வழி உருவாகியமையை அனுபவத்தில் உணர்ந்து கொண்ட லீ குவான் யூ இன ஒற்றுமையை சீர் குலைத்த ஜனநாயக சுதந்திரத்தை கட்டுப்படுத்தியமை அவரின் தலைமைத்துவப் பண்பை எடுத்துக்காட்டுகிறது.

ஜனநாயகத்தை கட்டுப்படுத்தும் போது இலங்கையில் பகுதியான சர்வதிகார ஆட்சியான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் தலைவர்கள் தொழிற்ப்பட்டது போன்று சிறு பான்மை மக்களுக்கு எதிராகவும் பெரும்பான்மை மக்களுக்கு சார்பாகவும் தொழிற்படவில்லை. உதாரணமாக Tan Lark Sye என்ற PAP இல் செல்வாக்கு கொண்டிருந்த ஒருவர் இன்றைய சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சீன மொழியில் கற்கப்பட வேண்டும் என 1956 இல் இலங்கையில் ஏற்பட்ட மொழிப் பிரச்சனை போன்று சிங்கப்பூரிலும் ஏற்பட்டிருந்தது'S PAP க்குள் இருந்த சீன நாட்டின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த வர்த்தகத்திலும் அரசியலிலும் பிரபல்யமாக இருந்த பல சீனர்கள் சிங்கப்பூரை ஒரு சீன மொழி தேசமாக உருவாக்கப்பட வேண்டும் என வாதிட்டு மக்கள் மத்தியில் குழப்பங்களையும் இனமுரண்பாடுகளையும் தாண்டக்கூடிய கருத்துக்களையும் வெளியிட்டனர். இப்பிரச்சினையில் லீ குவான் யூ வின் தலைமைத்துவம் நன்றாக வெளிப்படுத்தப்படுகிறது. இவர் ஓர் சீன வம்சமாக இருந்தும், தனது கட்சிக்குள்ளே சீன மொழியை அலுவலக மொழியாக பயன்படுத்துவதற்கு ஆதரவு மிகுதியாக இருந்தும், சீன மொழி அமுலாக்கத்துக்கு பின்னால் தனது தாய்நாடான சீனாவின் செல்வாக்கை அவர் பெறக்கூடிய வாய்ப்பு இருந்தும், பல மொழி பேசுகின்ற சிங்கப்பூரில் இறுதியாக ஆங்கில மொழியையே அலுவலக மொழியாக பிரகடனப்படுத்தினார்.

இவர் துார நோக்கற்ற ஓர் அரசியல்வாதியாக இருந்திருந்தால் இலங்கையில் 1956 இல் நிகழ்ந்தது போன்று தனிச்சீன சட்டத்தை கொண்டுவந்து பெரும்பான்மை சீன மக்களிடையே கொடிகட்டிப் பறந்து தாய்நாட்டின் ஆசீர்வாதத்துடன் மூன்றாம் வகுப்பு அரசியல் நடத்தி இருக்கலாம். ஆனால் இவர் ஓர் தூரநோக்கு கொண்ட தலைவனுக்குரிய பண்பினைக் கொண்டிருந்ததன் காரணமாக அவ்வாறான சீன மொழியை அமுல்படுத்தி குறுங்கால அரசியல் இலாபம் தேட முற்படவில்லை எனலாம். இவர் ஓர் யதார்த்தவாதியாவார். தன்னை 76 சத வீத சீன மக்களிடையே பிரபல்யப்படுத்த முற்படவில்லை. மாறாக உலகத்திலே ஆகக் கூடிய அளவு மேற்க்கோள் காட்டக்கூடிய அளவிற்கு உலக மக்களிடையே பிரபல்யமடைவதற்கான பொது மொழிக்கொள்கையை அமுல்படுத்தி சிங்கப்பூரின் சமூகங்களை ஒன்றிணைத்தார்.

லீ குவான் யூ வின் மொழி தொடர்பான தீர்மானத்துக்கு இலங்கையில் நடந்த சம்பவங்கள் அவருக்கு ஓர் அனுபவத்தைக் கொடுத்திருக்கின்றது. இலங்கையில் தனிச்சிங்கள சட்டம் கொண்டு வந்த 1956 இல் லீ குவான் யூ இலங்கைக்கு தனது முதலாவது அலுவலக பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றார். இலங்கையில் உலக யுத்தத்தால் பாதிக்கப்படாத பிரமிக்கத்தக்க பொதுக் கட்டிடங்களையும் ஏனைய உள்கட்டுமான வசதிகளையும் பார்த்து பிரமித்து இருக்கின்றார். இலங்கையின் பொருளாதார செழிப்பை பார்த்து சந்தோஷமடைந்தவர் 1956 ஏப்ரல் பிரதமர் பதவிக்கு வந்த S.W.R.D பண்டாரநாயக்காவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனிச்சிங்களச் சட்டம் இருந்ததை நன்கு அவதானித்து இருக்கிறார். இச்சட்டத்தின் பின்னர் 1956 முழுவதும் இலங்கையில் அமைதியின்மை ஏற்பட்டதை லீ நான்றாக கற்றுணர்ந்து தனது நாட்டில் தோன்றிய இன மற்றும் மொழிப் பிரச்சனைக்கான தீர்விற்கு ஓர் அனுபவமாக இலங்கைப் பிரச்சனையை எடுத்து இருக்கிறார். நேர்காணலில் லீ இதனை வெளிப்படையாக குறிப்பிட்டு இருக்கிறார்.

6. தலைமைத்துவமும் மதி நுட்பமும்

லீ 1959 இல் இருந்து 1990 வரை 31 வருடங்கள் சிங்கப்பூரின் பிரதம மந்திரியாக இருந்து இன்று மதிநுட்ப அமைச்சராக இருக்கிறார். சிங்கப்பூரின் எதிர்காலம் தொடர்பாக பின்வருமாறு ஆலோசனை வழங்கி இருக்கின்றார்.

"இன்றும் ஐம்பதாண்டு அரசியலில் இருப்பதற்கு நாங்கள் புதிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை. கடந்த ஐம்பதாண்டுகளாக என்ன செய்து வருகின்றோமோ அதையே ஒழுங்காக செய்து வந்தால் போதும். இரு விடயங்கள் இன்று மட்டுமல்ல என்றும் நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும். முதலாவது "சுயமாற்றங்கள்” இரண்டாவது இளைஞர்களாக இருந்தாலும் திறமையுள்ளவர்களை கட்சியிலும் ஆட்சியிலும் ஏற்றுக்கொள்வது, அவர்களை அங்கீகரிப்பது, அவர்களை நாளைய நாளுக்காக தயார் செய்வது, மேற்கொள்ளப்படும் எந்தவொரு விவாதமும் நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும், மாற்றுக்கருத்துக்களைக் கூட கட்சிக்குள்ளேயே விவாதிக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் நிதானமாக இருக்கிறேன். கட்சிக்குள்ளே அவற்றை விவாதிப்பதில் தவறில்லை . கட்சிகளுக்கிடையே தான் விவாதிக்கக் கூடாது. பிறகு அது வேறொரு தளமாக, கட்சியாகி உருவாகி இடையறாத தொல்லைகள் தரக்கட்டும். நாட்டு நலனில் அவை ஏற்படுத்தும் பிரச்சினைகள் நாட்டுக்கும் மக்களுக்கும் எப்போதும் நல்லதல்ல."பா. இராகவன் (முகில்) (2006), p.63

விவாதம் ஆரோக்கியமானதாக, அது நாட்டு மக்களை முரண்பாட்டுக்கு இட்டுச் செல்லாது தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் எவரும் வாயில் வரும் எல்லாவற்றையும் கூறுவதால் ஏற்படும் பிரச்சினைகளை லீ குவான் யூ நன்றாக அறிந்திருக்கிறார். எனவே பேச்சு சுதந்திரத்தை கட்சிக்கு வெளியே கட்டுப்படுத்தியிருக்கிறார். 1966 பெப்ரவரி முதலாம் திகதி சிங்கப்பூர் இராணுவத்தில் மலேய இன இராணுவத்தினர் ஓர் கலகம் செய்தனர். இக்கலகத்தை லீ நேரடியாக சென்று சாதுரியமாக தன் கையில் ஒலிபெருக்கி ஒன்றை வைத்துக் கொண்டு அந்த மலாய வீரர்களிடம் இப்படி ஓர் கலவரம் நடந்து விட்டது. அதற்கு காரணம் வார்த்தைகளின் புரிதலில் ஏற்பட்ட தவறு ஆகும். சிங்கப்பூர் குடிமக்கள் அல்லாத மலாய் வீரர்களை இராணுவத்தில் சேர்க்க வேண்டாம் என அவர் கூறிய வார்த்தைகள் அனைத்து மலாய் வீரர்களையும் இராணுவத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற விதமாக உங்களிடம் கூறப்பட்டிருகின்றது இதுதான் நடந்தது."

எனக் கூறி புத்திசாதுரியமாக நெருக்கடிகளை தீர்த்து வைத்துள்ளார். லீ குவான் யூ சில நாட்டுக்கு தேவையான ஒப்பந்தங்ளை மக்கள் நலன்கருதி உருவாக்க அவற்றை பொதுமக்களுக்கு மறைப்பு செய்து இருக்கிறார். சிங்கப்பூரின் இராணுவ உருவாக்கத்துக்கு ஸ்ரேல் உதவி புரிந்தது. இந்த இராணுவ உதவி முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கும் என்பதற்காக இறுதிவரை மூடி மறைக்கப்பட்டிருந்தது. லீயின் தலைமைத்துவ பண்பை சிங்கப்பூரின் இராணுவ உருவாக்கத்திலும் அவதானிக்கலாம். இராணுவத்தில் மூன்று இன மக்களையும் கணிசமான அளவு பேணுவதன் ஊடாக இனப்பிரச்சனை உருவாகாமல் தவிர்க்கப்பட்டது.

சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட வீடமைப்பு அபிவிருத்திச் சபை (Housing Development BoardHDB) லீ குவான் யூ வின் பொருளாதார அபிவிருத்திக்கான தலைமைத்துவ மதிநுட்ப பண்பை எடுத்துக் காட்டுகிறது. HDB இல் இன ஒற்றுமையைப் பேணுவதற்காக இன விகிதாசாரத்தின் அடிப்படையில் வீடுகள் வழங்கப்பட்டன. இது ஓர் இனத்தை ஓரங்கட்டாமல் எல்லா இனத்தையும் ஒருங்கமைத்து முன்னெடுத்து செல்லப்பட்ட அபிவிருத்தித் திட்டமாக இருக்கிறது. இரண்டாவது HDB ல் வழங்கப்பட்ட வீடுகள் ஓர் இலவச பண்டமாகவோ அல்லது மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட பண்டமாகவோ இருக்கவில்லை. முற்று முழுதாக சந்தை விலையில் இவை வழங்கப்பட்டன. அரசுக்கு வருவாயை அதிகரித்த அரச நிறுவனங்களில் HDB ஒன்றாக இருந்தது. மூன்றாவது சமூகத்தின் நலனை அதிகரிக்கின்ற ஓர் பண்டமாக வீட்டுவசதி பொருளாதார வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டிருந்தது. அதாவது சமூக நல செலவீடுகள் மக்களின் அடிப்படை வசதிகளை வழங்கியதோடு பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியுடனும் நேரடியாக இணைக்கப்பட்டிருந்தது. பல குறைவிருத்தி நாடுகளில் சமூகநல செலவீடுகள் அரசியல்வாதிகளின் சுயநல இம்சையை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது. அவைகளில் பல பொருளாதார வளர்ச்சிக்கோ அல்லது நாட்டின் செல்வத்தின் அதிகரிப்பிற்கோ இட்டுச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீடமைப்புத்திட்டம் ஊடாக சமூக ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பினார். ஒரே இன, சமய மக்கள் ஒரே பகுதியில் குடிமக்களாக வசிப்பதைத் தவிர்க்கலாம் என்பதற்காக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வாறு இனக்குடிகளாக பிரிந்து வாழ்வதால்

இனவேறுபாடுகள் அதிகரித்து இனக் கலவரங்கள் தோன்ற வாய்ப்புள்ளது எனக் கருதினார். எனவே ஒரு குறிப்பிட்டளவு வருமானமுடைய எல்லா இன2 மக்களும் ஒரே பகுதியில் வசிக்கும் படியாக குடியிருப்பு பகுதிகள் உருவாக்கப்பட்டன. குறிப்பிட்ட வருமான மட்டத்தில் உயர் வருமானம் உள்ளவர்களும் தாழ்வருமானம் உள்ளவர்களும் ஒன்றாகவே இணைந்து வாழ்ந்தனர். சர்வதிகாரப் பண்புகள் நிறைந்த ஆட்சியுடன் எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவதற்கு லீ குவான் யூ எடுத்த பிரதான ஓர் பொருளாதார அபிவிருத்தி ஆயுதம் HDB ஆகும். இதன் கருத்து அரச நிதியை உயர்த்தவே இன்றி தனது செல்வாக்கை உயர்த்த பயன்படுத்தியது அல்ல. HDB இலாபத்தில் இயங்கிய ஓர் அரச நிறுவனம் ஆகும்.

சிங்கப்பூரின் சிற்பியை முத்தாக்கிய பெருமை கலாநிதி ஆல்பர்ட் வீன் சீமியஸ் (Dr. Albert Winsemius) என்பவர் ஆவார். 1961-1984 வரை 23 ஆண்டுகள் சிங்கப்பூரின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றி உள்ளார். பொருளாதார ஆலோசகரின் அறிவுரையை உள்வாங்கி தனது சுயசிந்தனையில் மதிப்பீடு செய்து அவற்றை நடைமுறைப்படுத்தியதால் லீ குவான் யூ வின் பொருளாதார தலைமைத்துவம் சிறப்பாக பேசப்படுகிறது. லீ குவான் யூ இவரிடம் இருந்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் நிர்வாக செயல் அதிகாரிகள் என்ன நினைப்பார்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதை கற்றுக் கொண்டார்.

7 தலைமைத்துவமும் தொழிலாளர் நலனும்

சிங்கப்பூரின் சிற்பி மனித உரிமைகள் மற்றும் ஊழியர்களின் உரிமைகள் போன்றவற்றை நசுக்கித்தான் சிங்கப்பூரை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பினார் என வாதிட முடியாது. இவர் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆதரித்த ஓர் தலைவர் அல்ல. மறுபுறத்தில் இவர் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து அவர்களின் உழைப்பை முதலாளித்துவ வர்க்கம் உறிஞ்சி எடுப்பதையும் விரும்பிய தலைவரும் அல்ல. மாறாக தொழிலாளர்கள் தங்கள் உற்பத்தி திறன் அதிகரிப்பிற்கு ஏற்ப நியாய பூர்வமான ஊழியம் பெறுவதை ஏற்றுக் கொண்டார். மேலும் இவர் ஊழியர்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தி தொழிற்சங்க நடவடிக்கை ஊடாக உற்பத்திதிறன் இல்லாமல் ஊழிய அதிகரிப்பை பெற்றுக் கொண்டு நாட்டின் அமைதியை சீர் குலைப்பதை தடுத்தார். தொழிற்ச்சங்கங்கள் முதலாளிகளுக்கு பக்க பலமாக இருந்தால்தான் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி தொழிலாளரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என நம்பினார்.

"பொன் முட்டைகள் தேவை என்பதற்காக பொன் முட்டையிடும் வாத்துக்களைக் கொல்லக் கூடாது. இது தொழிற்சங்கத் தலைவர்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள்" லீ குவான் யூ' பா (முகில்) (2006), p.193 இராகவன்

தொழிற்சங்கத் தலைவர்கள் படித்தவர்களாக இருக்க வேண்டுமென லீ நம்பினார். சோஸலிசம் பற்றியோ அல்லது முதலாளித்துவம் பற்றியோ பூரணமான அறிவு இல்லாத தொழிற் சங்கத் தலைவர்கள் மக்களை பல்வேறுபட்ட பிரச்சாரங்கள் ஊடாக குழப்பமடையச் செய்து நாட்டின் அமைதியைச் சீர் குலைப்பார்கள். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் முக்கிய காரணிகள். எனவே சோஸலிச வாதிகளின கலப்பில்லாத தொழிற் சங்கங்கள் இருக்குமானால் வேலை நிறுத்தங்கள் மற்றும் ' மோதல்கள் தவிர்க்கப்படும். இவ்வாறான உண்மையை உணர்ந்த லீ குவான் யூ தொழிற் சங்கங்கள் அனைத்தையும் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். பிரித்தானியாவில் இருந்து குடியேற்ற நாடுகளில் வேர் விட்டு இருந்த தாராள ஜனநாயகத்தை எப்படிக் கட்டுப்படுத்தி சமூகநல செலவீடுகளைக் குறைத்தாரோ அதே போன்று பிரித்தானியாவின் மரபில் இருந்து சிங்கப்பூர் பின்பற்றி வந்த தொழிற்சங்க கொள்கையும் தொழில்வளர்ச்சியை பாதித்து இருந்தது. நாடு பொருளாதார ரீதியாக தொழில்களை வளர்த்து நாட்டின் செல்வத்தைப் பெருக்கக் கூடிய மூலதன இருப்பு ஏற்படுவதற்கு முன்னர் தொழிற் சங்கங்களை வளர விட்டால் அவை தொழில்களின் வளர்ச்சியை பாதிப்பதுடன் நாட்டின் அபிவிருத்தியை வளர்ச்சியின்றி சமூகநலச் செலவீடுகள் பக்கம் திசை திருப்பி ஒட்டு மொத்தமான பொருளாதார அபிவிருத்தியை மந்தமடையச் செய்யும் என நம்பினார்.

தொழிற் சங்கங்கள் தொழில நிறுவனங்களின் உண்மை நிலையை பற்றி அக்கறை கொள்ளாமல் எப்படி முதலாளிமார்களிடம் இருந்து அதிக ஊதியம் மற்றும் சலுகைகளைப் பெறுவதிலேயே கட்டுப்பாடற்ற தொழிற்சங்களும் அவைகளின் தொழிலாளர்களும் ஆர்வம் செலுத்துவர். இதன் காரணமாக தொழிலாளர்கள் ஓர் சுதந்திரமான தொழிற்சங்கத்திலிருந்து பெறும் நன்மைகளை பெறுவதற்கு கட்டுப்பாடான ஓர் குடையின் கீழான தொழிற்சங்கம் உதவும் என நம்பினார். தொழிற்சங்கங்களை ஓர் மென்மையான சர்வாதிகார கொள்கையைப் பயன்படுத்தி கட்டுப்படுத்திய அதே வேளை தொழிலாளர்களை முதலாளித்துவ வர்க்கம் சுரண்டாதவாறு ஊழிய மற்றும் ஊதியப் பாதுகாப்பையும் ஏற்படுத்தினார். 1968ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டது. அவர்கள் தடையை மீறும் சந்தர்ப்பத்தில் அவர்களை கைது செய்து தண்டப்பணம் அறவிடுவதையும் சட்டம் தெளிவாக வரையறுத்தது. இப் புதிய தொழிற்சங்க சட்டத்தினால் நாட்டில் தொழிற்சங்கங்களால் ஏற்பட்ட அமைதியின்மை முடிவுக்கு வந்தது. புதிய முதலீடுகள் பெருக்கமடைந்தன. புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாகின. நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தது.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கிய போதும் தொழிலாளர்களின் ஊழியத்தை நிர்ணயம் செய்வதற்காக 1972 இல் தேசிய ஊழியச் சபை (National Wage Council) அமைக்கப்பட்டது. இச்சபையானது அரசு, தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் ஆகிய 3 பிரிவினரை உள்ளடக்கிய முக்கோண சபையாக இருந்தது. ஊழிய உயர்வு, உற்பத்தித்திறனுக்கான ஊக்குவிப்புத்தொகை போன்றன இச்சபையால் தீர்மானிக்கப்பட்டு அவை கடுமையாக அமுல்படுத்தப்பட்டன. இச்சபையால் ஏற்படுத்தப்பட்ட தீர்மானங்கள் நாட்டின் எந்தப் பிரிவினரையும் பாதிக்காது சமூக அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தியது. வருடம் தோறும் ஊழியம் அதிகரிக்கப்படவில்லை . மாறாக அடிப்படைச் சம்பளம் என நிலையான ஓர் தொகையை வைத்துக் கொண்டு ஊக்கத்தொகை வழங்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.

தொழிற்சங்கங்களுக்கும் அரசுக்கும் இடையில் நல்லுறவு ஏற்படுத்தியமை லீ குவான் யூ வின் தலைமைத்துவ பண்பை எடுத்துக்காட்டுகிறது. இவ்வுறவை வளர்ப்பதற்கு லீக்கு பக்க துணையாக தேவன்நாயர் செயற்பட்டு இருக்கிறார். இவ்வாறு பக்கத்துணையாக இருந்த தேவன்நாயரைக் கூட பிறிதொரு சம்பவத்தில் லீ குவான் யூ தண்டித்து இருக்கிறார். இது தலைமைத்துவத்தின் உண்மைத் தன்மையை எடுத்துக் காட்டுகிறது.

8. தலைமைத்துவமும் நல்லாட்சியும்

ஒரு முறை சிங்கப்பூரின் மூன்றாவது ஜனாதிபதியாக இருந்த தேவன் நாயர் ஒரு விருந்துப்சாரத்தில் மது அருந்திவிட்டு பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டார். இதை விசாரித்த மருத்துவ குழு இவர் மதுவுக்கு அடிமையாகி சுயகட்டுப்பாட்டை இழந்ததாக 7 பேர் கொண்ட மருத்துவர்களால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வறிக்கையைக் காரணம் காட்டி லீ குவான் யூ தனது மிக நெருங்கிய நண்பராக இருந்து தொழிலாளர்களை ஒன்றிணைத்து லீயின் அரசியல் பலம் அதிகரிக்க காரணமாக இருந்த தேவன்நாயரை பதவியில் இருந்து நிறுத்தியது. ஒன்றரை வருடம் கழித்து Far Easten Economic Review என்ற பத்திரிகையில் தேவன் நாயர் தான் மதுவுக்கு அடிமையாக இருந்ததில்லை என்றும் கடிதம் எழுதியிருந்ததோடு 11 வருடங்கள் கழித்து கனடாவில் ஓர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தனது உடல்நிலை திட்டமிட்டு தவறாக கணிக்கப்பட்டிருந்துது என தேவன் நாயர் கூறியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறெனினும் தான் கட்டியெழுப்பிய தேசத்துக்கு ஏற்பட்ட அபகீர்த்தியை தனது நட்பு எனும் மகுடத்தை விட்டுக்கொடுத்தே புகழை நிலை நிறுத்தியிருக்கிறார். இது நாட்டை நேசித்து நல்லாட்சியை உருவாக்கிய இவரின் தலைமைத்துவ பண்பை எடுத்துக்காட்டுகிறது.

1986 டிசம்பர் 15ம் திகதி லீ குவானின் நெருங்கிய நண்பரும் தேசிய வளர்ச்சி துறை அமைச்சருமான தே சியாங் வான் (Tch Cheang Van) தான் இலஞ்ச ஊழலில் கைது செய்யப்பட்டிருந்த வேளை தற்கொலை செய்வதற்கு முன்னர் பிரதமர் லீ குவான் யூ விற்கு ஓர் கடிதம் எழுதினார்.

"கடந்த இரண்டு வாரங்களாக என் மனம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்தது. அமைதியின்றி தவித்தேன். நடந்த அந்த துரதிஸ்டவசமான சம்பவத்துக்கு நான்தான் முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே என் தவறுக்காக ஒரு பொறுப்புள்ள குடிமகனாக எனக்கு நானே இந்த அதிகபட்ச தண்டனையைக் கொடுத்துக் கொள்கிறேன்” இராகவன் பா (முகில்) (2006), p.141 - இக்கடிதம் எழுதுவதற்கு முன்னர் இவர் லீ குவான் யூவை சந்தித்து தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க முயன்றுள்ளார். ஆனால் லீ குவான் யூ திட்டவட்டமாக இவரை சந்திப்பதற்கு மறுத்து ஊழல் லஞ்சம் இல்லாத ஓர் நாட்டை உருவாக்குவதற்கு தனது நெருங்கிய நண்பரை இழந்தமையானது தலைமைத்துவ பண்பை எடுத்துக் காட்டுகின்றது. உலகில் ஊழல் லஞ்சம் இல்லாத நாடுகளின் வரிசையில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எத்தனை ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும், எத்தனை தொடர்பு சாதனங்கள் மானபங்கப்படுத்தியும், அலட்சியமாக நீதிமன்றத்துக்குச் சென்று ஏன் சிறைத்தண்டனை கூட அனுபவித்து கஷ்டப்படாமல் விடுதலையாகி தியாகிகளாக வெளிவரும் இந்திய நாட்டு அரசியல்வாதிகள் போல சிங்கப்பூரில் அரசியல் வாதிகளோ அல்லது அதிகாரிகளோ தங்கள் கைவரிசையை காட்ட முடியாது. இவ்வாறான ஓர் ஊழல் இல்லாத நாடாக சிங்கப்பூர் மிளிர்வதற்கு காரணம் தலைமைத்துவம் ஊழல் இல்லாமல் இதை ஒழிப்பதற்கான சட்ட திட்டங்களை மிக கடுமையாக நடை முறைப்படுத்தி வருகின்றமையாகும். 1959க்கு முன்னர் தற்போதைய இந்தியாவை விட மிக மோசமான ஊழல் மோசடிகள் சிங்கப்பூரில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இலஞ்சம் ஊழலை ஒழிப்பதற்கு லீ குவான் யூ அதிக அக்கறை செலுத்தினார். "அரசன் எவ் வழி மக்களும் அவ்வழி' என்ற பழமொழிக்கேற்ப தலைமைத்துவம் நேர்மையானதாகவும் ஊழல் அற்றதாகவும் இருக்கும் போது தான் அதற்குக் கீழேயுள்ள அதிகாரிகள் மக்கள் நேர்மையைக் கடைப் பிடிப்பார்கள் என்பதை உணர்ந்து தலைமைத்துவத்தை துாய்மை ஆக்கினார். அடிக்கடி மாறுகின்ற அரசு இருக்கும் போது அரசியல்வாதிகள் தப்பித்துக் கொள்ள முடியும் என்பதால் ஊழல் ஒழிப்புக்கு நிலையான ஆட்சியின் கீழ் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தினார்.

"தேர்தலில் எவ்வளவு பணம் செலவழிக்கிறோமோ அதே அளவு வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பது தான் ஆசிய நாடுகளில் நிலவும் சாபம். எனவே தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளன் தான் செலவளிக்கும் பணத்தை பதவிக்கு வந்த பின் மீண்டும் இரு மடங்காக சம்பாதிக்க நினைக்கிறார். அப்போதுதான் அதை உபயோகித்து அடுத்த முறையும் வெற்றிபெற முடியும். ஆனால் சிங்கப்பூரில் நாங்கள் தேர்தலுக்காக செலவழிக்கும் பணம் சட்ட விதிகளுக்குட்பட்டதுதான். மிகவும் குறைந்த தொகை தான். நாங்கள் தேர்தல் அன்று வாக்காளர்களை கட்டாயமாக அழைத்துச் சென்று வாக்குகளைப் பெறுவதில்லை. வாக்காளர்களுக்கு வாக்குகள் பரிசுகள் அழிப்பதில்லை . அதற்காக கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்ற சட்டத்தையே நிறைவேற்றி - யுள்ளோம். நாங்கள் எங்கள் வாக்குகளை பொது மக்களுக்கு செய்யும் பொதுநலத் தொண்டுகள் மூலந்தான் பெறுகின்றோம். அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லாத காரணத்தினால் அவர்கள் தனியே சொத்து சேர்ப்பது என்பது ஆசிய நாடுகளில் கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. எனவே சிங்கப்பூரில் தனியார் துறை உயர் அதிகாரிகள் போல அமைச்சர்களுக்கும் நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது” லீ குவான் யூ-இராகவன் பா (முகில்) (2006), p.122)

இலஞ்சம் ஒழிப்பு அதிகாரிகள் அரசியல் வாதிகளின் வீடுகளை எந்த நேரத்திலும் சென்று சுதந்திரமாக சோதனையிடவும், குற்றம் செய்திருந்தால் அவர்களை கைது செய்யவும் அதிகாரத்தைக் கொண்டிருந்தனர். இவர்கள் தன்னிச்சையாக சுதந்திரமாக இயங்க அனுமதித்தது மட்டும் அல்ல அவர்களுடைய சேவை திறமையாக இயங்குவதற்கு பக்கதுணையாக இருக்கும் காவல் துறை மற்றும் நீதித் துறையும் சுயாதீனமாக இயங்கியது. இந்த பண்பை சுவிர்ஸலாந்திலும் அவதானிக்கலாம். ஒரு முறை பத்திரிக்கையாளர் ஒருவர் லீயை பார்த்து சிங்கப்பூரின் பொருளாதார அபிவிருத்திக்கு ஏதாவது ஒரு நாட்டின் அபிவிருத்தி மாதிரியை முன்மாதிரியாக பயன்படுத்தியுள்ளீர்களா? எனக் கேட்ட போது "சுவிர்ஸலாந்து, இஸ்ரேல் மற்றும் ஹொங்கொங் நாடுகள் பயன்படுத்திய மாதிரியை நாங்கள் மென்மேலும் விருத்தி செய்தோம்” என்றார்.

 

9. தொகுப்புரை

  ஜப்பானை தளமாக கொண்ட பிரபல்யமான ஒரு ஆய்வு சஞ்சிகைக்கு மூலதனவாக்கத்தில் அதி உந்துதலுக்கான அரசியல் பின்தள்ளுதல் என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை அனுப்பியிருந்தேன். இக் கட்டுரையானது குறைவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மூலதனவாக்கம் தொடர்பான நச்சுச் சுழலை உடைத்துக் கொண்டு அபிவிருத்தியில் முன்னேறுவதற்க்கு தூரநோக்கு உள்ள தலைமைத்துவத்தின் கீழ் எதேச்சை அதிகார அரசு ஒன்றின் அவசியத்தை ஆசிய நாடுகளின் அபிவிருத்தி அனுபவங்களை குறிப்பாக சிங்கப்பூரின் தலைமைத்துவத்தை முன்வைத்து விபரித்து இருந்தது. இக் கட்டுரை பிரசுரிப்பதற்க்கு நிராகரிக்கப்பட்டு அதற்கான காரணங்கள் சில எனக்கு தரப்பட்டது. பதிப்பாசிரியர் எழுப்பிய வினாக்களில் மிக முக்கியமான ஒன்று துரநோக்கு தலைமைத்துவம் என்பது என்ன? அதை எப்படி வரையறுப்பது? என்பது ஆகும். ஒரு நாட்டுக்குள் சிறந்த தலைமைத்துவம் என போற்றப்படுபவர் இன்னொரு நாட்டுக்கு காவலனாகவும் இருப்பார். ஏன் அவருடைய சொந்த நாட்டுக்குள்ளேயே அவருடைய தலைமைத்துவத்தை இன்னொரு பிரிவினர் மிகவும் கடுமையாக விமர்சிப்பார்கள். எனவே எனது ஆசிரியரும் பேராசிரியருமான வி.பி சிவநாதன் கூறியது போன்று அபிவிருத்தி தந்திரேபாயத்தில் இதுதான் முடிந்த முடிவு அல்லது இதுதான் பொது விதி என எதையும் சமூக விஞ்ஞானத்தில் அழுத்தமாக கூற முடியாது". அவை காலம், உள்ளநாட்டு, வெளிநாட்டு சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு தலைமைத்துவத்தின் பண்பு ஒரு நாட்டில் வெற்றி பெற்றது என்றால் அதே பண்பையுடைய இன்னொரு தலைமைத்தவம் இன்னொரு நாட்டில் தேல்வியடையலாம். பொருளாதார அபிவிருத்தியின் வெற்றி என்பது தனித்து ஒரு சில காரணிகளால் மட்டும் தீர்மாணிக்கப்படுவதில்லை. பல காரனிகள் பல கோணங்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. எனவே லீ குவான் யூவின தலைமைத்துவ பண்பினால்த்தான் சிங்கப்பூர் வெற்றி பெற்றது எனக் கூற முடியாது. ஏனைய பல காரணிகள் இவ் விடயத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இருப்பினும் எவ்வாறான சிக்கலான பிரச்சினைகளையும் ஒரு தலைமைத்துவம் அபிவிருத்திக்கு சார்பாக மாற்றலாம் என்பதற்க்காக தலைமைத்துவம் அபிவிருத்திக்கு அவசியமாகின்றது. பொருளாதார அபிவிருத்திக்கான தலைமைத்துவம் என்பது ஒரு இராணுவ கட்டளைத் தளபதி அல்லது கப்பலின் கப்டன் போன்றது (Jeyasinghe Prabhath, 2008). தனது வெற்றிப் பயணப் பாதையில் உருவாகும் எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான அனுமதியை தன்னை கட்டுப்படுத்துபவர்களிடம் (மக்கள் பிரதிநிதிகள்) கேட்டு அனுமதி பெற்று செய்து கொண்டிருக்க முடியாது. எனவே சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப எதேச்சையான தலைமைத்துவத்தின் தீர்மானம்தான் வெற்றியை தீர்மானிக்கின்றது. சிங்கப்பூரின் வெற்றியை பார்த்துத்தான் ஜே.ஆர் ஜயவர்த்தனா இலங்கையிலும் திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். ஜயவர்த்தனாவின் கனவு இலங்கையை தென் ஆசியாவில் குட்டி சிங்கப்பூராக மாற்றுவதாக இருந்தது. ஆனால் இலங்கை பொருளாதார அபிவிருத்தியில் வெற்றி பெறவில்லை. குட்டிச் சிங்கப்பூராக வரவிட்டாலும், இலங்கை ஜயவர்த்தனாவின் அரசியல் தலைமையின் கீழ் ஒரு அமைதியான நாடாக இருக்க முடியாமல் போய்விட்டது.

ஜயவர்த்தனாவின் தலைமைத்துவத்துக்கு அப்பால் நாட்டின் வரலாறு, புவிசார் அரசியல், பூகோள அரசியல், மக்களின் உளப்பாங்கு எனப் பல காரணிகள் இலங்கையின் தோல்விக்கு காரணமாக இருக்கின்றன. இருப்பினும் தலைமைத்துவத்துக்கு பிரதான பங்கு இருக்கின்றது.

சிங்கப்பூரின் தலைமைத்துவம் இக்காரணிகளை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு சாதகமாக மாற்றியமைத்தது. இலங்கையின் வர லாற்றில் ஜே.ஆர் ஜயவர்த்தனா என்ற அரசியல் தலைவர் இல்லையாயின் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி எவ்வாறு இருந்து இருக்கும் என்பது சிங்கப்பூரின் தலைமைத்துவத்தையும் பொருளாதார அபிவிருத்தியையும் நோக்கும் போது எம் முன் எழும் வினாவாகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  Skærmbillede 645                                             -மீராபாரதி-

                                              பெண்கள்: பன்முக அடையாளங்களும் அதிகாரமும்

வரலாற்றில் பெண்கள் மீதான அதிகாரம் என்பது எப்பொழுது தனியுடமை உருவானதோ அப்பொழுதில் இருந்தே ஆரம்பித்திருக்க வேண்டும். அதாவது தாய்வழி சமூகத்திலிருந்து தந்தைவழி சமூக மாற்றம் ஆரம்பமானதிலிருந்து பெண்கள் மீதான ஆணாதிக்க சமூகத்தின் அதிகாரம் செயற்பட்டிருக்கலாம்.

15 copy- அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி -

 "சுருக்கம் : அபிவிருத்தி என்ற கருத்துநிலையில் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட மாற்றங்கள், உலகத்தின் சரிபாதி சனத்தொகையைப் பிரதிநிதித்து - வப்படுத்தும் பெண்கள் சமூகம் அபிவிருத்திச் செய்முறையில் மெல்ல மெல்ல உள்வாங்கப்பட்ட விதம், பால்நிலை சார்ந்து அபிவிருத்தி பற்றிய கருத்துநிலை போன்றவற்றை வரலாற்று நோக்கில் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது."

Skærmbillede 306-மீராபாரதி-

" தந்தை ஆண்தன்மையுடன் வன்மமாக செயற்பட்டிருக்கலாம். தாய் வலியினால் கஸ்டப்பட்டிருக்கலாம். மேலும் அவருக்கு விருப்பமில்லாமலும் கூட இருந்திருக்கலாம். இவ்வாறன ஒரு உறவின் விளைவுதான் நான். இதைவிட இவர்களுடைய விந்தும் முட்டையும் நான் இவ்வாறு இருப்பதற்கான இன்னுமொரு காரணமாகும். ஆம்! இவை இரண்டும் தம் மரபணுக்களை தம்முடன் கொண்டுவருகின்றன."

நான் ஏன் இப்படி இருக்கின்றேன்? சில பழக்கவழக்கங்களை ஏன் விடமுடியாமல் இருக்கின்றது? சில செயல்களை அல்லது பழக்கவழக்கங்களை ஏன் முன்னெடுக்க முடியாமல் இருக்கின்றது? சிலவற்றை செய்த பின் ஏன் குற்றவுணர்வில் கஸ்டப்படுகின்றேன்? எனது சிந்தனைகள் ஏன் ஒன்றுக்கு ஒன்று எதிராக மாறி மாறி வருகின்றன? இப்படிப் பல பழக்கவழக்கங்கள் பிரக்ஞையின்மையாக தொடர்கின்றன. பல எண்ணங்கள் சிந்தனைகள் அடிக்கடி மனதில் ஒடுகின்றன. இவை தொடர்பாக சிந்திப்பதும் உண்டு. இதிலிருந்து விடுபட முயற்சிப்பதும் உண்டு. ஆனால் இவற்றிலிருந்து விடுதலை மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் தேடல் தொடர்கின்றது…

135161811 244183563760895 6809278065169160891 nசாந்தி சச்சிதானந்தம்

அறிமுகம்

மனித உறவுகள் யாவையும் ஏதாவதொரு அதிகார ஏற்றத்தாழ்வினை உள்ளடக்கியதாக இருப்பதை நாம் எங்களுடைய அன்றாட அனுபவங்களில் தினமும் காண்கின்றோம். அதிகார உறவுமுறை என்பது, ஒரு மனிதர் இன்னொரு மனிதரின் வாழ்க்கைமீது அல்லது அவரின் நடத்தை மீது ஏதோவொரு வகையில் பிரயோகிக்கக்கூடிய கட்டுப்பாடு என வரையறுக்கலாம்.

ஆசிரியர் திரு.சு.இக்னேசியஸ் கிளனி

உள ஆற்றுப்படுத்தலும், தொழில் வழிகாட்டலும்

யா/சென்.ஜேம்ஸ் மகா வித்தியாலயம்

யாழ்ப்பாணம்.

 தற்போதைய நெருக்கடி மிக்க சூழ்நிலையின் நிமித்தமாக நாம் எல்லோருமே வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருப்பதே பாதுகாப்பானது என்ற நிலையில், அரசாங்கத்தினதும், சுகாதாரப் பிரிவினரதும் ஆலோசனைகளுக்கமைவாக வீடுகளுக்கு இருப்பதே நல்லதென்ற கருதி, அவர்களின் முடிவை எமது முடிவாக உள்வாங்கிக் கொண்டதன் விளைவாக அதனை முழுமையாகக் கடைப்பிடித்து வருகின்றோம்.

 

க.சுவர்ணராஜா
ஓய்வு நிலை பீடாதிபதி
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி

"பிரதிபலிப்பு கற்பித்தல் என்பது விசாரணைகளின்  ஊடாக தகவல்களை பகுப்பாய்வு செய்து அதன் முடிவினை அடிப்படையாகக்கொண்டு செயற்படும் ஒரு கட்டுருவாக்க கற்பித்தல் முறையாகும். பன்முக அடிப்படையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதன் ஊடான ஒரு ஆக்கத் திறன் முயற்ச்சியாக பிரதிபலிப்பு கற்பித்தல். அமைகின்றது"

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click