Skærmbillede 939-ரூபன் சிவராஜா-

படம் தனிமனித சாகசத்தை முன்வைக்கவில்லை. மாறாக அடித்தட்டு மக்கள் தமது வாழ்வாதார, இருத்தலியல் அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதாக முன்வைக்கப்படுகின்றது.

குறைந்த வளங்களைக் கொண்ட விவசாயச் சமூகம்- தாம் எதிர்கொள்ளும் அனைத்துவகைச் சவால்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில்- அரசாங்கத்தினது உதவியின்றி- தமது சொந்த முயற்சியில் தமக்கான தீர்வுகளைக் கண்டடைகின்றனர். இயற்கைக்கும் மனிதனுக்குமிடையிலான உறவையும் அந்த உறவு மனிதனின் இருத்தலியல் போராட்டமாக மாறும் தருணங்களையும் நேர்த்தியாகச் சித்தரிக்கின்ற படம் ‘The boy who harnessed the wind’. 2019 இல் வெளிவந்த பிரித்தானியத் தயாரிப்பான இந்தத் திரைப்படம், Netflixஇல் பார்க்கக் கிடைக்கிறது. இது உண்மைக் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. கதையின் நிஜ நாயகனின் பெயர் William Kamkwamba. இதே தலைப்பில் (The boy who harnessed the wind) அவர் எழுதிய தன்வரலாற்றுப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 2009இல் இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது. மத்திய ஆபிரிக்க நாடான மலாவியின் Wimbe எனப்படும் சிறிய கிராமம் கதையின் களம். வடக்கில் தன்சானியா மேற்கில் சம்பியா, தெற்கு மற்றும் கிழக்கில் மொசாம்பிக் ஆகிய நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ள நாடு
மலாவி. 18 மில்லியன் மக்கட்தொகையைக் கொண்ட ஆபிரிக்காவின் நெருக்கமான மக்கட்தொகையைக் கொண்டுள்ளது. நாட்டின் முக்கிய உணவு உற்பத்தி சோளம். இதுவே மக்களின் முதன்மையான நாளாந்த
உணவும்கூட. மழை பொய்த்துப் போய் காய்ந்து வெடித்த நிலம். விதைகளிருந்தும் விதைக்க முடியாத வரட்சி. பட்டினியை எதிர்கொள்ளும் தேசம். இந்தப் பேரிடரிலிருந்து தன் குடும்பத்தைக் காக்க ஒரு சிறுவன் கண்டடையும் அசாத்திய வழிமுறையின் வெற்றி பற்றிப் பேசுகிறன காட்சிகள். வாகனங்களின் சிதைந்த பாகங்கள் குவிக்கப்பட்டுள்ள குப்பை மேட்டிலிருந்து பொறுக்கிச் சேகரித்த இலத்திரனியல் எச்சங்கள், தகப்பனின் சைக்கிளைக் கொண்டு காற்றாலை அமைத்து மின்சாரம் உருவாக்கி நிலத்தடி நீர் பெறுகிறான். குடும்பத்தினது மட்டுமல்ல நாட்டின் பட்டினிக்கும் தீர்வு காண்கிறான். இதுதான் கதையின் மையக்கரு.

 உணவுக் களஞ்சியம் ஒன்று அவர்களின் வீட்டில் இருக்கிறது. கதையின் மையப்பாத்திரம் 13-14 வயதுடைய சிறுவன். தாய், தகப்பன், தமக்கை, கைக்குழந்தையான அவனுடைய இளைய தம்பி ஆகிய அனைத்துப்
பாத்திரங்களும் கதையில் முக்கியமான திரைப் பிரசன்னத்தைப் பெறும் பாத்திரப் படைப்புகள். குடும்ப உறவு, அதன் பிணைப்பு, முரண்பாடுகள் இயல்பாகச் சித்தரிக்கப்படுகின்றன. இயற்கையால் நிந்திக்கப்பட்ட வாழ்வு அவர்களுக்குப் புதிதல்ல. மழை பெய்யும் போது பெருமழையாகப் பொழிந்து பயிர்களை நாசமக்குவதும் வெயில் எனில் நிலம் வெடித்துப் பிழக்கும் வரட்சியும் பரவுகின்ற நிலம் அது. மற்றுமொரு
பட்டிணியும் உணவுத் தட்டுப்பாடும் அவர்களின் கதவை வலிமையாகத் தட்டுகிறது. நாளுக்கு ஒருவேளை உணவை உட்கொள்ளும் பட்சத்தில் களஞ்சியத்திலுள்ள சோளமும் அரிசியும் ஆறு மாதங்களுக்குத் தாக்குப் பிடிக்கும் என்று கணவனும் மனைவியும் நம்பிக்கையைப் பற்றிப் பிடிக்கின்றனர்.

இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் Chiwetel Ejiofor. பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்தவர். தாய் தந்தையர் நைஜீரியப் பின்னணியைக் கொண்டவர்கள். தந்தைப் பாத்திரத்தில் அவரே நடித்திருக்கின்றார். 1997இல் இவரது
20வது வயதில் Steven Spielberg இன் Amistad படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று திரைப்பட நடிகராக அறிமுகமாகினார். அப்பொழுதிலிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். இதுதான் இவர் இயக்கிய முதலாவது படம். இந்தப் படத்தை உருவாக்குகின்ற விருப்பம் தனக்கு நீண்டகாலமாக இருந்ததாகவும், அது தொடர்பாக 2010இலேயே William Kamkwambaவிடம் உரையாடியதாகவும் 2019இல்
நோர்வேஜிய ஆப்தன்போஸ்தன் இதழுக்கு வழங்கிய நேர்காணலில் Chiwetel Ejiofor பகிர்ந்திருந்தார். படப்பிடிப்பு முழுவதும் மலாவியில் இன் கிராமத்தில் நடாத்தப்பட்டுள்ளது. மலாவியில் சிறுவன் வாழ்ந்த அதே
சூழலில் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டமை அந்தக் கலாச்சாரத்திற்கு நெருக்கமாகத் தன்னை அழைத்துச் சென்றது என்கிறார் இயக்குனர். விவசாயம் சார்ந்த காட்சிகளை முடிந்தளவு உண்மைத்தன்மையோடு கொண்டு வர விரும்பியதாகவும் அதில் தான் வெற்றிபெற்றிருப்பதாக நம்புவதாகவும் அதே நேர்காணலில் பகிர்ந்துகொண்டிருந்தார்.

பாடசாலைக் கட்டணம் செலுத்துவதற்குரிய வசதி வில்லியத்தின் பெற்றோரிடம் இல்லை. பாடசாலை நிர்வாகத்தால் திரும்பத்திரும்பக் கட்டணத்திற்காகக் கண்டிக்கப்பட்டு கல்வியைத் தொடரமுடியாதபடி வெளியேற்றப்படுகிறான். கல்வி தடைப்படுகிறது. இருந்தபோதும் கற்பதிலுள்ள ஆர்வம் குறையவில்லை. இலத்திரனியல் இயங்குசக்தி தொடர்பான தேடலும் விருப்பமுமுடைய அவன் நூலகத்திற்குள் உரிய அனுமதி இல்லாமல் சென்று இலத்திரனியல் தொடர்பான புத்தகங்களைத் தேடி வாசிக்கிறான். டைனமோ எப்படி இயங்குகிறது என்பது பற்றி ஆராய்ந்து கண்டறிகிறான். ‘Using Energy’ என்ற ஒரு பாடப்புத்தகத்தை வாசித்தபோது காற்றாலை அமைத்து மின்சாரம் பிறப்பிக்கும் எண்ணம் அவனுக்குள் தோன்றுகிறது.

 முற்றிலும் தன்னார்வத்தால் கற்றுக் கொண்ட வில்லியம், ஒரு வானொலி மோட்டாரைப் பயன்படுத்தி ஒரு காற்றாலை முன்மாதிரி ஒன்றை முதலில் உருவாக்கினான். பின்னர் சைக்கிள், உழவு இயந்திரத்தின் (ரக்டர்)
சுழல்விசிறி (Tractor fan blade), பழைய shock absorber மற்றும் மரங்களைக் கொண்டு ஐந்து மீட்டர் காற்றாலையை உருவாக்கி வீட்டுக்கான மின்குழிழ்களை ஒளிரச் செய்தான். கைத்தொலைபேசிகளுக்கு சார்ச் ஏற்றினான். அடுத்த கட்டமாக காற்றாலையிலிருந்து ஒரு கார் மின்கலத்திற்கு மின் இணைப்பினை ஏற்படுத்தினான். அதனுள் மின்சாரத்தைச் சேகரித்து நீர்ப்பாசனத்திற்குரிய இயங்திரத்தை இயக்குமளவிற்கு 12 மீற்றர் உயரமான மேலுமொரு காற்றாலையை அவன் அமைத்தான். இதுவே அந்தச் சிறுவனின் விடாமுயற்சியும் கண்டடைவும். இதற்காக முதலில் அவன் தகப்பனின் சைக்கிளைத் தருமாறு கேட்கிறான். அது அந்தக் குடும்பத்தின்
போக்குவரத்துக்கும் விவசாயப் பயணங்களுக்கும் பயன்படுத்தப்படும் ஒரேயொரு சைக்கிள் அது. அவன் தனது விளையாட்டுப்பொருளை இயக்குவதற்காகக் கேட்கிறான் என்ற அளவில் எத்தனை நாட்களுக்குத் தேவை என்று முதலில் தகப்பன் வினவுகிறார். சைக்கிளின் பெடலும் அதன் உந்துதலில் சுழலும் சில்லினையும் கொண்ட பகுதியும் மட்டும் தான் தனது முயற்சிக்குத் தேவை என்கிறான். அதன் அர்த்தம் அந்தச் சைக்கிளை இரு துண்டுகளாக அறுக்க வேண்டும். கோபமும் எரிச்சலுமடையும் தகப்பன், இந்த விளையாட்டுக்கெல்லாம் சைக்கிளை நாசப்படுத்த முடியாது என்று அவன் மீது கடிந்து விழுகிறார். அவனை ஒரு கட்டத்தில் தள்ளியும் விடுகிறார். விளையாட்டுப் புத்தியைக் கைவிட்டு தோட்டத்தில் ஒத்தாசையாக பொறுப்புடன் நடக்கச் சொல்லி எச்சரிக்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் மனைவியின் கேள்விகளால் நிலைகுலைந்து, மகனின் விருப்பப்படி சைக்கிளைக் கொடுத்து மகனின் முயற்சிக்கு ஒத்துழைக்கிறார் தகப்பன். அயலவர்களும் காற்றாலை அமைப்பிற்குரிய சரீர வேலைகளில் இணைகின்றனர். இயற்கையின் சமநிலையைக் குழப்புகின்ற மனிதச் செயற்பாடுகளுக்கு எதிரான அக்கறை, விளைச்சல் பொய்த்துப் போகின்ற விவசாயியின் மனநிலை, தான் உற்பத்தி செய்யும் உணவுப்பொருளுக்கான விலையைத் தீர்மானிப்பதற்கான உரிமையிழந்த விவசாயி என்பதெல்லாம் சாதாரண பொதுமக்களின் அக்கறைக்கும் விழிப்புணர்வுக்கும் உரிய விடயமாக இன்னும் ஆகிவிடவில்லை என்பது கசப்பான உண்மை. சூழலியல் தாக்கங்கள், உலக வெப்பமயமாதல் இன்று உலகளாவிய முதன்மைப் பிரச்சினை. பெருந்தொற்று மரணங்கள், போர்கள் ஏற்படும் மானிட அழிவுகள் ஒருபக்கம் என்றால் சூழலியல் சார்ந்து எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள சவால்கள், ஆபத்துகளும் பெரியளவிலானவை. இவை ஆய்வுபூர்வமான தகவல்கள், தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை. இதனைச் சூழலியல் அறிஞர்களும் ஆய்வாளர்களும் செயற்பாட்டாளர்களும் நீண்டகாலமாக எச்சரித்து வந்துள்ளனர்.

படம் கல்வியின் முக்கியத்துவத்தைப் பேசுகின்றது. ஜனநாயகத்தின் போதமையைக் காட்சிபூர்வமாக விமர்சிக்கின்றது. பெருமுதலாளிகளின் முகவர்களுக்கும் விவசாயிகளுக்குமிடையிலான உரையாடற் காட்சியும்
தேர்தல் பிரச்சாரக் காட்சியொன்றும் நாட்டின் அரசியல் அதிகார, பொருளாதார உறவுநிலைகளையும் முரண்களையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

புகையிலைச் செய்கையும் இம்மக்களின் வருமன ஆதாரமாக இருந்துள்ளது. அவ்வுற்பத்தி தெற்கிலுள்ள பெருமுதலாளிகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் கைகளுக்குச் சென்ற நிலையில், சந்தைவாய்ப்புகளை
இழந்த அவர்கள் புகையிலை உற்பத்தியைக் கைவிட நேர்கிறது. மக்களின் உள்ளூர் உற்பத்தியைக் கபளீகரம் செய்தது மட்டுமல்லாமல் அவர்களிடமிருந்து அறாவிலைக்கு மரங்களையும் கொள்வனவு செய்கின்றனர். நிலம் மீதான பிடிமானமும் எதிர்காலம் பற்றிய பிரக்ஞையுள்ள விவசாயிகள் பெருமுதலாளிகளுக்கு மரங்களை விற்க மறுக்கின்றனர். ஏனையவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வேறுபல நிர்ப்பந்தங்களாலும் சம்மதிக்கின்றனர். அவர்களைச் சம்மதிக்கச் செய்யத் தம்மாலான பிரயத்தனங்களை முகவர்கள் செய்கின்றனர். ஒரு தொன் மரங்களுக்கான விலை 2000- Kwacha. அதன் பெறுமதி கிட்டத்தட்ட 3-4 அமெரிக்க டொலர்கள்.
மரங்களை எதற்காக கொள்வனவு செய்கின்றார்கள் என்றால், புகையிலையை அறுவடைக்குப் பின் காயவைத்துப் பதப்படுத்துவதற்கு எரிப்பதற்கான விறகுகளாகப் பயன்படுத்துவதற்கு.

 மரங்கள் என்பது மழை பெய்யச் செய்வதற்கு எத்தனை முக்கிமோ, அதேபோல் வெள்ளப்பெருக்கிற்கு எதிரான அணையாகத் தொழிற்படுவன. இம்முறை அதிக அழை பெய்தது என்பதும் காலம் தப்பிப் பெய்தது என்பதும் அவர்களுக்குத் தெரியும். வெள்ளத்தை அணைகட்டித் தடுப்பதற்கான பணம் எம்மிடம் இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும். வெள்ளத்தைத் தடுக்கமரங்கள் எமக்குத் தேவை என்பதையும் அவர்கள் அறிவார்கள். சாதாரண மக்களை அழுத்தும் அனைத்துப் பிரச்சனைகளையும் அவர்கள் நுணுக்கமாக அவதானிக்கின்றனர். அதற்கேற்றாற்போல் தமது திட்டங்களை வகுத்து எம்மிடமிருந்து அனைத்தையும் பிடுங்க நிற்கின்றார்கள்’
என்கிறார் ஊர்ப்பெரியவர். எங்களிடமுள்ள ஒரேயொரு அதிகாரம் ‘இல்லை’ என்று சொல்வதுதான். பெருமுதலாளிகளின் சுரண்டல் நோக்கிலான வற்புறுத்தல்களுக்கு ‘மறுப்புத் தெரிவித்தல்’ என்ற அர்த்தத்தில் இந்த
உரையாடல் வருகின்றது. உலகமயமாக்கலின் பொருளாதார விரிவாக்கங்களுக்கும், விரைவான உற்பத்தி முறைகளுக்கும், இலாபங்களுக்கும் அதீத முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு பொருள்முதல்வாத உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். காடுகளை அழித்து, காற்றை நஞ்சாக்கி, நிலங்களைப் பாழாக்கி, குளங்களையும் கடல்களையும் தேசமாக்கி, மிருகங்களின் வாழ்விடங்களைக் கபளீகரம் செய்திருக்கிறோம். இயற்கைக்கும் சூழலியலுக்கும் எதிரான மனித செயற்பாடுகள்தான்; இன்றைய உலகளாவிய நெருக்கடிகளுக்கான முக்கிய காரணிகளாக உள்ளன. எனவே இனி சூற்றுச்சூழலைத் தவிர்த்துவிட்டு பொருளாதாரத்தைப் பற்றிப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசமுடியாது என்பது யதார்த்தம்.

 இன்றைய நெருக்கடி அத்தகைய மாற்றம் நோக்கிய சிந்தனைக்கு வழிகோல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக சிந்தனையாளர்கள், சூழலியல் அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள், அக்கறையாளர்கள் மத்தியில் உள்ளன. இந்தப்படம் சொல்லுகின்ற கதை சிறுவனின் ஓர்மமும் நம்பிக்கையும் செயல்முனைப்பும் என்பதைத் தாண்டி சூழலியல் சிக்கல்கள், விளைவுகள் பற்றிச் சிந்திக்கத் தூண்டுகிறது. வில்லியம் காற்றாலை அமைத்து, அதன் மூலம் தண்ணீர் இறைக்கும் இயந்திரத்திற்கான மின்சாரத்தைப் பெறுவதோடு கதை முடிகிறது. அதன் பின் அவன் உலகம் முழுதும் அறியப்பட்ட நபராக ஆகியமை, மலாவியின் பல்வேறு பாகங்களில் காற்றாலை அமைத்தமை, தன்-வரலாற்று நூல் எழுதியமை, உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் ஆரம்பநிலை மாணவர்களுக்கான பாடநூல்களில் ஒன்றாக அந்நூல் இணைக்கப்பட்டுள்ளமை என நிஜ வில்லியத்தின் கதை அறியப்பட்டுள்ளது. காற்றாலை அமைக்கும் திட்டம் உலகளாவிய கவனம் அவர் மீது திரும்புவதற்கு காரணமாக அமைந்தமையும் அதன் பின்னான அவருடைய வளர்ச்சி சார்ந்த காட்சிகள் படத்தில் உள்ளடக்கப்படவில்லை. கலைப் படைப்பாக இந்தத் திரைப்படம் தொடங்கிய இடமும் நிறைவுபெற்ற இடமும் முக்கியமானவை. இன்று அந்த இளைஞனுக்கு 32 வயது. New Hampshire பல்கலைக் கழகத்தில் இலத்திரனியல்
துறையில் இளநிலைக் கல்வியை முடித்திருக்கிறார். நிஜத்தில் வில்லியம் தனது குடும்ப உறவுகள் மற்றும் அயலவர்களுக்கான சுத்தமான குடிநீர், மலேரியா தடுப்பு, சூரிய ஒளி, காற்றாலையிலிருந்து மின்சாரம், நீர்ப்பாசனம் போன்ற திட்டங்களில் பங்கேற்றிருக்கிறான்.. அதுவே TED Talk நிகழ்ச்சியில் அவர் உரையாற்றவும் வழிகோலியது.

 TED -Technology, Entertainment, Design என்பதன் சுருக்கம். கல்வி, தொழிற்துறை, அறிவியல், கலை, படைப்பாக்கம், தொழில்நுட்பமென அனைத்துத் துறைகளிலும் முன்மாதிரியாக விளங்கும் ஆளுமைகளின் தன்-வரலாற்று உரைகள் இந்நிகழ்வு மூலம் வெளிக்கொணரப்படும். இன்றைய நாட்களில் William Kamkwamba, மனித மேம்பாட்டினை மையப்படுத்திய திட்டங்களில் அக்கறை கொண்டவராக செயற்படுவதாக அறிய முடிகிறது. "அறிதலுக்கும்" "செயற்பாட்டுக்கும்" இடையேயான இடைவெளியைக் குறைக்கின்ற வகையில் மக்களைச் சிந்திக்கவைக்கக்கூடிய பொருத்தமான தொழில்நுட்ப பாடத்திட்டத்தை உருவாக்கும் பணியில் றுனைநசநேவ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மலாவியில் ஒரு கல்வி நிறுவனம் ஒன்றினை நிறுவும் திட்டம் அவரிடம் உள்ளது. ஒன்றே முக்கால் மணி நேர நீளமுடைய இந்தப் படம், மிக இயல்பாகவும் நெருக்கமாகவும் பார்ப்பவரை தன்வசப்படுத்துகிறது. அதிரடியான காட்சிகளில்லை. கதையின் போக்குக் கோருகின்ற அளவு எதுவோ, அதற்குத் தகுந்த நிதானமான காட்சிகள். நிலத்தோடு பார்வையாளர்களை ஒன்றச்செய்கின்ற காட்சியமைப்புகளைக் கொண்ட திரைப்படங்கள் தருகின்ற அனுபவம் அலாதியானது. அறிமுகமில்லாத, நேரடிப் பரிட்சயமில்லாத நிலமெனினும் அதற்குள் பார்வையாளனை உள்வாங்கி அழைத்துச் செல்கின்ற காட்சியப்படுத்தலும், நிலவியல் அமைப்பினையும், மக்களின் வாழ்வினையும் உணரச்செய்கின்ற கமராச் சட்டகங்களும் கலைத்துவ அழகியலுடன்
படமாக்கப்பட்டுள்ளன.


படம் தனிமனித சாகசத்தை முன்வைக்கவில்லை. மாறாக அடித்தட்டு மக்கள் தமது வாழ்வாதார, இருத்தலியல் அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதாக முன்வைக்கப்படுகின்றது. சிறுவனின் நம்பிக்கையைப் பற்றியது படம் . குறைந்த வளங்களைக் கொண்ட விவசாயச் சமூகம்- தாம் எதிர்கொள்ளும் அனைத்துவகைச் சவால்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில்- அரசாங்கத்தினது உதவியின்றித்- தமது சொந்த முயற்சியில் தமக்கான தீர்வுகளைக் கண்டடைகின்றனர்.

கட்டுரைகள்

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் அறிமுகம் 21 ஆம் நூற்றாண்டின் சகாப்தம் பெரும்பாலும் ஒரு தொழில்நுட்ப சகாப்தமாககருதப்படுகிறது. தொழில்நுட்பம், இன்று மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.எங்கள்...

 சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் "பனிப்போர் காலம் முடிவடைந்தது உலகம் ஒரு ஒழுங்கில் அமெரிக்கா தலைமையில் பயணிக்க ஆரம்பிக்கின்றது. இந்த ஏகாதிபத்தியம் தனக்கு விசுவாசம் உள்ள கல்விமுறையினை...

வாழ்க்கைமுறை

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம்...

சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

ரதிகலா புவனேந்திரன்நுண்கலைத்துறைகிழக்குப் பல்கலைகழகம்.   வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள்...

குருந்தூர் மலையில் கிடைத்திருப்பதுஎண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாராலிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர்கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன்...

உளவியல்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும்...

- கி.புண்ணியமூர்த்தி- பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click