99389ஆனந்தமயில் நித்திலவர்ணன்

சிரேஸ்ட விரிவுரையாளர்,
கல்வியியல் துறை,
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.

கோவிட் -19 இடர்காலத்தில் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லல்
தொடர்ச்சியான ஊர்முடக்கத்தினால் நாம் அனைவரும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். தொற்றுபரவல் அதிகரித்து செல்கிறது. அண்மித்து வருகிறது. இறப்புக்கள் அதிகமாக பதிவாகின்றன. தொடர் ஊர்முடக்கத்தால் பலர் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில், எம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளை எமது பிள்ளைகளின் கல்விக்கு உதவுவதும் எமது அனைவரதும் கடமையாகும். இதில் பெற்றோர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.

 

இந்த இடர்காலத்தில் கற்றல் - கற்பித்தலை மேற்கொள்வது தொடர்பாக சாதகமாகவும் பாதகமாகவும் பல வாதப் பிரதிவாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. அவரவர் தரப்பில் முன்வைக்கப்படும் காரணங்களும் நியாயமானவை. இருந்த போதிலும், கால வரையறையற்று நீண்டு செல்லும் இந்தப் பேரிடர் காலம் முழுவதும் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளை முற்றாக நிறுத்தி வைக்க முடியாது. அவ்வாறு நிறுத்தி வைத்தால், மீண்டும் மீட்டெடுக்க அதிக பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கும்.

கணிசமான பாடசாலைகள் தமது மாணவர்களுக்கான கற்றலை இயன்றவரை முன்னெடுக்க முயற்சி செய்கின்றன. ஏனைய பாடசாலை மாணவர்களின் கற்றலுக்கும் உதவிபுரிகின்றன. ஆனால் சிலர் தொடர்ச்சியாக, இவ்வாறான கற்றல் -கற்பித்தல் செயற்பாடுகளை விமர்சனம் செய்துகொண்டு,  தமது மாணவர்களின் கற்றலுக்கு எதுவும் செய்யாது இருக்கின்றமை, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது.

கோவிட் -19 அலை 1, 2, 3 ஆல்,  கல்வியில் நாம் இழந்து கொண்டிருப்பவை......

அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர முடிவுகளின்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்சராசரியாக 10 சதவீதமான மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர். இதற்கான பிரதான காரணம் கோவிட் - 19 முதலாம் அலையின் போது, எமது கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் போதியதாக அமையாதமையாகும். கோவிட் -19 அலை 1,2,3 ஆல், கல்வியில் நாம் பலவற்றை இழந்து கொண்டிருக்கின்றோம்.

 

  • ஆரம்பபிள்ளைக் கல்வி ( Early Childhood Education) மற்றும் ஆரம்பக் கல்வி ( Primary Eduction) மாணவர்களின் படிமுறையான எழுத்து மற்றும் வாசிப்பு திறன்கள் குறைவடைந்து
    செல்கின்றது.
  •  மாணவர்களின் கணிதத் திறன்கள் (Mathematical Skills)) குறைவடைந்து செல்கின்றன.
  • மாணவர்களின் ஒழுக்கம் வீழ்ச்சிக்கு உட்படுகிறது.
  • மாணவர்களின் கற்றல் திறன்கள் (Learning Skills) குறைவடைந்து கொண்டு செல்கின்றன.
  •  மாணவர்களின்ரூபவ் நீண்டநேரம் பாடசாலைகளில் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து கற்கும் ஆற்றல் குறைவடைந்து கொண்டு செல்கிறது.
  •  பரீட்சைகளில் மாணவர்களின் அடைவு மட்டம் குறைவடைந்து கொண்டு செல்கிறது.
  • மாணவர்களின் சமூகத்திறன்கள் (Social Skills) வீழ்ச்சி அடைந்தது செல்கிறது.
  • இணைப்பாடவிதான செயற்பாடுகலில் ஈடுபடாமையால்.  உடல் மற்றும்.  உள பதிப்புகள் ஏற்படுகிறது.

 

இடர்காலத்தில் கற்றலுக்கு வாய்ப்பான காரணிகள் (Opportunities) 

கோவிட் -19 அலை 1, 2 ஐ விட தற்பொழுது நிகழ்நிலை வளங்கள் (online resources) அதிகமாக
கிடைக்கிறது. இலவச சூம் (Zoom) வகுப்புக்கள் நடைபெறுகின்றன. கட்டணம் செலுத்தி கற்ககூடிய சூம் வகுப்புகள் நடைபெறுகின்றன. கற்றலுக்கான வீடியோ பதிவுகள் உள்ளன. தொலைக்காட்சி கல்வி ஒளிபரப்புகள் உள்ளன. எல்லா தரங்களுக்கும்,  சகல அலகுகளுக்குமான செயலட்டைகள் மற்றும் வினாத்தாள்கள் மென்பிரதிகளாக மற்றும் வன்பிரதிகளாக உள்ளன.

பாடசாலைகளை இணையவழியில் நடாத்திச் செல்லல் (Online School)

கடந்த காலங்களில் பல இடர்களின் மத்தியிலும் நாம் எமது கல்வியை தக்க வைத்திருக்கிறோம். இந்தப் பேரிடர் மத்தியில் எமது பிள்ளைகளின் கல்வியை முற்றிலும் கைவிட்டு இருக்க முடியாது. இந்த இடர்காலத்தில், கிராமப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஏற்ற வகையில் கல்வி வழங்கும் வழிமுறைகளை கையாள  வேண்டும். ஒவ்வொரு பாடசாலையும் தன்னால் இயலுமானதை செய்ய வேண்டும். பாடசாலைகளை,  இணையவழியில் (Online School) நடத்திச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,
மாணவர்கள் மற்றும் பெற்றோர் தயாராக வேண்டும்.


   1. வழமையாக காலை 7.30 மணி தொடக்கம் நண்பகல் 1.30 மணி வரை 6 மணித்தியாலங்கள் பாடசாலைகள் நடைபெறும். இந்த கோவிட் -19 இடர்காலத்தில் மாணவர்களை தினமும் குறைந்தபட்சம் 2 மணித்தியாலங்கள் ஏனும் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தி வைத்திருக்க (Engagement) பெற்றோரும் பாடசாலைகளும் முயற்சி செய்ய வேண்டும்.

2, வாரத்திற்கு ஒரு தடவையேனும் தமது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு சூம் ஊடாக, இடர்கால கற்றல் மற்றும் மாணவர் உடல், உளநலம் தொடர்பாக வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

3.அழகியல், யோகா மற்றும் ஆன்மீக செயற்பாடுகளை சூம் ஊடாக முன்னெடுத்துச் செல்லலாம்.

4,  கணிதப்புதிர் போட்டிகள்ரூபவ் ஓவியப் போட்டிகள்ரூபவ் மொழித்திறன் போட்டிகளை சூம் ஊடாக நடத்தலாம்.

  இடர்காலத்தில் பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர் வகிபாகம்

பெற்றோர் பூரணமாக ஒத்துழைப்பு வழங்கினால் இந்தச் சமகால சவாலை எதிர்கொண்டு மீளலாம். பிள்ளைகளின் அளவுக்கு அதிகமான நித்திரை மற்றும் போசணை முறை காரணமாக ஏற்படும் பதிப்புகளை தவிர்க்க பெற்றோரும் பிள்ளைகளுக்கு வழிகாட்ட வேண்டும். பெற்றோர் வழிகாட்டலுடன்,  கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை உச்ச அளவில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். மாணவர்களின் பாடநூல்கள் சிறந்த கற்றல் துணைகள். அவற்றை உச்ச அளவில் ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தலாம்.

கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்

இந்த இடர்காலத்தில்,  கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்தும் கடப்பாடு எம் அனைவருக்கும் உள்ளது. இதில் கல்வி அதிகாரிகள்,  பாடசாலை அதிபர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் சமூகம் கூடிய அக்கறை எடுக்க வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர் உறவுகள் தமது கிராம மாணவர்களின் கல்விக்கு, இச்சந்தர்ப்பத்தில் அதிகளவில் உதவ வேண்டும் என வினயமாக கேட்டுக் கொள்கிறேன்.
பின்வரும் சவால்கள் வெற்றி கொள்ளப்பட வேண்டும்.


1.  பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்ட பிள்ளைக்கும் கல்வியில் சமவாய்ப்பு உறுதிப்படுத்தப்பட
வேண்டும்.

2. கிராமப்புற மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் கற்பித்தலில் ஈர்ப்பதற்கான வழிவகைகளை கண்டறிய வேண்டும்.

3. இணைய இணைப்பு வலிமை குன்றிய பிரதேசங்களில் ரூபவ் இணைய இணைப்பு வலுப்படுத்த வேண்டும்.

மாற்ற முகவர்களின் வகிபாகம் (Role of Change Agents)

இந்த கல்விக்கான போராட்டத்தில்,ஆசிரியர்கள்தான் முன்களப் பணியாளர்கள். அவர்கள் மதிக்கப்பட வேண்டும். அவர்களது உடல் மற்றும் உள ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும். கல்வி அதிகாரிகளும் பாடசாலை அதிபர்களும் வழிகாட்ட வேண்டும். ஊக்கப்படுத்த வேண்டும். சில வகுப்புக்களை பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிபர்கள் முன்மாதிரியாக,எடுத்துக்காட்ட வேண்டும். அப்போது, ஆசிரியர்கள்ரூபவ் மாணவர்கள் மற்றும் பெற்றோர் தாமாக முன்வந்து செயல்படுவார்கள். இணையவழிக் கற்றல் - கற்பித்தலை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லல் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு முறையான வழிகாட்டல் மற்றும் பயிற்சி வழங்க வேண்டும்.


 வடக்கு மாகாண கல்வித்திணைக்களம் தற்போது நடாத்திக்கொண்டிருக்கின்ற நிலையறி பரீட்சை

வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் தற்போது நடாத்திக்கொண்டிருக்கின்ற நிலையறி பரீட்சை (Diagnostic Test) காலத்தே பெய்த மழையைப் போன்றதாகவே எனக்கு தோன்றுகிறது. பல்வேறு சவால்கள் மத்தியிலும் இப்பரீட்சை நடைபெறுவது பராட்டுக்குரியது. அனைவரும் இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பூரணமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கோவிட் -19 பெருந்தொற்றின் பின்னரான கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளின் வினைத்திறனை கண்டறிய இப்பரீட்சை உதவும்.
மேலும், மாணவர்களின் கற்றல் அடைவின் தற்போதைய நிலையை கண்டறிவதற்கும் இது உதவிபுரியும். ஆசிரியர்கள் பரிகார கற்பித்தலை (Remedial Teaching) திட்டமிட உதவும். விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு மீள ஒப்படைக்கப்பட வேண்டும். புள்ளிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுரூபவ் எதிர்கால கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் திட்டமிடப்பட வேண்டும். இந்தப் பரீட்சை மூலம் வடக்கு மாகாண மாணவர்கள்,மட்டுமல்லாது, இலங்கையின் அனைத்து மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களும் பயன் பெறுகிறார்கள். இந்த பரீட்சையை
நடத்துகின்ற வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கும் ஒத்துழைப்பு வழங்குகின்ற அனைவருக்கும் நன்றிகள்.


முடிவுரை
முன்னெப்போதும் இல்லாத தொடர் ஊர்முடக்கத்தால் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பலவிதமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த இடர்காலத்தில் எம்மால் முடிந்தளவு, எங்கள் பிள்ளைகளின் கல்விக்கு உதவுவோம். கோவிட் -19 இலிருந்து எம்மையும் சமூகத்தையும் பாதுகாப்பதுடன்ரூபவ் எமது பிள்ளைகளின் கல்வியையும் தக்கவைத்துக் கொள்வோம். இந்த ஊர்முடக்கத்தால் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கும் அனைவரும் உடல்
மற்றும் உள ஆரோக்கியம் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

கட்டுரைகள்

{youTube}/HvhurorfkeA{/youtube} உலகளாவிய மாற்று சிந்தனை கல்வி முறைகள் எவ்வாறு உள்ளன? எனும் கேள்விக்கு பதிலளித்தார் சமூக ஆய்வாளரும், ஆசிரியம் இதழின் பிரதம ஆசிரியருமான தெ. மதுசூதனன்.

{youTube}/8qHc2Osvtpk{/youtube} - தெ. மதுசூதனன்.- இலங்கையில் ஆசிரிய சேவையிலும் பார்க்க கல்வி நிர்வாக சேவை உயர்வானதாக கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்களவு ஆசிரியர்களின் இலக்கு நிர்வாக...

கலாநிதி அதிரதன் கல்வியியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் கீழை நாடுகளில் வேரூன்றியுள்ள ஆணாதிக்கச் சிந்தனையும் அதன் புறவிசைகளும் பெண்கல்வி தொடர்பாக எதிர்மறைச் சிந்தனைகளை கட்டுமானம் செய்வதுடன்...

உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வது மூளைதான். தேவையான சத்துணவு, தேவையான அளவு கிடைக்காதபோது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.

ஞாபக சக்தி அதிகமாக இருக்க வேண்டும் என்றால் , அது அந்த தாயோட கையில தான் இருக்கு. சின்ன வயசுலேயே நம்ம குழந்தைகளுக்கு எந்த விஷயத்தையும் நல்லா மனசுல பதியுற மாதிரி சொல்லிக் கொடுத்தா, அதை அவங்க...

file:///C:/Users/Bruger/Downloads/pgde-reflection-final%20(1).pdf

Brain-wavesபொதுவாக உடலைக் கட்டுக்கோப்புடன், தகுதியாக வைத்துக் கொள்ள, உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் மனதைக் கட்டுக்கோப்புடன் தகுதியாக வைத்துக் கொள்ள என்ன செய்வது? தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும்...

வெற்றி என்னும் சாத்தியம் இருக்கையில், ஏன் சிலர் தோல்வியை எப்போதும் தேர்ந்தெடுக்கிறார்கள்? நீங்கள் மேற்கொள்ளும் தேர்வுகளிலிருந்தே துன்பத்திலிருந்து சவுகரியத்துக்கு நகர்கிறீர்கள்.

வாழ்க்கைமுறை

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம்...

சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

-ரூபன் சிவராஜா- படம் தனிமனித சாகசத்தை முன்வைக்கவில்லை. மாறாக அடித்தட்டு மக்கள் தமது வாழ்வாதார, இருத்தலியல் அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதாக முன்வைக்கப்படுகின்றது....

சினிமா

நடிகர் விவேக் மறைவு பலராலும் சோகத்துடன் எண்ணிப் பார்க்கப்படுகிறது. ''ஒரு நடிகன் நடிப்பைத் தாண்டி தன்னை ஆளாக்கிய சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் அதை செய்தவர் விவேக்'' என்ற கமலின் வார்த்தைகள்...

சினிமா

 சினிமா இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு மனித நாகரிகத்திற்கு விஞ்ஞானமும் கலையும் இணைந்தளித்த கொடை. உலக வரலாற்றில், மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்தாக இருந்து சிறப்பு பெற்றது. தமிழ்க்...

சினிமா

கர்ணன், 'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாவது படைப்பாக வெளியாகியுள்ள திரைப்படம். இப்படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க, ராஜீஷா விஜயன், யோகி பாபு,...

ஆன்மீகம்

ரதிகலா புவனேந்திரன்நுண்கலைத்துறைகிழக்குப் பல்கலைகழகம்.   வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள்...

குருந்தூர் மலையில் கிடைத்திருப்பதுஎண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாராலிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர்கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன்...

உளவியல்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும்...

- கி.புண்ணியமூர்த்தி- பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

 {youTube}/BZtEAoShpDQ{/youtube} 01. தோல்வியின் அடையாளம் தயக்கம்! வெற்றியின் அடையாளம் துணிச்சல்!துணிந்தவர் தோற்றதில்லை!!தயங்கியவர் வென்றதில்லை!!

 {youTube}/H7RVRGVWkqM{/youtube} 1. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால்வலிமை படைத்தவன் ஆவாய்!  02. மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி...

X

Right Click

No right click