Skærmbillede 1337கலாநிதி அதிரதன்
கல்வியியல் துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

கீழை நாடுகளில் வேரூன்றியுள்ள ஆணாதிக்கச் சிந்தனையும் அதன் புறவிசைகளும் பெண்கல்வி தொடர்பாக எதிர்மறைச் சிந்தனைகளை கட்டுமானம் செய்வதுடன் கீழைத்தேச நாடுகள் தொடர்ந்தும் குறைவிருத்தி நாடுகளாக காண்படுகின்றன. எனவே பெண் கல்வியின் முக்கியத்தவத்தை உணராத வரை அதற்கான முக்கியத்துவத்தை வழங்காதவரை அவை அபிவிருத்தி அடையாத அல்லது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பட்டியலிலேயே மீண்டும் மீண்டும் நிடிக்கப்போகின்றன என்பதே உண்மையாகும்.

அறிமுகம்

அபிவிருத்தி பற்றிய கருத்தாடல்களில் இன்று பால்நிலை சமத்துவம், பெண்கல்வி, மற்றும் பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பு போன்றன தொடர்பிலும் அவற்றின் முக்கியத்துவம் தொடர்பிலும் மிகையான கவனக்குவிப்புச் செய்யப்படுகிறது. குடும்பமட்டத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்குப் பெண்கள் கல்வியைப் பெறுவது மிவும் அவசியமானது என்று பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. பெண் பிள்ளைளகள் கல்வியைப் பெறும்போது தனியே அறிவை மட்டும் பெறுவதில்லை. அது அவர்களுக்கு வாழ்கைக்கான சக்தியையும் விழிப்புணர்வையும் பெற்றுக் கொடுக்கின்றது. அதன் மூலமான அனுகூலங்கள் வாழ்க்கை முழுவதும் பெற்றுக் கொள்ளப்படுகிறது. பெண்கல்வியானது பின்வரும் மூன்று தளங்களில் முக்கியத்துவமுடையதாக நோக்கப்படுகிறது.

(1) மனித உரிமைகள்

(2) மனித வள விருத்தி

(3) மனித ஆற்றல் விருத்தி அணுகுமுறை (Robeyns, 2006; Tikly & Barett, 2011).

மகாத்மா காந்தியின் கல்விச் சிந்தனைகளில் பெண் கல்வியானது தனித்துவம் மிக்கதாகக் காட்டப்பட்டுள்ளது. அவரது பிரதான சிந்தனை ஒரு ஆண் கல்வியைப் பெற்றார் அது அவனுக்கு மட்டுமே அனுகூலம் மிக்கதாக அமையும் என்றும் ஆனால் ஒரு பெண் கல்வியைப் பெறுபோது அது அப் பெண் சார்ந்துள்ள கிராமத்துக்கு கிடைக்கப்பெற்ற கல்வியாக அமைகிறது என்று பெண்கல்வியின் தேைையயும் முக்கியத்துவத்தையும் தெளிவாக முன்வைத்துள்ளார். கீழை நாடுகளில் வேரூன்றியுள்ள ஆணாதிக்கச் சிந்தனையும் அதன் புறவிசைகளும் பெண்கல்வி தொடர்பாக எதிர்மறைச் சிந்தனைகளை கட்டுமானம் செய்வதுடன் கீழைத்தேச நாடுகள் தொடர்ந்தும் குறைவிருத்தி நாடுகளாக காண்படுகின்றன. எனவே பெண் கல்வியின் முக்கியத்தவத்தை உணராத வரை அதற்கான முக்கியத்துவத்தை வழங்காதவரை அவை அபிவிருத்தி அடையாத அல்லது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பட்டியலிலேயே மீண்டும் மீண்டும் நிடிக்கப்போகின்றன என்பதே உண்மையாகும்.

பெண் பிள்ளைகளின் கல்வி நிலை இளம் பெண்பிள்ளைகள் கல்வியை பெற்றுக் கொள்வதன் காரணமாக கடந்த சில தசாப்த காலத்தில் சமூகங்களில் சாதகமான மாற்றங்களை உணரமுடிகிறது. இருந்த போதிலும் உலகளாவிய ரீதியில் 6 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 130 மில்லியன் பெண்பிள்ளைகள் பாடசாலைக் கல்வி செயன்முறைக்குள் உள்வராமல் காணப்படுகின்றனர் (UNESCO, 2014). அதே போன்று 31 மில்லியன் ஆரம்ப வகுப்புப் பராயத்தையுடைய பெண் பிள்ளைகள் ஆரம்பப் பாடசாலைக் கல்வியை பெற்றுக்கொள்வதில்லை. உலக அளவில் எழுத்தறிவற்றவர்களின் எண்ணிக்கை 774 மில்லியனாக காணப்படவதுடன் அவர்களில் மூன்றில் இருவர் பெண்களாவர். உலகளாவிய நிலையில் கணிப்பிடப்பட்டுள்ள 163 மில்லியன் எழுத்தறிவற்றவர்களில் ஏறத்தாள 63% மானவர்கள் பெண்களாவர். ஐக்கிய நாடுகள் சபையின் 2012 ம் ஆண்டு அறிக்கையின்படி தாழ் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழும் 28.5 Million பிள்ளைகளில் 95 சதவீதமானவர்கள் ஆரம்பக் கல்வியைப் பெற்றிருக்கவில்லை என்றும் இவர்களில் சுமார் 55 சதவீதமானவர்கள் பெண்பிள்ளைகளாவர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

பெண்பிள்ளைகளுக்கான கல்வியின் முக்கியத்துவம்

பெண் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்வியானது ஆண்பிள்ளைகளுக்கான கல்வியைப்போன்று ஒற்றைப்பரிமாணம் கொண்டதல்ல. பெண் பிள்ளைகளின் கல்வியின் சமூகப் பயனானது ஆண்களின் கல்வியின் சமூகப்பயனைவிட பன்மடங்கு அதிகமானது. தற்காலத்தில் பெண்பிள்ளைகள் கல்வியைப் பெறுவதானது எதிர் காலத்தில் சனத்தொகை வளர்ச்சிப் போக்கு மற்றும் சிசு மரண வீதத்தில் ஆரோக்கியமான நிலையை உருவாக்கும். யுனெஸ்கோவினது தகவல்களின்படி வளர்முக நாடுகளில் உள்ள பெண் பிள்ளைகள் அனைவரும் ஆரம்பக் கல்வியை பூர்த்தி செய்தால் சிசு மரண வீதத்தை 6 சதவீதத்தால் குறைக்கமுடியும் என்றும் வருடாந்தம் 10 இல்சம் உயிர்களை பாதுகாக்க முடியுமென்பதுடன் தாய்மார் இறப்பு வீதத்தையும் மூன்றில் இரண்டாகக் குறைக்க முடியும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Awan (1987) என்பவர் தாய்மாரது பொதுக் கல்விமட்டம் அதிகரித்ததன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் சிசு மரணவிதம் அரைவாசியாகக் குறைந்துள்ளது என்றும் 40 இலட்சம் குழந்தைகள் அவர்களது தாய்மார் கல்வியைக் கற்றதன் பயனாக தற்போது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

அதே போல உலகெங்கிலுமுள்ள பெண்கள் இடைநிலைக் கல்வியைப் பூர்த்தி செய்தால் சிசுமரணவீதம் அரைவாசியாகக் குறைவடையும் என்றும் இதன்மூலம் 30 இலட்சம் உயிர்களைக் காப்பாற்றவும் முடியும் என்றும் மந்த போசணை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து 12 மில்லியன் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும் என்றும் யுனெஸ்கோ ஆதாரப்படுத்தியுள்ளது. பெண்கள் கல்வியறிவைப் பெறும்போது ஏற்படக்கூடிய இன்னுமொரு சாதகமான விடயம் இளவயதுத் திருமணங்கள் குறைவடைகின்றமையாகும். வருடாந்தம் 15 மில்லியன் பெண்பிள்ளைகள் வளர்பராயத்தை அடைய முன்னரே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்

கல்வியறிவின்மையானது பெண்கள் கடத்தப்படுதல், துஸ்பிரயோகத்துக்கு உள்ளாதல், விபச்சார நடவடிக்ககைளுக்குப் பயன்படுத்தப்படல் உள்ளிட்ட வன்நடத்தைகளுக்கு உள்ளாகுவதற்கான ஏதுநிலைகளைத் தோற்றுவிக்கின்றன என்று மனிதக் கடத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் இன்டர் ஏஜென்சித் திட்டம் சுட்டிக்காட்டுகிறது. பெண்களுக்குக் கல்வியை வழங்குவதன் மூலமே ஆட்கடத்தல் மற்றும் பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களில் இருந்து பெண்களைக் காப்பாற்ற முடியும் என்று அது நம்புகிறது. ஐந்து வயதினைக் கடந்து உயிர்வாழ்தலில் கல்வியறிவற்ற தாய்மாரின் குழந்தைகளை விட கல்வியறிவுடைய தாய்மாரின் குழந்தைகள் இரண்டு மடங்கான வாய்ப்புக்களைக் கொண்டுள்ளனர். குறிப்பாக பெண்களின் கல்வியறிவு குறைவான புருண்டியில் ஆண்டுக்கு அண்ணளவாக 16,000 குழந்தைகள் இறக்கின்றனர். பாதுகாப்பான பாலியல் நடத்தைகளைப் பின்பற்றுவதற்கு பெண்கள் கல்வியறிவு பெறுவது அவசியமானதாகும். கல்வியறிவற்ற பெண்களைவிட ஆரம்பக் கல்வியை நிறைவு செய்த பெண்களிடையே HIV உள்ளிட்ட பாலியல் தொற்று நோய்களுக்கு உள்ளாகுவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு குறைவாகக் காணப்படுகிறது என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன இத்தகைய முடிவுகளை ஆதாரமாகக் காட்டும் உலக வங்கி, எயிட்ஸ் உள்ளிட்ட பாலியல் தொற்று நோய்களிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான சக்திமிக்க கருவியாகக் கல்வியை முன்னிலைப்படுத்துகின்றது.

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் புள்ளிவிபரங்களின்படி குறைவிருத்தி நாடுகளில் ஒவ்வொரு மூன்று சிறுமிகளுக்கு ஒருவர் 18 வயதை அடைவதற்கு முன்னராக திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என்றும் பெண்கள் ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட வருட காலக் கல்வியைப் பெற்றுக்கொள்ளும் நாடுகளில் திருமண வயது குறைந்தபட்சம் நான்கு வருடங்களால் பின் தள்ளப்படுகின்றது என்றும் அது சுட்டிக்காட்டுகிறது. குடும்பத்தின் பருமனை நிர்ணயம் செய்வதில் பெண்களின் கல்வி மட்டம் கணிசமான செல்வாக்கினைச் செலுத்துகின்றது. பாடசாலைக் கல்வியில் பங்கேற்கும் கால அளவு அதிகரிக்கும் போது பெண்களின் திருமன வயதெல்லை பின் தள்ளப்படுகிறது இதனால் இளவயதுக் கர்ப்பங்கள் குறைவடைகிறன. இது தாய்மார் மற்றும் குழந்தைகள் இறப்பு வீதத்தினை குறைவடையச் செய்கின்றது. மாலியில் இடைநிலைக் கல்வி அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித்தரத்தைக் கொண்ட பெண்கள் சராசரியாக மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ள அதே நேரம் கல்வி கற்காத அவர்களின் சகபாடிப் பெண்கள் சராசரியாக ஏழு குழந்தைகளைப் பெற்றுள்ளனர். குடும்பத்தின் பருமன் அதிகரிக்க அதிகரிக்க ஆளொருவருக்காக செலவிடக்கூடிய தொகை படிப்படியாகக் குறைவடையும். இது தனியாட்களின் தனியாள் ஆரோக்கியம், போசாக்கு, சுகாதார மருத்துவ சேவையின் தரம் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் பங்குபற்றும் கால அளவு போன்றவற்றைக் குறைவடையச் செய்யும். இன்னொரு புறமாக குடும்பத்திலுள்ள ஆட்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க குடும்பத்தின் சேமிப்புக் குறைவடையும் இது குடும்ப மட்ட முதலீடட்டின் அளவைப் பாதித்து குடும்ப வருமனத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் இவ்வாறாக இது ஒரு நச்சு வட்டமாகச் செயற்படும் நிலை உருவாகும்.

 

சமூக மயமாக்கலும் பெண்களின் கல்வி நிலையும்

குழந்தைகளின் சமூகமயமாக்கலில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. வகிபாகங்களைக் கையளிப்பதிலும் கலாசாரம் பண்பாடுகளைக் கற்றுக் கொடுப்பதிலும் தாய் எனும் வகிபாகம் தவர்க்கமுடியாத இடத்தைப் பெறுகிறது. மார்க்கஸ் (2007) என்பார் தொழிற் தொழிற் சந்தையில் ஆண்கள் வலுவாக இணைக்கப்பட்டிருப்பதனால் குழந்தைகளைச் சமூகமயமாக்கும் பொறுப்பு தாய்மாருடையதாக அமைகிறது என்றும் குழந்தைகளின் ஆழுமை விருத்தியில் தந்தையின் கல்வியினைவிட தாயின் கல்வியடைவே கணிசமான செல்வாக்குச் செலுத்துகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

எனவே குழந்தைகளைச் சமூகமயமாக்கும் போது அவர்களை அறிவியல் கண்ணோட்டத்தோடு சமூகமயப்படுத்தவதில் கற்ற தாய்மார் மிகச் சிறந்த வகிபாகத்தை ஏற்கின்றனர். அதனால் ஆய்வாளர்கள் பலரும் பெண் கல்வி ஊக்குவிக்கப்படல் வேண்டும் என்பதனை அழுத்தி வலியுறுத்துகின்றனர். பெண்கல்விக்கான வாய்புக்கள் விரிவுப்படுத்தப்பல் வேண்டும் என்றும் பெண் கல்வி தொடர்பில் சமூகங்களில் இருக்கக்கூடிய எதிர்மறைச் சிந்தனைகள் தகர்ப்புக்குள்ளக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

கற்ற தாய்மாருடைய பிள்ளைகள் முன்பிள்ளைப் பருவ காலத்தில் பிரச்சினைகளைத் திர்த்தலில் சிறப்பாகச் செயற்படுவது கண்டறியப்பட்டுள்ளது (Luckner, Amy மற்றும் Egeland, 2004). உயர்ந்த இலக்குகளைத் தீர்மானித்தல் உயர் அடைவுகளுக்கு இட்டுச் செல்வதுடன் ஆரம்ப பருவங்களில் மாணவர்கள் உயர்ந்த நோக்கங்களை அமைத்துக் கொள்வதில் தாய்மாரின் கல்வி மட்டம் செல்வாக்குச் செலுத்துகிறது. கல்வியறிவு குறைந்த தாய்மாரை விட கற்ற தாய்மார் தங்கள் பிள்ளைகளுக்கான கற்றல் செயற்பாடுகளை நன்கு திட்டமிட்டு வடிவமைக்கின்றனர்.

 

தாய்மாரின் கல்வி மட்டமும் பிள்ளைகளின் கல்வியடைவும்

தாய்மாரின் கல்வி அடைவு பிள்ளைகளின் கல்வி அடைவுகளுடன் நேரான தொடர்பினைக் கொண்டுள்ளது என்று ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. Conway, 2007 என்பவர் மாணவர்களின் கற்றல் அடைவு தாய் மற்றும் தந்தையின் கல்வி அடைவுகளுடன் நேரான தொடர்புகளைக் கொண்டுள்ளதுடன் உடன்பிறப்புக்களின் எண்ணிக்கையுடன் எதிரான தொடர்பினையும் கொண்டுள்ளதாகக் கண்டறிந்தார். Awan மற்றும் Zia (2015) என்போர் கல்வியறிவற்ற தாய்மார் எவ்விதமான அடிப்படை மருத்துவ அநிவற்றவர்கள் என்றும் ஆனால் கற்ற தாய்மார் அடிப்படையான மருத்துவ விடயங்களை சரியாக பின்பற்றுகின்றனர் என்றும் அவர்கள் உணவுகளிலுள்ள போசணைக்கூறுகள் தொடர்பில் தெளிவான அறிவுடையவர்களாகவும் தமது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை தயாரிப்பதில் வல்லவர்களாகவம் விளங்குகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். தாய்மாரின் கல்விக்கும் பிள்ளைகளின் பாடசாலை வரவுக்கும் இடையே நேரான தொடர்புகள் நிலவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது அதாவது கற்ற தாய்மாரின் பிள்ளைகளின் பாடசாலை வரவின்மை மிகக் குறைந்த அளவில் காணப்படுவதுடன் அதிக வரவின்மையுடைய பிள்ளைகளின் தாய்மாரின் கல்வி மட்டம் குறைந்தளவில் காணப்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது (Awan மற்றும் kauser, 2015).

வறுமையைக் குறைப்பதற்கான கருவியாக பெண்கல்வி காணப்படுகிறது. பெண்கள் கல்வியைப் பெற்றுக்கொள்ளும்போது அவர்கள் தொழிலொன்றைப் பெறக்கூடிய திறன்களைப் பெற்றுக்கொள்கின்றனர் இதனுடாக அவர்கள் பொருளாதார நடவடிக்ககைளில் பங்குபற்றுகின்றனர். குடும்ப வருமான ஈட்டத்துக்குப் பங்களிப்புச் செய்கின்றனர். குடும்பத்தின் நுகர்வுக் கோலத்தை பொருத்தமான முறையில் அமைத்துக் கொள்ளும் திறனைப்பெறுகின்றனர். சேமிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்கின்றனர். இவ்வாறான செயற்படுகளின் வாயிலாக குடும்பத்தின் வறுமையைக் குறைத்துக்கொள்ள கல்வி அவர்களுக்கு வலுவூட்டுகிறது. மேலும் வருமானம் ஈட்டும் பெண்கள் குடும்பங்களில் மதிப்பைப் பெறுகின்றனர் கௌரவமாக நடத்தப்படுகின்றனர் குடும்பத்திலும் சமூகத்திலும் உயர் அந்தஸ்துடன் வாழும் சந்தர்ப்பத்தைப் பெறுகின்றனர். இன்னொரு புறமாக உளவியல் ரீதியாகவும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் தங்கள் தேவைகளுக்காக யாரிலும் தங்கியிருக்காமல் சுயநிறைவான வாழ்க்கைப் பாங்கினை பெற்றுக்கொள்கின்றனர். நவீன வாழ்க்கை முறை, தற்படிமம் பற்றிய மதிப்பீடு உளவியல் நலம் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பாக 389 பெண்களிடம் (206 வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் 183 வீட்டுப்பணியாற்றும் பெண்கள் ) மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டுப்பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்களைக் காட்டிலும் உயர்ந்த தற்படிமத்தையும் குறைந்த மன அழுத்தத்தையும் கொண்டுள்ளனர் என்றும் மேலும் வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டுப்பணிகளிலுள்ள பெண்களைக் காட்டிலும் உயர்வான உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்கின்றனர் (Coleman, & Antonucci, 1976). பெண்கள் ஆரம்ப வகுப்புகளில் மேலதிகமாக ஒரு வருடக் கல்வியைப் பெறும்போது அவர்களது கூலி மட்டம் 10-20 சதவீதம் வரையிலும் இடைநிலைக் கல்வியில் மேலதிகமாக ஒரு வருடக் கல்வியைப் பெறும்போது அவர்களின் கூலிமட்டம் 15-25 சதவீதம் வரையிலும் உயர்வடைகின்றது. இது பால் நிலை சமத்துவத்தை அடைய வழிவகுப்பதுடன் அவர்களது அந்தஸ்து வாழ்க்கைத்தரம் என்பவற்றை மேம்பாடடையவும் செய்கிறது.

தாயின் கல்வி மட்டம் குடும்பத்தின் சமூக பொருளாதார நிலையில் முக்கியமான பங்கு வகிக்கிறது என்று ஆய்வுகளினூடாகக் கண்டறியப்பட்டுள்ளது Faize மற்றும் Dahar (2011). தயின் கல்வி அடைவு மாணவர்களின் பாடசாலை அடைவுகளில் பொருண்மையுள்ள வகையில் தாக்கம் செலுத்துகிறது (Magnuson, 2007). சிறந்த கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட தாய்மாரின் பிள்ளைகள் சிறந்த அடைவுகளை வெளிப்படுத்தியுள்ளனர். கற்றறிந்த தாய்மார் தமது பிள்ளைகளுக்கு சிறந்த அறிவையும் ஊக்கலையும் வழங்குகின்றனர். கற்றறிந்த தாய்மார் தமது வீடுகளில் உயர்தரமான கற்றல் சூழலை உருவாக்குகின்றனர். சமூகத்தில் விஞ்ஞானிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் சட்டவாளர்கள், கணகாளர்கள் கல்வியாளர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளிலுள்ளவர்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகளின்படி பொருமளவானவர்கள் ஆசிரியர்களான பெற்றோர்களின் பிள்ளைகளாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கீழ் வகுப்புக்களில் கற்கும் மாணவர்களின் விஞ்ஞானம் போன்ற அறிவியல் பாடங்களின் பாட அடைவுக்கும் தாய்மாரின் கல்வி மட்டத்துக்கும் இடையே பொருண்மையுள்ள தொடர்புகள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

 

முடிவுரை

ஆண் ஒருவர் கல்வியைப் பெறும்போது அது அவரது தனிப்பட்ட பொருளாதார மேம்பாட்டுக்கு மட்டுமே உதவுவதாக அமையும். மாறாக அதே கல்வியை ஒரு பெண் பெறுகின்றபோது அது அவரது பொருளாதார அனுகூலங்களுக்கும் அப்பால் குடும்ப, சமூக மற்றும் தேசிய அளவில் சமூக அபிருத்திக் குறிகாட்டிகளை உயர் நிலைக்கு இட்டுச் செல்ல உதவுகிறது. எதிர்கால தலைமுறையினரின் ஆளுமை விருத்தியை நிர்ணயம் செய்ய உதவுகிறது. எதிர்கால தலைமுறையின் ஆரோக்கியக் குறிகாட்டிகளை உயர்ந்த மட்டத்தில் பேண உதவுகிறது பெண்களின் உரிமையையும் பாதுகாபப்பையும் உறுதி செய்யும் ஒரு மூலோபாயமாகவும் அது பார்க்கப்படுகிறது. ஒரு நாடு அபிவிருத்தி அடைந்த நாடு என்ற இலக்கினை எட்டவேண்டுமெனில் அந்நாட்டில் உள்ள பெண்களுக்கான கல்வி வாய்ப்புகள் உறுதி செய்யப்படுவதுடன் தரமான கல்வி வாய்ப்புக்களும் எற்படுத்தித் தரப்படல் வேண்டும். அபிவிருத்திக்கான அடித்தளம் என்பது பெண்கல்வி வாய்ப்புக்கான விரிவாக்கமாகவே அமைய முடியும்.

 

உசாத்துணைகள்

Awan, A.G &; kauser, D. Impact of Educated Mother on Academic Achievement of he Children: A Case Study of District Lodhran- Pakistan, Journal of Literature, Languages and Linguistics www.iiste.org ISSN 2422-8435 An International Peer-reviewed Journal Vol.12, 2015

Coleman, L. M., & Antonucci, T. C. (1976). Impact of Work on Women. Departmental Psychology, 19 (2), pp. 290-294.

Englund, M. M., Luckner, A. E., Whaley, G. J. L., & Egeland, B. (2004). Children's achievement in early elementary school: Longitudinal effects of parental involvement, expectations, and quality of assistance. Journal of Educational Psychology, 96, 723-730

Faize, F.A. & Dahar, M.A. (2011). Effect of Mother's Level of Education on Secondary Grade Science Students in Pakistan. Retrieved 20.02.2020 from https://www.researchgate.net/publication/255983607 Effect of Mother's Level of Education on Seco ndary Grade Science Students in Pakistan

Magnuson, K. (2007). Maternal education and children's academic achievement during middle childhood. Development Psychology, 43, 1497-1512.

Robeyns, I. (2011). The capability approach. Retrieved on 12 July 2012 from http:// plato.stanford.edu/entries/capability-approach/

Tikly, L. (2011). Towards a framework for researching the quality of education in low income countries. Comparative Education, 47(1): 1-23.

UNESCO launched its 2014 Education for All Report from https://www.youthforum.org/unescolaunched-its-2014-education-all-report

 

 

கட்டுரைகள்

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் அறிமுகம் 21 ஆம் நூற்றாண்டின் சகாப்தம் பெரும்பாலும் ஒரு தொழில்நுட்ப சகாப்தமாககருதப்படுகிறது. தொழில்நுட்பம், இன்று மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.எங்கள்...

 சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் "பனிப்போர் காலம் முடிவடைந்தது உலகம் ஒரு ஒழுங்கில் அமெரிக்கா தலைமையில் பயணிக்க ஆரம்பிக்கின்றது. இந்த ஏகாதிபத்தியம் தனக்கு விசுவாசம் உள்ள கல்விமுறையினை...

வாழ்க்கைமுறை

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம்...

சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

ரதிகலா புவனேந்திரன்நுண்கலைத்துறைகிழக்குப் பல்கலைகழகம்.   வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள்...

குருந்தூர் மலையில் கிடைத்திருப்பதுஎண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாராலிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர்கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன்...

உளவியல்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும்...

- கி.புண்ணியமூர்த்தி- பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click