Skærmbillede 1407கல்வி தொடர்பான பல்வேறு வரைவிலக்கணங்களின் துணையுடன் கல்வியின் தன்மை
* இயக்கத்தன்மை (dynamic)
* வாழ்நாள் நீடித்த செயன்முறை
* தொடர்ச்சியான செயன்முறை
* வெவ்வேறு முறைகளில் பெறப்படுவது
* காலத்துக்கு ஏற்ப / நாட்டுக்க ஏற்ப வேறுபடுவது
* எப்போதும், எங்கும் எல்லோரும் பெறுவது
* வெவ்வேறு மூலாதாரங்களினூடாகப் பெறுவது
* கற்றல் கற்பித்தல் எனும் இரண்டு விதமான செயன்முறைகளை உள்ளடக்கியது.

 அறிமுகம்
கல்வி என்பது கற்றல் நடத்தைகளின் மாற்றமாகும். கல்வி கற்றலும். கற்பித்தலும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து மக்கள் சமூகத்தில் தொடர்ந்து காண்ப்பட்டு வந்துள்ளது. 'கல்' என்பதன் வினை அடியாகப் பிறந்தது கல்வி என்பர். கல்வி 'எடு', தோண்டு, என்கின்ற பொருளைக் கொண்டிருக்கின்றது. கல்வி என்னும் சொல்லானது ஒருவனிடத்து மறைந்து கிடக்கும் ஆற்றலைத் தோண்டி வெளிக்கொணர்தலை இலக்காகக் கொண்டமைதல் வேண்டும். கல்வி என்பது பொதுவாக கற்றல் (learning) என்பதுடன் இணைந்து கூறப்படுகின்றது. கற்றல் என்பது நம்மிடம் பிறப்பு முதல் இயற்கையாக அமைந்து காணப்படாமல் பின்னர் நாம் பெறும் அனுபவங்களும் அவற்றின விளைவுகளும் ஆகும். இத்தகைய அனுபவங்களள் அறிவு சார்ந்தவையாகவோ, மனவெழுச்சி சார்ந்தவையாகவோ அல்லது இவை யாவற்றினதும் ஒட்டு மொத்தமாகவோ இருக்கலாம்.

கல்வி என்பது தத்துவவியலாளர்களாலும் கல்வியியலாளர்களாலும் பல்வேறுபட்ட வகையில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ள ஓர் எண்ணக்கருவாகும். அந்த வகையில் கல்வி என்பதை வரைவிலக்கணப்படுத்தப்படுவது அவ்வளவு எளிதானதொன்றல்ல.

கல்வி தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள வரைவிலக்கணங்கள் பின்வருமாறு.

* “எந்தவொரு சந்ததியினரும் பின்பற்றுவதற்காக அல்லது முன்னேறுவதற்காக தமது இளைய சந்ததியினருக்கு கலாசாரத்தை ஒப்படைத்தலே கல்வியாகும் " -ஜோன் ஸ்ரூவட் மில்.
* “நுண்மதி, மனவெழுச்சிகள் மற்றும் உடல், உள ரீதியில் முன்னேறியுள்ள மனிதன் மேற்கொள்ளும் சதாகாலச் செயற்பாடீட கல்வியாகும்” -ஹேர்மன் ஹொன்
* “தான் வாழும் சமூகத்தில் தனக்குக் கிடைக்க வேண்டிய இடத்தைப் பெற்றுக் கொள்வதற்காக உரிய அனுபவங்களை வழங்குவதே கல்வியாகும்" - ஈ.சீ.மூவர்.
* “கல்விக்கும் பிள்ளைக்குமிடையே அண்மிய தொடர்பைக் கட்டியெழுப்புவதே கல்வியாகும். சிலருக்கு அது தத்துவமாகும். வேறு சிலருக்கு அறிவைக் கையாளும் ஊடகமாகும். எவ்வாறாயினும் கல்வியென்பது முன்னேற்றமான கலையாகும்"
- லெஸ்டர் சுமித்
* “பிள்ளைக்குத் தனது சூழலில் வாழ்வதற்குத் தேவையான அனுபவங்களை வழங்குதல் கல்வியாகும்".
-ஜோன் டூயி

கல்வியுடன் இணைந்த பல்வேறு சமூக அபிவிருத்தி எண்ணக்கருக்கள்,
கல்வியின் நவீன எண்ணக்கருக்கள்


   17 ஆம் நூற்றாண்டிலிருந்து கல்வி தொடர்பாக முன்வைக்கப்பட்ட பல்வேறு தத்துவக் கருத்துக்கள், உளவியல் மற்றும் சமூக விஞ்ஞான ரீதியான விளக்கங்களின் விளைவாக பல்வேறு கல்வியியல் அணுகுமுறைகள் கல்விப் புலத்தில் உருவானதுடன் அது வரையில் கற்றல், கற்பித்தல் ஆசிரியர், கலைத்திட்டம், கற்றல் - கற்பித்தல் முறை தொடர்பாக நிலவிய கருத்துக்கள் விமர்சனத்துக்குள்ளாகின. அதன் விளைவாக ஆசிரியர் மையக் கல்வியில் இருந்து அபிவிருத்தி மையக் கல்வி அணுகுமுறை வரை கல்வியானது பயணம் செய்யலாயிற்று. இதற்கிணங்க கல்வியானது தனியாள் அபிவிருத்தியுடன் சமூக அபிவிருத்தியையும் நோக்கமாகக் கொண்டது. அத்துடன் கல்வியானது நலன்புரி நடவடிக்கைகள் மாத்திரமன்றி எதிர்காலத்தில் விளைதிறன் உள்ள வகையிலும் வினைத்திறனுடனும் அமைத்துக் கொள்வதற்காக நிகழ்காலத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடாகும்.
இதற்கிணங்க சமூக அபிவிருத்திக்காக கல்வியை பயன்படுத்தும் போது கருத்தில் கொள்ள வேண்டிய பல்வேறு சமூக அபிவிருத்தி செயற்பாடுகள் அடையாளம் காணப்படல் வேண்டும்.
* தனியாள் அபிவிருத்திக்கான கல்வி
* தேசிய ஒருங்கிணைப்புக்கான கல்வி
* பொருளாதார அபிவிருத்திக்கான கல்வி
* சமூக நவீனமயப்படுத்தலுக்கான கல்வி
* நிலையான அபிவிருத்திக்கான கல்வி
* சிறப்புச் தேர்ச்சிக்கான கல்வி

தனியாள் அபிவிருத்திக்கான கல்வி
 கல்வி என்பதன் மூலம் இன்று கருதப்படுவது அறிவை வழங்குவதன் மூலம் நுண்மதி அபிவிருத்தியை ஏற்படுத்துதல் மாத்திரமன்று. அது உடல், உள, சமூக, மனவெழுச்சிகளுடன் ஒழுக்க சார்ந்த அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்டுள்ளது. இதனால் இன்று கல்வியானது தனி நபரின் திறன்கள், இயலுமைகள், ஆற்றல்கள், தேவைகள், போன்றவற்றுடன் சவால்களை வெற்றி கொள்ளல் போன்றவற்றை விருத்தி செய்வதாகும்.

தேசிய ஒருங்கிணைப்புக்கான கல்வி
 விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியாலும் இடப்பெயர்வுகள், ஆக்கிரமிப்புக்களினாலும் நவீன மயமாக்கம், உலகமயமாக்கத்தினாலும் இன்று அனேகமான சமூகங்கள் பல்லின பன்மத சமூகங்களாக மாறியுள்ளன. இதன் விளைவாக ஒரே நாட்டுக்குள் பல்வேறு இனக்குழுக்கள் வாழுதல், பன்மொழிகளைப் பேசுதல், பல்வேறு சமயங்களைப் பின்பற்றுதல், பல்வேறு சடங்குகள் சம்பிரதாயங்கள் போன்றவற்றை அனுசரித்தலை.
காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறான ஒரு சமூகமானது பன்மைச் சமூகமாகவோ, அல்லது பல்கலாசார சமூகமாகவே கொள்ளப்படும்.
பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார காரணிகளால் ஒரே நாட்டில் வசிக்கும் மேற்படி இனக்குழுக்களிடையே புறக்கணித்தல், இழிவுபடுத்தல் போன்றவற்றிலிருந்து இனப்பிரச்சினைக்கும் இட்டுச் செல்கின்றன.
இதனால் வெளிநாட்டில் வாழ்கின்ற பல்வேறு இனங்குழுக்களிடையே சமத்துவம், பரஸ்பர புரிந்துணர்வு, ஏற்றுக் கொள்ளல், கௌரவித்தல், ஒன்றிய வாழ்வை ஏற்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் கல்வியே தேசிய ஒருங்கிணைப்புக்கான கல்வியாகும்.
கல்வியானது சமூகத்தில் காணப்படும் சமூக அபிவிருத்தித் துணையாகும் ஒரு செயன்முறையாகும். சமூக அபிவிருத்தியின் போது கல்வியின் ஊடாக தளரா நிலை அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் பங்களிப்புச் செய்தலே எதிர்பார்க்கப்படுகின்றது.

தளராநிலை அபிவிருத்தி (Sustainable Development)
ரம்சார் பிரகடனம்
புவி மாநாடு
தளரா நிலை
அபிவிருத்தித் தசாப்தம் (2006 -2015)
(பொருளாதார, சமூக, சூழல், ஆன்மீக)

தளராநிலை அபிவிருத்திக்கான கல்வியின் போது கவனஞ் செலுத்த வேண்டிய சமூக அபிவிருத்தி எண்ணக்கருக்களை வெளிக்கொணர்தல்
* தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துதல்
* பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொள்ளுதல்
* தனியாள் மற்றும் சமூக அபிவிருத்தி
* சமூக மாற்றங்களுக்கு (தேசிய, பூகோள) இசைவாதல்

 

 கல்வி நோக்கங்கள்
UNESCO கல்வி நோக்கங்கள் - 04
1. சகலருக்கும் கல்வி
2. விஞ்ஞானக் கல்வியை வழங்குதல்
3. கற்றலுக்காக கற்றல்
4. ஆரம்பக் கல்வியிலிருந்து இடைநிலைக் கல்விக்குச் செல்ல வழிவகுத்தல்

1997 யுனெஸ்கோ அறிக்கையில் தரப்பட்டுள்ள கூற்றின்படி கல்வியானது எதனைக் கையளிக்கும் வலிமையான ஊடகமாக செயற்படுகின்றது? (2014(15)) கலாசாரம்

 

உசாத்துணை நூல்கள்

மன்சூர் . எம்.கே.எம் - கல்வித் தத்துவங்கள் -அக்கறைக்பற்று

எல்லோருக்கும் கல்வி

சாதி,மத மொழி, ஆண், பெண், கலாசார பேதங்களின்றி எல்லோரும் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு எல்லோருக்கும் கல்வியாகும்
சகல பிரஜைகளுக்கும் கல்வி பெறும் உரிமையுண்டு. குறைந்தபட்சம் ஆரம்பக்கல்வியாவது இலவசமாக வழங்கப்படல் வேண்டும். திறமைக்கேற்ப எல்லோருக்கும் உயர்கல்வி வாய்ப்பும் இருக்க வேண்டும்.
- (மனித உரிமை பிரகடனம் 1948)

எல்லோருக்கும் கல்வியின் அடிப்படைக் கற்றல் தேவைகள் 10
( ஜொம்டின் மகாநாடு - தாய்லாந்து 1990 - மார்ச்)

1) அடிப்படைக் கற்றல் தேவைகளை நிறைவேற்றல்
2) கல்வியை பரந்த நோக்காக்குதல்
3) கற்றற் பிரவேசத்தை நியாயப்படுத்தலும் சமத்துவத்தை உறுதிப்படுத்தலும்
4) கற்றலில் ஈடுபடுதல்
5) அடிப்படைக் கல்வி உத்திகள், பாட எல்லைகளை விஸ்தரித்தல்
6) கற்றல் சூழலை பலப்படுத்தல்
7) கூட்டுத் தொடர்புகளைப் பலப்படுத்தல்
8) பயன்படும் கொள்கைக் களமொன்றை உருவாக்குதல்
9) வளப்பயன்பாடு
10) சர்வதேச ஒத்துழைப்பை துரிதப்படுத்தல்

எல்லோருக்கும் கல்வி என்ற எண்ணக்கரு இன்று எல்லா நாடுகளிலும் வலியுறுத்தப்படுகின்றது. சாதி, மதம், வயது, பால், கலாசார வேறுபாடுகளின்றி சகலருக்கும் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தலே எல்லோருக்கும் கல்வியாகும். இதனை நிறைவேற்றுவதில் பல சவால்கள் எழும். எனவே இச்சவால்களை வெற்றி கொள்ளவேண்டுமானால் ஒரு நாட்டின் அரசும், அரசார்பற்ற நிறுவனங்களும் கைகோர்த்து நிற்க வேண்டும்.

 

வாழ்நாட் கல்வி
  வாழ்நாட் கல்வி என்பது பிறப்பிலிருந்து இறப்பு வரை பெறும் கல்வியாகும். மகாத்மா காந்தி வாழ் நாட் கல்வியை கருவறையிலிருந்து கல்லறை வரைக்குமான கல்வி எனக் குறிப்பிடுகின்றார்.

வாழ்நாட் கல்வியானது முறைசார், முறைசாரா, முறைமையில் வழிகளில் தொடரக்கூடிய கிடைக்கும் போதே அது சாத்தியமாகின்றது எனலாம். வாழ்நாட் கல்வி, தொடர் கல்வி, ஒன்றிணைந்த கல்வி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. வாழ்நாட் கல்வி எண்ணக்கரு கற்றலில் ஈடுபடும் ஒரு சமூகத்தின் அடித்தளமாகும்.

வேகமாக மாற்றத்திற்குள்ளாகும் இன்றைய சமூகத்தில் வாழ்நாட் கல்வியின்
முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. விரைவாக பெருகி வரும் அறிவை
பாடசாலைகளால் மட்டும் தனித்து நின்று வழங்கிவிட முடியாது. ஆகவே
பாடசாலையோடு சமாந்திரமாக இணைந்து பல்வேறு நிறுவனங்கள் கல்வியை
வழங்க முற்படும் போதே இது சாத்தியமானதாக அமையும். வாழ்நாட்கல்வியானது
பயன்படு எழுத்தாற்றல், விஞ்ஞான விளக்கம், கற்றல் தொடர்பான உடன்பாடான
மனப்பாங்கு தொழிலுக்கேற்ற கல்வி விருத்தி, குடும்ப வாழ்க்கைக்கான கல்வி,
சமூக விருத்திக்கான கற்றல் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.

வாழ்நாட் கல்வியை பெறும் முறைகள்
1) தொலைக்கல்வி
வாழ்நாட் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கென ஒரு கல்வி முறையாக தொலைக்கல்வி முறையை நாம் நோக்கலாம். தொலைக்கல்வியானது எழுத்து மூல தொடர்பாடற் கற்றல், வீட்டிலிருந்தே கற்றல், சுயாதீனக் கற்றல், திறந்த கற்றல் ஆகிய எண்ணக்கருக்களை உள்ளடக்கிய ஒரு கல்வி முறையாகும்.
தொலைக்கல்வி முறையில் நேர்முகமாக நடைமுறைப்படுத்த வேண்டிய கல்விச் செயலொழுங்கு உட்பட கற்றல் செயற்பாடுகள் கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து தூரமாக நடைபெறும். ஆசிரியர் மாணவர்களுக்கிடையே தொடர்பாடலை இலகுபடுத்துவதற்காக அச்சிடப்பட்ட இலத்திரனியல், அல்லது வேறு உத்திகள் கையாளப்படும் போதனா ரீதியான நுட்பமுறையாகும்.

2) வளர்ந்தோர் கல்வி
கல்வியின் சகல மட்டங்களிலும் இருப்பவர்களையும் உள்ளக்கிக் கொள்வதுடன் அதனை மரபு ரீதியான வகுப்பறையின் நான்கு சுவர்களுக்கு வெளியே கொண்டு சென்று மனிதர்கள் ஒன்று கூடும், வேலை செய்யும், உணவருந்தும், விளையாடும் எல்லா இடங்களும் கற்றல் மையங்கள் ஆகும் வகையில் சமூகத்துடன் இணைந்த கல்வி முறை “வளர்ந்தோர் கல்வியாகும்”
இன்று உலகில் வாழும் அனேகமான வளர்ந்தோருக்கு பெற முடியாமற் போன அடிப்படைக் கல்விக்கு வளர்ந்தோர் கல்வி ஒரு மாற்று ஏற்பாடாகும். மிகக் குறைந்த கல்வியை மட்டுமே பெற்றவர்களுக்கு இது ஒரு அடிப்படை அல்லது தொழில்சார் கல்விக்கு உறுதுணையாகும். உயர் மட்ட பயிற்சியை பெற்றவர்களுக்கு இது உயர் கல்விக்கு வழிகோலும். இது அனைவர்களதும் தனிப்பட்ட விருத்தியை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு வழிமுறையாகும்.

3) திறந்த கல்வி
கற்றல் தொடர்பான தடைகள், இடையூறுகள் என்பவற்றை நீக்கிய கல்விமுறை திறந்த கல்வியாகும். பல்வேறு காரணங்களினால் கல்வியைத் தொடர முடியாமற் போன பிரிவினர்களுக்கு கல்வியைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புக்களை வழங்குதல் திறந்த கல்வியாகும்.
இனவாதம், இடப்பெயர்வு, பரீட்சையில் தோல்வி, வறுமை, பாடசாலையியுடன் தொடர்புடைய காரணிகள் வீட்டுப் பிரச்சினைகள், சொந்த வாழ்கைப்பிரச்சினைகள் என்பவற்றால் கல்வியை தொடர முடியாமற் போனவர்களுக்காக மீண்டும் கல்வி வாய்ப்பை வழங்கும் கல்வி முறை திறந்த கல்வி முறையாகும்.
மேற்கண்டவாறு அமையும் வாழ்நாட் கல்வியானது முழுச் சமூகமும் கற்றலை மையமாகக் கொண்டதாக மாற வழிகாட்டுகின்றது.

திறந்த பாடசாலை
அனைவருக்கும் கல்வி வழங்கும் குறிக்கோளுடன் திறந்த பாடசாலை வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகின. திறந்த பாடசாலை திட்டம் பின்வரும் அக்கறைகளை உள்ளடக்கியுள்ளது.

- பல்வேறு சமூக பொருளாதார காரணங்களுக்காக பாடசாலைகளுக்குச் செல்ல
முடியாதவர்களுக்கும் இவ்வாறான காரணங்களினால் பாடசாலைக் கல்வியையும், அபிவிருத்தி சார் கல்வியையும் நிறைவு செய்யும் வாய்ப்புக்களை இழந்தோர்க்கும் கல்வி வழங்குதல்.
- கற்போருக்கு கல்விசார் வேலைத்திட்டங்களில் பரந்த தேர்வு வாய்ப்பை வழங்குதல்
- மாற்றுத்திறன் ( Differently a bled) பிள்ளைகளின் கல்விசார் தேவைகளைப் பூர்த்தி செய்தல்
.- பாடசாலையை இடையில் விட்டு சென்றோருக்கும் அவர்கள் குறைகல்வி உள்ளவர்களாக இருக்காதவாறு ஒரு பாதுகாப்பு வலையை வழங்குதல்.

6. பூரணக் கல்வி
பூரண கல்வி என்பது ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ற சீரிய வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதும் வாழ்க்கை பூராகவும் செயற்படுவதுமான ஒரு கல்வியாகும்.
இதன்படி ஒவ்வொரு பருவத்திற்குரிய உடல், உள, மனவெழுச்சி, சமூக மற்றும் விழுமிய விருத்தியை ஏற்படுத்தும் விதத்திலானதும் அந்தப்பருவங்களுக்கிடையே பரஸ்பர தொடர்பை ஏற்படுத்தும் விதத்திலும் கல்வியை நெறிப்படுத்துவது பூரண கல்வியாகும்.
பூரண கல்வியின் ஊடாக மனிதர்களிடையே விருத்தியடைய வேண்டிய அம்சங்கள்
வருமாறு:
உடற் தனித்துவம்
தத்துவார்த்த தனித்துவம்
சமூக தனித்துவம்
தொழில் தனித்துவம்
பாலியல் தனித்துவம் என்பனவாகும்.

7. விழுமியக் கல்வி
விழுமியம் என்பது தனிமனிதனதும், சமூகத்தினதும் விருத்தியை ஏற்படுத்தக்கூடிய பெறுமானங்களின் தொகுதியாகும். விழுமியக் கல்வியை எதிர்பார்க்கப்படுவது தனிமனிதனின் முழுமையான விருத்திக்கு உதவுவதாகும். குறிப்பாக விழுமிய மனவெழுச்சி, உளவிருத்தி ஆகிய எல்லாவிதமான விருத்திகளிலும் ஒரு சீரான அடிப்படையை வழங்குவதாகும்.
மனிதனின் நிலைப்பாட்டின் அடிநாதமாகக் கருதப்படுவதும் தனிமனிதனின் நிகரற்ற அடிப்படை உரிமையும், தனிமனித நடத்தையில் செல்வாக்குச் செலுத்தக் கூடியதும், தனிமனிதனின் உணர்வுகளை கட்டுப்படுத்தி கருத்துக்களைச் சமநிலைப்படுத்தும் ஒன்றே விழுமியமாகும். இத்தகைய விழுமியத்தை தனித்ததொரு பாடமாகவும், பாடல்களின் சேர்க்கையாகவும், நிஜ வாழ்க்கை அனுபவங்களாகவும் அளிக்க முயல்வது விழுமியக் கல்வியாகும்.

8. அகில சமூகத்திற்கான கல்வி
இன்று உலகம் ஒரு கிராமமாக சுருங்கி விட்டது. இந்த அகிலக் கிராமத்தில் வெற்றிகரமாக வாழக்கூடிய அறிவு, திறன், மனப்பாங்கினை, சமூக உணர்வினை அளிக்கும் கல்வி அகில சமூகத்திற்கான கல்வியாகும். உலகம் சுருங்கும் போது மனித மனங்கள் விரிவடைதல் வேண்டும். பரந்த மனப்பாண்மையும் ஒவ்வொரு கலாசாரம் பற்றிய புரிந்துணர்வும் ஏற்படும் நிலையிலேயே நாம் அகில கலாசாரத்துடன் இணைந்து வாழ முடியும்.

இன்று விஞ்ஞான தொழிநுட்ப மாற்றங்களுக்கிடையே உலகம் ஒரு கிராமமாக மாறியுள்ளது. இதனால் எல்லா நாடுகளுமே எல்லா மனிதர்களுமே ஒருவரில் ஒருவர் தங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மறுபக்கத்தில் இதுவரை இல்லாத பாரிய சவால்களும், பிரச்சினைகளும் நவீன உலகின் மீது கருநிழலைக் படிய வைத்துள்ளது. இச்சவால்களை வெற்றி கொண்டு உலகில் பரஸ்பர புரிந்துணர்வு, ஒத்துழைப்பு, சமாதானம் என்பவற்றைப் பாதுகாக்க வேண்டிய அத்தியாவசியம் இன்னொரு பக்கத்தில் ஏற்பட்டுள்ளது. இச்சவால்களை வெற்றி கொண்டு நவீன தேவைகளை அடைய வேண்டுமாயின் பல்லினக் கலாசார கல்வி அவசியமானதாகும்.

10. கல்வியின் நான்கு தூண்கள்

1) அறிதலுக்காக கற்றல் - LEARNING TO KNOW
2) செயற்படுதலுக்காக கற்றல் - LEARNING TO DO
3) சேர்ந்து வாழ்வதற்காகக் கற்றல் - LEARNING TO LIFEGETHER
4) வாழ்வதற்காக கற்றல் - LEARNING TO BE

11. தனியாள் விருத்திக்கான கல்வி
விருத்தி என்பது தொடர்ந்து முன்னோக்கிச் செல்லல் என்பதாகும். இதன்படி ஒரு மனிதன் பூரண விருத்தியடைதலுக்கான வழங்கப்படும் கல்வி தனியாள் விருத்திக்கான கல்வி எனலாம். தனியாள் விருத்திக்கான கல்வி தொடர்பாக பண்டைய காலம் தொடக்கம் கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது.
மனிதனின் இதயம், கைகள், தலை (Heart, Hands, Head) எனபவற்றை துரியற முறையில் விருத்தி செய்வதே தனியாள் விருத்திக்கான கல்வி எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே தனியாள் விருத்திக்கான கல்வி என்பது அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை ஒன்று சேர்த்து விருத்தியாக்குதலை குறித்து நிற்கின்றது.

 

தனியாள் விருத்திக்கான ஆகக் குறைந்த தேவைகள்


* ஒரு குடும்பத்தை நடத்துதல், வீட்டைப் பராமரித்தல்
* சமூகப்பற்றுதலுக்கான தேவையான திறனும், பயன்படு அறிவும்
* வாழ்வாதாரத் தொழிலை செய்யத் தேவையான அறிவு
* வேலை சமூக அபிவிருத்தி குறித்து உடன்பாடான மனப்பாங்கு
* பயன்படு எழுத்தறிவு, எண்ணறிவு ஆற்றல்
* விஞ்ஞான விளக்கமும் இயற்கையின் செயற்பாடு பற்றிய அடிப்படை விளக்கமும்
(பிலிப்ஸ் கூம்ஸ்)

தனியாள் விருத்திக்கான கல்வியை திட்டமிடும் போது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள்
திறன் / பண்பு விளக்கம்


    சமூகத்திறமைகள் பரஸ்பர தொடர்புடன் சமூகத்தின் ஒரு அங்கத்தவராக வாழும் ஆற்றல்.
ஏனைய கலாசாரங்கள் ஏனைய கலாசாரங்களை நன்கு அறிந்து கொள்வதால் தனது கலாசாரத்தை இனங்காணும் ஆற்றல்
ஒரு ஜனநாயக ஆளுமைக் மனிதனின் அனைத்து நடவடிக்கைகளும்
கட்டமைப்பை உருவாக்கிக் அனைவரோடும் மனிதத் தன்மையுடன்
கொள்ளுதல் செயற்படும் ஆற்றல்
உலக அபிமானம் தான் ஒரு உலக பிரஜை என நினைக்கும் ஆற்றல்
தூரநோக்கு நிகழ்காலம், எதிர்காலம் ஆகியன பற்றி மனோரீதியாக உருவமைக்கும் ஆற்றல்
ஆக்கத்திறன் புதியவற்றை நினைக்கும் உருவாக்கும் ஆற்றல்
பகுப்பாய்வுத்திறன் பொதுவாக இருக்கும் ஒன்றின் ஒவ்வொரு
பிரிவு பற்றியும் தனித்தனியாக அறிந்து
கொள்ளும் ஆற்றல்.
ஆய்ந்த றிதல் ஒன்றைப் பற்றிய அடிப்படை விடயங்களை தொடர்புபடுத்தும் ஆற்றல்.
ஊடுருவும் திறன் தாம் உட்பட ஏனைய மனிதர்களின் உயர் பௌதீக உலகை பற்றி நிகழ்காலம் முதல் எதிர்காலம் வரை தனது பார்வையை செலுத்தும் ஆற்றல்.
கற்றலுக்கு கற்றல் நிரந்தரமாக அறிவைத் தேடும் ஒருவராக செயற்படும் ஆற்றல்.
சகிப்புத்தன்மை சகிப்புத்தன்மை, மாற்றுக் கருத்துக்களுக்கு செவிசாய்த்தல் போன்ற ஐனநாயக வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல்.

கல்வி வழங்கப்படும் பிரதான முறைகள்
(செயன்முறை அம்சங்கள் )

கல்வியானது தாயின் கருவறையில் இருந்து மரணம் வரையில் தொடர்ச்சியாக செயற்படும் ஒன்றாகும். அதற்கிணங்க மேற்படிச் செயன்முறை அடிப்படை அம்சங்கள் மூன்றின் ஊடாக செயற்படுகின்றது. கல்வியின் குறிக்கோள்களை அடைவதற்காக இவ்வாறான கல்வி முறைகளை கைக்கொள்ளப்படவேண்டும்.
> முறைசார்ந்த கல்வி - (Formal) -
>முறைசாராத கல்வி - (non formal)
> முறைமையில் கல்வி (முறையில் கல்வி) - (Informal)

முறைசார்ந்த கல்வி - (Formal)
“முறைசார்ந்த கல்வி என்பது குறித்தவொரு படிமுறைக் கட்டமைக்கு ஏற்ப தரங்களின் அடிப்படையில் ஆரம்பப் பாடசாலையில் தொடங்கி பல்கலைக்கழகம் வரையிலான பல்வேறு வகையான விசேட திட்டமிடல்களுடனும் கைத்தொழில், தொழில் சார் துறைகளையும் உள்ளடக்கிய முழுநேர கல்வி முறையாகும்”
- பிலிப் கூம்ஸ்

பாடசாலையானது முறைசார்ந்த கல்வியை வழங்கும் பிரதான நிறுவனமாகும். முன்பள்ளியானது இம்முறை சார்ந்த கல்வியின் ஒரு பகுதியாவதுடன் அது அனைத்து நாடுகளிலும் ஒரே விதமாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. முறைசார்ந்த கல்வியும் நாட்டுக்கு நாடும் ஒரே நாட்டுக்குள் காலத்துக்குக் காலமும் வேறுபடும்.
உதாரணம் : கலைத்திட்டம்
பாடசாலைக்கு அனுமதிக்கும் வயது எல்லை
இன்று முறைசார்ந்த கல்விக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
உதாரணம் :
போட்டித் தன்மை வாய்ந்தது.
தேசிய மற்றும் தனியாள் தேவைகளுக்கு பொருத்தமற்றது. பரீட்சையை மையமாகக் கொண்டது
ஏட்டுக் கல்விச் சார்பை அதிகம் கொண்டது

முறைசார்ந்த கல்வி வழங்கப்படும் சந்தர்ப்பங்கள்
முறைசார்ந்த கல்வியைப் பெரும்பாலும் அரசு சார்ந்த நிறுவனங்களே வழங்குகின்றன. அவையாவன :
* பாடசாலைகள்
* பல்கலைக்கழகங்கள்
* ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள்
* கல்வியியற் கல்லூரிகள்
* நீண்ட காலப் பயிற்சி வழங்கும் தொழில்நுட்பக் கல்லூரிகள்

- முறைசாராக் கல்வி (non formal)
முறைசார்ந்த கல்வியை இட்டு நிரப்புவதற்காக உருவானது
“சனத்தொகையின் உபகுழுவாகிய வயதுவந்தோர் மற்றும் பிள்ளைகளுக்காக முறைசார்ந்த கல்வி முறைக்குப் புறம்பான வகையில் தெரிவு செய்யப்பட்ட யாதேனும் கற்றலை விசேடமாக வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் முறைமைப்படுத்தப்பட்ட ஒழுங்கமைப்பின் கல்வி செயன்முறைகளனைத்தும் முறைசாராக் கல்வியாகும்”
- பிலிப் கூம்ஸ்

முறைசாரக் கல்வியின் விசேட பண்புகள்
* பாடசாலை முறைமைக்கு புறம்பாகச் செயற்படுதல்.
* பாடசாலையில் இருந்து இடை விலகியோர் / பாடசாலை கல்வியைப் பூர்த்தி செய்தோர் / பல்வேறு தொழில்களில் ஈடுபடுவோர் போன்ற அனைவருக்குமாக நடைமுறைப்படுத்தப்படுதல்.
* கல்வி பெறுவோரின் தேவைக்கு ஏற்ப தயாரிக்கப்படல்.
* குறுங்காலத்தைக் கொண்டது.
* நுட்ப முறைகளைப் பயன்படுத்தல்.
* நெகிழ்வுப் போக்கு
* பல்வேறு நிறுவனங்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.
உதாரணம் :
அரச நிறுவனம், அரசோடு இணைந்த நிறுவனம், அரசு சாரா நிறுவனம்

* முறையில் கல்வி (Informal)
மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை எந்த ஒரு முறைசார்ந்த முறையிலுமன்றி பெறும் அனைத்து கற்றலும் முறையில் கல்வியாகும்.
இது பாடசாலைக்கல்விக்கு அனுமதிக்கப்படும் முன் / பாடசாலைக்கல்வியை பெறும் காலத்துக்குள்ளும் / பாடசாலைக்கல்வியின் பின்னர் தொழிலுலகிலும் / சமூக வாழ்க்கையின் போதும் பெறும் அனுபவங்கள்
உதாரணம் : குடும்பம், அயலவர், சமய அமைப்புக்கள், தொடர்பாடல் சாதனங்கள், சமவயதுக் குழுவினர்...
இது வாழ்நாள் செயற்பாடாகும்.

கல்வி வழங்கப்படும் பிரதான முறைகள் (செயன்முறை அம்சங்கள்) யாவை?
> முறைசார்ந்த கல்வி - (Formal)
> முறைசாராத கல்வி - (non formal)
> முறைமையில் கல்வி (முறையில் கல்வி) - (Informal)

முறைசார்ந்த கல்வி என்றால் என்ன?
“முறைசார்ந்த கல்வி என்பது குறித்தவொரு படிமுறைக் கட்டமைக்கு ஏற்ப தரங்களின் அடிப்படையில் ஆரம்பப் பாடசாலையில் தொடங்கி பல்கலைக்கழகம் வரையிலான பல்வேறு வகையான விசேட திட்டமிடல்களுடனும் கைத்தொழில், தொழில் சார் துறைகளையும் உள்ளடக்கிய முழுநேர கல்வி முறையாகும்” என பிலிப்ஸ் கூம்ஸ் என்பவர் வரைவிலக்கணப்படுத்தியுள்ளார்.

(1) இலங்கையில் முறைசார்ந்த கல்வியானது ஆரம்பப் பாடசாலைகளில் தரம் 1 இல் இருந்து பல்கலைக்கழகம் வரை வழங்கப்படுகிறது.
(2) பாடசாலைகளே முறைசார்ந்த கல்வியை வழங்கும் பிரதான நிறுவனமாகும்.
(3) முன்பள்ளிகள் முறைசார்ந்த கல்வியின் ஒரு பகுதியாக விளங்கினாலும், எல்லா நாடுகளிலும் ஒரே விதமாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
(4) இலங்கையில் முன்பள்ளிகள் உள்ளுராட்சி நிறுவனங்கள் மூலமும், தனியார் மூலமும் நடத்தப்படுகின்றன. அவற்றைக் கண்காணிப்பதற்கு கல்வி வலய மட்டங்களில் முன்பள்ளிக்காள உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் செயற்படுகின்றனர். மாகாணக் கல்வியமைச்சு மேற்பார்வை செய்கிறது. முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அதுவே ஊதியம் வழங்குகிறது.
(5) முறைசார்ந்த கல்வியில் கலைத்திட்டம், பாடசாலை அனுமதி வயது எல்லை, வகுப்புத் தரங்கள், பாடசாலை நேரம், நிர்வாக முறை முதலான பலவற்றில் நாட்டுக்கு நாடு வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவை தவிர, நாட்டுக்குள்ளும், காலத்துக்குக் காலமும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

முறைசார்ந்த கல்விக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் யாவை?
* போட்டித் தன்மை வாய்ந்தது.
* தேசிய மற்றும் தனியாள் தேவைகளுக்குப் பொருத்தமற்றது
* பரீட்சையை மையமாகக் கொண்டது
* ஏட்டுக் கல்விச் சார்பை அதிகம் கொண்டது.

முறைசாராக் கல்வியை எவ்வாறு வரையறை செய்யலாம்?
பிலிப் கூம்ஸ் என்பவரின் கூற்றின் படி, சனத்தொகையின் உபகுழுவாகிய வயதுவந்தோர் மற்றும் பிள்ளைகளுக்காக முறைசார்ந்த கல்வி முறைக்குப் புறம்பான வகையில் தெரிவு செய்யப்பட்ட யாதேனும் கற்றலை விசேடமாக வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் முறைமைப்படுத்தப்பட்ட ஒழுங்கமைப்பின் கல்வி செயன்முறைகளனைத்தும் முறைசாராக் கல்வி எனப்படும்.

முறைசாரக் கல்வியின் விசேட பண்புகள் யாவை?
* பாடசாலை முறைமைக்கு புறம்பாகச் செயற்படுதல்.
* பாடசாலையில் இருந்து இடை விலகியோர் / பாடசாலை கல்வியைப் பூர்த்தி செய்தோர் / பல்வேறு தொழில்களில் ஈடுபடுவோர் போன்ற அனைவருக்குமாக நடைமுறைப்படுத்தப்படுதல்.
* வயது வரையறையின்மை (பெருமளவிற்கு) காணப்படல்.
* கல்வி பெறுவோரின் தேவைக்கு ஏற்றதாய் வழங்கப்படல்..
* குறுங்காலத்தைக் கொண்டது.
* நுட்ப முறைகளைக் கொண்டதாகவும், கூடுதலாகப் பயிற்சி அனுபவங்களாகவும் விளங்குதல்
* நெகிழ்வுப் போக்குக் காணப்படல்.
* பல்வேறு நிறுவனங்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுதல்

இலங்கையில் முறைசாராக் கல்வியை வழங்கும் பிரதான அமைப்புக்கள் யாவை?
(1) அரச நிறுவனங்கள்
(2) அரசோடு இணைந்த நிறுவனங்கள்
(3) அரசு சாரா நிறுவனங்கள்

கட்டுரைகள்

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் அறிமுகம் 21 ஆம் நூற்றாண்டின் சகாப்தம் பெரும்பாலும் ஒரு தொழில்நுட்ப சகாப்தமாககருதப்படுகிறது. தொழில்நுட்பம், இன்று மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.எங்கள்...

 சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் "பனிப்போர் காலம் முடிவடைந்தது உலகம் ஒரு ஒழுங்கில் அமெரிக்கா தலைமையில் பயணிக்க ஆரம்பிக்கின்றது. இந்த ஏகாதிபத்தியம் தனக்கு விசுவாசம் உள்ள கல்விமுறையினை...

வாழ்க்கைமுறை

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம்...

சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

ரதிகலா புவனேந்திரன்நுண்கலைத்துறைகிழக்குப் பல்கலைகழகம்.   வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள்...

குருந்தூர் மலையில் கிடைத்திருப்பதுஎண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாராலிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர்கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன்...

உளவியல்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும்...

- கி.புண்ணியமூர்த்தி- பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click