சண்முகலிங்கம் தேவமுகுந்தன்
"ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள், கண்டுபிடித்தலும் கண்டறிதலும் முதலான திறமைகள், நேர்மை சகிப்புத்தன்மை, மனித கௌரவத்தைக் கண்ணியப்படுத்தல் ஆகிய விழுமியங்கள் இந்த தேசிய குறிக்கோளின் 1ம், 5ம் இலக்கு வலியுறுத்துகின்றது. எனவே இங்கே பாடசாலையில் கலைத்திட்ட வடிவமைப்பு இதை அடியொற்றியே இடம்பெற வேண்டும். அதையே ஆசிரியர்கள் செய்கிறார்கள்."
இலங்கையில் ஆசிரியர்கள் கலைத்திட்டத்தை வடிவமைப்பதிலும் உருவாக்குவதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் சகல மட்டங்களிலும் தங்களின் பங்களிப்பினை வழங்கி வருகின்றனர். கலைத்திட்ட தயாரிப்புக்கு பொறுப்பாக விளங்கும் தேசிய கல்வி நிறுவகத்தில் ஆசிரியர்கள் தங்களின் நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றமை ஆசிரியர் வழிகாட்டி ஊடாக காணக்கூடியதாக உள்ளது.
பாடசாலைக்கு வெளியே கலைத்திட்டத் தயாரிப்பு இடம்பெற்றாலும் அதனை மாணவனுக்கு சென்றடைய வைப்பதில் ஆசிரியர்களுக்குப் பெரும்பங்குண்டு, அதற்கான இடம் உண்டு என்கிறார் தேசிய கல்வி நிறுவக பிரதம பணிப்பாளர். “பொருத்தமான கற்றல் கற்பித்தல் முறைகளை திட்டமிடுவதற்கான வாய்ப்பு பூரண சுதந்திரம் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.”
ஆசிரியர் பாடசாலையில் கலைத்திட்டத்தை வடிவமைக்கும் போது பின்வரும் விடயங்களைக் கவனத்திற் கொண்டு கலைத்திட்ட வடிவமைப்பினை மேற்கொள்கின்றனர். எட்டு வகையான தேசிய இலக்குகளும் அடிப்படைத் தேர்ச்சிகள் ஏழும், பாடசலையின் பணிக்கூற்று, நோக்கக்கூற்று, சர்வதேச பொருளாதார கல்வி நிலைகள் அடியொற்றியே கலைத்திட்ட வடிவமப்பை ஆசிரியர்கள் செய்கிறார்கள். செய்ய வேண்டும்.
உதாரணமாக தொடர்பாடற் தேர்ச்சியை எடுத்துக் கொண்டால், தொடர்பாடற் தேர்ச்சியின் நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டது.
· எழுத்தறிவு
· எண்ணறிவு
· சித்திர அறிவு
· தகவல் தொழில்நுட்ப அறிவு
இந்த தேர்ச்சியை அடைய மொழியைக் கற்பிக்கும் தாய்மொழியிலும், இரண்டாம் மொழியிலும், தகவல் தொழில்நுட்ப பாடத்திலும் மாணவரிடம் சென்றடைய கலைத்திட்ட வடிவமைப்பு இடம்பெற வேண்டும்.
21ம் நூற்றாண்டில் பின்வரும் நடத்தை மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என கலைத்திட்ட மறுசீரமைப்பு வலியுறுத்துகின்றது. அறிதல் ஆட்சியில் இருந்து விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றம் காரணமாக பழைய அறிவின் இடத்தில் புதிய அறிவு தோன்றியுள்ளது. அறிவு ஒரு பொருளாதார வளமாக பார்க்கப்படுகின்றது. மனன கலாசாரத்திலிருந்து படைப்பாக்க, விரி சிந்தனை உள்ளவராக மாற்றம் அடைய வேண்டும். (நாடகமும் அரஙகியல் ஆசிரியர் வழிகாட்டி தரம் - 10)
பின்வரும் திறன்களை மாணவர்கள் அடைந்து கொள்ளக்கூடிய வகையில் கலைத்திட்டத்தை வடிவமைக்கிறார்கள்.
· தாமாக முன்வந்து தொடங்கும் மனப்பாங்கு
· தீர்மானம் எடுக்கும் மனப்பாங்கு
· பிரச்சினை தீர்க்கும் வல்லமை
· முரண்பாடுகளை முகாமை செய்தல்
· தாக்கவன்மையான தொடர்பாடல்
· குழுவாக பணியாற்றும் இயலுமை
· தலைமை தாங்கும் பண்பு
· மொழி அறிவு
இந்த திறன்களை தேர்ச்சிகள் ஏழில் இரண்டாவது தேர்ச்சி வலியுறுத்துகின்றது.
ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள், கண்டுபிடித்தலும் கண்டறிதலும் முதலான திறமைகள், நேர்மை சகிப்புத்தன்மை, மனித கௌரவத்தைக் கண்ணியப்படுத்தல் ஆகிய விழுமியங்கள் இந்த தேசிய குறிக்கோளின் 1ம், 5ம் இலக்கு வலியுறுத்துகின்றது. எனவே இங்கே பாடசாலையில் கலைத்திட்ட வடிவமைப்பு இதை அடியொற்றியே இடம்பெற வேண்டும். அதையே ஆசிரியர்கள் செய்கிறார்கள்.
ஓவ்வொரு ஆசிரியரும் பாடத்தின் வெவ்Nறு பகுதிகளில் கலைத்திட்ட வடிவமைப்பினை செய்கின்றபோது இதனை அடிநாதமாகவும் நரம்பிழையாகவும் கொண்டு வடிவமைக்கின்ற போது பொது தேசிய இலக்குகளும், பாடத்தேர்ச்சிகளம் அடிப்படைத் தேர்ச்சிகளும் மாணவரிடம் நடத்தையாக பரிணமிக்கின்றது. பாடசாலைகளில் ஆசிரியர்கள் கலைத்திட்ட வடிவமைப்பிற்கான இடம் காணப்படுகின்றது. எனவே அதனை ஆசிரியர்கள் முழுமையாக விளங்கிக்கொண்டு பாடவிதானம் தயார் செய்யும் ஆசிரியர் அடைவு பற்றிய தெளிவோடு தனது கடமையை செய்கின்றார்.
கலைத்திட்ட வடிவமைப்பு தனியே வகுப்பறைக்குள்ளே மட்டுமே உள்ளடங்கிய ஒன்றல்ல. அது வகுப்பறைக்கு வெளியேயும் வடிவமைக்கப்பட வேண்டும். வடிவமைக்கிறார்கள்.
· களப்பயணம்
· சுற்றுலா
· கல்விக் கண்காட்சி
· விவாதப் போட்டி
· நாடகப் போட்டி
“Experience outside the class room contributed significantly to staying safe”
“ Memorable activities led to memorable learning”
இதுவரை உலகம் சந்தித்த நிலைமைகளில் உலகம் மிகவும் வேகமான மாற்றத்தினை பெற்றிருக்கின்றது. இளையவர்களுக்கான வேலைவாய்ப்புப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. அதனைக் கல்வியினால் மட்டுமே சரிசெய்ய முடியும். மாற்றமும் சவாலும் உலகெங்கும் பரந்துள்ளது.
தொழில் நுட்பத்தின் மாற்றம் தொழிற் துறை மீதும் சமூகத்தின் மீதும் தாக்கத்தை செலுத்துகின்றது. மேற்கத்தேயத்தின் அரசியல் செல்வாக்கு பொருளாதார நிலைமை, சமூக பொருளாதார நிலைமை, காலநிலை மாற்றங்களை விளங்கிக் கொண்டு கலைத்திட்ட வடிவமைப்பில் பின்வரும் திறன்களை உள்ளடக்கி வடிவமைக்கிறார்கள்.
Be creative
Be Literate numerate
Solve problem
Work together in teams
Hone a global perspective
Show initiative
Be a life long learner
மாணவர்களிடம் 4C யை விருத்தி செய்ய வேண்டும்.
Creativity
Communication
Problem solving
Critical thinking
இவ்வாறான வரையில் இலங்கையில் ஆசிரியர்கள்; கலைத்திட்ட வடிவமைப்பில் பங்களிக்கின்றனர்.
கலைத்திட்ட வடிவமைப்பில் மாணவர்களுடன் மிக அண்மித்தவர்களாக நெருக்கமானவர்களாக ஆசிரியர்கள் காணப்படுவதனால் அவர்களது தேவைகள் புரிந்து கொள்ளவும் அதற்கேற்ப துலங்குபவர்களாக
ஆசிரியர்கள் விளங்குகின்றனர். Messick and Reynolds 1991 கலைத்திட்டத்தில் பல்வேறு வகிபாகங்களை ஆசிரியர்கள் வகிக்கின்றனர்.
ஆசிரியர்கள் கலைத்திட்டமிடுதலில் ஆசிரியர்கள் பங்களிப்பு காணப்படுகின்றது. கலைத்திட்ட வடிவமைப்பாளர்கள் கொண்டிருக்க வேண்டிய திறன்களை ஆசிரியர்களும் கொண்டிருக்கிறார்கள். கலைத்திட்ட உள்ளடக்கங்களை சீரமைப்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானது. கலைத்திட்ட வல்லுநர்களுடன் கூட்டாகவும் வினைத்திறனாகவும் பணியாற்றுவதன் மூலம் பாடப்புத்தகங்களை ஒழுங்கமைக்கிறார்கள். (alsubaie, 2016).
கலைத்திட்டத்தில் உள்ள போதமைகளையும் குறைகளையும் உணர்த்தி உருவாக்குபவர்களாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர். மாறிவரும் சமூக பொருளாதார சூழ்நிலைக்கேற்ப ஆசிரியர்கள் கலைத்திட்ட வடிவமைப்பை மேற்கொள்கின்றனர். “ஆசிரியர்களால் மட்டுமே கலைத்திட்டத்தின் இலக்குகளை முன்னெடுப்பதை உறுதிசெய்பவராக இருக்கிறார். . (Olivia 1992)
பல கலாசாரத்தைக் கொண்ட பாடசாலையில் அதற்கேற்ற விதத்தில் கலைத்திட்டத்தை ஆசிரியர்கள் வடிவமைக்கிறார்கள். இலங்கை அவ்வாறான நாடு எனும் வகையில் மற்ற இன,மத கலாசாரத்தினை மதித்து கலைத்திட்டத்தை வடிவமைக்கிறார்கள். தனியே தனது பாடத்தை மட்டும் கருத்தில் கொள்ளாது பிற பாடங்களையும் கருத்தில் கொண்டு நேராகவும் கிடையாகவும் அதனை வடிவமைக்கிறார்கள்.
உசாத்துணை
· நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் வழிகாட்டி தரம் 10, அழகியல் கல்வித்துறை, தேசிய கல்வி நிறுவகம், இலங்கை - 2016.
· புவியியல் : ஆசிரியர் வழிகாட்டி தரம் 11, சமூக விஞ்ஞானத்துறை மொழிகள், மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீpடம், தேசிய கல்வி நிறுவகம், இலங்கை 2015.
- Brain, M and Mick, W The Secondary Curriculum Design Hand book. Prefaring young people for their futures.