சபா. ஜெயராசா
அண்மைக்காலத்தைய கல்வி உளவியலிலும், சிறார் உளவியலிலும், "தாழ்வு அடைவு நிலையை (Underachievement) அடையும்மாணவர்கள் சிறப்புக் கவனத்துக்கும் உற்றுநோக்கலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் “தாழ்வு அடைவு நிலை” என்ற எண்ணக்கருவை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
தாழ் அடைவினை விளக்கும் முதலாவது எண்ணக்கரு நுண்மதிஈவுடன் தொடர்புபடுத்தி அதனைக் கட்டமைப்புச் செய்கின்றது. இதில் அடிப்படையான பிரச்சினை ஒன்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. “நுண்மதி ஈவுத் தேர்வுகள் ஒருவரது உள்ளார்ந்த ஆற்றல்களை அல்லது ஆற்றலுடன் இணைந்த உளப்பாங்கினைக் கண்டறிவதற்கென வடிவமைக்கப்பட்டதேயன்றி அடைவுகளைக் கண்டறியும் தேர்வுகள் அல்ல என்பதை முதற்கண் வலியுறுத்த வேண்டியுள்ளது. ஆனால் ஒரு மாணவரின் உள்ளார்ந்த ஆற்றலின் இருப்பையும் வெளிப்பாட்டுத் துலங்கல் நடத்தைகளையும் தருக்க பூர்வமாகப் பிரித்தறிதல் சாத்தியமற்றது என்ற விவாதங்களும் தொடர்ந்த வண்ண முள்ளன. (Gross, 2001)
தாழ் அடைவினைத் தனிநபருடன் தொடர்புபடுத்தாது குழுவின் தோற்றப்பாடுகளுடன் இணைத்துப் பார்த்தலும் உளவியலிலே வளர்ச்சி பெறத் தொடங்கியுள்ளது. சமூகத்திலே பல்வேறு காரணிகளாலும் பிரதிகூலம் அடைந்தவர்களை தாழ் அடைவு கொண்டவர்கள் எனக் குறித்துரைத்தலும் எதிர்மறைநிலையில் வளர்ச்சியடையத்தொடங்கியுள்ளது, இது தனியாளைக் குறித்துரைக்காது, குழுவைக் கூட்டு மொத்தப்படுத்தும் "எளிமையான” நடவடிக்கையாகின்றது. இந்த நடவடிக்கையின் பின்னால் சமூக அதிகார முறைமை மேலோங்கியிருத்தலையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இந்நிலையில் தாழ் அடைவுகள் என்ற எண்ணக்கரு விசாரணைக்குரிய பிரச்சினையாக (Problematic) மாற்றமுறுவதைக் காணமுடிகின்றது. இதேவேளை ஆசிரியர்கள் தாழ் அடைவுகளையும் கீழான அடைவுகளையும் (Low achievement) ஒன்றாகக் கருதலும் மாணவர் தொடர்பான அறிகை நிலையைத் திரிபடையச் செய்கின்றது.
ஆழ்ந்து நோக்கும் பொழுது தாழ் அடைவு என்பது பல வேர்களையும் பலமுகங்களையும் கொண்டஓர் எண்ணக்கரு என்பதை மனங்கொள்ள வேண்டியுள்ளது. தாழ்ந்த வருமானம், வேலையின்மை தாழ்ந்த திறன்கள், தாழ்ந்த நிலையில் உள்ள இல்லக் கட்டமைப்பு, பின்தங்கிய நிலையில் உள்ள உடல் நலமும், உடல் நல வசதிகளும், குடும்ப உடைவுகள், குற்றமிழைக்கும் சூழல், அதிகாரத்தின் அழுத்தங்கள் முதலியவற்றோடு தாழ்ந்த அடைவுகள் தொடர்புகள் கொண்டுள்ளன. இளைஞர்கள் எதிர்நோக்கும் பன்முகமானதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதுமான பிரச்சினையாக (Johnston (200) et.at, 3) இது உருவெடுத்துள்ளது.
உள் இலண்டன் கல்வி அதிகார சபையினர் (ILEA) மாணவரிடத்துத் தாழ்ந்த அடைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஏழுபின்னணிக் காரணிகளைக் கண்டறிந்துள்ளனர். (ILEA, 1990) அவையாவன.
வறுமை - இலவச பாடசாலை உணவுக்குத் தகுதியுடைமை. பெரிய குடும்பம். ஒற்றைப் பெற்றார் குடும்பம். திறன் குறைந்த தொழில்களைக் கொண்ட பெற்றோர். மாணவரின் நடத்தை ஆங்கில மொழியாற்றல் போதாமை இனக்குழுமப் பின்புலம்.
இவற்றில் பெரும்பாலான காரணிகள் இலங்கைச் சிறார்களுக்கும் பொருந்துவதாகவே காணப்படுகின்றது.
ஒரு மாணவரின் தாழ் அடைவு நிலையை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்கின்றோம் என்பது அடுத்து முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த விளக்கம் பின்வரும் தொகுதிகளாகக் கட்டமைப்புச் செய்யப்படுகின்றது.
1. தனியாள் காரணிகள்:
நுண்மதி, மனோபாவம், ஊக்கல் நிலவரங்கள், தன்னைப் பற்றிய கணிப்பு, பால்நிலை, உடற் காரணிகள் முதலியவை இதில் அடங்கும்.
2. குடும்பக் காரணிகள் :
குடும்பக்கட்டமைப்பு, பெற்றோரின் கல்விமட்டம், குடும்பத்தின் சமூக பொருளாதார அந்தஸ்து, பெற்றோரின் ஈடுபாடு முதலியவை இப்பிரிவில் இடம்பெறும்.
3. சமூகக் காரணிகள் :
சமூகவர்க்கம், சமூகநிலை, இனக் குழுமநிலை, பால்நிலை குடும்பம் அமைந்துள்ள முதலாம் காரணிகள் இதில் அடங்கும்.
4. பாடசாலையின் இயல்புகள் :
பாடசாலைக் கட்டமைப்பு, கலைத்திட்டச் செயற்பாடு, பாடசாலையின் மாணவர் மற்றும் ஆசிரியர்களின் இயல்பு, சகபாடிகளின் விலைகள் முதலியவை இப்பிரிவில் உள்ளடங்கும்.
தாழ்ந்த அடைவு நிலை தனியாள் நிலையிலும், தேசிய நிலையிலும் தொடர்ந்து தாக்கங்களை ஏற்படுத்தும் செயல்முறையைக் கொண்டுள்ளது. உயர்கல்வியைத் தொடர்வதற்குத் தடைகளை எதிர்கொள்ளல், அரச மானியங்களை எதிர்பார்த்தல், திறன் குறைந்த தொழில்களுக்குச் செல்லல், தாழ்ந்த அந்தஸ்தைப் பெறுதல், வாழ்க்கை நீட்சிக்கான கல்வி பாதிக்கப்படுதல், வீழ்ச்சியடைந்து செல்லும் அவலச் சுழற்சிக்கு உள்ளாக்கப்படுதல் முதலியவை தாழ்ந்த அடைவுகளின் பிற்காலத்தைய விளைவுகளாக வளர்ச்சியடைகின்றன.
தாழ்ந்த அடைவுக்கும் பால் நிலை வேறுபாட்டுக்குமுள்ள தொடர்புகள் பற்றிய விவாதம் அண்மைக்காலமாக மேலோங்கி வருகின்றது. இலங்கையில் இவை இரண்டுமிடையேயுள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுகள் பேராசிரியை சுவர்ணா ஜயவீரா அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. பாடத் தெரிவுகளிலே ஆண் பெண் வேறுபாடுகள் துலக்கமாகத் தெரிகின்ற வேளை அடைவுகளைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் நகரப் பகுதிகளிலே காணப்படவில்லை என்பது அவரது ஆய்வுகளின் பெறுபேறாகக் காணக்கூடியதாகவுள்ளது.
இங்கிலாந்தில் முன்பள்ளி நிலை, ஆரம்பநிலை, இடைநிலை முதலியவற்றில் தாழ் அடைவுக்கும், பால்நிலைக்குமுள்ள தொடர்புகள் விரிவாக ஆராயப்பட்டுள்ள ன. (Anne west and pennell, (2003) pp54-79) முன்பள்ளி நிலையில் அங்கே ஆண் பெண்வேறுபாடுகள் துலக்கமாகத் தெரிகின்றன. பெண் சிறுமிகள் அறிகை அடைவு கொண்டவர்களாகக் காணப்படுகின்றார்கள். பெண் சிறுமிகளின் முதிர்ச்சி வேகமாக நிகழ்வதால் இந்தத் தோற்றப்பாடு காணப்படுகின்றது. இதே தோற்றப்பாடு ஆரம்பப்பாடசாலையில் தொடர்ந்து செல்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இடைநிலைமட்டத்தில் பதின்நான்கு வயதுடையவர்களின் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் முதலாம் உள்ளீட்டுப் பாடங்களின் அடைவுமட்டங்களை ஆராய்ந்தவேளை பெண்களின் அடைவுமட்டம் ஆண்களின் அடைவுமட்டங்களை ஆராய்ந்த வேளை பெண்களின் அடைவுமட்டம் ஆண்களின் அடைவு மட்டத்தை விட மேலோங்கியிருத்தலும் கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை உயர்கல்விப்பாடத் தெரிவுகளைப் பொறுத்தவரை ஆண் பெண் வேறுபாடுகள் காணப்படுகின்றன. மருத்துவம், தாதியரியல், மொழி, கல்வி முதலாம் துறைகளில் பெண்கள் கூடுதலாகவும், பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை முதலாம் துறைகளில் ஆண்கள் கூடுதலாகவும் கல்வி பயில்கின்றனர்.
முன்பள்ளி மற்றும் ஆரம்ப நிலை மாணவர்களின் தாழ்வு அடைவில் சேரும் வயது வேறுபாடு மாத வேறுபாடு ஒரு செல்வாக்குச் செலுத்தும் முக்கிய காரணியாக இருத்தல் கண்டறியப்பட்டுள்ளது. (Sammons, et.al (1999) ஒப்பீட்டளவில் வயது கூடிய சிறார்களின் அறிகை நிலை அடைவுகள் உயர்ந்தும் வயது குறைந்த மாணவரின் அடைவுகள் பின்தங்கியும் காணப்படுகின்றன. இதற்கு முதிர்ச்சி நிலை வேறுபாடுகளே பின்புலக்காரணிகளாகவுள்ளன.
இடம் மாறுதலும், பாடசாலைகளை மாற்றிக் கொள்வதும் தாழ் அடைவுகளை ஏற்படுத்தும் காரணிகளாகவுள்ளன. இலங்கையில் கிராமப்புறத்துப் பாடசாலைகளிலே பயின்று ஐந்தாம் ஆண்டு சித்தி பெற்று நகரப் பாடசாலைகளுக்குச் செல்லும் சிறுவர்களுக்கு தாழ் அடைவுத் தாக்கம் ஏற்படுதல் கண்டறியப்பட்டுள்ளது. இது "அசைவியத்தால்” ஏற்படுத்தப்படும் தாக்கம் என்று கூறப்படும்.
தாழ்ந்த வருமானம் கொண்ட சூழலில் வாழும் சிறாரின் வரவு ஒழுங்கு பாதிக்கப்படுதல் உண்டு. வரவு ஒழுங்கு பாதிக்கப்படுதல் தாழ்வு அடைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன.
தாழ்ந்த அடைவுகளைக் கொண்ட மாணவர்களை மீட்டெடுப்பதிற் பாடசாலைகளின்பங்களிப்பு முக்கியமானது என்பதை மனங் கொள்ளல் வேண்டும்.
இவ்வேளையிலே வினைத்திறன் கொண்ட பாடசாலையின் பரிமாணங்களை இனங்காணுதல் அவசியமாகின்றது. கல்வியியல் நோக்கிலே வினைத்திறன் கொண்ட பாடசாலைக்குரிய பரிமாணங்கள் பின்வருமாறு இனங்காணப்பட்டுள்ளன:
1. வாண்மைத் தலைமைத்துவம்
2.பங்கீடு செய்து பொறுப்பேற்கக் கூடிய நோக்கங்களும் இலக்குகளும்.
3.நேர்முகமான கற்றற் சூழல்.
4.கற்றலிலும் கற்பித்தலிலும் உயர்ந்த வினைத்திறனை ஏற்படுத்துதலும் தாழ் அடைவுகள் மீது கவனம் செலுத்துதலும்.
5.தெளிவும், கட்டமைப்புச் செய்யப்பெற்றதும், இசைவாக்கம் கொண்டதுமான கற்பித்தற் செயற்பாடுகள்.
6.உயர்ந்த எதிர்பார்ப்புக்களை உருவாக்குதலும், நுண்மதிசார்ந்த
அறைகூவல்களை விடுத்தலும்.
7.நேர் முகமான மீள வலியுறுத்தல்.
8.முன்னேற்றங்களை நெறிகை செய்தல் (Monitoring Progress)
9. மாணவரின் தற்கணிப்பை மேம்படுத்தி, பொறுப்புக்களை ஏற்கச்
10.செய்தல். கற்றலில் பெற்றோரதும், சமூகத்தினதும் பங்குபற்றலையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துதல்.
11. பாடசாலை மட்ட ஆசிரிய வள மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
12. அகத்திலும் புறத்திலும் தோன்றும் எதிர்மறைத் தலையீடு - களுக்கு இடமளிக்காதிருத்தல்.
13.கற்றலுக்குரிய ஆதரவு அலகுகளை (Learning Support units) ஏற்படுத்திக் கொடுத்தல். 14.கற்றலை மேம்படுத்துவதற்குரிய அறிவாற்றுனர்களின் (Mentors) சேவைகளை வழங்குதல்.
எமது சூழலில் மீத்திறன் கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பும், அனுசரணையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் பெற்ற அளவுக்குத் தாழ் அடைவுகள் கொண்டவர்களுக்கான கவனக்குவிப்பு ஒப்பீட்டளவிலே போதாமலிருத்தலைச் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. தாழ் அடைவுகளைக் கொண்ட மாணவர்களை மேலுயர்த்திச் சாதனை செய்யும் ஆசிரியர்களுக்கும் பாட சாலைகளுக்கும் சிறப்பான ஊக்கு' விப்புக்களை வழங்கும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவையைச் இச்சந்தர்ப்பத்திலே குறிப்பிட்டுக் கூறவேண்டியுள்ளது.
மாணவரின் அடைவுகள் பற்றிய மீளாய்வு
பேரா. சபா. ஜெயராசா
கல்வியியல்துறை, 4யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம்
அண்மைக்காலத்தைய கல்வி உளவியலிலும், சிறார் உளவியலிலும், "தாழ்வு அடைவு நிலையை (Underachievement) அடையும்
மாணவர்கள் சிறப்புக் கவனத்துக்கும் உற்றுநோக்கலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் “தாழ்வு அடைவு நிலை” என்ற எண்ணக்கருவை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.