உளவியல்
- Details
- Category: உளவியல்
திரு. ச. அல்பேட் றீகன்
BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL).
“உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி செய்யவும், பிரச்சினைகளை வளர்ச்சி தரும் முறையில் கையாளவும், தனது ஆளுமையையும், உறவுகளையும் மேம்படுத்தவும் நெறிப்படுத்துதல் உள ஆற்றுப்படுத்தல் ஆகும்.”
உளவளத்துணையின் வெற்றியில் கணிசமான பங்களிப்பு செலுத்தும் காரணிகளில் உளவளத்துணையாளரின் பண்புகள் மிக முக்கியபங்குவகிக்கின்றன. உளவளத்துணையில் ஈடுபடும் ஒரு உளவளத்துணையாளர் துணைநாடுநர்களை விளங்கிக் கொள்ளவும் அவர்களது பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொள்ளவும் ஓர் தொழில்வாண்மை மிக்க உளவளத்துணை சேவையை வழங்குவதற்கும் சிறந்த பண்புகள் மற்றும் திறன்கள் என்பன மிக அவசியமாகின்றன. உளவளத்துணைக்கான வரைவிலக்கணத்தை பிரிட்டிஷ் உளவளத்துணை சங்கம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
- Details
- Category: உளவியல்
சபா.ஜெயராசா
ஓய்வுநிலை பேராசிரியர்
சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு நிறுவனங்களின் செயற்பாட்டாளர்களும் மேற்கொள்ளும் ஓர் அபத்தமான நிலை மேலோங்கி வருகின்றது. அவர்கள் எழுதிவரும் கட்டுரைகளிலும் ஆய்வுகளிலும் தமிழ் மரபில் இடம்பெற்ற சீர்மியம் பற்றிய குறிப்புக்கள் அற்ற வெற்றிடங்களே காணப்படுகின்றன.
- Details
- Category: உளவியல்
சபா.ஜெயராசா
ஓய்வுநிலை பேராசிரியர்
உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக வடிவமாகவும் அது அமைந்துள்ளது. அத்தகைய இறுகிய பிடியிலிருந்து விடுபட்டு மாற்று உளவியலைக் கட்டியெழுப்புதலே உற்றறி உளவியல், விடுதலை உளவியல் (LIBERATION PSYCHOLOGY) எதிர் உளவியற் சிகிச்சையியல் (ANTI PSYCHIAITRY) ஆகியவற்றின் நோக்கமாகும் அதிகாரத்துக்குச் சேவை செய்வதில் இருந்து உளவியல் விடுவிக்கப்பட வேண்டும். என்பது மாக்சியத்தின் முன்மொழிவு.
- Details
- Category: உளவியல்
தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது.
- Details
- Category: உளவியல்
- கி.புண்ணியமூர்த்தி-
பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு பாலாருக்கும் 11 இற்கும் 14 இற்கும் இடைப்பட்ட வயதுகளில் ஆரம்பித்து 18 இற்கும் 21 இற்கும் இடைப்பட்ட வயதுகளில் முடிவடையும். இப் பருவம் பொதுவாகப் புயல்வீசும் பருவம் என்றே அழைக்கப்படுகிறது. இதனைப் பின்வருமாறு பாகுபடுத்திக்கொள்ளலாம்.
- Details
- Category: உளவியல்
- ஜி.ஞானவேல்முருகன்-
"ஆட்டிசம் ஒரு குறைபாடுதானே தவிர மனநோய் அல்ல” இந்தக் குழந்தைகள் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பார்கள். தங்களுக்கென்று தனி உலகத்தை உருவாக்கி அதிலேயே மூழ்கியிருப்பார்கள். பெரும்பாலான பெற்றோரிடம் சகிப்புத் தன்மையும், விழிப்புணர்வும் இல்லாததால் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அப்படியே விடப்படுகின்றனர்.
- Details
- Category: உளவியல்
- தொகுப்பு: க.கதிரவன்-
ஆட்டிசம் ஏற்படுவதற்கான காரணங்கள்
மன இறுக்கம்(Autism spectrum disorder- ASD) அல்லது ஆட்டிசம் என்பது மூளை மற்றும் சிக்கலான நரம்பு வளர்ச்சிக் கோளாறுகளின் தொகுதியாக உள்ளது. மன இறுக்கம் உடைய சிறுவர்கள் பிறரோடு தொடர்பு கொள்ளவும், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்ளவும் சிரமப்படுவார்கள்.
- Details
- Category: உளவியல்
- எஸ்.எல்.மன்சூர்-
கற்றலில் இடர்பாட்டினை ஏற்படுத்துகின்ற பல்வேறு வடிவங்களில் ஒன்றாக கருதப்படுகின்ற ஆட்டிசம் அதாவது மன இறுக்க நோயைப் பற்றிய அறிவினை ஆசிரியர்களும், பெற்றோரும் அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.
- Details
- Category: உளவியல்
சாரா ராஜ்
நவீன உலகில் கவலை மற்றும் மன அழுத்தத்தின் அளவு கொரோனா தொற்றுநோயின் விளைவாக மனநல விவாதங்கள் நீண்ட காலத்திற்கு பிறகு கவனத்தைப் பெற்றுள்ளன. பெரியவர்களின் மனநலக் கோளாறுகள் இப்போது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, கடுமையான கவலைகளுடன் ஆராயப்படுகையில், சிறு குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடையே இதேபோன்ற கவலை மற்றும் மனச்சோர்வு பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுகின்றன.