- Details
- Category: சமூகம்
தொழில் வழிகாட்டல் என்பது ஒரு தனிநபர், தொழில் உலகத்தினுள் தமது வகிபங்கினை அறிந்து கொள்வதற்கும், தன்னை பற்றிய சுயநம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், தனக்கும் சமூகத்திற்கும் பயனளிக்ககூடிய தொழிலை திருப்தியாக செய்வதற்கும் உதவும் செய்முறையாகும்”
- Details
- Category: சமூகம்
கொரோனா வைரஸிலிருந்து தப்பிப்பதற்கு ‘சமூகத் தடுப்பாற்றல்’தான் (herd immunity) முக்கியமான வழி என்றே சொல்லப்பட்டுவருகிறது. போதுமான அளவு மக்களுக்குத் தடுப்பூசி போட்டால் – அதாவது 60%-லிருந்து 70% வரையிலான மக்களுக்கு – வைரஸால் அதற்கு மேல் பரவ முடியாமல் போகலாம் என்று சொல்லப்பட்டது.
- Details
- Category: சமூகம்
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன், ‘மூன்றாம் அலையும் வரப்போகிறது; அது குழந்தைகளைத்தான் அதிகம் தாக்கப்போகிறது’ என்று ஊடகங்களில் வலியுறுத்திப் பேசியதைத் தொடர்ந்து, பொதுச் சமூகத்தில் மூன்றாம் அலையைப் பற்றிய அச்சம் பரவிவருகிறது.
- Details
- Category: சமூகம்
கலாநிதி க.சுவர்ணராஜா
ஓய்வுநிலை பீடாதிபதி
குடும்ப தலைமைத்துவம் என நாம் நோக்கும் போது குடும்ப தலைமைத்துவமானது பெற்றோர்களினால் குடும்பத்தின் மீது செலுத்தப்படும் அர்த்தப்பூர்வமான ஆழ்ந்த ஈடுபாட்டினையும், வழிநடத்தல்களையும் குறித்து நிற்கின்றது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் அனைத்து நலன்கள் தொடர்பாகவும், தேவைகள் செயற்பாடுகள் தொடர்பாகவும் தீர்மானமெடுத்தலையும், இது தொடர்பாக சரியான தொடர்புபடுத்தல்களையும், ஒருங்கிணைப்புகளையும் மேற்கொண்டு பிள்ளைகளின் இலட்சியங்களை நிறைவேற்ற உதவுவதை குடும்பத் தலைமைத்துவம் எனலாம்.
- Details
- Category: சமூகம்
கலாநிதி க.சுவர்ணராஜா
ஓய்வுநிலை பீடாதிபதி
கட்டிளமைப்பருவம் என்பது மனித வாழ்க்கையில் மிகவும் சுவாரஸ்யமான பருவமாகும். பல்வேறு தேவைகள், பல்வேறு எதிர்பார்ப்புக்கள், பல்வேறு சந்தர்ப்பங்கள் என்றவாறு பரிணமிக்கும் இப்பருவம் மனித வாழ்க்கையின் அர்த்தத்தை அடைவதற்காக உயரிய இலட்சியங்களை நிறைவேற்றுவதற்காக சாதனைகளின் சிகரங்களைத் தொடுவதற்காக தன்னை முழுமையாக வெளிப்படுத்தி அழுத்தமான அடையாளங்களைப் பதிப்பதற்காக தன்னை சமூகத்துடன் பிணைத்துக் கொள்வதற்காக ஆரம்பிக்கும் பயணத்தின் அத்திவாரமே இப்பருவமாகும்.
- Details
- Category: சமூகம்
2025-லேயே இந்தியா உலகின் அதிக மக்கள் வசிக்கும் நாடாகிவிடும் என்றிருக்கிறார்கள்! சீனாவின் ஆறாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சமீபத்தில் வெளியானது. இந்தக் கணக்கெடுப்பில் சீனாவுக்கு நிறைய செய்திகள் இருந்தன. கொண்டு கூட்டிப் பொருள் கொண்டால் அதில் இந்தியாவுக்கும் செய்திகள் உண்டு. இந்தக் கணக்கெடுப்பின்படி சீனாவின் மக்கள்தொகை 141 கோடியைத் தாண்டிவிட்டது.
- Details
- Category: சமூகம்
எஸ்.சுஜாதா
‘நான் மருத்துவ உதவி தேவைப்படுபவளாக இருந்தாலும் மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது’ என்று நான் சொன்ன பதில், எனக்குப் பட்டத்தைத் தேடித் தந்தது”
- Details
- Category: சமூகம்
டாக்டர் கல்யாணி நித்யானந்தன்.
இந்த கொரோனா காலத்தில் தினசரி வாழ்க்கையே சிக்கலாக இருக்கிறது. இரவில் படுக்கையில் சாய்ந்து, விளக்கை அணைத்தேன். கண்ணை மூடினால் உறக்கம் வந்தால்தானே? மனதில் ‘மெஷின்’ ஓடுகிறது. தாறுமாறாக எண்ணங்கள், இடியாப்பச் சிக்கலாக, பூனைக் குட்டியின் கைகளில் சிக்கிய நூல் கண்டாக இருக்கின்றன. பயம், குழப்பம், எதிர்மறை எண்ணங்கள். ஹும்.. இது உதவாது என்று எழுந்து உட்கார்ந்தேன்.
- Details
- Category: சமூகம்
கு.கணேசன்
உணவை விரயமாக்குவது உலகம் முழுவதிலும் நடக்கும் சமூக அநீதி! எத்தனையோ சிரமங்களுக்கு இடையில் உணவுக்கான பொருளை விளைவித்துத் தரும் விவசாயிக்குச் செய்யப்படும் அவமரியாதை. உணவு என்பது ஜடமல்ல...