1. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால்வலிமை படைத்தவன் ஆவாய்!
02. மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன்,இறந்தவனுக்கு ஒப்பாவான்!
03. நீ உன்னைப் பலவீன்ன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில். தைரியமாக இரு, வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.
04. இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள்.இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.
05. வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு காரணம்.நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும்ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.
06. மனிதப் பிறவிதான் பிரபஞ்சத்திலேயே மிகச் சிறந்ததாகும்எல்லா மிருங்களைக் காட்டிலும் எல்லாக் தேவர்களைக் காட்டிலும்மனிதர்களே உயர்ந்தவர்கள்.மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் யாரும் இல்லை.
07. பணம் மட்டுமே வாழ்க்கையல்லஅதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன.மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல
08. எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
09. உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
10. உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.
.11. செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
.12. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை)
13. நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு
14. சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
15. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
16. தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.
17. வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்பூவை போல் மென்மையானதுதோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்இரும்பை விட வலிமையானது
18.இதயம் சொல்வதை செய்வெற்றியோதோல்வியோஅதைதாங்கும் சக்திஅதற்கு மட்டும் தான் உண்டு
19. பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது
20. கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
21. உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்.தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்த தகுதியானவன்.
22. சுடுகாட்டுக்கு அப்பாலும் நம்மைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கமே.மற்றவை யாவும் மரணத்துடன் முடிந்துவிடும்.
23. உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது உனக்கு பொருந்தாது.“நான் ஒரு வெற்றி வீரன்’ என்று எப்போதும் உனக்குள்ளேயே சொல்லிக்கொள்.மின்னல் வேகத்தில் உனக்குள் புதிய மாற்றம் ஏற்படுவதைக் காண்பாய்.
24. தன்னை அடக்கப் பழகிக்கொண்டவன் வேறு எதற்கும் சிக்கமாட்டான்.அத்தகைய தகுதி உள்ளவனே உலகில் நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.
25. கடலைக் கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும்;மலைகளையே துளைத்துச் செல்லும்; வலிமை தோள்களுமே;நமக்குத் தேவை.வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம்.மிகப்பெரிய இந்த உண்மையை உணந்து கொள்ளுங்கள்.