1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங
2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை ஒழிக்க முடியும், துப்பாக்கியை ஒழிக்க வேண்டுமானல் முதலில் அதனை நம் கைகளில் பிடிக்க வேண்டும். —மா சே துங்
3. மரம் அமைதியைத்தான் விரும்புகிறது ஆனால் காற்று அதை அனுமதிப்பதில்லை.
—மா சே துங்
4. புரட்சி என்பது மாலை நேர விருந்துண்ணலோ பூத்தையல் வேலைப்பாடோ அல்ல. அது அவ்வளவு இலகுவாகவும் மென்மையாகவும் இருக்கமுடியாது. —மா சே துங்
5. ஒன்று எப்பொழுதுமே இரண்டாகும். இரண்டு எப்பொழுதுமே ஒன்றாகாது. —மா சே துங்
6 . ஒரு மகத்தான புரட்சி இயக்கத்துக்கு வழிகாட்டும் எந்த ஒரு அரசியல் கட்சியும் புரட்சிகரத் தத்துவம், வரலாற்று அறிவு, நடைமுறை இயக்கம் பற்றிய ஓர் ஆழ்ந்த விளக்கம் ஆகியவற்றைப் பெற்றிராவிட்டால், அதை வெற்றிக்கு வழிநடத்துவது சாத்தியாமாகாது. —மா சே துங்
7. உலகிலுள்ள யாவும் எதிர்மறைகளின் ஒற்றுமையே ஆகும்.—மா சே துங்
8. ”கீழே இறங்கிப் போய் மக்களிடம் கேளுங்கள் ; அவர்கள் கலை இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பாருங்கள்!”—மா சே துங்
9. “கலை மிக உயர்ந்த வடிவத்தைப் பெறும் போதுதான் காலத்தால் அழியாத நிரந்தரத்துவத்தைப் பெறும்; மக்களுக்காக என்று சொல்லிப் பரவலாக்கினால், ஜனரஞ்சகப் படுத்தினால் படைப்பு கொச்சையாகி விடும்; நீர்த்துப் போய் விடும்”. இது சரியா? சரியல்ல, தவறு.—மா சே துங்
10. “உண்மையான கலைப்படைப்பு மக்களிடம் உள்ள கலைஞனைத் தட்டி எழுப்புகிறது; அவர்களது உலகக் கண்ணோட்டத்தை மட்டுமல்லாமல், அழகியல் – கலையியல் ரசனைகளையும் அவர்கள் உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது.” —மா சே துங்
11. மக்கள் மந்தைகள் அல்லர்; முட்டாள்கள் அல்லர்; தரமில்லாத மூடர்கள் அல்லர்; —மா சே துங்