- Details
- Category: ஆன்மீகம்
நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது. தமிழர்களின் முன்னோர்களான நாகர் இனத்தவர்கள் போற்றப்படுகின்றனர். நாகர்களின் முக்கிய வழிபாடாகக் காணப்பட்டது நாகவழிபாடு. ஈழத்தமிழர்களிடையேயும், தமிழகத் தமிழர்களிடையேயும், ஆதியிலிருந்தே நாகவழிபாடு காணப்பட்டதென்பதற்கு அதன் எச்சங்களாகக் காணப்படும் வழிபாட்டு முறைகளும், ஊர்ப்பெயர்களும் சான்றாகக் காணப்படுகின்றன.
ஈழத்தில் நாகர்களின் முக்கிய பிரதேசமாக நயினாதீவு காணப்பட்டுள்ளது. ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர், நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்ற தலமே, நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயமாகும். இக்கோவிலின் கருவறையிலுள்ள சீறும் ஐந்தலை நாகச்சிலை, பல்லாயிரமாண்டுகள் பழமையானதென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஈழத்திலே காணப்படும் பெரும்பாலான கோயில்கள். ஐதீகம் மற்றும் புராணக் கதைகளோடு மட்டும் தொடர்பு கொண்டவையாகக் காணப்படும்போது, நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம், பல்வேறு தொடர்புகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. வரலாற்றுக் குறிப்புகள், சாசன ஆதாரங்கள், தமிழ் இலக்கியத் தொடர்புகள், கர்ண பரம்பரைச் கதைகள், புராண வரலாறுகள் எனப் பல்வேறுபட்ட தொடர்புகளையுடையதாக விளங்கும் சிறப்புப் பெற்றது இவ்வாலயம்.
இவ்வாலயம் அமைந்துள்ள தீவும் மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்டு, பல்வேறு வகையில் ஆலயத்தோடும் தொடர்பு கொண்டுள்ளது. சரியான வரலாறுகள் காணப்படாதவிடத்து இலக்கியங்களே வரலாறாகவும் கருதப்படுவதுண்டு. ஈழத் தமிழர்களின் தொன்மையும் வரலாறும் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்றது.இந்திரன் தனது சாபம் நீங்கி அம்மனுக்கு ஆரம்பத்தில் சிறிய ஆலயம் கட்டினான் என்றும்,ஆதியில் அன்னைக்கு நாகம் அயலிலுள்ள புளியந்தீவில் இருக்கும் நாகதம்பிரானிடம் பூப்பறித்து கடல்வழியாக வரும் வேளையில் கருடன் இடைமறித்து நாகத்தை கொல்ல எத்தனிக்கும் பொழுது அவ்வழியே வந்த வணிகரான மாநாய்க்கன் பிணை தீர்த்து நாகத்தை வழிபடச்செய்தான் என்றும்,மகாபாரதத்தில் அர்சுனன் நாகங்களைக் கொன்ற பாவங்கள் தீர நாகதீவு (நயினாதீவு) வந்து நாககன்னியை மணந்து பப்பரவன் என்ற மகனைப் பெற்றதும் அந்த மகனின் பெயரிலே இன்றும் அம்பாளின் ஆலயத்திடலுக்கு பப்பரவன் திடல் என்றும் அழைப்பர்.மணிமேகலையில் நாக இளவரசியான பீலிவளை மீது கிள்ளி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளைப் பிரிந்து வருடந்தோறும் நடத்தும் இந்திர விழாவையும் நடத்த மறந்தான் என்றும் இவர்களின் குழந்தையே தொண்டமான்இளந்திரையன் என்றும் இவனின் சந்ததியினரே பிற்காலத்தில் தொண்டைமான் சந்ததியினரும் தொண்டைமண்டலத்தேசத்தவரும்.ஆவர் எனவே நயினாதீவானது பல கர்ணபரம்பரைக் கதைகளோடும் பலபுராண இதிகாசங்களோடும் பின்னிப் பிணைந்திருப்பதை அதன் எச்சங்களில் இருந்து அறியமுடிகிறது.
- Details
- Category: ஆன்மீகம்
பொன்னம்பலவாணேசுவரர் கோயில் கொழும்பு நகரில் சரித்திரப் புகழ்வாய்ந்த கோயில்களுள் ஒன்றாகும். இது கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில்.இக்கோயில் 1856ஆம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த பொன்னம்பலம் முதலியாரால் நிறுவப்பட்டது.
- Details
- Category: ஆன்மீகம்
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயில் கிழக்கிலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை எனும் இடத்தில் அமைந்துள்ளது. மட்டக்களப்பு நகரின் தெற்குத் திசையில் சுமார் பதின் மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் மட்டக்களப்பு வாவியின் மேற்குக்கரையை அடுத்து கொக்கட்டிச் சோலை என்னும் பதியில் இவ் ஆலயம் அமைத்துள்ளது.
- Details
- Category: ஆன்மீகம்
திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது.
- Details
- Category: ஆன்மீகம்
ரதிகலா புவனேந்திரன்
நுண்கலைத்துறை
கிழக்குப் பல்கலைகழகம்.
வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயமும் ஒன்றாகும். நந்திக்கடலும், வயல்வெளிகளும், பாலைமரச் சோலையும் சூழ்ந்த பசுமையான சூழலுடன், வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமின்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. முல்லை நகரின் காவல் தெய்வமாகவும், தாய்த் தெய்வமாகவும் கண்ணகி அம்மன் வழிபடப்படுகின்றாள்.
- Details
- Category: ஆன்மீகம்
குருந்தூர் மலையில் கிடைத்திருப்பது
எண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாரா
லிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர்
கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன் எட்டுப்
பட்டைகளும் நிலம், நீர், காற்று, நெருப்பு,
ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா
ஆகியவற்றைக் குறிக்கும் என்பர்.
மேலும் எட்டு பைரவ சக்திகளையும்,
இறைவனின் அஷ்ட வீரச்செயல்களையு
ம் குறிப்பன என்பர். சிதம்பரம் நவலிங்க
சந்நிதியிலும் எட்டு திசை லிங்கங்கள்
உள்ளன. இவை அஷ்டதாரா
லிங்கங்களாகும்.
- Details
- Category: ஆன்மீகம்
முருகன் அடியார்களே!
அருள்மிகு திருமுருகன் தேவஸ்தானம் ஆக்லாந்து -நீயூசிலாந்து . நீயூசிலாந்து நாட்டில் ஒட்டாகூகு நகரில் வீற்றிருந்து வேண்டுபவர்களுக்கு வேண்டுவனவெல்லாம் தந்தருள் புரியும் திருமுருகப் பெருமான் மஹோற்ஸவம் சார்வரி வருஷம் தை மாதம் 21-01-2021வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி 14 தினங்கள் நடைபெற திருவருள் பாலித்துள்ளார் . புண்ணிய காலங்களில் மெய்யடியார்கள் யாவரும் சைவ ஆசார சீலர்களாக வருகைதந்து திருமுருகனின் அழகுத் திருக்கோலங்களைத் தரிசித்து எல்லா நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ்கவென வேண்டுகிறோம்.
நிர்வாகம்
அருள்மிகு திருமுருகன் தேவஸ்தானம்
ஆக்லாந்து -நீயூசிலாந்து
- Details
- Category: ஆன்மீகம்
1. எனது அருமை அமெரிக்க சகோதர, சகோதரிகளே! நீங்கள் நேசத்துடன்
என்னை வரவேற்ற பண்பு என் மனதை நிறைத்துவிட்டது. உலகின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரை மற்றும் அனைத்து மதங்களின் அன்னையின் சார்பாக நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துக்களின் சார்பாக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
2. இந்த மன்றத்தில் பேசிய சில பேச்சாளர்கள், உலகில் சகிப்புத்தன்மை என்ற கருத்து கீழ்த்திசை நாடுகளிலிருந்து பரவி வருகிறது என்பதை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.