044ரதிகலா புவனேந்திரன்
நுண்கலைத்துறை
கிழக்குப் பல்கலைகழகம்.

  வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயமும் ஒன்றாகும். நந்திக்கடலும், வயல்வெளிகளும், பாலைமரச் சோலையும் சூழ்ந்த பசுமையான சூழலுடன், வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமின்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. முல்லை நகரின் காவல் தெய்வமாகவும், தாய்த் தெய்வமாகவும் கண்ணகி அம்மன் வழிபடப்படுகின்றாள்.

 'முல்லை மண்ணை ஆழுகின்ற முடி தரித்த மன்னவளாய்...'

01 கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கிய சான்றாக சிலப்பதிகாரம், சிபம்புகூறல், கோவலனார்கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன. இலங்கையில் சைவ தமிழ் மக்கள் மாத்திரமன்றி, பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர். பௌத்த ஆலயங்களில் 'சவர்த்தினித்தெய்யே' எனும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது.

கண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கியதையும், அதன்பின்பு வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது. பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு நிலவி வந்துள்ளதுடன் வற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடும் பரவியுள்ளது.

முன்பு ஒரு காலத்தில் நந்திக் கடலோரத்தில், ஒரு முதுமை வாய்ந்த அம்மையார் ஒருத்தி வேப்பம்படவாளில் இருப்பதை ஆட்டிடைய குலச்சிறுவர்கள் கண்டார்கள். சிறுவர்களிடம் அவ்வம்மையார் தனக்குத் தங்குவதற்கு இடமில்லையென கூறிய போது அச்சிறுவர்கள் மரத்திற்கு அருகே ஒரு குடிசை அமைத்துக் கொடுத்ததுடன் உண்பதற்கு பொங்கலும் செய்து கொடுத்தார்கள். மாலைப் பொழுதானதும் குடிசைக்குள் விளக்கு எரிப்பதற்கு எண்ணெய் இல்லையே என்று மனம் வருந்தினார்கள். அவர்கள் கவலைப்படுவதைக் கண்ட அம்மூதாட்டியார் பிள்ளைகளே கடல் நீரை எடுத்து விளக்கேற்றுங்கள் என்றார். சிறுவர்களும் கடல் நீரையெடுத்து விளக்கு ஏற்றினார்கள். இன்றும் கடல் நீரில் அம்மனுக்கு விளக்கு எரிக்கப்படுகின்றது. குடிசை அமைத்து விளக்கேற்றித் தந்த சிறுவர்களைப் பார்த்து தனது தலை கடிக்கிறது பேன் பார்த்து விடும்படி கேட்டார். அம்மையாரின் தலைமுடியை வகுந்த போது தலையில் ஆயிரம் கண்கள் இருப்பதை கண்டு சிறுவர்கள் பயந்தனர். அப்போது அம்மையார் நான் வைகாசித் திங்களன்று திரும்பவும் வருவேன் எனக் கூறி திடீரென மறைந்தார்.

இடைச்சிறுவர்கள் இதனை முதியவர்களுக்கு கூறினார்கள். இவர்கள் முதலில் இதனை நம்பவில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கு தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டியிருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர். வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட் கிழமை பொங்கல் செய்தனர்.

முள்ளியவளையிலுள்ள காட்டு விநாயகர் ஆலயத்தில் பொங்கலுக்கான முன்னோடி நிகழ்வுகள் இடம்பெறத் தொடங்கின. வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழு நாள் மடைகளும், பொங்கலும் இன்றும் காட்டு விநாயகர் ஆலயம் என அழைக்கப்படும் மூத்த நையினார் ஆலயத்திலேயே நடைபெற்று வருகின்றன.

அடுத்த கட்டமாக கண்ணகி வழிபாட்டின் மரபில் ஆகம மரபு தொடர்பு படுத்தப்படுவதை அவதானிக்கலாம். மக்கள் கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமான நம்பிக்கை உடையவர்கள். ஆகம முறைப்படி பூசை நடைபெறும் ஆலயங்களில் பழைய கிராமிய மரபுகள் புறக்கணிக்கப்படுவதைக் காணலாம். ஆனால் வற்றாப்பளையில் கிராமிய மரபும், ஆகம மரபும் இணைந்து செயற்படுவதை காணலாம்.

இவ்வழிபாட்டு மரபில் சிலம்பு, பிரம்பு, அம்மானை, உடுக்கு முதலிய புனித சின்னங்களும் வெள்ளியால் அமைந்து சமுடபடாம் என்னும் அமைப்பும், சித்திரச் சேலைகளும் இடம்பெறத் தொடங்கின. பக்தஞானி என்பவரே இந்த ஏற்பாட்டைச் செய்தார்.02

கும்பத்தில் வெள்ளிமுக அமைப்பை பொருத்தி வெள்ளியாலான கை, கால் என்பவற்றை முறைப்படி அமைத்து கண்ணகி அம்மனது உருவம் அமைக்கப்படும். இப்புனித சின்னங்களை அம்மனுக்கு பூசை செய்யும் அந்தணர்கள் தங்களது பாதுகாப்பில் முள்ளியவளை கல்யாண வேலவர் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த தமது இல்லத்தில் வைத்து பூசித்து வந்தனர். வெள்ளிதோறும் இல்லத்தில் பூசையும், திங்கட்கிழமைகளில் வற்றாப்பளை ஆலயத்தில் பூசையும் நிகழ்ந்தன.

அடுத்த கட்டமாக ஆகம முறைப்படி அம்மனை விக்கிரக வழிபாடில் அமைந்த நிகழ்வாகும். பழைய ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆயலம் தூபியுடன் அமைக்கப்பட்டது. கண்ணகி அம்மன் ஆலயம் புதிய நிர்வாகத்தின் கீழ் நவீன தேவாலயத்திற்குரிய புதிய பொலிவுடன் வளர்ந்து வருகின்றது.

இந்த வரலாற்று மரபை நோக்குமிடத்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மனுக்கும், சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை அவதானிக்க முடியும். சிலப்பதிகாரக் கண்ணகி மானிடப்பெண் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தன் கற்பின் திறத்தால் தெய்வநிலை எய்தியதை சுட்டி நிற்கின்றது. ஒரு மானிடப் பெண்ணைத் தெய்வமாக பூசிக்க சைவசமயமரபில் இடமில்லை. வற்றாப்பளை கண்ணகி உமாதேவியாரின் அவதாரமாகவே கருதப்படுகின்றாள்.

இந்தியாவில் கண்ணகி வாழ்ந்த காலத்தில் பாண்டிய நாட்டில் அரசனுக்கெதிராக வழக்காடி மதுரையை தீக்கரையாக்கி அழித்த பின்னர் அவளின் கோபத்தைத் தணிப்பதற்காக இலங்கையின் கரையோரமாக வருகை தந்து பல இடங்களில் அமர்ந்திருந்து பத்தாவது இடமாக நந்திக் கடற்கரை அருகே வந்து தங்கியதால் பத்தாம்பளை என்பது மருவிப் பின்னர் 'வற்றாப்பளை' எனலாயிற்று. சினம் கொண்ட கண்ணகிக்குச் சினத்தை அடக்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் கோவலன் கண்ணகி கூத்து நடைபெறுகின்றது.

கடல்நீரில் விளக்கெரிய வைத்தல், வேம்படவாள் தளிர்த்து மரமாதல், தலையில் ஆயிரம் கண்களைக் காட்டியமை, பனிச்சையை ஆட்டுவித்து காயால் பறங்கித்துரைக்கு எறிவித்தமை, ஆலய பொருட்களைக் களவு செய்தோரின் கண்களை மறைத்தமை முதலான பல அற்புதங்களை வற்றாப்பளை அம்மன் செய்ததாக கதை உண்டு. வற்றாப்பளை அம்மன் அம்மை, பொக்களிப்பான், சின்னமுத்து, கண்நோய் போன்ற நோய்களைக் குணப்படுத்துவாள் என்று நம்பப்படுகின்றது. ஆலயத்தில் வழங்கப்படும் விபூதி தீயவற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் என்பது அடியார்களின் அனுபவ நிலைப்பட்ட முடிவாகும். ஆண்டுதோறும் வைகாசிப் பூரணையை அண்மித்த திங்கட்கிழமை பொங்கல் கோலாகலமாக நடைபெறும். பொங்கலுக்கு ஒருவாரம் முன்பதாகவே வற்றாப்பளையும், அயற்கிராமங்களும் பக்தர் கூட்டத்தினால் நிறைந்திருக்கும். கால்நடையாக கதிர்காமம் செல்வோர் அம்மன் பொங்கலை தரிசித்த பின்னர் கண்ணகி அம்மனின் வழிகாட்டலுடன் யாத்திரைத் தொடர்வர்.06

 

கட்டுரைகள்

{youTube}/HvhurorfkeA{/youtube} உலகளாவிய மாற்று சிந்தனை கல்வி முறைகள் எவ்வாறு உள்ளன? எனும் கேள்விக்கு பதிலளித்தார் சமூக ஆய்வாளரும், ஆசிரியம் இதழின் பிரதம ஆசிரியருமான தெ. மதுசூதனன்.

{youTube}/8qHc2Osvtpk{/youtube} - தெ. மதுசூதனன்.- இலங்கையில் ஆசிரிய சேவையிலும் பார்க்க கல்வி நிர்வாக சேவை உயர்வானதாக கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்களவு ஆசிரியர்களின் இலக்கு நிர்வாக...

கலாநிதி அதிரதன் கல்வியியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் கீழை நாடுகளில் வேரூன்றியுள்ள ஆணாதிக்கச் சிந்தனையும் அதன் புறவிசைகளும் பெண்கல்வி தொடர்பாக எதிர்மறைச் சிந்தனைகளை கட்டுமானம் செய்வதுடன்...

உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வது மூளைதான். தேவையான சத்துணவு, தேவையான அளவு கிடைக்காதபோது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.

ஞாபக சக்தி அதிகமாக இருக்க வேண்டும் என்றால் , அது அந்த தாயோட கையில தான் இருக்கு. சின்ன வயசுலேயே நம்ம குழந்தைகளுக்கு எந்த விஷயத்தையும் நல்லா மனசுல பதியுற மாதிரி சொல்லிக் கொடுத்தா, அதை அவங்க...

file:///C:/Users/Bruger/Downloads/pgde-reflection-final%20(1).pdf

Brain-wavesபொதுவாக உடலைக் கட்டுக்கோப்புடன், தகுதியாக வைத்துக் கொள்ள, உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் மனதைக் கட்டுக்கோப்புடன் தகுதியாக வைத்துக் கொள்ள என்ன செய்வது? தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும்...

வெற்றி என்னும் சாத்தியம் இருக்கையில், ஏன் சிலர் தோல்வியை எப்போதும் தேர்ந்தெடுக்கிறார்கள்? நீங்கள் மேற்கொள்ளும் தேர்வுகளிலிருந்தே துன்பத்திலிருந்து சவுகரியத்துக்கு நகர்கிறீர்கள்.

வாழ்க்கைமுறை

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம்...

சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

-ரூபன் சிவராஜா- படம் தனிமனித சாகசத்தை முன்வைக்கவில்லை. மாறாக அடித்தட்டு மக்கள் தமது வாழ்வாதார, இருத்தலியல் அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதாக முன்வைக்கப்படுகின்றது....

சினிமா

நடிகர் விவேக் மறைவு பலராலும் சோகத்துடன் எண்ணிப் பார்க்கப்படுகிறது. ''ஒரு நடிகன் நடிப்பைத் தாண்டி தன்னை ஆளாக்கிய சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் அதை செய்தவர் விவேக்'' என்ற கமலின் வார்த்தைகள்...

சினிமா

 சினிமா இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு மனித நாகரிகத்திற்கு விஞ்ஞானமும் கலையும் இணைந்தளித்த கொடை. உலக வரலாற்றில், மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்தாக இருந்து சிறப்பு பெற்றது. தமிழ்க்...

சினிமா

கர்ணன், 'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாவது படைப்பாக வெளியாகியுள்ள திரைப்படம். இப்படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க, ராஜீஷா விஜயன், யோகி பாபு,...

ஆன்மீகம்

ரதிகலா புவனேந்திரன்நுண்கலைத்துறைகிழக்குப் பல்கலைகழகம்.   வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள்...

குருந்தூர் மலையில் கிடைத்திருப்பதுஎண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாராலிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர்கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன்...

உளவியல்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும்...

- கி.புண்ணியமூர்த்தி- பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

 {youTube}/BZtEAoShpDQ{/youtube} 01. தோல்வியின் அடையாளம் தயக்கம்! வெற்றியின் அடையாளம் துணிச்சல்!துணிந்தவர் தோற்றதில்லை!!தயங்கியவர் வென்றதில்லை!!

 {youTube}/H7RVRGVWkqM{/youtube} 1. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால்வலிமை படைத்தவன் ஆவாய்!  02. மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி...

X

Right Click

No right click