Skærmbillede 941திரள் அமைப்பினர் 24.04.21 நடாத்திய ‘நவீன கவிதைகளின் புதிய பரிமாணங்கள்’ நிகழ்வில் ரூபன் சிவராஜா ஆற்றிய உரையின் காணொளி.


ஒவ்வொரு காலகட்ட இலக்கியப் போக்குகள் என்பது புதிய மாற்றங்களோடும், ஏலவே நிலவிக்கொண்டிருக்கின்ற போக்கு(கள்) மீதான விமர்சனங்களோடும் அவற்றின் போதாமைகளை இட்டுநிரப்புகின்ற முன்வைப்புகளுடனும்தான் தோன்றியிருக்கின்றன. வளர்ந்திருக்கின்றன, பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. எதிர்க்கப்பட்டிருக்கின்றன.. மீள் எழுச்சி கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் தம்மை நிலைநிறுத்தியும் கொண்டிருக்கின்றன என்பது இலக்கியப் போக்குகளின் வரலாற்றில் பொதுமையான அம்சம்.
நோர்வேஜிய சூழலில், ஐரோப்பிய சூழலில் படைப்புகளின் ‘நவீனத்துவம்’, ‘பின்-நவீனத்துவம்’ என்பன உலகத்தினதும் சமூகத்தினதும் அனைத்துக் கூறுகளினதும் பிரதிபலிப்பாக வெளிப்பட்டு வந்துள்ளன. வருகின்றன. அந்தப் பிரதிபலிப்பு என்பது உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் வெளிப்பாட்டுமுறையிலும் என்பதைக் காணலாம்.
கோட்பாட்டு ரீதியாக அல்லது தர்க்க ரீதியாக பார்க்கப்போனால், உலகம் துரிதமாக மாறிவருகின்றது. உலகத்தில் ஒரு ஒத்திசைவும், இணக்கமான சூழலும் அருகிவிட்ட நிலையில் - உலகின் அந்தப் பிளவினையும் - இணக்கமின்மையினையும் - அவற்றின் சிக்கல்களையும் - அவை மனிதனுக்கு ஏற்படுத்தும் உணர்வுகளையும் - அச்சங்களையும் - அந்நியமயமதால் உணர்தல்களையும் - விமர்சனங்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்பது நவீனத்துவ படைப்பிலக்கியத்திற்கான கோட்பாட்டு ரீதியிலான உந்துதலும் அடிப்படையும்.
-

X

Right Click

No right click