எஸ்போஸ் கவிதைகள்Skærmbillede 1008

 

புத்தகம் மீதான எனது வாழ்வு

கொஞ்சம் புத்தககங்களோடு தொடங்கியது வாழ்க்கை

புத்தகங்களின் சொற்களில் சோறு இல்லை என்பதே

பிரச்சினையாயிற்று வாழ்க்கை முழுக்க

யாரும் நம்பவில்லை தமது வாழ்க்கை

புத்தகங்களோடுதான தொடங்கியதென்பதை

அவர்களே அப்படி நம்ப

யாரையும் அனுமதிக்கவில்லை

புத்தகங்களில் சோறு இல்லை

புத்தகங்களில் துணி இல்லை

அணிவதற்கு தங்க ஆபரணங்கள் தானும் இல்லை

புத்தகங்களே பிரச்சினையாயிற்று வாழ்க்கை முழுக்க

நான் புத்தகங்களோடு வாழ்கிறேன் என்பதையும்

புத்தகங்களில் தூங்குகிறேன் என்பதனையும்

இதயம் சிதையும் துயரின் ஒலியை

புத்தகங்கள் தின்னுகின்றன என்பதனையும்

ஓ கடவுளே! யாரும் அதை நம்பவில்லை

என்னையும் அனுமதிக்கவில்லை

புறாக்கள் வாழ்ந்த கூரைகளில்

உதிர்ந்து கிடக்கின்றன வெண்சிறகுகள்

 

 

X

Right Click

No right click