Skærmbillede 1298 - ராகவன் -

போ ! என்கிறேன்

போகாமல், ....
என்னையேன் தொடர்கிறாய்..!
வா.! வாவென்று
வருந்தி அழைக்கிறாய்...!
வரவில்லையென்றால்
வாசலில் நிற்கிறாய்....!

உன்னைத் துரத்த
முடியாமல் ஏங்கிறேன்..!
என்னைக் காணவோ
விழிகளால் ஏங்கிறாய்..!
போ
என்னைத் துரத்தும் பிசாசே..!
ஊசி போட்டேனும்
உன்னைத் துரத்த,
வரிசையில் நானும்
மணிக்கணக்காய் தூங்கிறேன்..!
போ..!
என் அன்புக் கொரோனாவே.....!

X

Right Click

No right click