Skærmbillede 1352-நிருபாமா-

அவளைப்பற்றி............
ம்........ அவளைப் பற்றி உனக்கு
அவ்வளவாக ஒன்றும் தெரியாது!
அவளைப் பற்றிய கதைகளை
அவளால் மட்டுமே எழுத முடியும்!

அவள் எண்ணங்களை
அழகாய் எழுத வேண்டுமா?
ம்...........
நீ அவளைப் படிக்க வேண்டும்!
இருந்தும் ...............

அவளை ஆழமாக வடிப்பதற்கு
அவளால் மட்டும்தான் முடியும்!
அவள் கதைகளைப் பற்றியும்!
அவள் இன்பங்களைப் பற்றியும்!
அவள் துன்பங்களைப் பற்றியும்!
அவள் ஆர்வங்களைப் பற்றியும்!
உன்னால் அவ்வளவாகக் கூறி விட முடியாது!
அவள் எதை விரும்பிகிறாள்!
எவற்றை ஏற்றுக்கொள்கிறாள்!
எப்போது நிராகரிக்கிறாள்!
எதற்காக கலங்குகிறாள்!
அவளை உன்னால் படிக்க முடிந்தால்
அவளது கதைகளுக்கு இறக்கை முளைக்கும்!
அவளது கோபங்கள்!
அவளது ஆசைகள்!
இதில் எதை வடிக்கப் போகிறாய்!
அன்று அவள் கதைகள் அம்பலமாகும்!
அவளது சிந்தனைகள்!
அவளது எண்ணங்கள்!
இதில் எதை வெல்லப் போகிறாய்!
அன்று அவளது கதைகள் உன்னுடையதாகும்!
கருப்பையில் இருந்து
பிறப்பின் வாசல்வரை
தனித்த பயணத்தில் அவள்
இறப்பை வென்று பிறந்தவள்!
உன்னைப் போல் பிறப்பில்
அவளும் பிறப்பில் அதிஸ்ரமானவள்!
உன்னைப் போல் தன் தாயின்
தேகச்சூட்டில் முடங்கி கிடந்தாள்!
இன்றும் தாயின் இறுக்கப்பிடிக்குள்
இன்பமாய் இருக்கின்றாள்!

ஆனாலும்..............
உன்னால் அவளை பாட முடியாது !
ஆழமான பாசவலைக்குள்
பக்குவமாய் செதுக்கப்பட்டவள்!
உணர்வுள்ள பாவை!
அவள் கதைகளுக்கு உயிரூட்டமளிக்க
உன்னால் முடியுமானால் அன்று
அவளது ஊமைக் கதைகள்
புது இராகத்தை ஏற்றுப் பாடும்!
விட்டுவிடு......
சந்தம் அமைத்துப்பாட
அவளால் மட்டுமே முடியும்!
அவள் உரத்துச் சத்தமாய் பாடட்டும் !!!

X

Right Click

No right click