-கருணாகரன்-
முதலில் அந்த மரத்தில் இலைகள் துளிர்த்திருந்தன
இலைகளாலான மரமாகியது
பிறகு பூக்கள் மலர்ந்து
வண்ணமும் வாசமுமாகி
பூ மரமானது
பிறகு பறவைகள் சேர்ந்து
சிறகடித்து இசைபாடும்
பறவையாகியது
ஒரு மெல்லிய காற்றின் தீண்டலில்
தன்னை நெகிழ்த்திக் காதலில் கரைகிறது
எக் கணத்திலும் அது பறந்து விடக் கூடுமென
பார்த்துக் கொண்டிருக்கிறேன்