Skærmbillede 1463-ராகவன்-

சின்ன விழிப் பார்வையில
சிக்குப் பட்டுப் போனன் - பிள்ளை
சன்னக் குரல் கேட்கையில
சத்தம் எல்லாம் அடங்கும் - பிள்ளை

செல்ல மொழி கேட்டிவே
செவி எல்லாம் ஏங்கும் - பிள்ளை
மெல்லமெல்ல சொர்க்கம் வந்து
மெல்லி னிமை அள்ளும் - பிள்ளை

சின்ன சின்னப் பாதத்தால
சின்ன உதை தருவாள் - பிள்ளை
சின்ன உதை நெஞ்சினிலே
வந்து விழ மகிழ்வேன் - பிள்ளை
சின்ன விரல் காற்றினில
சித்திரங்கள் வரையும் - பிள்ளை

விண்ணில் உள்ள தேவரெல்லாம்
விரைந் திங்கு வருவார் - பிள்ளை
கரிய விழி அசைந்ததென்றால்
கட்ட ளைக்காய் பார்த்திருப்பேன் - பிள்ளை

சிறிய தொருசொல். சொன்னால்
சித்திரமாய் நானு றைவேன் - பிள்ளை
நல்ல நல்ல வாழ்க்கையெல்லாம்
நன்றனெவே நீ அடைய - பிள்ளை
வல்ல பெருமா னவனின்
வரங்களுக்காய் தவமிருப்பேன் - பிள்ளை

X

Right Click

No right click