பாலமதுஜா ஆறுமுகநாதன்
(யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை)
தங்கத் தாரகையாய் தரணி தன்னிலே
ஒளி வீசிடச் செய்யும் ஒரே ஒரு ஜீவன் அப்பா
அப்பா என்னும் மூன்றெழுத்துக்கு இலக்கணமாய்
ஆயிரம் அர்த்தங்களை தன்னுள்ளே பொதித்து
இன்பத்தைக் கொடுக்கும் அற்புத பிறப்பு நீயல்லவா?
தன்னலம் மறந்து தவமாய் கிடந்து
ஊர் போற்ற வாழவைக்கும் உயர்ந்த மனிதன் நீயல்லவா?
மார் தட்டி என்பிள்ளை என தலையிலே தூக்கி
வைத்துக் கொண்டாடும் தன்னிகரில்லா
தலைவன் தந்தையல்லவா?
ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கு தந்தையாய்
வந்துதிக்க வரம் வேண்டுமப்பா?