-கோ.சந்ரூ-
அன்புள்ள அப்பா
உங்கள் குஞ்சு புறா
வெண்புறாவாகி....
ஆசையோடு முதல் எழுதும்
அன்பு மடல்...
சிதறிப்போன நம் குடும்பத்தை சிறகடித்து கூடாய் கட்டிவிட்டேன்
கண்ணீரோடு கதைபேசி
காரிருளோடு உறவாடி
நீ வரும் நாட்களை
நட்சத்திரங்களாய் எண்ணிப் பார்க்கிறேன்...
அப்பா எப்போ வருவாய்...
உன் தோளில் நான்
தலை சாய்ந்து தூங்க...
முத்தான ஈழத் திருநாட்டில்
முத்தான உங்கள் வெண்புறா
சிறகடித்து பறக்கிறது
அப்பா உங்கள் முகவரியை தேடி
கூடுகட்டி வாழ்ந்த நம் குடும்பம் குண்டடிப்பட்டு சிதறிப்போனது பாட்டியின் அரவணைப்பில்
குஞ்சு புறா வெண்புறாவானது
ஈழப்போராட்டத்தில் ஈன்றெடுத்த
என் தாய் புறாவை...
ஆதரவின்றி ஆசிரமத்தில் கண்டெடுத்தேன்....
குழந்தையின் அன்பிற்காகவும் குடும்பத்தலைவன் உங்கள் காதலுக்காகவும்....
ஏங்கிப் போய் காத்திருந்தாள்....
கண்ணீர் மல்க என் இரு சிறகை விரித்து...
அணைத்துக் கொண்டேன்...
கேள்விப்பட்டேன்...
அரசியல் கைதியாய்
கூண்டுக்குள் அடைபட்டு
காணாமல் போன கைதியாய்
இந்த வெண்புறாவின் சக்தியாய் வீரப்பன் என் தகப்பன்
உயிருடன் காத்திருப்பதை...
நம் கூட்டுக்குள்
அன்பு நிறைந்து பொழிகிறது
அரவணைப்பும் நிறைந்து பெறுகிறது சக்தியொன்று மட்டுமில்லைய
எப்போ வருவாயப்பா...
எப்போ வருவாயப்பா....
எங்களுக்கு சக்தி கொடுத்து
அச்சாணியாய் சுழல....
உன் வரவுக்காய் காத்திருக்கிறேன் உள்ளூர் புறாவாய்
ஊருக்குள் பறக்கிறேன்...
உன்னை கண்டு கொண்டால் உலகத்தையும் சுற்றி வருவேன்
உன் கரங்கள் பிடித்தால்
சுதந்திர புறாவாய்
எட்டுத்திக்கிலும் சிறகடிப்பேன்....
உன் அன்புக்காய்
உன் அரவணைப்பிற்காய்
ஏங்கி காத்திருக்கும்
உங்கள் அன்பு மகள் வெண்புறா
முத்தான பெண்வெண்புறா
தந்தையின் முகவரி தேடி
அலைகிறது...
சில்லறையாவது தருகிறேன்
சீக்கிரம் சேர்த்துவிடுங்கள்
என் தந்தையின் முகவரி தெரிந்தால்
இந்த வெண்புறாவின் மடலை
-மலையருவி ஒரு துளி முயற்சி-