- Details
- Category: புத்தகங்கள்
நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை உருவாக்கித் தரவேண்டியதும் பள்ளியின் கடமைதான்.
- Details
- Category: புத்தகங்கள்
- அலெக்ஸ் பரந்தாமன்-
ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி வாசகர்களின் பார்வைக்கு வந்துள்ளது.நமது மூத்த படைப்பாளி திரு. குப்பிளான் ஐ. சண்முகன் ஐயா அவர்களின் 'கிராமத்துச் சித்திரங்கள்' எனும் தலைப்பு நூலின் ஐந்தாம் பக்கத்தை அலங்கரிக்கிறது.
- Details
- Category: புத்தகங்கள்
குழந்தை ம.சண்முகலிங்கம்
அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக் கொள்ளலாம். அறிவுத் தேடலும் அரங்க அனுபவமும் உள்ளவர்கள் இத்தகைய எழுத்தாக்கங்களை வெளிக்கொணர்வது மிகவும் விரும்பத்தக்க தொன்று.
- Details
- Category: புத்தகங்கள்
"தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் பிள்ளைகளின் கைபிடித்து அழைத்துச் செல்ல நினைக்கும் பெற்றோருக்கு இந்தப் புத்தகம் ஒரு கண்திறப்பாக அமையும். பதின்பருவத்தினர் மட்டுமின்றி அவர்களின் பெற்றோரும் இந்நூலினை அவசியம் வாசிக்கவேண்டும். அவர்கள் மனத்தில் பலவிதமான தேடல்களை இந்நூல் விதைக்கும் என்பது நிச்சயம்."
- Details
- Category: புத்தகங்கள்
பேராசிரியர் மௌனகுரு
மட்டக்களப்புத் தமிழகத்தில் இந்துப்பண்பாடுஅதன் தனித்துவமான வழிபாட்டு முறைகள்
இந்நூல் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதனை நான் நண்பர் அ. மார்க்ஸுக்கு 2006 இல் தமிழகம் சென்றபோது கொடுத்தேன். 2014 இல் அவர் இதற்கு குறிப்பெழுதியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது
.பன்மைத்தன்மையும் ஒன்றின் இன்னொன்றின் அம்சங்களைக் காண்பதும் ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு வாழ்வதும் தான் ஜனநாயகத்தின் உச்ச அம்சம் அது மட்டக்களப்பின் இந்துப் பண்பாட்டில் நடைமுறையில் காணப்படுகிறது.
- Details
- Category: புத்தகங்கள்
அ. ராமசாமி
மத்தேயு – அறியப்பட்ட பைபிள் கதாபாத்திரம். தொடக்க நிலையிலிருந்தே இயேசுவோடு இருந்த சீடர்களில் ஒருவரான மத்தேயு, வரி வசூலிக்கும் தண்டல் நாயகப்பணியில் இருந்ததாகவும், அவரோடு விருந்துண்டு, தனது பன்னிரு சீடர்களில் ஒருவராக ஆக்கிக் கொண்டார் இயேசு என்றும் அவரைப்பற்றிய குறிப்புகள் சொல்கின்றன. தான் நம்பிய கொள்கைகளை மக்களிடம் பரப்புவதில் விடாப்பிடியும் தளரா உறுதியும் கொண்ட இயேசுவின் கருணையும் இரக்கமும் மனிதகுலத்தின் தேவை.