Skærmbillede 500"மீனும் பிஸ்கட்டும் குளியலுமாக வீட்டுக்குள் சுதந்திரமாக நடமாடும் பூனைபோல தான் திருமதி பெரேராவும் அவ்வீட்டில் வாழ்கிறார்.'ஒரு பெண் பூனைக்கு இன்னும் வேறு என்னதான் வேண்டும்?' என்ற வரி திரு பெரேராவின் எண்ணத்தின் வெளிப்பாடு. திரு.பெரேரா படுக்கையில் இறந்துவிட்டால் அதை எப்படி எதிர்கொள்வதென்று திருமதிபெரேரா யோசனை செய்யும் விசயங்களை"...

சிங்களச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொகுப்பான திருமதி பெரேராவில் பத்துக் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.இஸுரு சாமர சோமவீர தொகுத்த இரு தொகுப்புகளிலிருந்து கதைகளைத் தேர்ந்தெடுத்து எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்த்திருக்கிறார்.மொழிபெயர்ப்பின் இடைஞ்சல்களின்றி நாம் படிக்க முடிகிறது.
இத்தொகுப்பின் தலைப்பான திருமதி பெரேரா தான் எனக்கு மிகவும் பிடித்த கதை.


சில மணிநேரங்கள் தான் கதை நடக்கிறது.அதற்குள் ஒரு பெண்ணின் வாழ்வு எழுதப்பட்டுள்ளது. மீனும் பிஸ்கட்டும் குளியலுமாக வீட்டுக்குள் சுதந்திரமாக நடமாடும் பூனைபோல தான் திருமதி பெரேராவும் அவ்வீட்டில் வாழ்கிறார்.'ஒரு பெண் பூனைக்கு இன்னும் வேறு என்னதான் வேண்டும்?' என்ற வரி திரு பெரேராவின் எண்ணத்தின் வெளிப்பாடு. திரு.பெரேரா படுக்கையில் இறந்துவிட்டால் அதை எப்படி எதிர்கொள்வதென்று திருமதிபெரேரா யோசனை செய்யும் விசயங்களை...இஸுரு ஒரு பெண்ணாக எப்படிக் கற்பனை செய்து எழுதினார் என்று ஆச்சரியம் ஏற்படுகிறது. திருமதிபெரேரா கண்ணாடியில் முகத்தை அழுமூஞ்சியாகத் தோற்றுவித்துப் பார்க்கிறார்,இப்ப அழ வேண்டாம், முதலில் எந்தப் பக்கத்து வீட்டாரை அழைப்பது, மகன் வந்து மரணச் சடங்கிற்காகத் தங்கி நிற்கும் நாட்கள், செலவுக்குக் காசு, தான் உடுத்தும் உடைகள், சவப்பெட்டியில் கறுப்புக் சூட்டில் பெரேரா...இப்படியாகப் பலவும் சிந்தித்தபடி படுக்கையில் அசையாமல் கிடக்கும் கணவன் செத்திருப்பதான கற்பனையில் சமையலும் செய்து குளித்து முடிக்கிறார். விருப்பமல்லாத கல்யாண வாழ்வை சகல வசதிகளோடும் வாழ்ந்த சலிப்பில் இப்படியெல்லாம் நினைத்துக் கொள்கிற பெண்பற்றிச் சிலருக்குக் கற்பனையும் செய்ய முடியாததாயிருக்கும்.கடைசியாக,கட்டிலில் எழுந்திருந்து தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் பெரேராவைப் பார்க்கும் போது... நான் தான் அதிர்ச்சியடைந்தேன். ஆனால் குணவங்சலாகே ஸ்ரியானி பத்மகாந்தி சோமரத்ன என்ற திருமதி பெரேரா சற்றும் திடுக்கிடவில்லை. அப்படிப் பல தடவைகள் எதிர்பார்த்து ஏமாந்தவர் போல மிகச் சாதாரணமாக அக்காட்சியை எதிர்கொள்கிறார். எதிர்க்க வழியில்லாதபோது, வலுவில்லாதபோது பலவீனர்களால் என்ன செய்ய முடியும்?
பெரோராவின் சாவின் மூலமாகவாவது தனக்கான வாழ்வைக் கண்டடைய முடியாதா என்ற ஏக்கம் கொண்ட திருமதி பெரேரா.
நீலப் பூச் சட்டை கதையும் ஒரு பெண்ணின் உணர்வுகளை வெகு சிறப்பாக உள்வாங்கிய எழுத்தின் வெளிப்பாடு. நினைவுகளைச் சில அடையாளங்களைக் கொண்டு புதுப்பிக்கலாம். உறவைப் புதுப்பிக்க வாங்கிய நீலப் பூச் சட்டை கடந்த காலத்தின் வாசனையைக் கொண்டதாக இல்லை.
கதைகளைப் படித்துக்கொண்டு போகும் போது அழகழகான சிங்களப்பெயர்களை இரசித்தேன் என்பதையும் குறிப்பிடவேண்டும்.
கிராஞ்சி கதையில் தமிழ்த்தாயின் துயரமும் காணாமலாக்கப்பட்டவர்கள்,கொல்லப்பட்டவர்களும்.
மறுபக்கமாக வறிய குடும்பத்துப் பிள்ளைகள் பிக்குவாகவும் இராணுவமாகவும் ஆகவேண்டிய சூழ்நிலைகள் என்று நாட்டில் நடந்த சண்டைகளின் விளைவுகளை எதிர்கொள்ளும் மனிதர்கள். குற்றவுணர்வும் புரிந்து கொள்ளலுமாக ஒரு மெல்லிய நுாலாக உறவைக்கட்ட முனையும் கதை. ஆனால் கதையின் வடிவம் ,சொல்முறை தொகுப்பில் ஏனைய கதைகளை விட இதில் சிறப்பாக அமையவில்லை என்று எனது வாசிப்பில் தோன்றியது. இது முதலாவது கதையாக இல்லாமல் இருந்திருக்கலாம்.
நீரணங்குத் தீரம்,நிமாலிக்கு ஆகிய கதைகள் சமபால் உறவாளர்களது பிரச்சினைகளை உள்வாங்கியவையாக எழுதப்பட்டவை.திரும்பத்திரும்ப இவற்றை எழுதியும் உரையாடியும் தான் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
நிமாலிக்கு என்ற கதை எளிமையாகவும் நேரடியாகவும் சமபால் ஈர்ப்புக்குரியவர்களது மனநிலையையும் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தும் விதமானது. இக்கதைகளைப் படிக்கும்போது கொன்று தின்னும் மிருகங்களுள்ள காட்டுக்குள் தனியே நடமாடுவது போல, உலகில் ஆண்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் திருநர்கள், சமபாலுறவாளர்கள், பெண்கள், குழந்தைகளின் நிலை என்று திகில் ஏற்படுகிறது.
நாம், உலகின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரையாக உலக இலக்கியங்களை மொழிபெயர்த்துப் படிக்கும் தமிழ் வாசகர்கள். பக்கத்தில் வாழும் அல்லது வாழ்ந்த சிங்களச் சமூகத்தோடு உறவாடாதவர்கள் பலர். ஒருவருக்கொருவர் வாழ்வையறியாதவர்களாக, இலக்கியத்தைப் படிக்காதவர்களாக, சனங்களின் மத்தியில் இன்னும் வெறுப்பை வளர்க்கும் நிலையில் இது போன்ற மொழிபெயர்ப்புச் செயற்பாடுகள் அவசியமாகிறது. சிங்களத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து சிங்களத்திற்குமாக இலக்கியம் பரிமாறப்படவேண்டும்.
அரசியல்வாதிகளும், திட்டமிட்டே இலங்கைத் தீவில்
குழப்பத்தை ஏற்படுத்திய சுயநலமான பிற நாடுகளும், ஆயுத முகவர்களும் அழிவுகளில் மகிழும் போர்வெறியர்களும் சனங்களுக்கு வெறுப்பையும் அழிவுகளையும் தான் ஏற்படுத்தினார்கள். உண்மையான அமைதியையும் நிம்மதியான வாழ்வையும் நீதியையும் தான் எளிய மக்கள் விரும்புகிறார்கள்.
வெளியீடு :ஆதிரை

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click