Skærmbillede 724பேராசிரியர் மௌனகுரு

மட்டக்களப்புத் தமிழகத்தில் இந்துப்பண்பாடுஅதன் தனித்துவமான வழிபாட்டு முறைகள்
இந்நூல் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதனை நான் நண்பர் அ. மார்க்ஸுக்கு 2006 இல் தமிழகம் சென்றபோது கொடுத்தேன். 2014 இல் அவர் இதற்கு குறிப்பெழுதியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது
.பன்மைத்தன்மையும் ஒன்றின் இன்னொன்றின் அம்சங்களைக் காண்பதும் ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு வாழ்வதும் தான் ஜனநாயகத்தின் உச்ச அம்சம் அது மட்டக்களப்பின் இந்துப் பண்பாட்டில் நடைமுறையில் காணப்படுகிறது.

வானவில்லின் அழகு அதன் ஏழு நிறங்களால் உருவாவது போல மட்டக்களப்பின் இந்துபண்பாட்டின் அழகு அதன் பன்மைத் தன்மையினால் உருவாகி யுள் ளது. இங்கு நிலவும் சடங்கு சம்பிரதாயம் சம்பந்தமான எனது புரிதல்கள் தனியாக எழுதப்பட வேண்டியவை எனினும் இவைபற்றி அறிய விரும்புவோருக்கு இது ஓர் கைநூலாக உதவும் என நம்புகிறேன் ஆகம முறைசார் பெரும் சமயங்களை அறிமுகம் செய்ய அம்பாரம் அம்பாரமான கனத்த பெரும் நூல்களை மிகுந்த பொருட்செலவில் வெளியிடும் இந்து கலாசாரத் திணைக்களம் மற்றும் சில பண்பாட்டுத் திணைக்களங்கள் போன்றவை சனங்களின் சாமிகள் பற்றியும் அவர்களின் வழிபாட்டு முறைகள் பற்றியும் கூறும் இத்தகைய நூல்களையும் மீள் பதிப்புச் செய்யலாமே?? இந்நூல் வெளிவந்தமைக்கு ஓர் பெரிய பின்னணிக்கதையும் உண்டு எனினும் தமிழகத்தில் தங்கள் நண்பர்கள் வட்டத்திற்கு இந்நூலை அறிமுகம் செய்தமைக்கு மார்க்க்ஸுக்கு நன்றி கூறுகிறேன் இன்றைய குகுள் எனக்கு இதனை ஞாபகபடுத்தியிருந்தது குகுளுக்கும் எனது நன்றிகள்

 

X

Right Click

No right click