- Details
- Category: சிறுகதைகள்
முல்லையின் ஹர்வி
"எழுபது கடந்த வயதாகியும் இன்னும் அந்த கோழிக் கூட்டில் தான் வாழ்கிறார்கள் கறையானும் பல்லியும் புடையன் பாம்பும் கூட அந்த வீட்டில் அவர்களோடு நீண்ட காலம் இருக்கிறது …"
ஊரின் ஒதுக்குப்புறம் ஒரு பிள்ளையார் கோவிலும் பனையோலை வீடும். எப்போதும் இருந்து விட்டு நேத்திக்கு பூஜை செய்தாலே அந்த வீதியில் ஓரிரண்டு சனத்தை பார்க்கலாம். ஆச்சி… அப்பு … என்று கூப்பிட்டு வாழைப்பழம் சக்கரை மோதகமும் தந்து விட்டு போவார்கள் சிலர்.
வீட்டை பார்ப்பதற்கு கோழிக்கூடு போல உண்மையில் !! ஒரு சேவலும் பேடும்.. இராசையா, கனக சுந்தரி.. இராசையா, கனகு என்று செல்லமாக அழைப்பார் பெயருக்கு போல் சிவந்த நிறம் நீளம் குறையாத வெண் கூந்தல், புருவங்களிடையே எப்போதும் உருண்டையாய் இருக்கும் குங்குமம். சுருங்கிய தோல் ஆயினும் அழகுக்கு கிழவி கொஞ்சமும் குறையாமல் இருந்தாள்.
- Details
- Category: சிறுகதைகள்
அ.ஸ.அப்துல் ஸமது
" நான் வேலைக்காரியான காரணத்தினால்தானே இழித்தவளானேன்! என் ஆசையின்படி உடுக்க முடியவில்லை! என் எண்ணத்தின்படி நடக்கமுடியவில்லை"
எனக்கு வயது பதின்மூன்று ஆகிறது. நான் சிக்கந்தர் போடியாரின் வீட்டுக்கு வேலைக்காரியாக வந்து ஐந்து வருடங்கள் ஆகின்றது. இதுவரை நான் அறிந்த உலகம் இந்தப் போடியாரின் வீடுதான்.
- Details
- Category: சிறுகதைகள்
"ஒவ்வொருவருக்கும் அவரவர் எண்ணங்களின் பிரதிபலிப்பே அந்தக் கண்ணாடியில் தெரிகிறது. நான் காண்பது மட்டுமே சரியானது என்று சொல்லமுடியுமா? ஒருவேளை, நம்மால் சில விஷயங்களைப் பார்க்கமுடியாமல் போகலாம். ஆனால், அவை படைப்பில் இருக்கும். இவ்வாறு இந்தக் கதையின் நீதியைப் புரிந்துகொள்ளலாம்."
முன்னொரு காலத்தில், ஒரு ஓவியர் வாழ்ந்துவந்தார். அவர் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து, கண்ணாடியின் எதிரே மாட்டிவைத்தார். ஓவியத்தைக் கண்ணாடி மூலமாகப் பார்த்தால், அது தொலைவில் மிக மிக மென்மையாகவும், சாதாரணமாகத் தெரிவதைவிட இரண்டு மடங்கு அழகாகத் தெரிவதாகவும் சொன்னார்.
- Details
- Category: சிறுகதைகள்
"'எஸ்.பொ' எனப்படும் எஸ். பொன்னுத்துரை 1932 ஜூன் 4ம் திகதி யாழ்ப்பாணம், நல்லூரில்; சண்முகம் தம்பதியரின் மகனாக பிறந்த இவர் ஈழத்தின் மூத்த, தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர் சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் இலக்கியவுலகில் 40 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.எஸ்.பொன்னுத்துரை எழுதிய ‘தேர்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும்"
- Details
- Category: சிறுகதைகள்
- முரளி-
அந்த ரெயில்வேஸ்ரேசன் சொல்லுற மாதிரி அப்படியொன்றும் பெரிய ஸ்ரேசன் இல்லை. ஆனால் பல றெயின்கள் வந்து வந்து மாறிப் போவதாலும், பஸ் ஸ்ராண்டும் பக்கத்திலே இருப்பதாலும் எந்த நேரத்திலும் சனங்கள் வழிஞ்சு நிறைஞ்சு கொண்டு தான் இருக்கும.; காலையிலே பள்ளிக்குப் போற பொடியள் தொடக்கம் வேலைக்குப் போற ஆக்கள் வரை அந்த நிலையம் பெரு இரைச்சலோடு பரபரத்துக் கொண்டு இருப்பதாலும் அது ஒரு பெரிய ஸ்ரேசன் போல் தோன்றும்.
- Details
- Category: சிறுகதைகள்
இரவி அருணாசலம்
'ஐயோ' என்று குழறுகின்ற நாட்கள்
ஒரு விழா! யாருக்கு விழா?
எங்களுக்கு, எங்கள் தாய்மொழிக்கு, எங்கள் அன்னைமொழியாம் தமிழுக்கு அந்த விழா!
புளுகித்துப் போய்க் கிடந்தது மனசு. 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!'
காலையில் குளிர். மாலையில் குளிர். மதியத்தில் வெய்யில். இலந்தை மரம் பிஞ்சு வைத்துக் காய்க்க ஆரம்பித்தது. ஒரு பழம் கிடையாதோ என்று பற்றை வழிய ஏறி இறங்கினேன்.
அப்படிப் பற்றைவழிய போன ஒருநாள் அப்பா கூப்பிட்டார்: ''வா ராசா வெளிக்கிடு...''
- Details
- Category: சிறுகதைகள்
- ந . முரளி -
போற வழி தானே.. எப்படியும் ஒருக்கா வந்திட்டுப்போ... தம்பி, எண்டதாலே தான் நான் இப்ப இங்கே வரவேண்டியிருந்தது. நாங்கள் இஞ்சை வந்த ஆரம்ப காலத்தில் இருந்த அகதிமுகாங்களில் அக்கா, தம்பி,அண்ணன் என்று ஒன்றாய் இருந்து பழகி, பிறகு குடும்பங்கள் என்று பிரிந்து போகவும், பிறகு குழந்தைகள் வளர்ந்திட்டினம் எண்டு கொஞ்சப் பேர் ஒழிந்து கொண்டும், காசு காசு எண்டு ஓடிஓடி கடைசியிலே இந்த இயந்திர வாழ்க்கைக்குள் தங்களை தாங்கள் தொலைத்துக் கொண்டவர்கள் கொஞ்சப் பேர்.
எப்போவாவது எங்கேயாவது காணும் இடங்களில் கதைப்பதோடும், ஏதாவது விழாக்களில் மாத்திரம் பழகுவதோடும் இருப்பது தான் இந்த வெளிநாட்டு உறவுகள்.
- Details
- Category: சிறுகதைகள்
நிஷா
காலை 08.30 மணி எனது கல்லூரியின் வகுப்பறைகள் அத்தனையும் உயிர் பெற்றுக் கொள்கின்றன. எனக்குப்பிடித்ததே இந்த நேரம் தான். ஆசையும் ஆர்வமுமாய் தங்கள் வகுப்பாசிரியர்களே இவ்வுலகின் ஒட்டு மொத்த 'ஹீரோக்கள்' என்ற நம்பிக்கையில் தம் அன்றைய பளுவான நாளினை மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கும் மாணவர்களையும் நாளின் ஆரம்பம்
- Details
- Category: சிறுகதைகள்
-நிலாதரன்-
விடிஞ்சு இப்போ எத்தனையோ மணித்தியாலங்கள் கடந்து விட்டது. ரீவீ என்றும் பேஸ்ப்புக்கென்றும் பொழுது போகாமல், அந்த வேலை இந்த வேலையென்று ஓடியாடிச் திரிஞ்சாலும் நேரம் ஏதோ மெதுவாகவே போவதாகவே ராதிகா உணர்ந்து கொண்டாள்.
இந்த மனுசன் எத்தனை மணிக்குப் போகுதோ எத்தனை மணிக்குத் வருகுதோ கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
கண்டறியாத இந்த வெளிநாடென்று இங்கு வந்து.... இரவென்றும் பகலென்றும் தெரியாத நாளைப் போலே இருண்டு போன மனங்களுடன்.. ஊரின் நினைவுகளோடு மனம் ஏங்கி ஏங்கித் தவித்தது.