- Details
- Category: தடங்கள்
வி.அனோஜன்
"நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில் நிற்பவர். இதனால் தன் “குருபிரதீபாபிரபா” விருதினை மூன்று தடவைகள் பெற்று எம் மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்."
முல்லை மண்ணின் ஆளுமையும், தனித்துவம்மிகு அதிபர்களுள் ஒருவரே 30.06.2021 அன்று தனது இலங்கை அதிபர் சேவவை – 1 (அரச பணியில்) இருந்து ஓய்வு பெற இருக்கும் எமது அதிபர் செபமாலை அல்பிரட் அவர்கள்.
இவர் எம் முல்லைமண்ணின் அளம்பில் பெற்றெடுத்த அருந்தவமே எங்கள் அல்பிரட் சேர். இவர் 1961 ஆண்டு ஆடி மாதம் முதலாம் திகதி செபமாலை சிசிலியா தம்பதியினரின ஒன்பது பிள்ளைகளில் இவர் ஆறாவது புதல்வனாக பிறந்தார்.
- Details
- Category: தடங்கள்
ச. தேவமுகுந்தன்
ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும் பிறவியிலே அவரை தொற்றிக் கொண்டன. அவரைப்பற்றி எழுதுவது என்பது மிக கடினமான பணி.
- Details
- Category: தடங்கள்
18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது…
- Details
- Category: தடங்கள்
- மதுசூதனன் தெ. -
பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர். சிலப்பதிகாரம் என்ற தொடர் நிலைச் செய்யுளை சிறப்பதிகாரம் எனக் குறிப்பிட்டவர்களும்,
- Details
- Category: தடங்கள்
- மதுசூதனன் தெ.-
அறிவியல் தொழில்நுட்பத்தின் வரலாறு என்பது சமச்சீரற்ற வளர்ச்சி நிலைகளைக் கொண்டதாக விளங்குகிறது. மேலைத் தேசம் கீழைத் தேசம் என்ற வரையறுப்புகளைக் கடந்து அறிவியல் தொழில்நுட்ப சிந்தனையும் கண்டுபிடிப்பும் உலகளாவிய மாற்றங்களை விரிவுபடுத்தின. இயற்கை, சமூகம், மனிதன் பற்றிய ஆய்வுகள் பல்கிப் பெருகின.
- Details
- Category: தடங்கள்
தெ.மதுசூதனன்
இப்போது நீ என்னென்ன எழுதுகிறாய்? இலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்?' என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. 'எழுத்தில் எழுதிய வையும் இலக்கியத்தில் செய்யும் புது முயற்சிகளும் வாழ்க்கையில் இருக்கிறதா? வாழ்க்கையில் நடைபெறுகின்றனவா?' என்று கேட்கும் புதுக்குரல் இன்று.
- Details
- Category: தடங்கள்
- தெளிவத்தை ஜோசப் –
தமிழில் அரசியல் நாடகங்களை ஆரம்பித்து வைத்தவர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை :இலண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று (1936) இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராகி,தமிழ்த்துறைத் தலைவராகி - பல்கலைக்கழகக்கல்லூரி பல்கலைக்கழகமாகியபின் (1942)
- Details
- Category: தடங்கள்
தமிழகத்திலும் ஈழத்திலும் தலைசிறந்த முத்தமிழ் வித்தகராய்த் திகழ்ந்து தவவாழ்வு மேற்க்கொண்டு தமிழ்மொழிக்கு அருந்தொண்டாற்றியவர் சுவாமி விபுலானந்த அடிகள் (1892.03.27 – 1947.07.19). மீன் பாடும் தேன்நாடெனப் போற்றப்படும் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பின் அருகேயுள்ள காரைதீவு எனும் பழம்பதியினிலே தந்தையார் சாமித்தம்பி தாயார் கண்ணம்மையார் ஆகியோர்களுக்கு மகனாகப் பிறந்தார்.
- Details
- Category: தடங்கள்
நாடகத்திற்கு அவ்வளவு அங்கீகாரம் கிடைத்திராத ஒரு கால கட்டத்தில் நாடக சங்கம் ஒன்றை நிறுவி தமிழ் நாடகங்களை மேடையேற்றிய முன்னோடி நாடகராக கலையரசு திகழ்ந்தார். ஆங்கில நாடக மேதை ஷேக்ஷ்பியரின் நாடகங்களில் ஈடுபாடு மிகுந்த ‘வெனிஸ் நகரத்து வாணிபன்’ (Merchant of Venice) என்ற நாடகத்தில் வரும் ‘Shyloc’ என்ற யூத கதா பாத்திரத்தை அற்புதமாக நடித்துக் காட்டியிருக்கின்றார்.