Skærmbillede 1125வி.அனோஜன்

"நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில் நிற்பவர். இதனால் தன் “குருபிரதீபாபிரபா” விருதினை மூன்று தடவைகள் பெற்று எம் மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்."

முல்லை மண்ணின் ஆளுமையும், தனித்துவம்மிகு அதிபர்களுள் ஒருவரே 30.06.2021 அன்று தனது இலங்கை அதிபர் சேவவை – 1 (அரச பணியில்) இருந்து ஓய்வு பெற இருக்கும் எமது அதிபர் செபமாலை அல்பிரட் அவர்கள்.
இவர் எம் முல்லைமண்ணின் அளம்பில் பெற்றெடுத்த அருந்தவமே எங்கள் அல்பிரட் சேர். இவர் 1961 ஆண்டு ஆடி மாதம் முதலாம் திகதி செபமாலை சிசிலியா தம்பதியினரின ஒன்பது பிள்ளைகளில் இவர் ஆறாவது புதல்வனாக பிறந்தார்.


வறுமையிலும் செம்மை என்பதற்கிணங்க பிள்ளைகளை நல் ஒழுக்கத்திலும் விழுமியப் பண்புகளிலும் வளர்ப்பதில் பெற்றோர் கண்ணும் கருத்துமாய் இருந்;தார்கள். பொதுவாக அளம்பில் கிராம மக்களின் வாழ்வியல் கத்தோலிக்க சமயப் பாரம்பரியங்களோடு பின்னிப்பிணைந்ததாக காணப்பட்டது. இவரது வாழ்வில் பாலர் பராயம் முதல் பள்ளியும் ஆலயமும் இரண்டு கண்களாயின. இந்நிலையில் அன்றாடம் சநதோசத்தோடு வாழ்ந்து வந்த குடும்பம் திடீரென தந்தையாரின் இறப்பினால் சுழிக்காற்றில் அகப்பட்ட படகுபோல் திக்குத் திசை தெரியாமல் தடுமாறியது. வறுமைப் புயலுக்குள் சிக்கித்தவித்தது. இருந்த போதும் அந்த தாயாரின் மனத்துணிவும் தைரியமும் குடும்பச்சுமையை தாங்கிக் கொண்டது. அளம்பில் தென்னம்பிள்ளைத் தோட்டத்தில் ஐந்து ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சென்று தனது பிள்ளைகளை வளர்த்து வந்தார். அந்தக்காலத்தில் அவரது சகோதரியார் திடீர் சுகயீனமுற்று இறக்கவே அவரது நான்கு பிள்ளைகளும் சிசிலியா அம்மாவிடமே தஞ்சமடைந்தனர். இப்போது 13 பிள்ளைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு அவரையே சார்ந்துவிட்டது. கொட்டும் மழையிலும் கொடிய வெயிலிலும் தன் பிள்ளைகளை வளர்ப்பதற்காக தினமும் வேலைக்குச் சென்றார். வாழவைக்கும் வளங்கொண்ட அளம்பில் கிராமம் புனித அந்தோனியாரின் அருள் வளங்களால் நிறைந்து எத்தனையோ ஏழைக்குடும்பங்களை தாங்கி நின்றது. அந்த வகையிலே ஆறுவயதிலே தந்தையை இழந்து தவித்த எம் கல்விச்சுடர் அல்பிரட் அதிபர் அவர்களையும் தட்டிக்கொடுத்து வளர்த்தது எம் கிராமமும் மக்களும்.

இவர் தனது ஆரம்பக்கல்வியை அளம்பில் றோமன் கத்தோலிக்கப் பாடசலையில்; கற்றார். நிமிர்ந்த நடையும் நேர் கெண்ட பார்வையும் பிறரை வசீகரம் செய்யும் முகபாவமும் இவருக்கே உரிய அடையாள இலட்சணங்களாகும். ஐந்து சகோதரிகளை உடன் பிறப்பாக கொண்டதாலோ என்னவோ எல்லோரிடமும் இயல்பாகப் பழகும் ஆற்றல் கொண்டவர். அன்பும் பாசமும் கொண்ட பண்பாளனாக சிறுவயது முதல் எல்லோர் மனங்களிலும் இடம் பிடித்தவர்.

இருந்த போதிலும் வாழ்க்கையின் பல்வேறு வேதனை முட்கள் இவரையும் வருடத் தவறவில்லை. வறுமையின் கொடூர தாண்டவம் வாட்டி வைத்த போதிலும் தான் கல்வியில் கண்ணாயிருந்தார்; ஒழுக்கத்தில் உயிராய் இருந்தார். இடைநிலைக்கல்விக்காக செம்மலை மகா வித்தியாலயத்திற்க்கு சென்ற வேளை அங்கும் ஆண்டவரின் பராமரிப்பு இவருக்கு கிடைக்க தவறவில்லை. ஞானாம்பிகை ஆசிரியர் உடனிருந்து வழிகாட்டினார். அளம்பிலின் முதுசம் என்ற பாராட்டக்குரியவர் தான் ஞானாம்பிகை ஆசிரியர். தமிழ்த்தினப் போட்டிகளிலும் உடற்கல்வி போட்டிகளிலும் கோட்டம், வலயம், மாகாணம், தேசியம் என்ற சாதனைகள் படைக்க ஏணியாய் இருந்து வழிகாட்டியவர் ஞானம்பிகை ஆசிரியர். எமது அதிபர் ஆறு வருடங்களும் கால் நடையாகவே சென்று தனது சகபாடிகளுடன் செம்மலையில் படித்து வந்தார். விளாத்தி மரங்களும் விடத்தல் பற்றைகளும் கரைச்சி வெயிலும் உப்புக்காற்றும் இன்றும் இவர்களின் கதை கூறும்.

இவ்வாறு செம்மலையில் பல தடங்களைப் பதித்து மு/வித்தியானந்தா கல்லூரியில் தனது உயர் கல்வியைக் கற்றார். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இவரை பல்கலைக்கழகம் வரை உயர்த்தியது. 1982 – 1986 காலப்பகுதியில் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அர்ச்சுணனைப் போல் இலக்கைப்பார் அம்பை விடு என்று எத்தனைதடைகள் வந்த போதும் அவை அத்தனையையும் தாண்டி தனது இலக்கை அடைந்து விட்டார். அன்று கிராமமே மகிழ்ந்து நின்றது. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய். தாயவள் அகமகிழ்ந்தாள். தரணியே மகிழ்ந்து பாராட்டியது. அறிஞர்கள் பலர் முல்லை மண் பெற்றெடுத்த முழுநிலவே என்று இவரது கல்விப் புலமையை பாராட்டினார்கள்.
இவ்வாறு 1994ல் படிப்பில் கல்வி டிப்ளோமா பட்டத்தையும் 2003ல் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா பட்டத்தையும் 2004இல் கல்வி முதுமானிப்பட்டத்தையும் (ஆநுனு) 2011இல் பேராதெனிய கல்விக்கலாசாலையில் தொழில்திறன்விருத்தி கற்கை நெறிப்பட்டத்தை; பெற்று பல சாதனைகள் படைத்தவர்.

இவர் கலைத்துறையிலும் சளைத்தவரல்ல. இயல் இசை நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கல்வி கற்கும் காலங்களில் கண்டியரன் நாடகத்தில் கண்டியரசனாக பாத்திரம் ஏற்று நடித்தமை பலராலும் பாராட்டப்பட்ட விடயமாகும். அதன் நெறியாள்கை எமது ஞானாம்பிகை ஆசிரியராலேயே செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி குழந்தை சண்முகலிங்கத்தின் “மண்சுமந்த மேனியர்” திரு. ம. சிதம்பரநாதனின் நெறியாள்கையில் யாழ் பல்கலைக்கழகத்தில் மேடையேற்றப்பட்ட வேளை பலரின் பாராட்டுதலைப் பெற்றவர். தொடர்ந்து ஆசிரியராக இருக்கும் காலத்தில் சிலப்பதிகாரம் தந்த கோவலன் நாட்டுக்கூத்தில் மெற்றாஸ் மெயிலின் நெறியாள்கையில் கோவலனாக நடித்து பல இரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர். இவருக்கு சாதனைகளைத் தடம் பதிக்க வாய்த்த முதலாவது களமாக 1985இல் நுவரேலியா விவேகானந்தா வித்தியாலயம் தோட்டப்பாடசாலை அமைந்தது. ஆசிரியத்துவம் என்பதை உணர வைத்து ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் போதிக்க வாய்ப்பளித்தது.


தொடர்ந்து 1988ல் முஃபாண்டியன்குளம் மகாவித்தியாலயத்திற்கு ஆசிரியராக இடமாற்றம் பெற்றார். ஆங்கு சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது உள்ளங்களிலும் குடிகொண்டு தனது கல்விப்பணியை ஆற்றிவந்தார். மாலைநேரம் மாணவர்களது உடற்கல்வி விளையாட்டுக்களிலும் மேலதிக வகுப்புக்களிலும் அக்கறையுடன் செயற்பட்டு வந்தார் இவரிடம் படித்த மாணவர்கள் இவரது 57வது பிறந்ததினத்தை தமது ஊரில் தம்மோடு கொண்டாட வேண்டும் என்று கூறி குடும்பத்தோடு கூட்டிச்சென்று ஒரு வீடு எடுத்து ஆசிரியரின் பிறந்த தினத்தைக் கொண்டாடி மகிழ்வித்ததும் யாம் அறிந்ததே. இதன்பின் 1990ல் அளம்பில் றோ.க. வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தார். தான் பிறந்த மண்ணை நேசித்து உயர்விலும் தாழ்விலும் தன்னை உரமேற்றி காத்த மண்ணில் சேவையாற்ற ஆர்வமுடன் உழைத்தார். எமது பாடசாலை விமானத்தாக்குதலுக்கும் கடல் பீரங்கி தாக்குதலுக்கும் இலக்கானதன் காரணமாக இரண்டு தென்னந்தோட்டங்களில் பதுங்கு குழிகள் அமைத்து மாணவர்களுக்குரிய பாதுகாப்பளித்து கல்வி கற்பிப்பதில் கருத்தாயிருந்தவர். இதனை 1991 க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் காட்டி நிற்கும். அன்று சாதாரண தரத்தில் கல்வி கற்ற பல மாணவர்கள் இன்று பல உயர் அரச பதவிகளை வகிக்கின்றார்கள.; எமது ஊர் பிள்;ளைகள் கல்வியில் மட்டுமல்ல விளையாட்டிலும் சாதனையாளர்கள் என்பதை உலகறியச்செய்ய அளம்பில் உதைபந்தாட்ட அணியை வலுவானதாக்கி ஊக்குவித்தவர்.

தொடர்ந்து, 1994ல் மு/பாண்டியன்குளம் மகாவித்தியாலயம் மீண்டும் ஒருமுறை இவரது அதிபர் சேவைக்காக காத்திருந்தது. இந்தக்காலத்தில் இவரது தாயாரும் சகோதரர்களும் ஊர்மக்களுமே இவருக்கு திருமணம் செய்து வைக்க வரன் தேடினார்கள். எத்தனையோ வந்தும் எதுவும் ஒன்றுசேர பொருந்தவில்லை காரணம் கத்தோலிக்க சமயம் என்பது மிகப்பிரதானமாகப் பார்க்கப்பட்டது. இவ்வேளை ஒரு வரனாக மட்டுமல்லாமல் இறை வரமாக இரணைப்பாலை மண் தந்த பொக்கிசம், மேரி மெற்றில்டா அவர்கள் எங்கள் அதிபரின் வாழ்க்கைத்துணையானாள். மண்ணின் செழுiமையும் பெண்ணின் பெருமையும் கொண்டவள் அவள். சுற்றத்தாரின் ஒத்தாசையும் மிளிரச்செய்யும் தாயவள் அன்பும் அடக்கமும் பண்பும் பணிவும் கொண்ட அன்புத்துணைவி அவள். சிறந்த இல்லறத்தின் கொடையினால் இரண்டு பிள்ளைச்செல்வங்களுக்கு இவர்கள் பெற்றோராயினர்.
தொடர்ந்து 1998ல் மீண்டும் தன் ஊர்ப்பற்று அழைக்கவே அளம்பில் பாடசாலையில் அதிபராக கடமையேற்றார.; கடமையும் கண்ணியமும் கட்டுப்பாடும் உள்ள ஒரு நல்ல அதிபரை நேரில் கண்டோம். காலை 7 மணிமுதல் 2 மணிவரை அதிபராகவும் மாலையில் உதைபந்தாட்ட வீரனாகவும் சொந்தங்களின் இன்ப துன்பங்களில் உற்ற நண்பனாகவும் ஆலய வேலைகளில் முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார்.

அந்நாட்களில், கொக்கிளாய் பாடசாலை இடம்பெயர்ந்து புதுக்குடியிருப்பில் இயங்கி வந்தவேளை 2001ல் அதன் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். யுத்தத்தின் கொடூரத்தினால் தாய் தந்தையை இழந்து கல்வி கற்ற எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு நல்லதொரு தந்தையாக உற்ற தோழனாக உடனிருந்து வழிகாட்டியவர் இவர். வலிகளை சுமந்து எமது தாய் மண்ணில் விடியலுக்காய் உழைத்தவர இவர்.;
தொடர்ந்து 2005ல் இருந்து 2015 வரை 10 ஆண்டுகள் முல்லைத்தீவு மகா மகாவித்தியாலயத்தின் முதுகெலும்பாக நின்று பாடுபட்டு கல்விப்பணியை முன்னெடுத்தவர். சுனாமிப்பேரலையால் சிதறுண்டு சின்னா பின்னமாக சிதைந்து போன குடும்ப பிள்ளைகளை அள்ளி அரவணைத்து ஆறுதலை அளித்தவர. தொடர்ந்து போர் தந்த காயங்களும் மண் தந்த மரணங்களும் மழழைகளை இழந்து தவித்த அன்னையர்களின் அவலங்களும் ஆறவில்லை. எங்கும் போர்மழை நாளாந்தம் மாணவர்கள் போராட்டத்திற்குச் செல்வார்கள.; நாளாந்தம் அவர்களின் வித்துடல்கள் வந்துகொண்டேயிருக்கும். அமைதியிழந்து துடித்த நாட்களும் யாரும் அறியாமல் கண்ணீர் சொரிந்து அழுத நாட்களும் எத்தனை எத்தனை. இருந்தபோதிலும் பாடசாலை பல சாதனையாளர்களை உருவாக்கியது. பல படைப்பாளிகள் தடம் பதித்தார்கள். பாடசாலை புதுப்பொலிவு பெற பல நிறுவனங்களின் கதவுகளைத் தட்டித்திறந்து அழகான கட்டிடங்களை அமைத்துக் கொடுத்தவர். சிதைந்து போன செம்மண்ணின் செங்குருதியில் அழிந்து போன வீரத்தமிழனின் வித்துடல் மீதிலே சத்தியம் தோற்றிடக் கூடாது எம் சரித்திரம் அழிந்திடக் கூடாது நிச்சயம் என்றோ ஒரு நாள் இலட்சியம் வென்றிடும் என்றும் நெஞ்சுரம் கொண்டு வெஞ்சமர் புரிந்த பிஞ்சுகளின் நெஞ்சுகளில் இன்றும் என்றும் கலங்கரை விருட்சமாகத் திகழ்பவர் தான் அல்பிரட் சேர்.

 நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில் நிற்பவர். இதனால் தன் “குருபிரதீபாபிரபா” விருதினை மூன்று தடவைகள் பெற்று எம் மண்ணிற்கு பெருமை சேர்த்தவர். மீண்டும் 2016ல் இருந்து இன்றுவரை அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயத்தின் அதிபராக கடமையைப் பொறுப்பேற்றார். ஒரு கட்டிடத்தோடு இருந்த பாடசாலையின் பௌதீகச் சூழலை எட்டு கட்டிடங்கள் வகுப்பறைகளாக மாற்றியமைத்தார். சிறந்ததொரு விளையாட்டு மைதானத்தையும் சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றத்தையும் உருவாக்கி ஆசிரியர்கள் மாணவர்களின் பௌதீகவள தேவையைப் பூர்த்தி செய்துள்ளார். மாணவர்களின் உடற்பயிற்சி விளையாட்டுக்களை ஊக்குவித்து மாணவர்கள் மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் சாதனை படைக்க வழிகாட்டினார்.

எட்டு வருடங்களாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாமல் இருந்த மாணவர்களின் குறையைப்போக்கி வருடந்தோறும் மூன்று நான்கு மாணவர்களை சித்தியடைய வழிகாட்டினார். அத்தோடு சாதாரண தரப் பரீட்சையிலும் உயர்தரப் பரீட்சையிலும் பல சாதனைகளைப்படைத்து மாணவர்கள் கல்வியியற் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களிற்கும் சென்று உயர் பதவிகளைப் பெற வழிகாட்டினார். அதிபர், ஆசிரியர், மாணவர்கள் இடைத்தொடர்பினைப்பேணி ஒரு சிறந்த பாடசாலைச் சமூகச்சூழல் அமைய பாதையமைத்தார். ஆசியர் இடமாற்றங்கள் தொடர்பாக தானே நேரில் சென்று வலயக்கல்விப்பணிப்பாளருடன் கலந்தாலோசித்து சரியானவற்றை செய்து முடிக்கும் திறன் படைத்தவர்.

இவ்வாறு தடங்கள் பல பதித்த எமது வித்தியாலய அதிபர் திரு செ. அல்பிரட் அவர்களின் சாதனைகள் படைப்பாற்றல்களைப் பட்டியற்படுத்திக்கொண்டே போகலாம். அதிபர் அடிக்கடி கூறுவார், “எனது இந்த உயர்வுக்கு அதிபதி என் அன்னையே” என்று. இன்று அவரது தாயார் இறைவனடி சேர்ந்தாலும் கூட அவரது ஆத்மா அவரை வாழ்த்தி நிற்கும்.

வி.அனோஜன் (ஆசிரியர் )

மு/அளம்பில் றோ.க . மகா வித்தியாலயம்

 

கட்டுரைகள்

{youTube}/HvhurorfkeA{/youtube} உலகளாவிய மாற்று சிந்தனை கல்வி முறைகள் எவ்வாறு உள்ளன? எனும் கேள்விக்கு பதிலளித்தார் சமூக ஆய்வாளரும், ஆசிரியம் இதழின் பிரதம ஆசிரியருமான தெ. மதுசூதனன்.

{youTube}/8qHc2Osvtpk{/youtube} - தெ. மதுசூதனன்.- இலங்கையில் ஆசிரிய சேவையிலும் பார்க்க கல்வி நிர்வாக சேவை உயர்வானதாக கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்களவு ஆசிரியர்களின் இலக்கு நிர்வாக...

கலாநிதி அதிரதன் கல்வியியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் கீழை நாடுகளில் வேரூன்றியுள்ள ஆணாதிக்கச் சிந்தனையும் அதன் புறவிசைகளும் பெண்கல்வி தொடர்பாக எதிர்மறைச் சிந்தனைகளை கட்டுமானம் செய்வதுடன்...

உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வது மூளைதான். தேவையான சத்துணவு, தேவையான அளவு கிடைக்காதபோது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.

ஞாபக சக்தி அதிகமாக இருக்க வேண்டும் என்றால் , அது அந்த தாயோட கையில தான் இருக்கு. சின்ன வயசுலேயே நம்ம குழந்தைகளுக்கு எந்த விஷயத்தையும் நல்லா மனசுல பதியுற மாதிரி சொல்லிக் கொடுத்தா, அதை அவங்க...

file:///C:/Users/Bruger/Downloads/pgde-reflection-final%20(1).pdf

Brain-wavesபொதுவாக உடலைக் கட்டுக்கோப்புடன், தகுதியாக வைத்துக் கொள்ள, உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் மனதைக் கட்டுக்கோப்புடன் தகுதியாக வைத்துக் கொள்ள என்ன செய்வது? தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும்...

வெற்றி என்னும் சாத்தியம் இருக்கையில், ஏன் சிலர் தோல்வியை எப்போதும் தேர்ந்தெடுக்கிறார்கள்? நீங்கள் மேற்கொள்ளும் தேர்வுகளிலிருந்தே துன்பத்திலிருந்து சவுகரியத்துக்கு நகர்கிறீர்கள்.

வாழ்க்கைமுறை

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம்...

சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

-ரூபன் சிவராஜா- படம் தனிமனித சாகசத்தை முன்வைக்கவில்லை. மாறாக அடித்தட்டு மக்கள் தமது வாழ்வாதார, இருத்தலியல் அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதாக முன்வைக்கப்படுகின்றது....

சினிமா

நடிகர் விவேக் மறைவு பலராலும் சோகத்துடன் எண்ணிப் பார்க்கப்படுகிறது. ''ஒரு நடிகன் நடிப்பைத் தாண்டி தன்னை ஆளாக்கிய சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் அதை செய்தவர் விவேக்'' என்ற கமலின் வார்த்தைகள்...

சினிமா

 சினிமா இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு மனித நாகரிகத்திற்கு விஞ்ஞானமும் கலையும் இணைந்தளித்த கொடை. உலக வரலாற்றில், மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்தாக இருந்து சிறப்பு பெற்றது. தமிழ்க்...

சினிமா

கர்ணன், 'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாவது படைப்பாக வெளியாகியுள்ள திரைப்படம். இப்படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க, ராஜீஷா விஜயன், யோகி பாபு,...

ஆன்மீகம்

ரதிகலா புவனேந்திரன்நுண்கலைத்துறைகிழக்குப் பல்கலைகழகம்.   வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள்...

குருந்தூர் மலையில் கிடைத்திருப்பதுஎண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாராலிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர்கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன்...

உளவியல்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும்...

- கி.புண்ணியமூர்த்தி- பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

 {youTube}/BZtEAoShpDQ{/youtube} 01. தோல்வியின் அடையாளம் தயக்கம்! வெற்றியின் அடையாளம் துணிச்சல்!துணிந்தவர் தோற்றதில்லை!!தயங்கியவர் வென்றதில்லை!!

 {youTube}/H7RVRGVWkqM{/youtube} 1. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால்வலிமை படைத்தவன் ஆவாய்!  02. மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி...

X

Right Click

No right click